குத்துச்சண்டை உலக சாம்பியன் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் நிக்கத் ஜரீன். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இன்று நடந்த மகளிர் 52 கிலோ எடை பிரிவுக்கான இறுதிப்போட்டியில் தாய்லாந்தின் ஜூடாமஸ்-ஐ வென்று நிக்கத் ஜரீன் பட்டம் வென்றுள்ளார். இந்த வெற்றியால் உலகச் சாம்பியன் பட்டம் வெல்லும் இந்தியாவின் ஐந்தாவது குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை நிக்கத் ஜரீன் பெறுகிறார். இவருக்கு அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Tag: இந்திய வீராங்கனை
சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனையான ஜோதி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 13.23 வினாடிகளில் இலக்கை கடந்து ஜோதி தங்கம் வென்றுள்ளார். இதைத்தொடர்ந்து அனுராதா பிஸ்வாலின் 20 ஆண்டுகால தேசிய சாதனையும் இவர் முறியடித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு அனுராதா பிஸ்வால் 13.38 வினாடிகளில் இலக்கை கடந்து தேசிய சாதனை படைத்திருந்தார். அவரது சாதனையை முறியடித்து 13.23 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்து ஜோதி […]
பாட்டியாலாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 24-வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில், தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி, சில தினங்களுக்கு முன் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹீமா தாஸ், டூட்டி சந்த் என இரு புகழ்பெற்ற இந்திய வீராங்கனைகளையும் வீழ்த்தி கவனம் பெற்றிருந்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதிச்சுற்றில் 23.26 நொடிகளில் முடித்து, 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்தார். இந்நிலையில் இந்திய கிராண்ட் பிரிக்ஸ் தடகள போட்டியில் இளம் […]
இந்த ஆண்டுக்கான சிறந்த டி20 வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது . ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஐசிசி டெஸ்ட் ,டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது .அதன்படி 2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இந்திய மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தனா , இங்கிலாந்து அணியில் நட் ஸ்கைவர், டாமி பியூமண்ட், அயர்லாந்து வீராங்கனை கேபி […]
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பூஜை ராணி தோல்வியடைந்துள்ளார். குத்துச்சண்டை பெண்கள் 69 – 75 கிலோ எடைப் பிரிவு காலிறுதி போட்டியில் சீன வீராங்கனை லீ கியானுடன், பூஜா ராணி மோதினார். இதில் 0 – 5 என்ற கணக்கில் லீ கியானிடம் பூஜா ராணி தோல்வியடைந்தார். தற்போது குத்துச்சண்டையில் லவ்லினா மட்டும் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 69-75 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்புடன் மோதினார்.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்பை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். காலிறுதியில் பூஜா வெற்றி பெற்றால் பதக்கம் உறுதியாகிவிடும்.
அடுத்த வார இறுதியில் விண்வெளிக்கு பயணம் செய்யவுள்ள தனியார் விண்வெளி நிறுவன குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவரும் பங்கேற்கவுள்ளார். அமெரிக்காவில் விர்ஜின் கேலடிக் என்னும் தனியார் விண்வெளி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தினுடைய தலைவருடன் சேர்ந்து 5 பேர் கொண்ட குழுக்கள் அடுத்த வார இறுதியில் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள “யூனிட்டி 22” ல் விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ளார்கள். இதற்கிடையே இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிரிஷா என்பவர் துணை […]