Categories
உலக செய்திகள்

17 லட்சம் பொதுமக்கள் இனப்படுகொலை வழக்கு …16 வருட வழக்கிற்கு 2,720 கோடி செலவு…!!!!!

தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவை கெமர்ரூச் கொடுங்கோலர்கள் போல் பாட், இயங்சரே நுவான்சியா கியூ சம்பான் போன்றோர் கடந்த 1975 முதல் 79 ஆம் வருடம் வரை ஆட்சி செய்துள்ளனர். அப்போது 17 லட்சம் அப்பாவி பொதுமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஐநாவின் முயற்சியால் இவர்கள் நான்கு பேர் மீதும் கம்போடியா சர்வதேச நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் ஓர் குற்ற விசாரணை நடைபெற்று வந்தது. இதில் போல் பாட்(87) 1998ல் உயிரிழந்துள்ளார்.இயங்சரே(87) 2013 […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ காவலில் அரசியல் கட்சித் தொண்டர்கள் படுகொலை… பெரும் பரபரப்பு…!!!!!

பாகிஸ்தானில் முத்தாகிட சுவாமி இயக்கம் எனும் பெயரிலான அரசியல் கட்சி செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த கட்சியை சேர்ந்த 3 தொண்டர்கள் அந்த நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்கள். அதன் பின் கடந்த ஏழு வருடங்களாக காணாமல் போய் உள்ளனர் இந்த நிலையில் அவர்களை மீட்டுத் தரும்படி கோரி அவர்களது குடும்பத்தினர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருக்கின்றனர். தொடர்ந்து கோர்ட்டுக்கு அலைந்து வந்திருக்கின்றார்கள்.இந்த சூழலில் இர்பான் வசாரத், அபித் அப்பாசி மற்றும் வாசிம் அக்தர் என்ற ராஜு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்…. “ஜோ பைடன் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது”…. மறுப்பு தெரிவிக்கும் ரஷ்யா….!!!!

ரஷ்யா, உக்ரைன் மீது 50-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை அந்நாட்டின் மீது விதித்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யா உக்ரைனில் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால் ஜோ பைடனின் விமர்சனம் ஏற்றுக்கொள்ள […]

Categories
உலக செய்திகள்

“இந்திய குழந்தைகளும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்!”.. இனிமேல் தான் தெரியவரும்.. வழக்கறிஞர் கூறிய தகவல்..!!

கனடாவில் பூர்வகுடியின குழந்தைகள் நூற்றுக்கணக்கில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இந்திய குழந்தைகளும் இருப்பார்கள் என்று வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  கனடாவில் சமீபத்தில் பூர்வகுடியின குழந்தைகள் பயிலும் பள்ளிகள் உள்ள பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில், சுமார் 800க்கும் மேற்பட்ட குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமயத்தில் பூர்வகுடியின வழக்கறிஞர் Eleanore Sunchild இச்சம்பவம் குறித்து கூறுகையில், கனடா தற்போது தான் கொலை செய்யப்பட்டவர்கள் தவிர்த்து […]

Categories
உலக செய்திகள்

இனப்படுகொலைகள் நடந்ததை ஒத்துக்கொண்ட நாடு.. நிதியுதவி வழங்க முடிவு..!!

ஜெர்மனி, நமீபியாவில் இனப்படுகொலைகள் செய்ததை ஒப்புக்கொண்டு, நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது.   ஜெர்மனியின் காலனித்துவவாதிகள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், நமீபியாவின் காலனித்துவ கால ஆக்கிரமைப்பு சமயத்தில், Herero மற்றும் Nama மக்கள் பலரைக் கொன்றனர். இந்நிலையில் நமீபியாவில் இனப்படுகொலைகள் செய்யப்பட்டதை, ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas ஒத்துக்கொண்டுள்ளார். மேலும் நமீபியாவிடமும், பாதிப்படைந்த சந்ததிகளிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மன், 1.1 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான மதிப்புடைய  திட்டத்தின் வாயிலாக நமீபியா நாட்டின் வளர்ச்சிக்கு […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் அரங்கேறுவது இனப்படுகொலையா ?முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரிட்டன் நாடாளுமன்றம் ..!!

சீனாவில் அரங்கேறுவது இனப்படுகொலை என்று அறிவித்த பிரிட்டன் நாடாளுமன்றம் அதனை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. சீனாவின் சின்ஜியாங்கிலுள்ள உய்குர் முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு  பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரிட்டன் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்த கன்சர்வேட்டிவ் எம்.பி நுஷ்ரத்  கானி நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை  எம்.பிக்கள் ஆதரித்தனர். அனால் எம்பிகளின் ஆதரவுகள் இருந்தாலும் நாடாளுமன்றத்தில் இது சம்பந்தமான முடிவுகளை எடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை. ஏனெனில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

இலங்கைக்கு எதிரான தீர்மானம்… வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா… என்ன காரணம்?…!!!

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை நிறைவேற்றியுள்ள தீர்மான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை இலங்கையில் நடத்தப்படும் இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா உரிமை கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அதாவது இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான 2009 ஆம் ஆண்டில் இறுதி கட்ட போரில் இலங்கை மனித உரிமைகளை மீறி இனப்படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடந்து கொண்டு வருகிறது. அப்போது அதிபராக இருந்த தற்போது பிரதமர் மகிந்த ராஜபாக்சே  ஆட்சியில் 2012- 2014 ஆம் […]

Categories
உலக செய்திகள்

அம்பிகாவுக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழர்கள்… தொடரும் உண்ணாவிரதம்…. போலீஸ் அடாவடி..!!

ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டி உண்ணாவிரத போராட்டத்தை அம்பிகா செல்வகுமார்  நடத்தி வருகின்றார். பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு அம்பிகாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இனப்படுகொலைக்கு நீதிகேட்டு பிரித்தானியத் தலைநகர் லண்டனில் 16 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இனப்படுகொலை, மனித உரிமை மீறல் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் சிங்கள அரசுக்கு ஆதரவான தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரும்பிரித்தானிய அரசைக் கண்டித்து  நீதிகேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த தீர்மானத்திற்கு எதிராக […]

Categories

Tech |