இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் 16 புதிய சான்றிதழ் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து இக்னோ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அப்பேரல் மெர்சண்டைசிங், பாலின அறிவியல், பொலிவுறு நகர வளர்ச்சி மற்றும் வேளாண்மை, வேதிக் ஸ்டடிஸ், அமெரிக்க இலக்கியம், தொழிலக பாதுகாப்பு, வாஸ்து சாஸ்திரம் உள்ளிட்ட 16 புதிய படிப்புகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய படிப்புகளில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Tag: இந்திரா காந்தி பல்கலைக்கழகம்
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விருப்பமுள்ள மாணவர்கள் ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தில் ஜூலை 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் www.igenou.ac.in என்ற இணையதளம் மூலம் பாடப்பிரிவுகள், கட்டண விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் www.ignou.ac.in என்ற இணையதளத்தில் ஜனவரி 31 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-26618438, 044-26618039 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.