கம்மியான பட்ஜெட்டில் தயாராகி சென்ற மாதம் திரைக்கு வந்த “லவ் டுடே” திரைப்படம் பன்மடங்கு வசூல் குவித்து திரை உலகினரை வியப்பில் ஆழ்த்தியது. சுமார் ரூபாய்.4 கோடி பட்ஜெட்டில் தயாராகிய இந்த திரைப்படம் ரூபாய்.70 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியானது. அத்துடன் ஓடிடி உரிமை வாயிலாகவும் பெரிய தொகை வந்திருக்கிறது. மேலும் தெலுங்கில் இந்த படத்தை வெளியிட்டும் அதிக லாபம் பார்த்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து டைரக்டும் செய்திருந்தார். இந்த […]
Tag: இந்தி ரீமேக்
மலையாளத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மோகன்லால்,மீனா ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி என பலமொழிகளிலும் வெளியாகி வெற்றிப்பெற்றது. இதனையடுத்து இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் ரீமேக் பழமொழிகளில் உருவாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இந்தி ரீமேக்கின் முதல் பாகத்தில் நடித்த அஜய் தேவ்கானே தற்போது இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். இவருக்கு […]
தமிழ் சினிமாவில் புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா, ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் விக்ரம் வேதா. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் இந்தி மேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இயக்கி வருகிறார். இப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி […]
தமிழ் சினிமாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரறை போற்று’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி கருணாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. அதுமட்டுமில்லாமல் 5 விருதுகளையும் இத்திரைப்படம் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. […]
நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்வதற்கு பாலிவுட் கதாநாயகர்கள் தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் நடித்து சிறுத்தை சிவா இயக்கி, கடந்த 2019 ஆம் வருடத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. தந்தை மற்றும் மகளின் பாசத்தை வெளிப்படுத்தும் இத்திரைப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் வரவேற்றனர். எனவே, இத்திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கு முன்பு, மாநகரம், விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா, […]
நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் வருடத்தில், நடிகர் அஜித், நயன்தாரா நடித்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தந்தை மகள் பாசத்தை வெளிப்படுத்தும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணீஷ் ஷாவின் கோல்டுமேன் டெலி பிலிம், விஸ்வாசம் திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை 4 கோடி ரூபாய்க்கு […]
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஒத்த செருப்பு’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது, இப்படத்தையும் பார்த்திபன் இயக்கி வருகிறார். நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தது. சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு ஆகிய விருதுகளையும் வென்றது. ஆஸ்காருக்கும் சென்று வந்தது. ஒத்த செருப்பு படத்தை, இந்தி, […]
வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து சிவா – அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான படம் ‘விவேகம்’. இப்படம் ஆகஸ்ட் மாதம் 2017ம் ஆண்டு வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இதில் காஜல் அகர்வால் ஜோடியாகவும், விவேக் ஓபராய் வில்லனாகவும் நடித்திருந்தார்கள். இப்படம் இந்தியில் டப் செய்து யூடியூப்பில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணிநேரத்தில் பல மில்லியனுக்கும் மேலாக ரசிகர்கள் பார்த்து இருந்தனர். இந்நிலையில், தற்போது 100 மில்லியன் பார்வையாளர்கள் […]
தமிழில் வெளியான தடம் திரைப்படம், நடிகர் ஆதித்யா ராய் கபூர் நடிப்பில் இந்தியில் வெளியாகப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருடத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடித்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் தடம். இத்திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. மேலும் விமர்சகர்களிடமும் பாராட்டை பெற்றது. இத்திரைப்படம் “ரெட்” என்ற பெயரில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. எனவே தடம் திரைப்படத்தை இந்தியிலும் வெளியிடவுள்ளார்கள். […]