திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், இந்து சமய அறநிலையத்துறையே வேண்டாம் அப்படின்னு சிலர் சொல்லுறாங்க. அந்தத் துறை வேண்டியது இல்லை. அந்தத் துறையை எடுத்துட்டு, அதை எங்களிடம் ஒப்படைச்சிருங்க என்று சாமியார்களின் கூட்டம் கோஷம் போட்டுக் கொண்டிருக்கு. சாமியார் கூட்டத்தில் ஒப்படைத்தால் அது என்ன கதிக்கு ஆளாகும் ? அப்படிங்கறது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் […]
Tag: இந்து சமய அறநிலையத்துறை
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக புகார் எழுந்து நிலையில், கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.. கடலூர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக 17.05.2022 முதல் கனகசபை மீது ஏறி பக்தர்கள், சாமி தரிசனம் செய்யலாம் என்று அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது கனகசபை மீது ஏறி வழிபட பக்தர்கள் ஆவலோடு […]
60ம் கல்யாணத்திற்கு பிரசித்தி பெற்றதற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் பெயரில் தனிநபர் இணையதளத்தை முடக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்கண்டன் என்பவர் தான் உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கினை இன்று தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு என்பது நீதிபதி மகாதேவன் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தமிழகத்திலே மிகவும் பிரசிதி பெற்ற கோவில. […]
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது இந்து சமய அறநிலையத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் சொத்துக்களை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையில் கோவில்களின் சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்திருக்கும் நபர்களிடமிருந்து பல கோடி ருபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதிகேசவ பாஷ்யக்கார திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ. 4 கோடி மதிப்பிலான கட்டிடம், அகத்தீஸ்வரம் கோவிலுக்கு […]
திருநெல்வேலியில் நடைபெற்ற 7 பி தேர்வில் 1061 பேர் எழுதினார்கள். நேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பாக குரூப் 7பி மற்றும் குரூப் 8 தேர்வுகள் நடந்தது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் குரூப் 7பி தேர்வானது நேற்று நடந்தது. இத்தேர்விற்கு மொத்தம் 2078 பேர் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 1061 பேர் மட்டுமே வந்தார்கள். மொத்தம் தேர்வு எழுதிய சதவீதம் 51.05 மட்டுமே. இந்த தேர்வு எழுதும் அறைக்கு செல்போன்கள், கால்குலேட்டர் சாதனங்கள் எடுத்துச் […]
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் எந்தவித பயன்பாட்டிலும் இல்லாத தங்கத்தை ஒன்றிய அரசின் உருக்காலையில் உருக்குவதற்கு முன்னால் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கின்ற குழுவினரால் முழுவதுமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்டு, யாராவது பக்தர்கள் விரும்பினால் அவர்களின் முன்னிலையிலேயே அந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இது ஒட்டுமொத்தமாக திருக்கோயில் வளர்ச்சிக்கு உதவுகின்ற ஒரு நல்ல பணி. உண்மையிலேயே ஆன்மீக உலகத்திற்கு முதலமைச்சர் அவர்களால் செய்யப்படுகின்ற […]
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்றும் நாளையும் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த கோவிலின் வரவு, செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் ஆய்வு செய்ய உள்ளனர். இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீட்சிதர்களுக்கு அறிவிப்பு அனுப்பி இருந்தனர். அதில் அறநிலையத் துறையினர் ஆய்வின் போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க […]
தமிழகத்தில் 1250 கிராமப்புற கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்வதற்கு 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில் தமிழக அரசின் கிராமப்புற திருக்கோவில்களில் திருப்பணி திட்டத்தின் கீழ் இந்த பணி மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சார்நிலை ஆர்வலர்களிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையின் படி 1250 கோவில்கள் இறுதி செய்யப்பட்டு பெயர் விவரப்பட்டியல் வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிந்துரை பெறப்பட்டு, மண்டல இணை ஆணையர் முன்னிலையில் […]
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் மாவட்ட வழிகாட்டி கையேடுகள் விரைவில் வெளியிடப்படும் என்று இந்து அறநிலைத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுரையின்படி, கோவில்களில் மாவட்டக் கையேடுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இதன் அசல் பிரதியை இணை ஆணையர்கள் சேகரித்து இந்த அவலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோவில்களிலும் தலவரலாறுகள் வெளியிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புது மண்டபத்தில் உள்ள சிற்பங்களை பாதுகாக்க அங்குள்ள கடைகளை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 400 ஆண்டுகள் பழமைமிக்க கலைநயம் வாய்ந்த புது மண்டபத்தை இந்து சமய அறநிலைத்துறை பாதுகாக்கும் முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகளை படிப்படியாக அகற்றும் பணியில் இந்து சமய அறநிலையத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து குன்னத்தூர் சத்திரத்திற்கு புது மண்டபத்தில் இருந்து அகற்றப்பட்ட கடைகள் […]
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், அரசு பணிகளின் அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆனால் அனைத்து போட்டி தேர்வுகளும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் டிஎன்பிஎஸ்சி […]
டிஎன்பிஎஸ்சி ( TNPSC ) தேர்வாணையம் வேலைவாய்ப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவுத்துறைகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ( TNPSC ) தேர்வாணையம் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி ( TNPSC ) வேலைவாய்ப்பு அறிவிப்பு :- டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டிருந்த தேர்வுகள் குறித்த அறிவிப்பில் கிட்டத்தட்ட 22 வகையான போட்டி தேர்வுகள் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிப்ரவரி […]
தமிழகத்தில் சென்னை, திண்டுக்கல்,நாமக்கல் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அந்த கல்லூரிகளில் காலிப் பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனால் பிற மதங்களை சேர்ந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் […]
அனைத்து நாட்களிலும் கோவில்களில் வழிபாடு செய்யலாம் என்ற அறிவிப்பை வெளிவந்ததை தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது குடும்பத்தினர் மற்றும் பாஜக தொண்டர்களுடன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டிலுள்ள கொப்புடை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய அவர் , “கோவில்கள் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிலையில் சென்னையில் உள்ள காளிகாம்பாள் […]