கோவை வடவள்ளியில் இபிஎஸ் ஆதரவாளராகவும், நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராகவும் இருக்கும் எஸ்பி வேலுமணியின் உறவினர் சந்திரசேகர் வீட்டில் திடீர் ஐடி சோதனை நடைபெற்று வருகின்றது. ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் நமது அம்மா நாளிதழிலிருந்து வெளியேறிய நிலையில் இந்த ஐடி ரெய்டு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதன் பின்னணியில் பாஜக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் சந்தேகப்படுகின்றன. ஏற்கனவே அதிமுகவில் தொடர்ந்து ஒற்றை தலைமை தொடர்பாக பிரச்சனை இருக்கும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த […]
Tag: இபிஎஸ்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே போராடி வருகின்றனர். இபிஎஸ் தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் என்றும், ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை தலைமையை போதுமானது எனவும் கருத்து போர் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு, மனு என்று ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பிரச்சினைகள் எழுந்து வருகின்றது. மேலும் வரும் ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் […]
அ.தி.மு.க கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் பாதியிலேயே முடிவடைந்ததால் வருகிற ஜூலை 11-ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார். இந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஓ.பி.எஸ் பொதுக்குழு கூட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த […]
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து யுத்தம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இந்த பிரச்சனையே தற்போது பெரும்பாலும் பேசப்பட்டு வருகின்றது. அதிமுகவில் ஒற்றை தலைமைக்காக இபிஎஸ், ஓபிஎஸ் இடையே பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் நான் தான் பொதுச்செயலாளர் என்று கூறி நீதிமன்றத்தில் சசிகலா அவர்கள் வழக்கு தொடங்கியுள்ளதால் இந்த பிரச்சனையில் தற்போது சசிகலாவும் இணைந்துள்ளார். திருவள்ளுவர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் பேசிய அவர் அதிமுக தலைமை […]
சென்னை வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “அதிமுக பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும். 23 தீர்மானங்களில் ஒரு சில தீர்மானங்கள் தவிர்த்து பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவியே தற்போது இல்லை. சட்டவிதிகளின் படி பொதுக்குழு கூட்டம் நிச்சயம் நடைபெறும். ஜூலை 11-ல் பொதுக்குழுவில் 99% நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். ஈபிஎஸ்க்கு […]
அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது அக்கட்சியிலிருந்து ஒ பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இதனிடையே ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். சில போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஒற்றை தலைமை கனவுக்கு ஓ பன்னீர்செல்வம் தடையாக இருப்பதால் விரைவில் அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு இபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்னாள் அமைச்சர் உடன் […]
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகி விட்டது. அது மட்டும் அல்லாமல் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றன. இதனிடையே ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினரின் செயல்பாடு எம்ஜிஆரின் நோக்கத்திற்கு எதிராக உள்ளது என்று […]
உள்ளாட்சி இடைத்தேர்தலில் மாநகராட்சி மற்றும் நகராட்சி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் இருந்து யாரும் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் வேட்பாளர்களுக்கு சின்னம்பெற உதவியாக இருக்கும். பார்ம் ஏ மற்றும் பார்ம் பி வழங்கப்படவில்லை. இதனால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற சூழல் எழுந்ததால் அதிமுக போட்டியிடாமல் தேர்தலை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இடைத்தேர்தலுக்கு இன்று மாலைக்குள் விண்ணப்பித்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். இடைத்தேர்தல் ஜூலை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஜூலை 11ஆம் தேதி ஒற்றை தலைமையாக எடப்பாடி தேர்வு செய்யப்படுவார் என்ற நம்பிக்கையோடுதான் எல்லா பொதுக்குழு உறுப்பினர்களும் பத்தாம் தேதி நாங்கள் திரும்ப வருகிறோம் என்று தான் சென்றிருக்கிறார்கள். அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுக்குழு நடைபெற வேண்டும் என்பது ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பு. 2665 பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கை… பாசமிகு அண்ணன், சாமானிய முதல்வராக சரித்திரம் படைத்த எளியவர், தூயவர், பண்பாளர் அண்ணன் எடப்பாடி அவர்கள் சாதி – […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் இவங்க ரெண்டு பேரும் அதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கவே தகுதி இல்லாதவர்கள் மாதிரி தான் நடக்கிறார்கள். அதுதானே உண்மை…. பணம், காசு செலவு செய்து, ஒவ்வொருவரையும் மூன்று கோடி, நான்கு கோடி கொடுத்து விலைக்கு வாங்கி, கழக பதவிக்கு வருவதற்கான போட்டி நடக்கிறது, அதற்காக ஒருவர் அசுரர் மாதிரி ஆட்டம் போடுகிறார்.. இதெல்லாம் தொண்டர்கள் சாதாரணமாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஜூலை 11ஆம் தேதி ஒற்றை தலைமையாக எடப்பாடி தேர்வு செய்யப்படுவார் என்ற நம்பிக்கையோடுதான் எல்லா பொதுக்குழு உறுப்பினர்களும் பத்தாம் தேதி நாங்கள் திரும்ப வருகிறோம் என்று தான் சென்றிருக்கிறார்கள். அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுக்குழு நடைபெற வேண்டும் என்பது ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பு. 2665 பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கை… பாசமிகு அண்ணன், சாமானிய முதல்வராக சரித்திரம் படைத்த எளியவர், தூயவர், பண்பாளர் அண்ணன் எடப்பாடி அவர்கள் சாதி – […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஜூலை 11ஆம் தேதி ஒற்றை தலைமையாக எடப்பாடி தேர்வு செய்யப்படுவார் என்ற நம்பிக்கையோடுதான் எல்லா பொதுக்குழு உறுப்பினர்களும் பத்தாம் தேதி நாங்கள் திரும்ப வருகிறோம் என்று தான் சென்றிருக்கிறார்கள். அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுக்குழு நடைபெற வேண்டும் என்பது ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பு. 2665 பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கை… பாசமிகு அண்ணன், சாமானிய முதல்வராக சரித்திரம் படைத்த எளியவர், தூயவர், பண்பாளர் அண்ணன் எடப்பாடி அவர்கள் சாதி – […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஓபிஎஸ்-இடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியாச்சு, அவர் வரவே இல்லை. டெல்லிக்கு போயிட்டு வந்து இருக்காரு, மதுரைக்கு வருகிறார், எல்லாரும் தொலைபேசியில் கூப்பிட்டு இருக்காங்க. இதுவரைக்கும் அப்படி கூப்பிட்டது இல்லை. இதுதான் முதல் முறை கூப்பிடுகிறார். எல்லோரும் எங்களிடம் கேட்கிறார்கள். எங்களுக்கு தர்மசங்கடமாக இருக்கிறது. இந்த நிலை எதற்கு ? ஒரு தலைமை வந்தால் எல்லோரும் நின்று வரவேற்க வேண்டும். ஆனால் அவர்கள் எல்லோரையும் வா வா என்று அழைப்பது […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், 2665 பொதுக்குழு உறுப்பினர் இவர்கள்தான் அதிகாரப் பூர்வமாக எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க கூடியவர், முடிவு எடுக்கக் கூடியவர்கள், விவாதிக்கக் கூடிய அதிகாரம் இருப்பவர்கள், எடுத்த முடிவுகளை ஒப்புதல் வழங்கியது 2665 பேருக்கு. இந்த 2665 பேரில் ஏறத்தாழ 2,200 பேருக்கு அன்றைக்கு கையொப்பமிட்டு சில பேரிடம் கையொப்பம் வாங்க முடியவில்லை, கையொப்பம் வாங்கி இருந்தால் 2665 பேருமே ஓட்டு போட்டு இருப்பார்கள். அதில் மாற்று கருத்து இல்லை. […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், இது மிகவும் சவாலான ஒன்று தான் நிச்சயம். நிச்சயமாக நல்ல முறை கொண்டு செல்வேன், ஒருங்கிணைத்துக் கொண்டு செல்வேன், ஒற்றுமையை நாடுபவன் நான். இன்று வரையிலும் யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. இந்த இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஒன்றுபடவேண்டும். தொண்டர்களுடைய எண்ணப்படி நடக்க வேண்டும். அந்த அடிப்படையில் இந்த இயக்கத்தை நல்வழிப்படுத்தி செல்கின்ற பங்கை பொதுக்குழு உறுப்பினர் மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் இருக்கின்ற கழகத் தோழர் அனைவரும் ஒற்றை […]
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தன்னை தனிமை படுத்திக்கொண்டார். மனைவிக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள வீட்டில் இபிஎஸ் தனிமைப்படுத்தி கொண்டு தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி சந்திக்க வந்த நிலையில் இருவரையும் […]
செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி உதயகுமார், அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்குழுவை தடை செய்யவேண்டும் என்று நீதிமன்றத்திலேயே பேசி, காவல்துறையில் சென்று ஒரு தலைவரே பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று கொடுத்த வரலாறு இதுவரை அண்ணா திராவிட முன்னேற்ற கழக வரலாற்றில் நடந்ததில்லை. காவல்துறையில் அவருடைய லெட்டர் பேடில் கடிதத்தில் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொல்லுகிற போது ஒரு வார காலமாக அங்கே காத்துக்கிடக்கின்றன தொண்டர்களிடையே மனநிலை என்னவாக இருக்கும். பொதுக்குழுவில் விவாதிப்பது குறித்து ஜனநாயக […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஒவ்வொருவருக்கும் உடலில் ஓடுகின்றது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ரத்தம். புரட்சித்தலைவர் தந்த சோறு, அம்மா அவர்கள் தந்த உணவை சாப்பிட்டு வளர்ந்தவர்கள் தான் இங்கே இருக்க கூடிய கோடானு கோடி தொண்டர்கள். ஒரு வலிமை உள்ள தலைமை வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது ? ஒரு மன உறுதியோடு இருக்கின்ற நிலை தடுமாறாத, முடிவுகளை மாற்றி மாற்றி எடுத்து, சந்தேகத்திற்குரிய தலைமையாக இருப்பதை நாங்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முதன் முதலாக இந்த பிளவுகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது, அம்மாவின் மறைவிற்குப் பிறகு ஏகமனதாக ஒருமனதாக முதலமைச்சராக அண்ணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு பின்பு, அந்த முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பஞ்சாயத்து வைத்தவர் யார் ? ஒவ்வொருவரும் இதை சிந்தித்து பார்க்க வேண்டும். அன்றைக்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்த பஞ்சாயத்து தான் இன்று வரை அந்த பஞ்சாயத்து நீண்டு […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், திராவிட முன்னேற்ற கழகத்தை மன உறுதியோடு எதிர்க்கின்ற தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் முன்வைக்கின்ற கருத்து. அந்தக் கருத்தை எல்லோரும் இன்றைக்கு முன்மொழிந்து இருக்கிறார்கள். தர்மயுத்தம் எதற்காக துவங்கப்பட்டது ? தர்மயுத்தம் சின்னம்மா அவர்களை எதிர்த்து, ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சி சிக்க கூடாது என்று சொன்னார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் சேர்ந்த போது மூன்று நிபந்தனைகள் வைக்கப்பட்டது. ஒன்று புரட்சித்தலைவி அம்மா மரணத்திற்கான […]
இன்று அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் நம்பிக்கையின் அடையாளம், விசுவாசத்தின் அடையாளம் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இதய தெய்வம், புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு பின்பு தொடர்ச்சியாக நடந்த விஷயங்களை பாருங்கள். அவருடைய மகன் ரவீந்தரநாத் போயி முதலமைச்சரை சந்தித்து விட்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு செயல் படுகிறார் என்றால் எந்த ஒரு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்களா ? சொல்லுங்கள். இன்னும் […]
அதிமுக பொருளாளராக யாரை நியமிக்கலாம் என ஈபிஎஸ் தரப்பு ஆலோசனை நடத்தி வருகின்றது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் அழைப்பின் பேரில் இன்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த மேடையில் இபிஎஸ், தமிழ்மகன் உசேன், கேபி முனுசாமி ஆகியோர் அமர்ந்துள்ளனர். ஆலோசனை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆலோசனை என்பது நீடித்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்னும் சிறிது நேரத்தில் செய்தியாளரை சந்திக்க உள்ளதாகவும் […]
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாநிலங்களவை அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான CV.சண்முகம் தெரிவித்தார். இந்நிலையில் தலைமை இல்லாமல் செயல்படக்கூடிய கட்சியை தலைமை கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து தான் வழி நடத்துவோம் என்பதையும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அந்த வகையில் இன்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகின்றது. அதில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் சென்னை வருகிறார் ஓபிஎஸ். அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் தனது பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பினார். முதலாவதாக அவரது பழைய இல்லத்தில் இருந்து கிளம்பி, அவர் புதிய வீட்டில் உள்ள தாயாரைச் சந்தித்து ஆசி பெற்று தற்போது சென்னை கிளம்பினார். சென்னை செல்லும் வழியில் அவர் மதுரை இறங்கியிருக்கிறார். மதுரையில் அவரது ஆதரவாளர்கள் […]
அதிமுகவில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10மணிக்கு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெறுகின்றது. இதில் வர இருக்கும் பொதுக்குழு, அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சனைக்கு தீர்வு என ஏராளமான அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட இருக்கின்றது. நேற்றைய தினம் ஓபிஎஸ் மதுரை, தேனி மாவட்டங்களில் தொண்டர்கள் மத்தியில் பிரச்சாரம் பயணமாக சென்றார். இதனுடைய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிகின்றன. குறிப்பாக ஓபிஎஸ் மீது நடவடிக்கை குறித்து இன்றைய தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் போவதற்கு வாய்ப்பு […]
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள். ஓ.பன்னேர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க தற்போதைய சூழலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் தான் அதிமுகவின் தலைமை கழகம் சார்பில் ஓர் அறிக்கை வெளியாகி இருந்தது. எப்போதும் அதிமுக அலுவலகத்தில் கூட்டம் நடத்தவேண்டும், ஆலோசனை செய்யவேண்டும் என்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரின் பெயரில் […]
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க தற்போதைய சூழலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் தான் அதிமுகவின் தலைமை கழகம் சார்பில் ஓர் அறிக்கை வெளியாகி இருந்தது. எப்போதும் அதிமுக அலுவலகத்தில் கூட்டம் நடத்தவேண்டும், ஆலோசனை செய்யவேண்டும் என்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரின் பெயரில் […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்து அதிரடி காட்டியுள்ளார். ஜூன் 17ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், அக்கட்சியின் விதிகளுக்கு எதிராக ஒற்றை தலைமையை உருவாக்க இபிஎஸ் முயற்சிப்பதாகவும் ஓபிஎஸ் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் இபிஎஸ் தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இன்று பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் தொடங்கியது. காலை முதலே வானகரத்தில் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஈபிஎஸ் தரப்பு முடிவு செய்தது. அதேசமயம் ஓபிஎஸ் தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டாம் என்று தெரிவித்தனர். பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைத்தியலிங்கத்தை இபிஎஸ் ஆதரவாளர்கள் பேச விடவில்லை. இதனால் கோபமடைந்த ஓபிஎஸ் சட்டத்திற்குப் புறம்பான பொதுக்குழு என்று முழக்கமிட்டு பொதுக்குழுவை […]
சென்னையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அதிமுக பொதுக்குழு கூடுகிறது. அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் தனது இல்லத்திலிருந்து பொதுக்குழுவில் பங்கேற்பதற்கு புறப்பட்டனர். இவர்களை வரவேற்பதற்கு வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வரவேற்றனர். ஒற்றை தலைமை தொடர்பாக அதிமுகவில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அதிமுக அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பலர் […]
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஓபிஎஸ் புறக்கணிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று எடப்பாடி பழனிசாமி ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க நீங்கள் வர வேண்டும் என கூறியுள்ளார். இதனிடையே அதிமுக செயற்குழு – பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஓபிஎஸ் ஒப்புதல் அளிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 23 வரைவு தீர்மானங்களை அதிமுக தீர்மானக் குழு தயார் செய்து இருந்தது. 23 தீர்மானங்களின் வரைவு நகல் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. […]
பொதுக் குழுவிற்கு வாருங்கள் என்று ஓ. பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளா.ர் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவில் பங்கேற்போம் வாருங்கள் என்று எடப்பாடிபழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் பொது கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என்று பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி இருந்த நிலையில் இந்த அழைப்பு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை விமர்சனம் செய்ததாக முன்னாள் முதல்வர் இபிஎஸ் மீது காவல் நிலையத்தில் புகழேந்தி என்பவர் புகார் அளித்துள்ளார். நிலவாரபட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த கூட்டத்தில், ஓராண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கான நன்மை ஏதும் நடக்கவில்லை. ஸ்டாலின் அரசு திறமையற்ற அரசாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது” என இபிஎஸ் விமர்சித்த நிலையில் அவர் மீது சேலம் மாவட்ட எஸ்பியிடம் புகார் […]
ஆன்லைனில் ரம்மி விளையாடி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிக்கைகளிலும் இன்று முழு முதற்பக்க ரம்மி விளையாட்டு விளம்பரம் வருகிறது என்று இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மணலி புதுநகரை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் மனைவி பவானி. இவருக்கு வயது 29. இவருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. தற்போது வரை பலரிடமும் இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. தொடர்ந்து விசாரணை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில்,ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் எடப்பாடி பழனிச்சாமி இடம் விசாரணை நடத்துவது குறித்து பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்தார். முன்னதாக ஓபிஎஸ்-யிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. “தனக்கு எதுவும் தெரியாது”என்று அவர் பதில் அறிவித்திருந்த நிலையில், அதிமுக முன்னாள் […]
ஆளுநர் வாகனம் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக ஆளுநர் மயிலாடுதுறையில் ஞான யாத்திரை தூங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் மர்ம நபர்கள் சிலர் ஆளுநரின் வாகனம் மீது கல்லை எறிந்து, கருப்புக் கொடியை வீசியுள்ளனர். மேலும் இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் முக ஸ்டாலினிடம் கேள்வி ஒன்றை […]
தமிழகம் முழுவதும் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழ் புத்தாண்டான இன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மலையிடை பிறந்து, மாந்தர் தொழ உயர்ந்து உலகின் இருளைப் போக்கும் ஆற்றல் பெற்ற அரிய சக்தியாம் தமிழ் மொழியை, தங்கள் உயிரினும் மேலாக […]
தமிழகத்தில் 2022ஆம் வருடத்துக்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் பணியாளர் தேர்வு ஆணையம் முன்பே அறிவித்திருந்தது. அந்த வகையில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்க […]
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதன்படி, சொத்து வரி உயர்வை கண்டித்து திருச்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் […]
அதிமுக செய்தி தொடர்பாளராக இருந்த பெங்களூருவை சேர்ந்த புகழேந்தியை கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கட்சியில் இருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த அறிக்கையில் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக கூறப்பட்டிருப்பதாக புகழேந்தி சென்னையில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் மீதான மனுவை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை […]
சேலம் மாவட்டம் எடப்பாடி சேர்ந்த செல்வம் என்பவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஊழல் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “விவசாயத்திற்காக ஆற்றின் மேடான பகுதிகளில் இருந்து நீர் எடுக்க தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு நீரேற்று பாசன கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் உறுப்பினர்களாக உள்ள சேலம் மாவட்டம் நெடுங்குளம் நீரேற்று பாசன […]
5 பவுனுக்கு குறைவாக நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனடியாக தொடக்க வேளாண்கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டுமென அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலின் போதும், 2021-ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போதும் 5 பவுன் வரை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்து வாங்கிய நகைக் கடன்கள் அனைத்தும் […]
சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அதன்பின் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது ரூபாய் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, “கள்ள ஓட்டினால் தான் தமிழக உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றிருந்தால் 100% அதிமுக தான் வெற்றி பெற்றிருக்கும். இதுபோன்ற கள்ள ஓட்டுககளால் தான் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதோடு […]
திமுக நிர்வாகியை அடித்து அரை நிர்வாணப் படுத்திய வடக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து அதிமுகவினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் சேலத்தில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது, “அதிமுக மக்கள் சக்தி மிகுந்த கட்சி வாழையடி வாழையாக அதிமுக தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் தொடங்கி திமுகவினருக்கு அதிமுக மீது பழி போடுவதும் […]
நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிமுகவிற்கு மாபெரும் தோல்வியை கொடுத்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கோட்டை என பெயர் பெற்ற கொங்கு மண்டலத்திலும் கூட திமுக தன்னுடைய கொடியை நாட்டி விட்டது. அதோடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியையும் ஆக்கிரமித்தது திமுக. சேலம் மாவட்டத்தில் உள்ள 60 தொகுதிகளில் 50 தொகுதிகளை கைப்பற்றி திமுக தனது பெரும்பான்மையை காண்பித்தது. அதிமுகவின் இந்த கடுமையான பின்னடைவுக்கான காரணம் குறித்து விசாரிக்கையில் பல்வேறு காரணங்கள் […]
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள்தான் உள்ள நிலையில் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் உதயநிதி ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சியை ஆதரித்து திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “நம்ம ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் தான் ஆகின்றன. அதிலும் மூன்று மாதங்கள் கொரோனாவின் மூன்றாவது அலையால் கழிந்துவிட்டன . அது போக மீதமுள்ள ஆறு மாதங்களில் […]
கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உட்கட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி கே.சி பழனிச்சாமி தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அதிமுக சார்பில் மனு கொடுக்கப் பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது, “கடந்த ஆட்சியில் அதிமுக அரசு தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. எனவே நாம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு மக்களிடம் வாக்கு கேட்கலாம். நீட் […]
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி என்எல்சி நிறுவனம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, என்எல்சி நிறுவனம் ஜம்புலிங்க முதலியாரின் முயற்சியாலும் நெய்வேலி மக்களின் நாட்டுப்பற்ராலும் மற்றும் கடின உழைப்பாலும் உருவாக்கப்பட்டதாகும். இந்த நிறுவனம் 1956 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் என்எல்சி நிறுவனம் தனது மூன்றாவது சுரங்கத்தை அமைப்பதற்காக சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாயும், வீட்டு மனைகளுக்கு, ஊரகப் பகுதிகளில் சென்ட்டுக்கு […]