இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளரான ரமேஷ் பவாருடன் இணைந்து ,சிறப்பாக பணியாற்றுவேன் என்று அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டார். இந்திய மகளிர் அணி வருகின்ற ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் தொடர் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் மூலம் இந்திய மகளிர் […]
Tag: இந்திய கிரிக்கெட் மகளிர் அணி
கொரோனா நிவாரண நிதிக்காக கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் இணைந்து நிதி திரட்டி உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் வீராங்கனையின் தாயாரின் மேல் சிகிச்சைக்காக இந்திய கேப்டன் விராட் கோலி நிதியுதவி அளித்துள்ளார் .இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனையான ஸ்ரவந்தி நாயுடுவின் தாயார், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு , மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தாயின் மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் […]
இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியின், ஆல்ரவுண்டரான வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில், மக்கள் கூட்டம் நிரம்பி உள்ளது. அதோடு ஆக்ஸிஜன் மற்றும் மருந்து தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் கொரோனா தொற்றால், உயிரிழந்த […]