இந்தோனேசிய நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரேசில், கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகமாக பரவத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், இந்தோனேசிய அரசு கொரோனா விதிமுறைகள் நீக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறது. அந்நாட்டு அதிபரான ஜோகோ விடோடோ கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அந்நாட்டில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தில் 1.7 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்துவிட்டது. கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்ததால், கொரோனாவிற்கு எதிரான […]
Tag: இந்தோனேஷியா
இந்தோனேசிய நாட்டில் காவல் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் மூவர் உடல் சிதறிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசிய நாட்டின் பாண்டுங் நகரில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் வழக்கம் போல் நேற்று காவல்துறையினர் அணிவகுப்பு பயிற்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு மர்ம நபர், கையில் கத்தியுடன் காவல் நிலையத்திற்குள் புகுந்தார். இதனால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரை சுற்றி வளைத்த போது, திடீரென்று அந்த நபர் தன் உடலில் […]
இந்தோனேசிய நாட்டில் மிகப்பெரிய எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் இருக்கும் லுமாஜாங் என்ற நகரில் செம்மேரு என்ற 12000 அடிகள் உயரமுடைய மிகவும் பெரிதான எரிமலை அமைந்திருக்கிறது. இந்நிலையில் பலத்த மழையால் அந்த எரிமலையின் குவி மாடம் சாய்ந்தது. அதன் பிறகு, அதிலிருந்து நெருப்பு குழம்பு வெளியேறியது. சுமார் 5 ஆயிரம் அடி உயரத்திற்கு சாம்பல் புகைகள் காணப்பட்டது. அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சாம்பல் பரவியதால், […]
தென் கிழக்கு ஆசிய நாடு இந்தோனேஷியா. இது சுற்றுலா மற்றும் வணிக முதலீடிற்கு உகந்த நாடாக கருதப்படுகிறது. இந்த நாட்டில் கூடிய விரைவில் ஒரு அதிரடி சட்டம் இயற்றப்பட இருக்கிறது. அதாவது திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்ளுதல், கே, லெஸ்பியன், பாலியல் வன்கொடுமைகள், இயற்கைக்கு புறம்பான பாலியல் குற்றங்கள், லிவிங் டுகெதர் போன்ற குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இவைகளை எல்லாம் தடுக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட இருக்கிறது. இந்த சட்டத்திற்கு […]
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 271 பேர் இறந்த நிலையில், 2 நாட்களுக்கு பின் 6 வயது சிறுவன் மீட்கப்பட்டுள்ளார். இடிபாடுகளில் சிக்கி தாயார் இறந்த நிலையில், 2 நாட்களாக உணவு, நீர் இல்லாமல் உயிருக்கு போராடிய 6 வயது சிறுவன் அஸ்கா மீட்கப்பட்டுள்ளார். காயம் ஒருபுறம்,பசி மற்றொருபுறம் என துடிதுடித்து கொண்டிருந்த சிறுவனை மீட்கும்போது எடுக்கப்பட்ட போட்டோ உலக மக்களின் இதயங்களை கலங்கடிக்கிறது.
இந்தோனேசிய நாட்டில் உருவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் மிகவும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கமானது, 5.6 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் மக்கள் அலறி அடித்துக் கொண்டு திறந்தவெளி மற்றும் மைதானங்களை நோக்கி ஓடினார்கள். இதில் சியாஞ்சூர் என்ற நகரம் அதிகம் பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 46-ஆக அதிகரித்து இருக்கிறது. […]
இந்தோனேசிய நாட்டில் நடக்கும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சல்யூட் அடித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்தோனேசிய நாட்டின் பாலி நகரத்தில் ஜி 20 உச்சி மாநாடு நடக்கிறது. நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி உட்பட ஜி 20 அமைப்பை சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு வருகை தந்திருந்த தலைவர்களை இந்தோனேசிய நாட்டின் ஜனாதிபதி வரவேற்றார். இந்நிலையில், இரண்டாம் […]
இந்தோனேசியாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டிற்கு சென்ற அமெரிக்கா ஜனாதிபதி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். இந்தோனேசியா நாட்டின் பாலி நகரத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க அந்நாட்டிற்கு சென்ற அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்திருக்கிறார். இது பற்றி வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளராக இருக்கும் அரிந்தம் பாக்சி தெரிவித்ததாவது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் மோடி இருவரும் இரண்டு […]
இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அதிபர் புதின் கலந்து கொள்ள மாட்டார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுற்றுலா தலங்களில் ஒன்றான இந்தோனேஷியாவின் பாலி நகரில் நவம்பர் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் போன்றோர் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் ரஷ்ய தூதரகம் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நடைபெற உள்ள ஜி-20 […]
இந்தோனேசியா நாட்டில் 61 வயதான முதியவர் 88-ஆம் முறையாக திருமணம் செய்யவுள்ளார். இந்தோனேசிய நாட்டின் ஜாவாவில் இருக்கும் மஜலெங்கா பகுதியில் வசிக்கும் கான் என்ற நபர் “பிளேபாய் கிங்” என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு தான் 88-ஆம் தடவையாக திருமணம் நடக்கவுள்ளது. தன் 14 வயதில் அவர் முதல் திருமணத்தை செய்திருக்கிறார். அந்த பெண்ணிற்கு இவரை விட இரண்டு வயது அதிகம். இரண்டே ஆண்டுகளில் இவர்கள் விவாகரத்து செய்து விட்டனர். அங்கிருந்து ஆரம்பமானது தான் கல்யாணம் மன்னனின் திருமண […]
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் திடீரென 69 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த குழந்தைகள் சிறுநீரக பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரச்சனைக்கு காரணம் இந்தியாவில் உள்ள மெய்டன் பாராசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 மருந்துகள் தான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மெய்டன் பாராசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் மருந்துகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்தோனேசியா நாட்டில் சிறுநீரக பாதிப்பின் காரணமாக 241 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 133 பேர் […]
இந்தோனேஷியாவில் கால்பந்து மைதானத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 127 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஜாவா மாகாணத்தில் Arema FC மற்றும் Persebaya Su அணிகள் மோதிய ஆட்டத்தில், Arema FC அணி தோல்வியடைந்தது. இதனால், ஏமாற்றமடைந்த Arema FC அணி ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தை கலைக்க முயன்றும் 127 பேர் உயிரிழந்தனர். 180 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டு இந்தோனேஷியாநாட்டுக்கு திரும்பிய ஒரு நபருக்கு சென்ற 5 நாட்களாக குரங்கம்மைக்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து பரிசோதனை முடிவில், அந்த நபருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்ற மே மாதம் இங்கிலாந்திலிருந்து குரங்கம்மை நோய்ப்பரவல் கண்டறியப்பட்டது. அதன்பின் ஜூலை மாதத்தில் குரங்கு அம்மையை சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதனை தொடா்ந்து நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு […]
இந்தோனேசிய நாட்டில் நிக்கல் கொள்முதல் செய்வதற்கு டெஸ்லா நிறுவனம் ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் டெஸ்லா நிறுவனமானது, எலக்ட்ரிக் கார்களுக்கான லித்தியம் பேட்டரி உருவாக்க இந்தோனேசிய நாட்டிலிருந்து நிக்கல் கொள்முதல் செய்ய சுமார் 500 கோடி டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் செய்திருக்கிறது. உலகளவில் இருக்கும் நிக்கல் தாதுவளத்தில் அதிக அளவை இந்தோனேஷியா கொண்டிருக்கிறது. எனவே தங்கள் நாட்டிலேயே எலக்ட்ரிக் கார்களையும், பேட்டரிகளையும் தயாரிக்கக்கூடிய ஆலைகளை நிறுவுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இதனால், நிக்கல் ஏற்றுமதி செய்வதை நிறுத்திக் […]
இளம்பெண் ஒருவர் ஆண் என்று நினைத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் உள்ள ஜாம்போ பகுதியில் 22 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணுக்கு டேட்டிங் ஆப் மூலமாக ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இளம் பெண்ணிடம் அந்த நபர் தான் ஒரு தொழிலதிபர் என்று கூறியுள்ளார். ஆனால் திருமணத்திற்கு பிறகு இளம் […]
மிருக்காட்சி சாலையில் சேட்டை செய்த வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்த ஒரங்குட்டான் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்தோனேசியா நாட்டில் ரியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கசாங் குலிம் என்ற மிருகக்காட்சிசாலை அமைந்துள்ளது. இந்த மிருகக்காட்சி சாலைக்கு ஹசன் அரிஃபின் என்ற நபர் ஒருவர் சென்றுள்ளார். இவருக்கு 19 வயதாகிறது. இந்த விலங்குகளை பார்வையிட்டு வந்துகொண்டிருந்த ஹசன் ஒரங்குட்டான் இருக்கும் கூட்டின் பார்வையாளர்களின் தடுப்பை தாண்டி மேலே ஏறியுள்ளார். அவர் டினா என்ற […]
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 நபர்கள் மாயமானதால், பாதுகாப்பு படையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்தோனேசிய நாட்டின் மகஸ்சர் நகரில் அமைந்துள்ள பாவோடிர் எனும் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகில் 42 பேர் பயணித்துள்ளனர். அந்த படகு பங்கஜெனி மாவட்டத்தின் துறைமுகத்திற்கு புறப்பட்டிருக்கிறது. அப்போது ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த படகின் இயந்திரம், மோசமான வானிலை காரணமாக பழுதடைந்தது. மேலும் உடனடியாக, கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எனவே, இது குறித்து மாகாண அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]
இந்தோனேஷியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளின் எதிர்பால் தடை நீக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்திருக்கிறார். இந்தோனேஷியாவில் பாமாயில் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை அறிவிக்கப்பட்டது. அங்கு பாமாயில் எண்ணெயின் விலை 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்தது. எனவே, அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்தது. எனினும், சிறிது காலத்திற்கு தான் இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை எதிர்த்து விவசாயிகள் பேரணி நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அந்த தடை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய […]
இந்தோனேஷியா ஜாவா தீவில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வான் உயரும் அளவிற்கு கரும்புகை வெளியேறி இருக்கிறது. இந்தோனேஷியா சுரபயா நகரில் உள்ள வணிக வளாகத்தில் மேல் மாடியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ மெல்ல மெல்ல வளாகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி 13 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயணைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து […]
இன்று காலை இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0-ஆக பதிவாகி இருந்ததாக இந்தோனேசியாவின் வானிலை பருவகாலம் மற்றும் புவிஇயற்பியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஏற்கனவே இந்தோனேஷியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மேற்கு சுமத்ரா பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேஷியாவில் உள்ள மாலுக்கு மாகாணத்தில் இன்று காலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் மாலுக்கு மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் இன்று அதிகாலை 4:25 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவாகியிருப்பதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 131 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்ததாகவும், இந்நிலநடுக்கத்தால் சுனாமி போன்ற பேராபத்து ஏற்படும் அபாயம் […]
இந்தோனேஷியாவிலுள்ள தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாறிய ஓமிக்ரான் உறுதி செய்யபட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாறிய ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் இந்தோனேசியாவில் முதன்முதலாக தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஓமிக்ரானின் அறிகுறிகள் எதுவும் இல்லாத அந்த தூய்மைப் பணியாளர் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை மந்திரியான […]
இந்தோனேசியாவில் இரு சமூகத்திற்கு இடையேயான சண்டையில் 19 பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் உள்ள சோரோங் நகரில் இரவு விடுதி ஒன்றில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட பயங்கர சண்டையில் 19 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து பப்புவா மாகாணத்தின் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இந்தோனேசியா நாட்டில் உள்ள அமாஹாய் என்ற நகரில் திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் 19.8 கிலோ மீட்டர் ஆழத்தில் அளவிடப்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.5-ஆக பதிவாகியிருந்ததாகவும் புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த திடீர் நிலநடுக்கத்தால் அமாஹாய் நகரில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா ? என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்தோனேசியா நாடாளுமன்றம் அந்நாட்டின் தலைநகரை ‘காளிமன்டன்’ என்ற இடத்திற்கு மாற்றுவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் அந்த புதிய தலைநகரை கட்டமைப்பதற்கான மெகா திட்டம் 32 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ( இந்திய மதிப்பில் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ) வகுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ வெள்ளம், காற்று மாசு, நெரிசல் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக தலைநகரை மாற்ற முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த புதிய தலைநகருக்கு “நுசன்டரா” என்று பெயர் […]
மழை பெய்து கொண்டிருந்தபோது கையில் குடையுடன் பயணித்த நபரை மின்னல் தாக்கியது. இந்தோனேஷியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றி வரும் ஒரு நபர் ஜகார்த்தாவில் மழை பெய்து கொண்டிருந்தபோது வெட்டவெளியான இடத்தில் கையில் குடையுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை மின்னல் தாக்கியபோது தீப்பொறிகள் வெளிவந்தது. எனினும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதனிடையில் மயங்கி விழுந்த நபருக்கு அவருடன் பணி புரிபவர்கள் விரைந்து சென்று […]
இந்தோனேசியாவில் இருக்கும் செமேரு எரிமலை மீண்டும் சாம்பலை வெளியேற்றத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் இருக்கும் செமேரு என்ற மிகப்பெரிய எரிமலையானது, இம்மாத தொடக்கத்தில் திடீரென்று வெடித்து சிதறி, அதிலிருந்து சாம்பல் வெளியேறியது. இதில் 46 நபர்கள் பலியாகினர். மேலும், ஆயிரக்கணக்கான மக்களை பத்திரமான இடங்களுக்கு மாற்றினர். இந்நிலையில், இந்த எரிமலை நேற்று அதிகாலை நேரத்தில், மீண்டும் வெடிக்க தொடங்கியிருக்கிறது. அதிலிருந்து அதிகப்படியான சாம்பல்கள் வெளியேறியது. மேலும் எரிமலை குழம்பு வெளியேற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
நேற்று இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று இந்தோனேசியாவில் உள்ள புளோரஸ் தீவு பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் இந்த பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் எழும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது. இதற்கிடையே நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சுலவேசி மாகாணத்தில் […]
இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 7.6 என்ற அளவில் ரிக்டர் அளவுகோளில் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் இன்று காலை நேரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.இது 7.6 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் கூறியிருக்கிறது. இந்த நிலநடுக்கமானது, நாட்டிலுள்ள மௌமரே நகரிலிருந்து சுமார் 95 கிலோமீட்டருக்கு வடக்கு பகுதியில் உருவானது. நல்லவேளையாக, இதனால் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில், நில தட்டுகள் அசைவதால் அவ்வப்போது, நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
இந்தோனேஷியாவில் ரிக்டரில் 5.6 ஆக பதிவாகிய மிகவும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தோனேஷியாவில் மலுக்கு என்னும் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் பரத் தயா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலிருந்து 163 கிலோ மீட்டர் தொலைவில் மிகவும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலையால் காயமடைந்தவர்கள் தற்போது உயிரிழந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4-ஆம் தேதி இந்தோனேசியாவில் 3,676 மீட்டர் உயரமுடைய செமேரு எரிமலையிலிருந்து புகை வெளிவந்துள்ளது. அதன் பிறகு திடீரென வெடித்த அந்த எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் புகையானது வான்வரை பரவி காற்றில் கலந்துள்ளது. இந்த சம்பவத்தில் எரிமலையின் அருகிலிருந்த வீடுகளும், பாலம் ஒன்றும் பயங்கரமாக சேதமடைந்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பில் 41 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் […]
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று இந்தோனேஷியாவில் லுமாஜாங் என்ற பகுதியில் உள்ள செமெரு எரிமலை திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த எரிமலை வெடிப்பானது கனமழை காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான குடியிருப்புகள் எரிமலையில் இருந்து கிளம்பிய நெருப்பு குழம்பால் சாம்பலில் மூழ்கியுள்ளது. […]
இந்தோனேசியாவிலுள்ள எரிமலை ஒன்று வெடித்ததில் 40,000 அடி உயரத்திற்கு எழுந்த சாம்பலை கண்ட அப்பகுதி மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து வெளியேறும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தோனேஷியாவில் செமரு என்னும் எரிமலை உள்ளது. இந்த எரிமலை திடீரென வெடித்து சிதறியுள்ளது. ஆகையினால் 40,000 அடி உயரத்திற்கு செமரு ஏரி மலையிலிருந்து சாம்பல் எழுந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மலையடிவாரத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தலைதெறிக்க ஓடியுள்ளார்கள். இது தொடர்பான வீடியோ […]
இந்தோனேசியாவிலுள்ள தீவு ஒன்றில் ரிக்டரில் 5.9 ஆக பதிவாகிய மற்றும் கடலோரத்தில் 6 கிலோமீட்டர் ஆழத்தினை மையமாகக் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் சுமத்ரா என்னும் தீவு அமைந்துள்ளது. இந்த தீவிலுள்ள கடல் ஒன்றில் ரிக்டரில் 5.9 ஆக பதிவாகிய மற்றும் கடலோரத்தில் 6 கிலோமீட்டர் ஆழத்தினை மையமாகக் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் மேற்குறிப்பிட்டுள்ள நிலநடுக்கத்தால் சுமத்ரா தீவில் எந்தவித சேதமும் […]
இந்தோனேஷியாவில் ஸ்குவிட் கேம் சீரிஸின் மாடலை பயன்படுத்தி கபே ஒன்று வெகுவாக வாடிக்கையாளர்களை கவர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேஷியாவில் ஸ்குவிட் கேம் சீரிஸின் மாடலை பயன்படுத்தி கபே ஒன்று வெகுவாக வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. மேலும் அந்த கபே ஸ்குவிட் கேம் சீரிஸை வாடிக்கையாளர்கள் அனுபவிக்கும் வகையில் அச்சுறுத்தும் முகமூடி அணிந்த பாதுகாவலர்கள் சிலர் நியான் விளக்குகள் கொண்ட அறையில் துப்பாக்கிகளை பிடித்தபடி அறைக்குள் வாடிக்கையாளர்களை அழைத்துக் கொண்டு செல்கின்றனர். அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அந்த […]
ரைஸ் குக்கரை திருமணம் செய்த இந்தோனேசிய நபர் ஒருவர் 4 நாட்களில் விவாகரத்து பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் வசித்து வரும் கொய்ருல் அனாம் என்னும் நபர் ரைஸ் குக்கரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் அந்த நபர் சட்டபூர்வமாக தனது திருமணத்தை மாற்றுவதற்காக ஆவணங்களிலும் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சமூக வலைதளங்களில் அந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அந்த நபர் குக்கரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்ற […]
இந்தோனேஷியாவில் 7200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு பெண்ணின் மரபணு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாக இணைந்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தெற்கு சுலாவேசி என்ற பகுதியில் ஆய்வுகளை நடத்தி வந்துள்ளனர். இதற்கான முடிவை தற்போது வெளியிட்டுள்ளனர். தெற்கு சுலாவேசி என்ற பகுதியின் முதல் நாகரீகமாக டோலியன் மக்கள் கருதப்படுகின்றனர். அப்பகுதியில் ஒரு சுண்ணாம்பு குகையில் கண்டு எடுக்கப்பட்ட 17 அல்லது 18 வயதுடைய இளம் பெண்ணின் எலும்புகள் தற்போது வரை சேதமாகாமல் […]
இன்று இந்தோனேஷியாவின் தெற்கே சுமத்ராவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இன்று இந்தோனேஷியாவின் தெற்கே சுமத்ராவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்திய பெருங்கடலில் உள்ள சுங்கா பெனு நகரின் தென்மேற்கே சுமார் 196 கிலோ மீட்டர் தொலைவில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக […]
இந்தோனேஷியாவில் விமானத்தில் வேடமிட்டு மனைவியை போன்று பயணித்த கணவன் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் சமீபத்தில் Citilink விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது கழிவறைக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில் ஆணாக மாறி உடை அணிந்து வந்துள்ளார். இதுகுறித்து விமான பெண் ஊழியர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அந்த நபரை அதிகாரிகள் Ternate விமானநிலையத்தில் மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் விமானத்தில் பயணிக்க கட்டுப்பாடுகள் […]
காலங்காலமாக பெண்கள் மட்டுமே வாழும் வனப்பகுதி ஒன்றில் தற்போது வரை அனைவரும் பிறந்த மேனியாகவே சுற்றி திரியும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் பப்புவா என்னும் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் காலங்காலமாகவே பெண்கள் மட்டுமே வாழ்கிறார்கள். அதோடு மட்டுமின்றி அந்த பப்புவா வனப் பகுதிக்கு ஏதேனும் பெண்கள் செல்ல நினைத்தால் அவர்கள் கட்டாயமாக ஆடைகளை கலைத்து விட்டு பிறந்த மேனியாக தான் சொல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த வனப்பகுதிக்குள் ஏதேனும் ஆண்கள் அத்துமீறி […]
இந்தோனேசியா நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 63 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளன. அதுவும் இந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மக்களை உலுக்கி எடுத்துள்ளது. இரண்டாம் அலை காரணமாக மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானோர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே […]
இந்தோனேசியாவில் அவசரகால உபயோகத்திற்கு மாடர்னா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகமாக பரவி வருகிறது. எனவே அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாத முடிவிற்குள் நாட்டிலுள்ள மொத்த மக்கள் 27 கோடியில் சுமார் 18 கோடி மக்களுக்கு தடுப்பூசி அளிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். எனவே ஒவ்வொரு நாளும் சுமார் 10 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து […]
தேவையான ஆவணங்கள் இல்லை என்று கூறி தமிழகம் திரும்பிய 6 பேரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். தமிழ்நாட்டிலுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் கவின் என்பவர் வசித்துவருகிறார். இவர் இந்தோனேசியாவில் கப்பல் டீசல் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தோனேஷியாவில் பணிபுரிந்து வரும் கவின் உட்பட 6 பேர் கடந்த 8ஆம் தேதி தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்புவதற்காக அந்நாட்டில் இருக்கும் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்கள். அதன்பின் விமான நிலையத்திலிருக்கும் காவல் துறை அதிகாரிகள் இவர்களிடம் […]
கடந்த புதன்கிழமை அன்று இந்தோனேஷியாவில் உள்ள மாலுகு தீவுகள் பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு மாலுகு தீவுகள் பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பயங்கரமான நிலநடுக்கத்தால் மாலுகு தீவுகள் பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த […]
இன்று மாலை இந்தோனேசியாவில் எதிர்பாராதவிதமாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள கொடமொபாகு என்ற பகுதியில் இன்று மாலை 3.39 மணி அளவில் 224 கிலோமீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம், இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்தோனேஷியாவில் ராணுவ நீர்மூழ்கி கப்பலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த கடற்படை வீரரின் குழந்தை அவர் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக தன்னை விட்டு போக வேண்டாம் என்று கெஞ்சிய வீடியோ ஒன்று அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்துள்ளது. பாலி தீவின் அருகே உள்ள கடற்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று எந்திர கோளாறு காரணமாக இந்தோனேஷியா கடற்படைக்கு சொந்தமான KRI Nanggala-402 ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்று கடற்பரப்புக்கு வரமுடியாமல் கடலுக்குள் மூழ்கி விபத்துக்குள்ளானதில் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த […]
இந்தோனேசியாவிற்கு உரிய நீர்மூழ்கி கப்பலின் நிலை தொடர்பான அதிகாரபூர்வ தகவலை நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்தோனேசிய இராணுவத்திற்குரிய கே.ஆர்.ஐ நங்கலா 402 நீர்மூழ்கி கப்பல் கடந்த புதன்கிழமை அன்று பாலி தீவிற்கு அருகில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது மாயமாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகள் இந்த கப்பலை தேடும் முயற்சியை மேற்கொண்டிருந்தன. இந்நிலையில் இந்தோனேசிய கடற்படை அந்த நீர்மூழ்கிக் கப்பல் 53 நபர்களுடன் மூழ்கியது என்று உறுதிப்படுத்தியிருப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி Joko widodo […]
இந்தோனேஷியாவில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகன் மேலாடையின்றி கையில் கட்டுடன் பரிதாபமாக அமர்ந்திருந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தோனேஷியாவில் உள்ள கிழக்கு ஜாவாவில் வசிக்கும் இளம்ஜோடிக்கு கடந்த 2ஆம் தேதி அன்று திருமணம் நடந்துள்ளது. அதில் அழகான உடை மற்றும் அலங்காரத்துடன் மணப்பெண் ஜொலித்துக் கொண்டுள்ளார். ஆனால் மணமகனோ கையில் கட்டுடன், மேல் சட்டை அணியாமல் பரிதாபமாக மணமகள் அருகில் அமர்ந்திருக்கிறார். இதனை புகைப்படம் எடுத்து யாரோ இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் லைக்குகளை […]
இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை சுமார் 116 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள கிழக்கு Nusa Tengarra என்ற மாகாணத்தில் Seroja வெப்பமண்டல புயல் ஏற்பட்டதால் வெள்ளம் தூண்டப்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 116 ஆக அதிகரித்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்திருக்கிறது. இதில் சுமார் 76 நபர்கள் மாயமானதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஏஜென்சியின் தலைவரான Doni Monardo கூறியுள்ளார். 60 நபர்கள் கிழக்கு புளோரஸ் மாவட்டத்திலும், 28 நபர்கள் […]
இந்தோனேஷியாவில் பெய்த கனமழையினால் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேஷியாவில் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று அதிகாலையில் பெய்த கன மழையினால் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். பேரிடர் நிவாரண அமைப்பு இது குறித்த தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் 44 நபர்கள் உயிரிழந்ததாகவும் சிலர் மாயமானதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் அவர்களை தேடும் […]