அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அங்கு வாழும் இந்தியர்கள் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியிருக்கும் நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இருக்கும் பிரதிநிதி சபை, செனட் சபை என்ற இரு அவைகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆறு வருடங்கள் செனட் உறுப்பினர்களின் பதவிக்காலம், இரண்டு வருடங்கள் பிரதிநிதி சபையின் பதவிக்காலம். இடைத்தேர்தல் இரு வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும். இந்நிலையில் House District 30 என்னும் பிரதிநிதி […]
Tag: இந்திய வம்சாவளியினர்
அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினரை கடத்தி கொலை செய்த வழக்கில் ஒரு நபர் கைதாகி உள்ளார். அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்தீப் சிங், அவரின் மனைவி ஜஸ்லின் கவுர், இவர்களின் கைக்குழந்தை மற்றும் உறவினர் அமன் தீப் சிங் ஆகிய நான்கு பேரும் கடந்த திங்கட்கிழமை அன்று நெடுஞ்சாலையில் வைத்து மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்கள். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு […]
மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக இருக்கும் பியூஸ் கோயல், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பிற நாடுகளுடன் உறவை பலப்படுத்திக் கொள்வதில் பாலமாக இருப்பதாக கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டிற்கு சுற்று பயணமாக சென்றிருக்கும் மத்திய அமைச்சரான பியூஸ் கோயல், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கிருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மக்களுடன் உரையாடினார். அதில் அவர் கூறியதாவது, அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய மக்கள் தொழில்துறை சார்ந்த வகையில் புதிய அணுகுமுறையை கொண்டிருக்கிறார்கள். எனினும் இந்திய பாரம்பரியத்தையும், […]
இந்திய தூதரகம், தங்கள் நிதி உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்பட்டு வரும் வீடு கட்டித்தரும் திட்டத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு ஆயிரம் வீடுகள் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறது. இந்திய தூதரகம் இது தொடர்பில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இலங்கையில் இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்திய நாட்டின் நிதி உதவியோடு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது வரை 4000 வீடுகள் இதன்மூலம் கட்டப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில், ஆயிரம் வீடுகள் பொங்கல் […]
கனடா நாட்டில் இந்திய வம்சாவளியினர் 3 பேருக்கு நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய தேசிய விருது கிடைக்கவிருக்கிறது. இந்திய வம்சாவளியினரான வைகுண்டம் ஐயர் லக்ஷ்மணன் என்ற விஞ்ஞானி, பாப் சிங் தில்லான் என்ற தொழிலதிபர் மற்றும் பிரதீப் மெர்ச்சண்ட் ஆகிய மூவரும், “ஆர்டர் ஆப் கனடா” என்ற அந்நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய தேசிய விருதுக்கு தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான விருதுக்கு சுமார் 135 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில், இவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். அதாவது அவரவர் துறையில், அவர்கள் […]
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் 66 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்று அமெரிக்கா தகவல் தெரிவித்து உள்ளது. உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக கருதப்படுகிற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 66 பேர் இடம் பெற்றுள்ளனர். இத்தகவலை 2020-ம் ஆண்டின் பயங்கரவாதம் பற்றிய அறிக்கையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அந்த அறிக்கையில் அவர் குறிப்பிடும்போது “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2039-ஐ அமல்படுத்துவதில் அமெரிக்காவுடன் இந்தியா சேர்ந்து செயல்படுகிறது. […]
அமெரிக்க நாட்டின் சராசரி குடும்ப வருமானம் மற்றும் பட்டதாரிகளின் எண்ணிக்கையில் அமெரிக்க மக்களை விட இந்திய வம்சாவளியினரே அதிகமாக உள்ளனர். அமெரிக்க நாட்டில் இந்திய மக்கள் 40 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இதில், 16 லட்சம் மக்கள் விசா வைத்திருக்கின்றனர். மேலும், 14 லட்சம் மக்கள், இயற்கையான குடியிருப்பாளர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள 10 லட்சம் மக்கள் அந்நாட்டிலேயே பிறந்தவர்கள். இந்நிலையில் சமீபத்தில், நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய நடுத்தர குடும்பங்களின் […]
மனைவியை கொன்ற இந்திய வம்சாவளி கணவருக்கும் அவரது காதலிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த Bhupinderpal Gill (40) என்பவர் திருமணத்திற்கு பிறகும் தனது காதலியான Gurpreet Ronald (37)-உடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து இவர்களின் காதலுக்கு Bhupinderpal Gill-ன் மனைவி Jagtar Gill தடையாக இருந்ததால் இருவரும் சேர்ந்து Jagtar Gill-ஐ கொலை செய்ததாக தகவல் வெளியானது. இதன் காரணமாக இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக […]
தென்னாப்பிரிக்காவில், ஏற்கனவே வன்முறை அதிகரித்து வரும் நிலையில், தற்போது கருப்பின மக்களுக்கும் இந்திய வம்சாவளியினருக்கும் இடையில் பதற்றமான நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் வன்முறை வெடித்து வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரத்தில் இந்திய மக்கள் அதிகமாக வாழக்கூடிய ஃபீனிக்ஸ் புறநகர் பகுதி மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் கலவரங்கள் அதிகரித்து வருகிறது. இதில் இந்திய வம்சாவளியினர் மற்றும் கருப்பின மக்கள் ஒருவரையொருவர் குற்றம் […]
அமெரிக்காவில் நடத்தப்படும் “ஸ்பெல்லிங் பீ” போட்டியில் இறுதி கட்ட சுற்றுக்கு இந்திய வம்சாவளியினர் 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கென நடத்தப்படும் “ஸ்பெல்லிங் பீ” போட்டியில் கடினமான ஆங்கில வார்த்தைகளை சரியாக உச்சரிபவர்களுக்கு பரிசு தொகையும், சாம்பியன் பட்டமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்ற வருடம் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட “ஸ்பெல்லிங் பீ” போட்டி கடந்த மாதம் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய வம்சாவளியினரை பாராட்டி பெருமையாக பேசியுள்ளார். நாசாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு சமீபத்தில் பெர்சிவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் ஆய்வு செய்வதற்காக நடத்தப்பட்டது. தற்போது அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக களமிறங்கியதாக செய்தி வெளியானது. இந்த சாதனையானது நாசாவின் மிக முக்கிய சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி மோகன் என்பவர் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் குழுவின் தலைவராக செயல்பட்டவர். இந்நிலையில் […]
வெளிநாடுகளில் முக்கிய பதவி பொறுப்புகளில் இருக்கும் இந்திய வம்சாவளியினரின் பட்டியலை “இந்தியாஸ்போரா” நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அமெரிக்க,பிரிட்டன்,ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர்,தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன் உட்பட 15 வெளிநாடுகளில் இந்திய வம்சாவளியினர் எத்தனை பேர் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள் என்பதனை “இந்தியாஸ்போரா” அமைப்பு ஆய்வு செய்து அதன் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ், 60க்கும் மேற்பட்டோர் கேபினட் அமைச்சர் அந்தஸ்து கொண்ட பதவிகளை வகித்து வருகின்றனர். மேலும் அமெரிக்காவில் எம்பிக்கள் ஆக […]
கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பிற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது பொருளாதார நடவடிக்கையாக கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சுற்றுலா விசா தவிர மற்ற விசாக்கள் மூலம் வெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியினர், இந்திய குடியுரிமை பெற்றவர்கள் வர உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய வம்சாவளியினர் அனைவரும் தனக்கே தங்கள் வாக்குகளை வழங்குவார்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. அந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடன் போட்டியிடுகின்றார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இரு தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” […]
இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சீன தூதரகம் அருகே போராட்டத்தை மேற்கொண்டனர். சீனாவைச் சேர்ந்த ஹவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஷோவை, அமெரிக்க வாரண்டின் அடிப்படையில், 2018ம் ஆண்டு கனடா அரசு கைது செய்தது. அப்போது இருந்தே சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் வர தொடங்கியது. ஹவாய் அதிகாரி மெங் கைது செய்யப்பட்டதன் பின், உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடாவைச் சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரி மைக்கேல் கோவ்ரி, தொழிலதிபர் […]