கொலை முயற்சியில் பஞ்சாப் மாகாண போலீசார் தயக்கம் காட்டி வருவதாக இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த மூன்றாம் தேதி பஞ்சாப் மாகாணம் பாஜிராபாத் நகரில் அரசுக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரது வலது காலில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் இம்ரான் கான் நேற்று மருத்துவமனையில் இருந்தபடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, என் மீதான இந்த […]
Tag: இம்ரான்கான்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் இன்று பஞ்சாப் மாகாணத்தின் பசீராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்று கொண்டிருந்தபோது அவரை நோக்கி ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் இம்ரான்கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் லாகூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இம்ரான் கான் மக்களை தவறாக […]
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும்,பி.டி.ஐ கட்சி தலைவருமான இம்ரான்கான் பெண் நீதிபதி ஒருவரை மிரட்டியதாக புகார் பெறப்பட்டது. இஸ்லாமாபாத்தில் சென்ற சனிக்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் இம்ரான்கான் பேசியதாவது, காவல்துறையினரால் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தன் ஆதரவாளரான ஷாபாஸ் கில்லை உடனே விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் கில் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். அதுமட்டுமல்லாமல் தன் கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஷாபாஸ் கில்லை போலீஸ் […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உரையை நேரடியாக ஒளிபரப்ப பாகிஸ்தான் உலக அமைப்பு தடை விதித்திருக்கின்றது. இஸ்லாமாபாத்தில் ஒரு பொது நிகழ்ச்சியின் போது பேசிய இம்ரான் கான் இஸ்லாமாபாத் காவல்துறை அதிகாரி மற்றும் பெண் மாஜிஸ்திரேட் மிரட்டியதற்காக பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாப் தலைவர் இம்ரான் கானின் நேரடி உரைகளை ஒளிபரப்ப பாகிஸ்தானின் ஊடக ஒழுங்கு முறையானையம் தடை விதித்திருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக தொலைக்காட்சியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக இம்ரான் கானின் பிடிஐ கட்சி […]
பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து பிரதமரின் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரிப் பாகிஸ்தானின் பிரத புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான் கான் அரசு தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானின் புதிய அரசுக்கு எதிராக தனது கட்சியான […]
பாகிஸ்தானில் பஞ்சாப் சட்டசபையில் காலியாக உள்ள 20 இடங்களுக்கு வருகின்ற ஜூலை 17ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் இடை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் அடிக்கடி தற்போதைய அரசாங்கத்தை வெளிநாட்டினரால் இறக்குமதி செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டி வருகிறார். மேலும் அமெரிக்கா இந்த அரசாங்கத்தை சதி வேலைகளால் திணித்ததாகவும் குற்றம் சாட்டுகிறார். இதற்கு பதிலளிக்க கூடிய பேசிய மரிய நவாஸ், இம்ரான் கான் பஞ்சாப் மாகாணத்தை […]
வலியான, வளமான நாடாக இருந்தால்தான் இருநாடுகளின் பிரச்சனையில் ஒரு சார்பு எடுக்க முடியும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனிடையில் ரஷ்யாவை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது. எனினும் பாகிஸ்தான் இப்போர் தொடர்பில் எந்த நாட்டிற்கு ஆதரவான நிலைபாட்டையும் எடுக்கவில்லை. இந்நிலையில் உக்ரைன் மீது போர் புரிந்துவரும் ரஷ்யாவை […]
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரதமராக இருந்த இம்ரான் கான் சென்ற ஏப்ரல் மாதம் பதவியிழந்தார். அவ்வாறு பதவி இழந்த முதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தான். அவர் பதவி இழந்ததை அடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்துமாறு கோரி வருகிறார். இதுகுறித்து பேரணி, பொதுக்கூட்டம் என்று நடத்தி வருகிறார். அந்த அடிப்படையில் நாளை (ஜூலை 2) அவர் இஸ்லாமாபாத்தில் அணி வகுப்பு மைதானத்தில் பிரமாண்ட பேரணி, […]
பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமரான இம்ரான்கானை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டப்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் அங்கு பாதுகாப்பானது பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இம்ரான்கானை காயப்படுத்தினால் தற்கொலை தாக்குதல் நடத்துவேன் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அத்தாவுல்லா தற்போதைய பிரதமர் ஷெபாஸ் அரசுக்கு மிரட்டல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு விசுவாசமான தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்தாவுல்லா டுவிட்டரில் கூறியிருப்பதாவது “இம்ரான்கானின் தலையில் ஒரு முடி பாதிக்கப்பட்டால் கூட நீங்களும் […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானை கொலை செய்ய சதி நடப்பதாக பரவிய வதந்தியால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானை கொலை செய்வதற்கு திட்டம் நடப்பதாக கூறப்பட்டது. எனவே, அவருக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது. இதுபற்றி இஸ்லாமாபாத் நகரின் காவல்துறையினர் தெரிவித்ததாவது, இஸ்லாமாபாத் நகரில் 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இம்ரான்கான் செல்லும் பானி காலா பகுதியில் கூட்டங்களுக்கு கூட தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானுக்கு முழுமையான பாதுகாப்பு […]
பாகிஸ்தான் நாட்டில் இன்னும் 6 தினங்களுக்குள் பொதுத் தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் நாட்டில் கடந்த மாதம் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையற்ற தீர்மானத்தை கொண்டு வந்தனர். எனவே, அவரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஷபாஸ் செரீப் புதிய பிரதமராக பதவியேற்றார். ஆனால், இம்ரான்கான் வெளிநாட்டு சதியால் தான் தன் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக குற்றச்சாட்டி வருகிறார். இந்நிலையில், இம்ரான்கான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு, தன் […]
பாகிஸ்தானில் பைசலாபாத் நகரில் நடந்த பேரணி ஒன்றில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார். அவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது “பாகிஸ்தானின் வரலாறு எனக்கு தெரியும். நான் அதனால்தான் ஒரு வீடியோ எடுத்து வைத்துள்ளேன். அதிகார பலம் மிக்க குற்றவாளிகளை நம்முடைய நீதித்துறை ஒன்றும் செய்து விட முடியாது. அதனால்தான் அதனை மக்களுக்கு விட்டு விடுகிறேன். எனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் எனக்கான நீதியை இந்த நாடு பெற்று தர வேண்டும். நீங்கள் எனக்கு இரண்டு […]
இம்ரான்கான் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமரான ஷபாஸ் ஷெரீப் அண்மையில் சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்தார். அப்பொழுது அந்த இடத்தில் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்து போராட்டத்தை நடத்தினர். அப்பொழுது அங்கு பொதுமக்கள் அனைவரும் ஷபாஸ் ஷெரீப்பை ‘திருடர் , துரோகி’ என ஆக்ரோசமான […]
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இம்ரான்கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் இம்ரான்கான் அமெரிக்காவின் சதி தான் தான் பதவி இழந்ததற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தானில் அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்பட்ட அரசு ஆட்சியில் அமர்ந்துள்ளதாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இம்ரான்கான், அமெரிக்க எம்.பி. இல்கான் ஒமரை சந்தித்து பேசியுள்ளார். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. […]
தம் ஆட்சியை கவிழ்ப்பதற்கு அமெரிக்க நாடு சதிசெய்ததாக குற்றம்சாட்டிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் திடீரென்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய எந்த ஒரு வெளிநாடும் தமக்கு எதிரி அல்ல என்று கராச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் அவர் பேசியுள்ளார். முன்பாக சர்வதேச தளங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த 3 நாடுகளையும் கடுமையாக விமர்சித்து பேசினார். ஆனால் தற்போது இம்ரான் கான் பதவி இழந்த பின், இந்த 3 […]
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பெரும்பான்மை காட்ட முடியாததால் பதவியை பறிகொடுத்த இம்ரான்கான், பெஷாவரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரை ஆற்றினார். அப்போது இம்ரான்கான் கூறியதாவது “நான் பிரதமராக இருந்தபோது ஆபத்தானாவனாக இல்லை. ஆனால் இப்போது மிகவும் ஆபத்தானவனாக மாறியுள்ளேன். என்னை பிரதமர் பதவியிலிருந்து நீக்க சட்டவிரோத செயல்கள் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் முன்பு நள்ளிரவில் நீதிமன்றம் திறக்கப்பட்டது ஏன்..? நான் எதாவது சட்டத்துக்கு புறம்பானதை செய்து விட்டேனா..? […]
பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் இம்ரான்கானின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும் இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவரான ஷபாஷ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று ஷபாஷ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இம்ரான்கான், “உடனடியாக […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடக்கயிருந்த சூழ்நிலையில், இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று அந்நாட்டு அதிபர் பாராளுமன்றத்தினைக் கலைத்தார். அவ்வாறு பாராளுமன்றத்தினைக்கலைத்த அதிபரின் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் சுப்ரீம்கோர்ட்டு தாமாகவே முன்வந்து வழக்குப்பதிந்தது. இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது எனவும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு 9ஆம் தேதி நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. அவ்வாறு சுப்ரீம்கோர்ட் உத்தரவின் […]
பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் இந்திய நாட்டை பெருமையாக பேசியிருப்பதற்கு எதிர்க்கட்சி தலைவரான மரியம் நவாஸ் ஷெரீப் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தானில் நம்பிக்கையற்ற தீர்மானத்திற்கு முன் பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தான் இந்திய நாட்டிற்கு எதிர்ப்பாளர் இல்லை என்று தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, எந்த வல்லரசு நாடுகளும் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது. யாரும் இந்தியாவிற்கு ஆணை பிறப்பிக்க முடியாது. மக்களின் நலன்களுக்காக ரஷ்யா-உக்ரைன் போரில், இந்தியா […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனக்கு மிரட்டல் கடிதம் வந்ததாக கூறி காட்டிய கடிதம் அவரது வெளியுறவுத் துறை அமைச்சக ஊழியர்களால் தயாரிக்கப்பட்டது என எதிர்க்கட்சி தலைவர் மரியம் நவாஸ் கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சதி இருப்பதாக இம்ரான் கான் கூறியுள்ளார். அதற்கு ஆதாரமாக அவர் ஒரு கடிதத்தையும் காண்பித்துள்ளார். ஆனால் அந்தக் கடிதம் குறித்து எந்த விபரங்களையும் அவர் வெளியிடவில்லை என கூறியுள்ளார். […]
பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக அந்தநாட்டின் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி குல்சார்அகமதை நியமிக்க தற்போதைய பிரதமர் இம்ரான்கான் பரிந்துரை செய்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தினை நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்து விட்டார். இதையடுத்து இம்ரான்கானின் பரிந்துரையின் அடிப்படையில் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அந்தநாட்டு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் அடுத்த 90 தினங்களில் தேர்தலை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்பின் அடுத்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று […]
பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அதன் மீது வரும் 3ஆம் தேதி(நாளை) வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இதில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லையெனில் இம்ரான் கான் அரசு கவிழும். இம்ரான் கான் இப்போது தன் அரசியல் வாழ்க்கையின் முக்கிய காலக் கட்டத்தில் இருக்கிறார். அவரது கூட்டணிக்கட்சிகள் இரண்டும் தங்களது ஆதரவை திரும்ப பெற்று எதிர்க்கட்சி வரிசையில் சேர்ந்துவிட்டன. இந்நிலையில் இம்ரான்கானின் முன்னாள் மனைவியான ரெஹாம் […]
பாகிஸ்தானில் அந்நிய சக்திகள் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வதாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்திய பிரதமர் இம்ரான் கான், அந்த அந்நிய சக்தி அமெரிக்காதான் என்று கூறி உடனே தமது கருத்தை மாற்றிக் கொண்டார். தம்மை பதவியிலிருந்து நீக்கவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்நியநாடு ஒன்று பாகிஸ்தான் அரசியலில் தலையிடுவதாக கூறிய இம்ரான் கான், நான் தவறி அமெரிக்காவின் பெயரை உச்சரித்து பிறகு ஒரு அந்நிய நாடு என்று திருத்திக் கொண்டார். வரும் ஏப்ரல் […]
பாகிஸ்தானில் எதிர்க்கட்சியினர் தங்களுக்கு உள்ள ஆதரவை காண்பிக்கும் வகையில் நேற்று இஸ்லாமாபாத்தில் பிரம்மாண்டமான பேரணியை நடத்தியிருக்கிறார்கள். பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையற்ற தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த தீர்மானம் தொடர்பான விவாதம் நாளை நடக்கவிருக்கிறது. அதனையடுத்து வரும் 3ஆம் தேதி அன்று வாக்கெடுப்பு நடக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக எதிர்க்கட்சியினருக்கு தனக்குள்ள ஆதரவை காண்பிப்பதற்காக, இம்ரான்கான் கடந்த 27-ஆம் தேதியன்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் அதிக கூட்டத்தை கூட்டி, பேரணி […]
பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான், தன் பதவியை பறிக்க வெளிநாட்டு சதி நடக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதற்கும், பணவீக்கம் அதிகரித்திருப்பதற்கும் பிரதமர் இம்ரான்கானின் அரசு தான் காரணம் என்று கூறி அவரின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்ற தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களே நம்பிக்கையற்ற தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வாய்ப்பிருப்பதால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கவுள்ள பிரதமர் […]
பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான், கடிதம் அனுப்பிய மேற்கத்திய நாடுகளை கடுமையாக சாடியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்ய தாக்குதலை எதிர்க்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஒரு தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த 1ஆம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் உட்பட 22 தூதரக […]
இம்ரான் கான் மனைவியின் மகன் காரில் மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தற்போது பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். மேலும் பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணியாக பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீவி உள்ளார். தற்போது இம்ரான்கான் ரஷ்ய அதிபரை சந்திக்க ரஷ்யா சென்றுள்ளார். இந்நிலையில் இம்ரான் கானின் மகன் மூஸா மேனகா தனது காரில் மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டு […]
பாகிஸ்தானின் 28-வது தலைமை நீதிபதியாக உமர் அதா பண்டியல் பதவி ஏற்றார். பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்தவர் குல்சார் அகமது. இவரது பதவி காலம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி உமர் அதா பண்டியல் என்பவர் பாகிஸ்தானின் 28வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்னிலை வகித்தார்.அதன்பின் அந்நாட்டின் அதிபர் டாக்டர் ஆரிப் அல்வி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இந்த விழாவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், […]
பாகிஸ்தானில் உள்ள எதிர்கட்சிகளை மிரட்டும் வகையில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி ஆட்சி செய்து வருகிறது. பிரதமராக அக்கட்சியின் தலைவர் இம்ரான்கான் இருந்து வருகிறார். பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டங்களும் பேரணியை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பிரதமர் இம்ரான்கான், எதிர்க்கட்சிகள் அரசை கவிழ்க்க முயற்சி செய்தால் கடும் எதிர்வினைகளை […]
பாகிஸ்தான் பிரதமரின் விவாகரத்து பெற்ற 2 ஆவது மனைவி உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரது காரை நோக்கி துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார்கள். பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கானுக்கும் இரண்டாவதாக ரீஹம் கான் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இவர்களுடைய திருமண உறவு 2015 ஆம் ஆண்டே முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ரீஹம் கான் அவருடைய உறவினர் வீட்டின் திருமண […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பனிச் சிறுத்தைகள் தொடர்பில் பதிவிட்ட வீடியோவிற்கு விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் இருக்கும் கப்லு என்னும் இடத்தில் அரிய வகையான பனிச்சிறுத்தைகள் நடந்து சென்றுகொண்டிருப்பதை, அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் வீடியோ எடுத்து, தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். برفانی تیندووں کی رواں برس بنائی گئی مزید ویڈیوز مجھے بھجوائی گئی ہیں۔ انکے قدرتی مسکن میں انکی حفاظت کے حوالے سے میری حکومت […]
ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்திய அரசு அனுப்பிய 50,000 டன் கோதுமையை பாகிஸ்தான் வழியாக கொண்டு செல்ல அதிபர் இம்ரான் கான் அனுமதி வழங்கியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, இந்திய அரசு, அந்நாட்டிற்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் 50,000 டன் கோதுமையை லாரியில் அனுப்ப தீர்மானித்தது. ஆனால், அதனை பாகிஸ்தான் வழியே கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், குளிர்காலத்தை எதிர்நோக்கி இருப்பதால், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உதவிகள் […]
ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசை உருவாக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் தலைநகரமான இஸ்லாமாபாத்தில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் ஐ.நா உலகளாவிய உணவு திட்டத்தின் செயல் இயக்குனர் டேவிட் பீஸ்லியை நேற்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது அவர்கள் இருவரும் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும் தலீபான்களிடம் சிக்கிய ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். அதிலும் ஆப்கானில் […]
பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதர் மகளை கடத்தி கொடுமைப்படுத்திய மர்மநபர்களை 48 மணி நேரத்தில் பிடிக்க உத்தரவிட்டிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் ஆப்கானிஸ்தான் தூதரான நஜிபுல்லா அலிகிலின் மகளான சில்சிலாவை இஸ்லாமாபாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மர்ம நபர்கள் கடத்திச்சென்றனர். அதன்பின்பு அவரை கொடூரமாக சித்திரவதை செய்து இரவில் விடுவித்துள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்நிலையில் உள்துறை மந்திரி ஷேக் ரஷீத் அகமதுவிற்கு, அந்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய இம்ரான்கான் […]
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் ஒரே நாளில் இல்லாத பாதிப்பாக மூன்று லட்சத்தை கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு இந்தியாவில் எட்டியுள்ளது.கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஆனாலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு புறம் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிற்கு இந்தப் பேரிடர் கால கட்டத்தில் பல […]
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் அந்நாட்டின் அழகிய பூங்காவை பிரதமர் அடமானம் வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. திவால் நிலையில் உள்ள பாகிஸ்தானின் கஜானா தற்போது காலியாக உள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவுடன் விரிசல் ஏற்பட்டு அன்னிய செலவாணியில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் சவுதி அரேபியா தங்களிடம் வாங்கிய 3 பில்லியன் டாலர் கடனை முன்கூட்டியே திருப்பி தருமாறு பாகிஸ்தானிடம் கூறியுள்ளது. ஆனால் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியில் உள்ளதால் […]
ராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் இறந்ததாக வெளியான தகவல் குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் நவாஸின் மருமகன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்வதற்காக ராணுவ வீரர்கள் சிந்து மாகாண இன்ஸ்பெக்டர் ஜெனரல் முஸ்தாபாவை கடத்திச்சென்று கட்டாயப்படுத்தி வழக்கு பதிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து சிந்து மாகாணத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முடிவெடுத்தனர். […]
காஷ்மீர் மட்டுமல்லாமல், குஜராத்தையும் பாகிஸ்தானோடு இணைத்து பாகிஸ்தான் வரைபடம் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் சமீபத்தில் அந்நாட்டின் வரைபடம் என்று ஒன்றை வெளியிட்டார். அதில் இந்திய நாட்டிலுள்ள காஷ்மீர், குஜராத் பகுதிகள் இடம் பெற்றிருந்தன. இதுவும் பாகிஸ்தான் பகுதிகள் என அந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை இது குறிப்பதாகவும் இம்ரான் கான் தெரிவித்தார். இதை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. […]