Categories
தேசிய செய்திகள்

ரொம்ப போர் அடிச்சது…! சாமிய பாக்க போய்ட்டேன் – 250 கி.மீ., பயணம் செய்த அமைச்சர் …!!

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தும் 250 கி.மீ., தூரம் பயணம் செய்து  அமைச்சர் சாமியாரை பார்க்கச் சென்றது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பல கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றது. மக்கள் சமூக விலகலை பின்பற்றுவதற்கு ஏதுவாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் யாரும் வெளியே வராமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. வேலை வாய்ப்பை தேடி பிற மாநிலங்களுக்கு சென்றவர்கள் கூட சொந்த மாநிலங்களுக்கு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஷாக் ஆன சீனா…!! ”இறங்கி அடித்த இந்தியா” முதலீடுகளுக்கு கிடுக்கிப்பிடி ….!!

அந்நிய நேரடி முதலீட்டுக்கு இந்தியா விதித்த விதிமுறைகள் வர்த்தக அமைப்புக்கு எதிரானது என சீன வெளியுறவுத் துறை குற்றம்சாட்டியுள்ளது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஏராளமான நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலையை பயன்படுத்தி சீனா இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை சொந்தம் கொண்டாடும் சூழல் உருவாகும் என எதிர்க்கட்சிகள் அரசை குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் வெளிநாடுகளை சேர்ந்த தனி நபர் அல்லது நிறுவனம் […]

Categories
உலக செய்திகள்

தம்மை நாடு கடத்துவதை எதிர்த்து விஜய்மல்லையா தொடர்ந்த மனு: தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்!

தம்மை இந்தியாவுக்கு அனுப்புவதை எதிர்த்து தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விஜய் மல்லையா மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜய்மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடந்தும் நடவடிக்கைக்கு எதிராக தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9000 கோடி கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு கடந்த 2016ம் ஆண்டு தப்பி சென்றார். அவரை நாடு கடத்த உத்தரவிடக்கோரி லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: ஊரடங்கு மீறல்….! ”மத்திய அரசு ஆய்வு” நடவடிக்கை பாயும் …!!

ஊரடங்கை சரியாக பின்பற்றாத மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளை தவிர பிற சேவைகள் முழுவதும் தடைவிதிக்கப்ட்டது. மேலும் பொதுமக்கள் பொதுஇடங்களில் கூடவும் தடைவிதிக்கப்ட்டனர். இதில் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள சந்தைகளில் பொதுமக்கள் கூடி ஊரடங்கு வீதிமிறல் நடந்துள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு புது சிக்கல்…. ஷாக் கொடுத்த ICMR…. பதறவைக்கு தகவல்…!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் மாநிலம் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி. இந்த மாநில முதல்வர்களான மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் நேற்று கொடுத்த பேட்டி இந்தியாவையே அதிர்ச்சியடையவைத்தது. அதில் கொரோனா அறிகுறி இல்லாமலே அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்து கொரோனா பரபரப்பை அதிகரித்தது. டெல்லியில் 186 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் இந்த பகுதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன: உள்துறை அமைச்சகம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும் பகுதிகளின் விவரத்தை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதித்த மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிப்புகள் 17,265 ஆக அதிகரித்துள்ளது. அதில், இதுவரை 543 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை முன்பை விட இன்று அதிகம் என்று தான் சொல்லவேண்டும். கடந்த மார்ச் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: 80% அறிகுறி இல்லாமல் கொரோனா…. இந்தியாவில் ஷாக் …!!

80 சதவீதமானோருக்கு கொரோனா அறிகுறி இல்லாமலே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கொரோனா அறிகுறி இல்லாமலே அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் டெல்லியில் 186 பேருக்கு புதிதாக கொரோனா வந்ததில் யாருக்கும்  கொரோனா அறிகுறியான சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் துயரம்…! 1½ மாத குழந்தை கொரோனாவுக்கு பலி …!!

டெல்லியில் கொரோனா தொற்றினால் ஒன்றரை வயது குழந்தை பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில் டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு தீவிர சுவாச பிரச்சினையின் காரணமாக அவதிப்பட்டு வந்த ஒன்றரை மாத குழந்தை சிகிச்சைக்காக டெல்லியில் இருக்கும் ஹார்டின் மருத்துவமனையுடன் சேர்ந்த கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவமனையில் குழந்தைக்கு செய்த பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியான பின்னர் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

மோசமான நிலையில் முதல்வரின் தந்தை – மருத்துவர்கள் தீவிர சிகிச்சை ..!!

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆன்ந்த் சிங் பிஷ்ட் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தையான ஆனந்த் சிங் பிஷ்ட்க்கு வயது 89 ஆகிறது.கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி சிறுநீரக பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆனந்த் சிங் பிஷ்ட் சேர்க்கப்பட்டார்.அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாகவே அவரது உடல்நிலை மிகவும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,265ஆக உயர்வு…. 543 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 17,265 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 543 ஆக அதிகரித்துள்ளது. 2547 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். ராஜஸ்தானில் புதிதாக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனவை விரட்ட இப்படிலாம் பண்ணாதீங்க…. மத்திய சுகாதாரத்துறை வேதனை …!!

மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிக்க கூடாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது உலகம் முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசு எடுத்து வருகிறது. அவ்வகையில் பல இடங்களில் கிருமி நாசினி தெளித்து வருகிறது அரசு. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த வீடு, தெரு போன்ற இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது. இதேபோன்று தமிழகம் உட்பட சில இடங்களில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டு அவ்வழியாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா உறுதி… 27 பேர் உயிரிழப்பு – முழு விவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் பலியானவர்கள் எண்ணிக்கை 1,60,755ஆக உள்ள நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை இணை செயலர் தகவல் அளித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3,86,791 ரத்த மாதிரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

9 நாள் தான் ஆச்சு…. குழந்தையையும் விட்டு வைக்காத கொரோனா… ம.பி.யில். அதிர்ச்சி …!!

பிறந்து ஒன்பது நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது  அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது. தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வந்துகொண்டிருந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினாலும், கடந்த சில நாட்களாக பரவலாக பாதித்தவர்கள் குணமடைந்து வீடு திரும்புவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொடிய நோய் தொற்றாக பார்க்கப்படும் கொரோனா வைரஸ் சில பகுதிகளில் பிறந்த குழந்தைகளையும் […]

Categories
உலக செய்திகள்

மோடி எடுத்த முடிவு…. புகழின் உச்சியில் இந்தியா…. ஐநா சபையே பாராட்டுது …!!

கொரோனவை விரட்டிட ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து வழங்கிய இந்தியாவுக்கு ஐநாவின் பொது செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார். உலகுக்கே மரண பயத்தை காட்டிக் கொண்டிருக்கும் கொடூர கொரோனா வைரசுக்கு இன்றுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அதேவேளையில் கொரோனவை எதிர்த்து போராடி வரும் உலக நாடுகள்  அதற்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1க்கு ”அத்தியாவசிய பொருள்கள்” – கலக்கிய தொண்டு நிறுவனம் …!!

மேற்குவங்க மாநிலத்தில் 1 ரூபாய்க்கு அத்தியாவசியப் பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கி வருகின்றனர் நாடு முழுவதும் கொரோனா பரவலின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சில மாநிலங்களில் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு தேவையானவற்றை செய்து வருகின்றனர். அவ்வகையில் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24  பர்கானா மாவட்டத்தில் இருக்கும் போங்கான் நகரில் தற்காலிகமான பஜார் ஒன்றை தொடங்கியுள்ளனர் தன்னார்வலர்கள். நுழைவு கட்டணமாக ஒரு ரூபாயை வசூலித்து கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தேவைப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் மேலும் ஒரு வீரர் வீரமரணம்… இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு-காஷ்மீரின் சோபூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் மூன்று சிஆர்பிஎஃப் ஜவான்கள் உயிர் இழந்தனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவத்தினரும் பயங்கரவாதிகளுடன் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் இரு ராணுவத்தினர் வீரமரணம் அடைத்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

Best, Fast, First எல்லாமே நாங்க தான்…. பட்டைய கிளப்பும் தமிழகம்….. அசத்திய எடப்பாடியார் அரசு …!!

இந்தியாவில் கொரோனா பாதித்த அதிகமானோரை குணபடுத்திய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கொரோனா ஒரு கொடூர தொற்று நோய் மற்றும் உலகளவில் இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் அனைவரும் மரண பீதியில் இருந்து வருகின்றனர்.   அதே நேரத்தில் நாடு முழுவதும் குணமடைந்தவர்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா யுத்தம்… ஆல்ப்ஸ் மலையில் ஒளிரும் இந்திய தேசிய கொடி… ஸ்விஸ் மரியாதை!

கொரோனாவை  எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒற்றுமையை வெளிப்படுத்த மலை சிகரத்தில் இந்திய தேசியக் கொடியை ஒளிர விடப்பட்டுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி 20 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள நிலையில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதே சமயம் நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கொரோனா அச்சத்தால் பல நாடுகள் முடங்கியுள்ள நிலையில் ஸ்விட்ஸர்லாந்தின் மிக உயர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்.. பதிலடி கொடுத்த 2 இந்திய வீரர்கள் வீரமரணம், மூவர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீரின் சோர்பூர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கு இடையே நடந்த தாக்குதலில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவத்தினரும் பயங்கரவாதிகளுடன் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் இரு ராணுவத்தினர் வீரமரணம் அடைத்துள்ளனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 14 நாட்களாக சுமார் 45 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை… சுகாதாரத்துறை

இதுவரை 23 மாநிலங்களை சேர்ந்த சுமார் 47 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். கடந்த 14 நாட்களாக 45 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. புதுச்சேரி, மஹே, மற்றும் கர்நாடகாவின் கோடாகு ஆகிய இடங்களில் கடந்த 28 நாட்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என இணை செயலாளர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள மொத்த இறப்பு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எல்லாமே நாளைக்கு வந்துரும், சீனாவுக்கு கிளம்பிய இந்திய விமானம் ….!!

சீனாவில் ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கிட உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை எடுத்து வர ஏர்  இந்தியா விமானம் சென்றுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அதிக அளவு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் வலியுறுத்தி வருகின்றது. இதனால் கொரோனா பரிசோதனையை உலக நாடுகள் அதிகப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் கேரள மாநிலம் பரிசோதனையை அதிகப்படுத்தன் விளைவாகவே அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாங்களும் சளைத்தவர்கள் அல்ல…. ஒப்புதல் கிடைத்தால் மருந்து தயார் ஆகிவிடும் – களத்தில் இறங்கிய இந்தியா

கொரோனா தொற்றுக்கு எதிராக பல்நோக்கு தடுப்பூசியை பயன்படுத்த சோதனை செய்து வருகிறது இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையம் உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனாவிற்கு எதிராக இந்தியா பல்நோக்கு தடுப்பூசியை சோதனை செய்து வருகிறது என அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த இயக்குனர் ஜெனரல் டாக்டர் சேகர் மண்டே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது “கொரோனா வைரஸ்க்கு எதிராக திறன்பட செயலாற்றும் பல்நோக்கு தடுப்பூசியை விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து வருகிறார்கள். மேலும் அந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

300 போட்டி விளையாடி இருக்கேன்…. நீ என்ன ‘பைத்தியமா ? – வச்சு செஞ்ச தோனி …!!

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தோனி தன்னிடம் நடந்து கொண்ட முறை பற்றி இன்ஸ்டாகிராம் நேரலையில் குல்தீப் யாதவ் கூறியுள்ளார் கொரோனா தொற்றின் காரணமாக ஐபிஎல் தொடரின் 13வது சீசன் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அவ்வகையில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் இன்ஸ்டாகிராம் நேரலையில் 2017 ஆம் ஆண்டு இந்தூரில் நடைபெற்ற டி20 போட்டியின்போது முன்னாள் இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சோதனை கருவி வந்துடுச்சு – முதல் ஆளாக முதல்வர் எடுத்த முடிவு …!!

ஆந்திரா மாநிலத்தில் மக்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ள ஒரு லட்சம் ராபிட் டெஸ்ட் கருவிகளை வாங்கியுள்ளனர் சீனாவின் ஹான் நகரில் கொரோனா வைரஸ் தோன்றி உலக நாடுகள் பலவற்றிற்கும் பரவி அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்தது. தொற்று பரவுவதை தடுக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டும் வருகிறது. ஆனால் இன்று வரை இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரா […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் போட்டு வந்தா உண்டு, இல்லனா கிடையாது – மெர்சலான உத்தரவு …!!

முக கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் டீசல் வழங்க முடியாது என மேற்கு வங்காள பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளது சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்குநாள் வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்தியாவிலும் கொரோனா தொற்றைத் தடுக்க மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தும் அடுத்தடுத்து கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

நாங்க மருந்து கொடுக்குறோம், நீங்க பயங்கரவாதிய கொடுக்குறீங்க – இந்திய ராணுவ தளபதி வேதனை

மருந்துகளை ஏற்றுமதி செய்யும் இந்தியாவிற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்கிறது என இந்திய ராணுவ தளபதி கூறியுள்ளார். உலக நாடுகள் பலவும் கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் காஷ்மீரில் இருக்கும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சில தினங்களாக பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இச்சூழலில் காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய ராணுவத்தின் தளபதி எம்.எம்.நாரவனே இரண்டு தினங்கள் அங்கு சுற்றுப்பயணமாக சென்றார். இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்க நாட்டுல நடத்துங்க… தலையசைக்குமா? இந்தியா… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானித்தால் நாங்கள் பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம்  அறிவித்துள்ளது. 2020 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆரம்பிக்கப்பட இருந்தது. இதனிடையே கொரோனா அச்சம் காரணமாக தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.. ஆனால் கொரோனா தாக்கம் குறையாததால் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஐ.பி.எல். தொடரை கால வரையின்றி ஒத்திவைப்பதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தது. இந்தநிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,835 ஆக உயர்வு..!

கடந்த 24 மணி நேரத்தில் 1076 புதிய வழக்குகள் மற்றும் 32 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,835 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில், 11,616 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, இதுவரை 1766 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனாவால் இதுவரை 452 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
சற்றுமுன்

இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் – உயிரிழந்தோர் விகிதம் 80 : 20 ஆக உள்ளது – மத்திய சுகாதாரத்துறை!

இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் – உயிரிழந்தோர் விகிதம் 80 : 20 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.  இந்தியாவில் இதுவரை 13,387 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,007பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், 23 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 6 நாட்களில் இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு முடிவுரை – கட்டுப்பாட்டை விலக்கும் கேரளா ..!

கொரோனவை விரட்ட கேரளா 4 மண்டலங்களாக பிரிக்க்கப்பட்டு ஊரடங்கில் தளர்வு செய்வது குறித்து கேரள முதல்வர் கூறினார். கேரள மாநிலத்தில் வரும் இருபதாம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களுக்கான  ஒற்றை இரட்டை இலக்க எண் முறை அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் திரு பினராய விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில்  4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்றபடி ஊரடங்கில் தளர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது . இது குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரளா முதல்வர், வரும் 20ம் […]

Categories
தேசிய செய்திகள்

துணிந்து போராடுவோம்… அமெரிக்கா, ஜப்பானை விட இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைவு..!!

இந்தியாவில் 24 பேரின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் சராசரியாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால், ஜப்பானில் 12 பேரின் மாதிரிகளில் ஒருவர்க்கு தொற்று உறுதியாவதாகவும் விளக்கியிருக்கிறார். அமெரிக்காவை  பொருத்த வரை 5 மாதிரிகளில் ஒருவருக்கு கோவிட் -19 இருப்பது நிரூபணமாகியுள்ளது. நோய் பரவலை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளால், கொரோனா தாக்கம் இந்தியாவில் 3 சதவீதமாக கட்டுப்படுத்த பட்டிருக்கிறது என்று […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் ஒன்றும் சலித்தவர்கள் இல்லை… கொரோனா தடுப்பூசி தயாரிக்க இந்தியா தீவிரம்..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோவிற்கு தடுப்பூசி தயாரிக்க அமெரிக்கா மற்றும் சீனாவுடன் இந்தியாவும் போட்டியில் குதித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 6 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவற்றில் சைடஸ் கேடிலா, சீரம் என இரு நிறுவனங்கள் மட்டுமே உலக சுகாதார அமைப்புகளிடம் பதிவு செய்து சர்வதேச அளவில் போட்டியில் இருப்பதை உறுதி செய்துள்ளது. உலகின் ஒட்டு மொத்த மக்கள் தொகை 700 கோடியை தாண்டி விட்டதால், ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் தயாராவது வரவேற்கத்தக்கது என்று சர்வதேச தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 1,007 பேருக்கு புதிதாக கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது..!

நாடு முழுவதும் 1,007 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து நாட்டில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்துள்ளது. அதில், 11,201 பேருக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 1,748 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். சீனாவில் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கடத்த சில நாட்களாக கொரோனா தொற்று இல்லாத நிலையில், மீண்டும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஸ்கெட்ச் போட்ட RBI…. களமிறங்கும் மாநிலங்கள்…. கொரோனாவுக்கு ஆப்பு ..!!

கொரோனாவுக்கு எதிராக ரிசர்வ் வங்கி எடுத்துள்ள முடிவு அனைத்து மாநில அரசுக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் மிக அதிக அளவுக்கு சரிந்துள்ளது. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. கொரோனா ஆச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் ஒட்டு மொத்தமும் முடங்கிக் கிடப்பதால் ஏற்றுமதி வர்த்தகம் போன்ற நடவடிக்கைகள் நிகழாமல் நாட்டின் வளர்ச்சி சரிவு கண்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மும்பையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அதிகமான பணம் வாங்கிக்கோங்க… ”மாநில அரசுக்கு ஜாக்பாட்” அள்ளிக் கொடுக்கும் RBI …!!

கொரோனா பாதிப்பை சரி செய்வதற்கு மாநில அரசு அதிகளவில் கடன் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனவால் உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஏற்றுமதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வராமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கம். இந்த ஆண்டில் நெல் பயிரிடும் பரப்பளவு 37 சதவீதமாக அதிகரித்துள்ளது.மார்ச் மாதம் வாகன […]

Categories
தேசிய செய்திகள்

எங்க நாட்டுக்கு அனுப்பி வைங்க… பாகிஸ்தானுக்கு உதவிய இந்தியா..!

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இந்தியாவில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டினர் பாகிஸ்தான் திரும்ப இந்தியா உதவியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக  ஏப்ரல் 14 ஆம் தேதிவரை இந்தியா முழுவதும் அமல்படுத்தியிருந்த ஊரடங்கு உததரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஆகிய பகுதிகளில் சிக்கியிருக்கும் 41 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் நாடு திரும்புவதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அதனை  உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

மூதாட்டி சுட்டுக் கொலை… காப்பாற்ற கதறியும் வீடியோ எடுத்த துயரம் …!!

பட்டப்பகலில் மூதாட்டியை மர்மநபர் சுட்டு கொலை செய்த பொழுது  காப்பாற்றாமல்  வீடியோ எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்திரப்பிரதேசம் கஞ்ச் மாவட்டத்தில் தெரு ஒன்றில் வைத்து 60 வயது பாட்டியை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் மிரட்டி உள்ளார். இதனையடுத்து சுற்றி இருந்தவர்களிடம் பாட்டி உதவி கேட்டும் கதறி அழுதும் யாரும் உதவ முன்வரவில்லை. அதனால் பயந்து போய் வீட்டிற்குள் ஓட முயற்சிக்க பாட்டியை தொடர்ந்த மர்ம நபர் இரண்டு முறை  துப்பாக்கியால் சுட்டதில் சுருண்டு விழுந்த பாட்டி […]

Categories
தேசிய செய்திகள்

ரெடியான சோதனை கருவிகள் – 1st எங்க அனுப்புறாங்க தெரியுமா ?

இந்தியாவுக்கு சீனாவில் ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கிட்டில் 3 லட்சம் உபகரணம் தயார் என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனமும் கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு ஆலோசனையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கொரோனா பரிசோதனையை உலக நாடுகளும் அதிகரித்து கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் இந்தியாவிலும் வேகமாக பரவிவரும் கொரோனவை கட்டுப்படுத்த அதிவேக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு வந்துடுச்சு…. கொரோனவை விரட்ட தயார் – ரெடியான மத்திய அரசு …!!

இந்தியாவுக்கு சீனாவில் ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கிட்டில் 3 லட்சம் உபகரணம் வந்துள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பாதிக்க தொடங்கிய சீனாவை விட இந்தியாவில் தான் அதிக மக்கள் தொகை உள்ளதால் உலக நாடுகளின் பார்வை நம் நாட்டின் மீது விழுந்துள்ளது, கொரோனவை இந்தியா எப்படி கையாளுகின்றது என உலக நாடுகள் உற்று […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 12,380ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,489ஆக உள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 414ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா தொற்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 3 லட்சம் ”ரேபிட் டெஸ்ட் கிட்” இந்தியாவுக்கு வந்துடுச்சு …!!

சீனாவில் ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கிட்டில் 3 லட்சம் உபகரணம் இந்தியா வந்துள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று இந்தியவில் வேகமாக பரவி வரும் நிலையில் இந்திய மருத்துவ  ஆராய்ச்சி கவுன்சில் தினமும் செய்தியாளர்களை சந்தித்து கொரோனாவுக்கு எதிராக அரசாங்கங்கம் எடுத்து வரும் நடவடிக்கை சம்பந்தமாக  பல்வேறு விஷயங்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இன்றைய செய்தியாளர் சந்திப்பில், சீனாவில் இருந்து கிட்டத்தட்ட 6 லட்சத்து 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்களை ஆர்டர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இது போதாது, இன்னும் பண்ணுங்க – கொரோனா வேகமாக பரவும் – ராகுல் வலியுறுத்தல் ..!!

கொரோனா பரவலை தடுக்க அதிக அளவு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது . முன்னதாக 21 நாட்கள் விதிக்கப்பட்டு இருந்த ஊரடங்கை மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து இன்று காணொளி மூலம் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சித் […]

Categories
தேசிய செய்திகள்

எது நடக்க கூடாதோ, அது நடந்துருச்சு – அதுவும் தமிழகத்தில் – பரபரப்பு தகவல் …!!

வவ்வால்களுக்கு கொரோனா தொற்று பரவக் கூடாது என்று சொல்லிய நிலையில் தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் வவ்வால்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு பெருமளவில் பரவி பல உயிர்களை கொன்ற கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உலகில் மூன்று பங்கு மக்களை வீடுகளுக்குள் இருக்கும் படியான நிலை ஏற்பட்டுள்ளது.. இதனிடையே அறிவியல் நிபுணர்கள் வவ்வால்களுக்கு மனிதர்களிடமிருந்து கொரோனா தொற்று ஏற்படுவது அபூர்வமே ஆனால் அவ்வாறு பரவி விட்டால் அது பேராபத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தனர். அதோடு உயிரியல் பிரிவில் […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வந்தடைந்தது!

சீனாவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட 6.5 லட்சம் கொரோன பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வந்தடைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான நபர்களையே சோதனை செய்ய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மத்திய அரசு கொடுத்த ஷாக்…. ஆடிபோன தமிழகம்…. அரண்டு போன மக்கள் …!!

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதி, பாதிப்பு குறைவாக உள்ள பகுதி, பாதிப்பு இல்லாத பகுதி என 3 பகுதிகளாக பிரிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1,076 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,933 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவின் ”ஹாட்ஸ்பாட்” மாவட்டங்கள் வெளியீடு …!!

தமிழகத்தில் 22 மாவட்டங்கள் கொரோனாவின் ஹாட்ஸ்பாட் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் தொடங்கினால் வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டிருந்த நிலையில் அதனை மேலும் 19 நாட்களுக்கு நீட்டித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஏப்ரல் 20ம் தேதிக்குப் பின்னர் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு இன்று […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கொரோனா பாதித்த மாவட்டங்கள் 3 பகுதிகளாக பிரிக்கப்படும்: மத்திய சுகாதாரத்துறை

கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 3 பகுதிகளாக பிரிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதி, பாதிப்பு குறைவாக உள்ள பகுதி, பாதிப்பு இல்லாத பகுதி என 3 பகுதிகளாக பிரிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் சுமார் 400 மாவட்டங்களை கொரோனா தாக்கவில்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!

இந்தியாவின் சுமார் 400 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார். மேலும், கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகள் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டள்ளது என அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தினார். அதில் அவர் தெரிவித்ததாவது, ” ஜனவரி 7ம் தேதி சீனாவில் முதல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 11,933ஆக உயர்வு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 11,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,933ஆக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

2020 ஐ.பி.எல். போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகின்றன – பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் நலனை முக்கியமாக கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் 29ம் தேதி நடக்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Indian Premier League 2020 season has now been postponed indefinitely: BCCI Official pic.twitter.com/5kWlfHCh54 — ANI (@ANI) April 15, 2020 சீனா தொடங்கி உலக […]

Categories

Tech |