டெண்டர் விவகாரத்தில் என் கேள்விக்கு திமுக பதில் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “டெண்டர் விவகாரத்தில் என்னுடைய கேள்விக்கு திமுக பதில் சொல்லவில்லை. மேலும் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மக்களிடம் கலந்தாலோசித்து திமுக வெளியீடு செய்ய வேண்டும். சிலர் பாதையை மாற்றி வேறு கட்சியில் தங்கள் பயணத்தை தொடங்கினார்கள் அவர்களையும் அழைக்கவில்லை. தினகரனையும் அழைத்து பேசவில்லை. ஜெயலலிதா இல்லாததால் எங்களை சிலர் மிரட்டி […]
Tag: இபிஎஸ்
பொங்கல் பரிசு பொருட்கள் தரமானதாக இல்லை என எடப்பாடி பழனிச்சாமி ஆதாரத்துடன் கூறியுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பில் பல இடங்களில் தரமில்லாத பொருள்கள் வெளி மாநில நிறுவனங்களிடமிருந்து பொருள்கள் வாங்கியதாக புகார்கள் எழுந்தன இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. துணிப் பையும் பல இடங்களில் வழங்கப்படவில்லை. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’, ‘சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக […]
சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் இடையில் கடும் விவாதம் நடந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பல்வேறு எம்.எல்.ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அம்மா உணவகத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அம்மா உணவகத்தை மூடினால் […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து அம்மா உணவகத்தை மூட திமுக அரசு முயற்சிக்கிறது. ஒருவேளை மூடினால் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர் என்று ஈபிஎஸ் கூறினார். இதற்கு […]
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக 2 அணிகளாக பிரிந்த போது ஜெயலலிதா அணியில் போட்டியிட்டு முதன்முதலாக சட்டமன்றத்தில் நுழைந்தவர் எடப்பாடி பழனிசாமி. அதன் பின்னர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் சசிகலா ஆதரவாளர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என அணி பிரிந்துள்ள நிலையில், சசிகலா அணியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பிறகு 10 வருடங்கள் கழித்து அதிமுக ஆட்சி மாறி தற்போது திமுக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்ற இடத்தில முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசியது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சார்ந்தவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இவர்களால் அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் பெரிய கெட்ட பெயர் இருப்பதனால் அதை திசை திருப்பும் விதமாக நான் தூண்டி எங்கள் தொண்டர்கள் அவர்களை தாக்கியதாக ஒரு பொய்யான […]
இபிஎஸ், ஓபிஎஸ் மீது சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக உட்கட்சி தேர்தலில் மனு அளிக்க சென்றவர்கள் மீது அதிமுக கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தன. மேலும் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் […]
ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் தங்கள் வேட்பு மனுகளை சற்று நேரத்திற்கு முன்பு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலை முன்னிட்டு ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். டிசம்பர் 7-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக அதிகாரம் வழங்க அதிமுக அமைப்பு விதியில் முக்கிய திருத்தம் செய்து செயற்குழு கூட்டத்தில் 3 சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவை கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது.அந்த வகையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் 2-வது முறையாக […]
பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கரூரில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயதான மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்கொலைக்கு முன்னதாக அந்த மாணவி பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பெண் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். […]
மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஜெயலலிதா மரணம் குறித்து பொய் பிரச்சாரத்தை கிளப்பிவிட்டது திமுக தான் எனவும் குற்றம் சாட்டினார். மேலும் ஓபிஎஸ் எதையும் சிந்தித்து முடிவெடுக்கக் கூடியவர், ஆனால் எடப்பாடி பழனிசாமி தற்போது அரசியல் ரீதியாக பலவீனமாக இருக்கிறார். அவரை பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் சசிகலா சட்டரீதியாக […]
பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வவ்ம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லியில் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றுள்ள நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு டெல்லி சென்றடைந்தார். இவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் செல்வதாகவும் அதற்காக கோவையில் இருந்து இரவு விமானம் மூலம் டெல்லி சென்றனர். இதையடுத்து இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வவ்ம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லியில் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தற்போது டெல்லி சென்றுள்ள நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்றிரவு டெல்லி செல்கிறார். இவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் செல்வதாகவும் அதற்காக கோவையில் இருந்து இன்றிரவு விமானம் மூலம் டெல்லி சென்று நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வை நடத்தவிடமாட்டோம் எனக்கூறிய விடியல் அரசு, இப்போதாவது ஏமாற்றுவதை நிறுத்துமா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘’ஆட்சிக்கு வந்த 24 மணிநேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். நீட் தேர்வை […]
முதலமைச்சர் இபிஎஸ் என்பதற்கு பதிலாக ஓபிஎஸ் எனக்கூறி அமைச்சர் செல்லூர் ராஜூ தடுமாறி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சட்டம் ஒழுங்கு பற்றி கேட்டதற்கு ஹிட்லர் ஆட்சியில் இப்படித்தான் நடந்தது என கூறி மேற்கோள்காட்டி பதிலளித்தார். சசிகலாவின் அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுத்த அவர், கொரோனா காலத்தில் சிறந்த முறையில் பணியாற்றினார் முதலமைச்சர் ஈபிஎஸ் என்பதற்கு […]
செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்த டிடிவி தினகரன், பெரியகுளம் ஊராட்சி தேர்தல் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தது எனபது, உள்ளாட்சி தேர்தலில் அரசியல் தாண்டி, கட்சிகளை தாண்டி உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப, மக்கள் தேவைகளுக்கு ஏற்ப ஆதரவு கொடுத்துள்ளார்கள். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவும் ஆதரவு கொடுத்துள்ளார்கள். அவர்களையும் திமுகவின் பீ டீம் என சொல்வீர்களா ? அதுக்கும், இதுக்கும் முடிச்சி போடுறதுதான் பயம்…. கெமிக்கல் ரியாக்ஷன். கருணாநிதி அவர்கள் சிலைக்கு அனுமதி கொடுத்தது தான் வித்தியாசமான விஷயம், […]
சற்று முன்பு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்ற அறிவிப்பு வருகிற 7-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.முதல்வர் வேட்பாளருக்கு அதிமுகவில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் சற்று முன் முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் அமைச்சர்கள் […]