இந்திய கடற்படையின் தலைமை தளபதியான ஹரிகுமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது “முன்பே கூறியதுபோன்று இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட முதல் தொகுதியை சேர்ந்த 3 ஆயிரம் அக்னி வீரர்களில் 341 பேர் பெண்கள். இந்த 341 பெண்கள் கப்பல் மாலுமிகளாக செயல்படுவர். மேலும் ஆண்கள் பெறக்கூடிய அதே பயிற்சி முறைகளை அவர்களும் பெறுவார்கள். பயிற்சி முறையில் எவ்வித வேற்றுமையும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். அதுமட்டுமின்றி அடுத்த வருடத்திலிருந்து, அனைத்து பிரிவுகளிலும் பெண் அதிகாரிகளை படையில் சேர்ப்பதற்குரிய […]
Tag: இந்திய கடற்படை
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சொந்தமான விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த செல்லத்துரை, செல்வகுமார் மற்றும் வீரவேல் உட்பட 10 மீனவர்கள் கடந்த 15-ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கிளம்பிய மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்திய கடற்படையைச் சேர்ந்த INS பங்காரம் பயிற்சியில் ஈடுபட்டிருந்து. இதை பார்த்த மீனவர்கள் இலங்கை கடற்படை என்று […]
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீனாவுக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய விண்வெளி ஆய்வுக் கப்பலான யுவான் வாங்-5 ஆகஸ்ட் 16ஆம் தேதி, இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. யுவான் வாங் – 5 கப்பலில் இருந்தவாறு 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது. எதிர்ப்பை மீறியும் சீனாவின் உழவு கப்பல் இலங்கை வந்துள்ள நிலையில், இந்திய கடற்படை கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி கடல் பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான […]
இந்திய கடற்படை கடற்பகுதியில் உள்ள படகுகளில் நடத்திய சோதனையில் ரூ.2000 கோடி மதிப்புள்ள போதை பொருள்களை கைப்பற்றியுள்ளது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு இந்திய கடற்படையுடன் இணைந்து கடற்பகுதியில் உள்ள படகுகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 800 கிலோ போதைப் பொருட்கள் பிடிபட்டதாகவும், அவற்றின் சந்தை மதிப்பு ரூ.2,000 கோடி எனவும் இந்திய கடற்படை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படையிடம் நவீன கடல்சார் ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கடற்படை இரண்டு நவீன கடல்சார் ஹெலிகாப்டர்களை நாட்டின் போர் திறனை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்காவிடமிருந்து பெற்றுள்ளது. மத்திய அரசு இந்திய பாதுகாப்பு படையை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இரண்டு நவீன கடல்சார் ஹெலிகாப்டர்களை நாட்டின் பலத்தை வலுப்படுத்தும் விதமாக இந்திய கடற்படை அமெரிக்காவிடமிருந்து பெற்றுள்ளது. மேலும் இந்திய அதிகாரிகளிடம் எம்எச்-60-ஆர் ஹெலிகாப்டர்கள் நேற்று அமெரிக்காவில் உள்ள கடற்படை […]
இலங்கை கடலில் ஒரு சரக்கு கப்பல் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், சரக்கு கப்பலான MSC Messina, நேற்று முன் தினம், சிங்கப்பூருக்கு செல்ல கொழும்பிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது Great Basses Reef என்ற கலங்கரை விளக்கத்திலிருந்து சுமார் 480 மைல் தூரத்தில் பயணித்த போது திடீரென்று கப்பலில் தீ பற்றி எரிந்துள்ளது. மேலும் கப்பலின் எஞ்சின் அறைக்கும் தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SAR Container ship #MSCMessina with […]
இந்தியக் கடற்படை வீரர்கள் இலங்கை மீனவர்களை தாக்கியதாக கூறப்படும் செய்திகள் பொய் என்று இந்தியத் தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது பல காலமாகவே நடந்து வருகிறது. அவ்வப்போது அவர்கள் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது ,அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இதில் திடீர் திருப்பமாக இந்தியக் கடற்படை இலங்கை மீனவர்களை தாக்கி இருப்பதாக […]
பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்த இலங்கை சேர்ந்த 5 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். கேரளாவில் அரபிக்கடல் பகுதியில் இந்திய கடற்படைக் கப்பலான ‘சுவர்ணா’கப்பலில் வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது ஒரு மீன்பிடி படகு அப்பகுதியில் நீண்ட நேரமாக சுற்று இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த கடற்படையினர் அந்தப் படகை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன் பிறகு படகில் ஏறி சோதனை செய்த பொழுது அதிலிருந்த 300 கிலோ எடையுள்ள போதை பொருள்களை பறிமுதல் […]
இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : இந்தியக் கடற்படை ( Indian Navy ) மொத்த காலிப்பணியிடங்கள் : 1159 Headquarters Eastern Naval Command, Visakhapatnam – 710 PostsHeadquarters Eastern Naval Command, Visakhapatnam – 710 PostsHeadquarters Western Naval Command, Mumbai – 324 PostsHeadquarters Southern Naval Command, Kochi – 125 Posts கல்வி தகுதி 10th pass, ITI […]
மீன்பிடிக்க சென்ற இடத்தில் மீனவர் வலையில் சீன ட்ரோன் சிக்கியதால் இந்திய கடலோர படையை சீன வேவு பார்க்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த மீனவர் ஒருவர் நீர்மூழ்கி ட்ரோனை கண்டுபிடித்துள்ளார். இதனை ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது இது சீனாவை சேர்ந்த நீர்மூழ்கி ட்ரோன் என கண்டுபிடிக்கப்பட்டது. சீன அரசால் நடத்தப்படும் அறிவியல் அகாடமியில் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கி ட்ரோன்கள் ஆகும். சேருதீன் என்ற மீனவர் இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சேலையால் தீவில் மீன் […]
இந்திய கடற்படையின் போர்க்கப்பலில் முன்கள போராளிகளாக முதன்முதலாக இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையில் பல பிரிவுகளில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தாலும், போர்க்கப்பல்களில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் முதன்முறையாக போர்க்கப்பலில் இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். சப்-லெப்டினன் குமுதினி தியாகி மற்றும் சப்-லெப்டினன் ரீத்தி சிங் ஆகியோர் கடற்படை போர்க் கப்பல்களில் முன்கள பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாங்கள் இருவரும் 60 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், பயிற்சி மிகவும் கடுமையாக இருந்தது எனவும் […]