தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தனது நடிப்பையும் தாண்டி மற்ற நேரங்களில் பைக் ஓட்டுவது, பைக்கில் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் தனியாக பயணிப்பது,கார் ரேஸ் மற்றும் துப்பாக்கிச் சூடும் போட்டிகளில் கலந்து கொள்வது என பல விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். சினிமாவை தாண்டி தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதனை தவறாமல் செய்து விடுவார். இந்நிலையில் சில நண்பர்களுடன் இமயமலை பகுதியில் அவர் பைக் பயணம் சென்றுள்ளார்.ஏற்கனவே சில […]
Tag: இமயமலை
8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தோ – திபெத்திய எல்லைப் போலீசார் வடக்கில் தொடங்கி கிழக்கு எல்லைகளில் சிக்கிம் வரையிலான பல்வேறு உயரமான இமயமலை தொடர்களில் யோகா பயிற்சி மேற்கொண்டனர். மேலும் சர்வதேச யோகா தினத்தன்று அவர்கள் ஒரு பாடலையும் அர்ப்பணித்துள்ளனர். ஹிமாசல பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட இந்தியா சீனா எல்லைகளில் உள்ள பல்வேறு உயரமான இமயமலைத் தொடர்களில் உறையவைக்கும் குளிருக்கும் மத்தியில் இந்தோ திபெத்திய எல்லைப் போலீசார் பல வருடங்களாக […]
இமயமலையில் இருந்து விஞ்ஞானிகள் பிரம்மாண்டமான இரண்டு புதிய பறக்கும் அணில் வகைகளை கண்டுபிடித்துள்ளனர். பறக்கும் அணில் உலகின் மிக அரிதான மற்றும் குறைவாக ஆய்வு செய்யப்பட்ட பாலூட்டிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பறக்கும் அணில் வகை இருப்பதை விஞ்ஞானிகள் ஏற்கனவே அறிந்திருந்தனர். இந்நிலையில் தற்போது அதை ஹை ஹிமாலயாஸில் (high Himalayas) ஆஸ்திரேலியா மற்றும் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் அறிவியல் பெயர் யூபெடாரஸ் சினிரியஸ் (Eupetaurus cinereus) ஆகும். இது “கம்பளி பறக்கும் அணில்” (woolly […]
உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இதுவரை 32 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ரிஷிகங்கா ஆற்றுப் பகுதியில் இயங்கி வரும் ஒரு நீர்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் தபோவன் நீர்மின் நிலையம் முற்றிலும் சேதமடைந்தது. இதில் பணியாற்றிக் கொண்டிருந்த 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 20 பேர் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். […]
ஆன்மீக அரசியலுக்கு விடை கொடுத்த ரஜினி ஆன்மீக பயணம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர […]
இமயமலையில் படர்ந்திருக்கும் பனியை போட்டோ எடுத்து தனது ஊடகத்தில் பதிவிட் நாசாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடும். நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விண்வெளியில் இருந்து இமய மலையினை புகைப்படம் எடுத்து பகிர்ந்திருந்தது. அந்த புகைப்படத்தில், இமயத்தின் மீது பனிப்போர்வை போற்றி இருப்பது போல அவ்வளவு அழகாக காட்சி அளித்தது. இந்த புகைப்படம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இமயமலையில் படர்ந்திருக்கும் […]
இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான மற்றும் புகழ்பெற்ற இடமாக எவரெஸ்ட் சிகரம் உள்ளது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் மலை ஏறுபவர்கள் அனைவருக்கும் எவரெஸ்ட் சிகரம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை கடந்த சில நாட்களுக்கு முன் நீக்கப்பட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்துள்ளதாக பரபரப்பு […]
இந்தியாவை தொடர்ந்து பூட்டானிடம் எல்லைப் பிரச்சனையை ஏற்படுத்த சீனா முயல்வதாக புதிய குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பிரச்சனை இந்தியர்கள் அனைவரும் அறிந்ததே. இந்த எல்லையில் இந்திய சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டு 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சீன ராணுவத்திலும் சில வீரர்கள் உயிரிழந்தனர். ஆனால் தவறு சீனாவின் மீது இருப்பதன் காரணமாக உலக நாடுகளும், இந்திய மக்களும் இந்த சீனாவுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து […]