Categories
உலக செய்திகள்

இம்ரான்கான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்…. என்ன காரணம்?…. வெளியான தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டின் மூத்த ராணுவ அதிகாரி மீது அவதூறாக குற்றம் சாட்டிய காரணத்தால் இம்ரான் கான் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ராணுவம் வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், அரசாங்கத்தை எதிர்த்து குற்றம் சாட்டி வருகிறார். அதனோடு தொடர்ந்து மிகப்பெரிய பேரணிகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார். அதன்படி வாஜிராபாத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று அரசாங்கத்திற்கு எதிராக பேரணி நடத்தப்பட்ட போது மர்ம நபர் ஒருவர் அவரை சுட்டார். இதில், காலில் அவருக்கு குண்டு பாய்ந்தது. […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி சூடு…. போராட்டத்தில் நடந்தது என்ன….?

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றார். அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் நேற்று பிரமாண்டமான பேரணி நடைபெற்றுள்ளது. இந்த பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் அதிர்ச்சி…. பேரணியில் துப்பாக்கிசூடு…. காயமடைந்த இம்ரான் கான்….!!!

பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், பேரணி நடத்திய போது துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி வரிசாபாத் நகரத்தில் தன் தலைமையில் பேரணி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில், இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்து விட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரோடு சேர்ந்து பி.டி.ஐ […]

Categories
உலக செய்திகள்

வீட்டுக்காவலில் இருக்கும் இம்ரான் கான்…. எந்த நேரத்திலும் கைது?…

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், எப்போது வேண்டுமானாலும் கைதாக நேரிடும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், மீது தெஹ்ரீக் -இ- இன்சாப் என்ற கட்சிக்காக பல நாடுகளில் சட்டவிரோதமான முறையில் பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து பெடரல் ஏஜென்சி விசாரணை மேற்கொண்டது. அதில் பத்துக்கும் அதிகமான வங்கி கணக்குகள் தொடங்கி பிற நாடுகளிலிருந்து பணம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. எனவே தற்போது, அவர் எந்த நேரத்திலும் […]

Categories
உலக செய்திகள்

இம்ரான் கான் உரையை ஒளிபரப்ப விதிக்கப்பட்ட தடை நிறுத்தம்…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் உரையாடலை ஊடகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஊடக ஒழுங்கு முறை ஆணையம் விதித்த தடையை நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், பொது நிகழ்வில் பேசினார். அப்போது, அவர் போலீஸ் அதிகாரியையும், பெண் மாஜிஸ்திரேட்டையும் மிரட்டியுள்ளார். இதனால், ஊடக ஒழுங்குமுறை ஆணையமானது, அவரின் உரையாடல்களை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு  தடை அறிவித்தது. இது குறித்து இம்ரான் கான் தரப்பில் மனு […]

Categories
உலக செய்திகள்

சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதல் நியாயமில்லாதது…. கண்டனம் தெரிவித்த இம்ரான் கான்…!!!

பிரிட்டன் நாட்டில் பிரபல எழுத்தாளர் தாக்கப்பட்டது நியாயமில்லாதது என்று பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பிரிட்டனின் பிரபலமான எழுத்தாளரான சல்மான் ருஷ்டி அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஒரு நபர் அவரை கத்தியால் தாக்கினார். அதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் உயிர் பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய வம்சாவளியினரான சல்மான் ருஷ்டி […]

Categories
உலக செய்திகள்

இடைக்கால ஜாமீன் முடிந்ததும்…. இம்ரான் கான் கைதாவார்…. உள்துறை அமைச்சர் தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் முடிந்தவுடன் அவர் கைதாவார் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமரான ஷபாஸ் ஷெரீப்பின் அரசை எதிர்த்து முன்னாள் பிரதமரான இம்ரான் கான் ஆர்ப்பாட்டங்கலில் ஈடுபட்டு வருகிறார். அந்த ஆர்ப்பாட்டங்களின் போது கலவரத்தை தூண்டியதாக இம்ரான் கான் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக இம்ரான் கான் பெஷாவர் நகரின் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியிருந்தார். எனவே அவருக்கு மூன்று வாரங்கள் […]

Categories
உலக செய்திகள்

“அரசு சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்”… இம்ரான் கான் மீது தேசத்துரோக வழக்கு…. வெளியான தகவல்…!!!!!!!!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஷ் ஷெரிப்  பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கிடையில் தனது ஆட்சி கவிழ்ந்ததில்  வெளிநாட்டு சதி இருப்பதாக கூறியும்  ஷபாஷ் புதிய பிரதமராக பொறுப்பேற்றதையும் இம்ரான்கான் ஏற்க மறுத்து வருகிறார். மேலும் தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-  இன்சாப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி  […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் 3 பிரிவுகளாக மாறும்… இம்ரான் கான் கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் நாடு மூன்றாக பிரிய கூடிய ஆபத்து இருக்கிறது என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் ஒரு நேர்காணலில், நாட்டின் நிர்வாக கட்டமைப்பில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது என்றார். அதற்கு தகுந்த தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை எனில் மிகவும் கடுமையான அழிவு ஏற்படும் என்று தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானின் ராணுவம் தான் முதலில் பாதிப்படையும் என்றும் நாடு மூன்றாக பிரியக்கூடிய நிலை உண்டாகும் என்றும் கூறியிருந்தார். […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய்…. இந்தியாவை பாராட்டும் இம்ரான் கான்…!!!

இந்தியா, ரஷ்ய நாட்டிடம் மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் பாராட்டியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா சமீப மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. போர் தொடங்கப்பட்டதிலிருந்து பல நாடுகள் ரஷ்யாவிடமிருந்து அதிகமான அளவில் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்து கொண்டிருக்கின்றன. இந்திய அரசும், மிக குறைவான விலையில் ரஷ்ய நாட்டிடம் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்கிறது. எனினும் இதனை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. இதனிடையே, அமெரிக்க அரசு எதிர்த்தும் […]

Categories
உலக செய்திகள்

“இவர்கள் தான் எனது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பார்கள்”…. இமரான்கானின் பேச்சால் பரபரப்பு….!!

தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் சியால்கோட்டில் பொதுக்கூட்டத்தில் உரையாடல் நிகழ்த்தியுள்ளார். இந்த உரையாடலின் போது அவர் கூறியதாவது, ” என்னை கொல்லும் சதித்திட்டம் பாகிஸ்தான் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் திட்டமிடப்பட்டும் வருகிறது. அவர்களின் பெயர்களை ஒரே வீடியோவில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். ஒருவேளை நான் கொல்லப்பட்டால் அப்பொழுது அந்த வீடியோ மக்களின் முன்பு வெளியிடப்படும்” என இம்ரான் கான் கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

மே இறுதியில் அலற போகும் பாகிஸ்தான்…. ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள இம்ரான்கான்….!!!!

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இம்ரான்கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் இம்ரான்கான், தான் பதவி இழந்ததற்கு அமெரிக்காவின் சதி தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். அதோடு மட்டுமில்லாமல் பாகிஸ்தானில் அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்பட்ட அரசு ஆட்சியில் அமர்ந்துள்ளதாகவும் விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் இம்ரான்கான், தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாக சென்று போராட்டம் […]

Categories
உலக செய்திகள்

“தன் சொந்த மக்களுக்காக மட்டும் சிந்திக்கும் நாடு இந்தியா…!!” மீண்டும் இந்தியாவை பாராட்டிய இம்ரான்கான்…!!

லாகூரில் நடைபெற்ற பேரணியின்போது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்து பாராட்டியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கொண்டுள்ளது. ரஷ்யா மீது அனைத்து நாடுகளும் பொருளாதார தடை விதித்த போதும் அங்கிருந்து துணிச்சலுடன் எரிவாயு இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அனைத்து தரப்பு மக்களையும் நலம் பெறச் செய்யும். ஆனால் பாகிஸ்தானில் அப்படி அல்ல ஒரு சிலர் மட்டுமே வெளியுறவு கொள்கை மூலம் நன்மை அடைகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

இம்ரான்கானின் இந்த நிலைமைக்கு…. இவர்கள் தான் காரணமா….? வெளியான பரபரப்பு தகவல்….!!!

இம்ரான்கான் நேற்று முன்தினம் தனது இணையதள பக்கத்தில் தனது ஆட்சி கவிழ ராணுவ தளபதிகள் தான் காரணம் என்று மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் இதுவரை ஐந்து ஆண்டுகள் முழுமையாக எந்த பிரதமரும் தனது ஆட்சியை நடத்த வில்லை. அந்த வகையில் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் இம்ரான்கானின் ஆட்சி கவிழ்ந்தது. இதனால் தனது 5 ஆண்டுகால ஆட்சியை தொடர முடியாமல் போன நிலையில் அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

ஒரு நாட்டு பிரதமர் இப்படி கொள்ளையடிப்பது சரியா…. இம்ரான் கான் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

இம்ரான் கான் தான் பிரதமராக இருந்த போது குறைந்த விலையை கொடுத்தோ கொடுக்காமலோ ₹ 140 மில்லியனுக்கும் அதிகமான 58 பரிசுகளைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்ரான் கான் உலகத் தலைவர்களிடம் இருந்து பாகிஸ்தான் அரசியல் பிரதமராக இருந்த போது தனது 3.5 ஆண்டுக் காலத்தில் ₹ 140 மில்லியனுக்கும் அதிகமான 58 பரிசுகளைப் பெற்றுள்ளார். இதனை எல்லாவற்றையும் மிகக் குறைந்த தொகையைச் கொடுத்தோ அல்லது எதுவும் கொடுகாமலோ அவரே வைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

Categories
உலக செய்திகள்

மக்களே!…. “புதிய தேர்தலை நடத்த உதவி பண்ணுங்க”…. இம்ரான்கான் வேண்டுகோள்….!!!!

இம்ரான்கான் ஆட்சியே பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு, எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது. அதில், இம்ரான்கான் தோல்வியை சந்தித்தார். மேலும் அவர் பிரதமர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரிப் (வயது 70) பாகிஸ்தானின் புதிய பிரதமராக போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இதனால் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக பலரும் […]

Categories
உலக செய்திகள்

பரிசாக கிடைத்த ரூ.18 கோடி மதிப்புள்ள ஆபரணம்…. என்ன செய்தார் இம்ரான்கான்?…. பாக். அரசு தீவிர விசாரணை….!!!!

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து ஆட்சி கவிழ்ந்ததோடு, பிரதமர் இம்ரான்கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து ஷபாஸ் ஷெரீப் என்பவர் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் ரூ.18 கோடி மதிப்புள்ள நெக்லஸ் ஆபரணம் ஒன்று பாகிஸ்தானில் இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்தபோது பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இம்ரான்கான் அரசு பரிசு சேமிப்பு மையத்திற்கு அந்த ஆபரணத்தை அனுப்பி வைக்காமல் தன்னுடைய சிறப்பு உதவியாளர் ஷபீகர் புஹாரியிடம் […]

Categories
உலக செய்திகள்

இவர்தான் அடுத்த “வெளியுறவுத்துறை மந்திரி”…. பறிக்கப்பட்ட பிரதமர் பதவி…. வெளியான தகவல்….!!

பாகிஸ்தானில் இம்ரான்கானின் ஆட்சி கலைக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தில் அடுத்த வெளியுறவுத் துறை மந்திரியாக பிலாவல் பூட்டோ நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கானுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார்கள். இதன் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. இதில் 174 உறுப்பினர்கள் பாகிஸ்தானின் பிரதமருக்கு எதிராக வாக்களித்ததால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பிரதமர் இம்ரான்கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பிடிஐ கட்சியினர் பதவி விலகுவார்கள்…. முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் PTI கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. எனவே, இதற்கு பிரதமர் தான் காரணம் என்று கூறிய எதிர்க்கட்சியினர் ஒன்று சேர்ந்து இம்ரான்கான் மீது குற்றம் சாட்டி நம்பிக்கையற்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். எனவே, பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். தற்போது புதிய பிரதமரை நியமிக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில், தன் அமைச்சரவையில் இருக்கும் அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

லண்டனிலிருந்து பாகிஸ்தான் திரும்பும் நவாஸ் ஷெரிப்… வெளியான தகவல்….!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் லண்டனிலிருந்து பாகிஸ்தான் நாட்டிற்கு திரும்பவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையற்ற தீர்மானத்தை நிறைவேற்றி ஆட்சியை கவிழ்த்து விட்டனர். அதையடுத்து எதிர்க் கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கவிருக்கிறது. எனவே, நாட்டின் அடுத்த பிரதமராக முஸ்லீம் லீக் கட்சி தலைவர் ஷெபாஸ் செரீப் பதவியேற்கவிருக்கிறார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர். நவாஸ் ஷெரீப், மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்கு சென்றிருந்தார். அதன் பிறகு, அவர் லண்டனிலேயே தங்கிவிட்டார். […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பாகிஸ்தானில் பதவியிழந்த இம்ரான் கானுக்கு ஆதரவாக …!!! பாகிஸ்தான் மற்றும் துபாயில் வெடிக்கும் போராட்டங்கள்….!!!

பாகிஸ்தானில் நிலவிவரும் மோசமான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 174 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனை அடுத்து பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஷபாஷ் ஷெரிஃப்தான் பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத இம்ரான்கான் ஆதரவாளர்கள் அகமதாபாத், கராச்சி […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம்… புதிய பிரதமராக முன்மொழியப்பட்ட ஷபாஸ் ஷெரிப்….!!!

பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரிப் முன்மொழியப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் அரசியலில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, பிரதமர் இம்ரான்கானை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நம்பிக்கையற்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். எனவே, பிரதமர் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க நாளை நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது. அந்நாட்டின் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி தலைவராக இருக்கும் ஷபாஸ் ஷெரிப், புதிய பிரதமராக நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்காக ஷபாஸ் […]

Categories
உலகசெய்திகள்

“அவங்க வர வரைக்கும் இவங்க தா”… ஜனாதிபதி ஆரிப் ஆல்வி வெளியிட்ட திடீர் அறிவிப்பு…!!!!

காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார் என ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  இலங்கையில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் பால் மற்றும் பெட்ரோல் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள மக்களுக்கு சாப்பாட்டிற்கு கூட வழியின்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகையை  முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் அமைச்சரவை கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமல்படுத்த வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானை இம்ரான் கான் தான் காப்பாற்றுவார்….!!” ஆதரவாளர்கள் கோஷம்…!!

பாகிஸ்தானில் பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றிற்கு அந்நாட்டின் அதிபர் இம்ரான்கான் தான் காரணம் என கூறி எதிர்க்கட்சிகள் அவரது ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றின. இந்த தீர்மானதிற்ககாண வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த நிலையில் அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி சபாநாயகர் காசின் கான் வாக்கெடுப்பை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்க்குள்ளேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இம்ரான்கான் நாடாளுமன்றத்திற்கு வராமல் வீட்டில் இருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அதோடு […]

Categories
உலகசெய்திகள்

“இம்ரான்கானின்” ஆட்சி கவிழுமா…? நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பு….!!

பாகிஸ்தானின் பிரதமரான இம்ரான்கான் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டிலுள்ள மொத்த 342 பாராளுமன்ற தொகுதிகளில் ஆட்சியமைப்பதற்கு 172 இடங்களை கைப்பற்றியிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இவ்வாறு இருக்க பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கானின் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இதற்கான விவாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இம்ரான்கான் ஆட்சி […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவை ஆதரிக்கும் சக்திவாய்ந்த நாடு பாகிஸ்தான் மீது கோபமாக உள்ளது…!!” இம்ரான்கான் பேட்டி…!!

பாகிஸ்தான் பிரதமரின் இம்ரான் கான் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வருகிற 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் இம்ரான்கான் தலைமையிலான அரசு தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால் ஆட்சி கவிழும். இந்நிலையில் இம்ரான் கான் இந்தியாவை ஆதரிக்கும் ஒரு சக்தி வாய்ந்த நாடு தற்போது பாகிஸ்தான் மீது கோபமாக உள்ளது என தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் […]

Categories
உலக செய்திகள்

பொதுமக்கள் அனைவரும் இணைத்து போராட்டம் நடத்துங்கள்…. இம்ரான்கான் பகிரங்க பேச்சு….!!!

இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் வாக்கெடுப்புக்கு முன்னதாக பொதுமக்கள் ஆதரவை திரட்டி வருகிறார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எடுத்து வருகின்றனர். இந்த தீர்மானத்துக்கு இம்ரான்கான் கட்சியை சேர்ந்தவர்களே பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 24 தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள்  எதிராக வாக்களிக்க தயாராக உள்ளனர். இந்த நிலையில் இம்ரான் “கான் என்ன நடந்தாலும் சரி. நான் பதவியை விட்டு விலக மாட்டேன். நான் சண்டை இன்றி சரணடைய மாட்டேன். […]

Categories
உலக செய்திகள்

அடகடவுளே….! நம்மை இவர்கள் ஒரு பொருட்டாக கூட நினைக்க வில்லை…. இம்ரான் கான் ஆவேசம்….!!!

மேற்கத்திய நாடுகள் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை ஒரு பொருட்டாக கூட நினைக்க வில்லை. பாகிஸ்தானில் நேற்று முன்தினம் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் 48வது மாநாடு நடந்தது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் மற்றும் பாலஸ்தீன் பிரச்சனைகளை குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில் “காஷ்மீர் மற்றும் பாலஸ்தீனத்தில் தோற்றுவிட்டோம். இதனால் எந்தவித தாக்கத்தையும் நாம் ஏற்படுத்தவில்லை. இதனை தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை ஒரு பொருட்டாக கூட நினைக்க […]

Categories
உலக செய்திகள்

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு…. பாகிஸ்தான் பிரதமருக்கு 50000 ரூபாய் அபராதம்…!!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா என்ற மாகாணத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக கடந்த 16-ஆம் தேதி அன்று பிரச்சாரம் நடந்தது. அப்போது பிரதமர் இம்ரான் கான், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது. எனவே, பிரதமர் இம்ரான்கான் 50,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மேலும், கைபர் பக்துங்வா மாகாணத்தின் முதல்வரான மஹ்மூத் கான், வெளியுறவுத் […]

Categories
உலக செய்திகள்

எதுக்கு அங்க போனாரு?…. இம்ரான் கானை சந்தித்த பில் கேட்ஸ்…. விருது வழங்கி கவுரவித்த பிரபல நாடு….!!

பாகிஸ்தானுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்ட பில் கேட்ஸுக்கு அந்நாட்டின்   ஜனாதிபதி விருது வழங்கி சிறப்பித்துள்ளார்.   உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ். இவர் பாகிஸ்தானுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசினார். பில்கேட்ஸ் பாகிஸ்தான் அரசை கொரோனா பரவலை  தடுக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டியுள்ளார். இதனை தொடர்ந்து இம்ரான்கானன் பில் கேட்ஸுக்கு மத்திய விருது அளித்து கவுரவித்தார். மேலும் பாகிஸ்தான் நாட்டில் பில் கேட்ஸை […]

Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்!!…. இம்ரான் கானுக்கு அடிக்கு மேல் அடி…. வீட்டை விட்டு வெளியேறிய மூன்றாவது மனைவி….!!

பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர ஜனநாயக இயக்கம் என்ற அமைப்பின் கீழ் எதிர்கட்சிகள் முடிவெடுத்துள்ளார்.  பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க் கட்சிகள் முடிவு செய்துள்ளன. அந்தக் கூட்டத்தில் நவாஸ் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம், பாகிஸ்தான் மக்கள் கட்சியிலுள்ள பிரதிநிதிகள் கலந்து உள்ளனர். இம்ரான் கானுக்கு பதிலாக அடுத்த தலைமை பொறுப்பை ஏற்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் […]

Categories
உலக செய்திகள்

கட்சி நிதியில் முறைக்கேடு… பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானுக்கு அதிகரிக்கும் நெருக்கடி…!!!

பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கானின் பிடிஐ கட்சி பெறக்கூடிய வெளிநாட்டு நிதியின்  ஆவணங்களை சரிபார்ப்பதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானின், ‘பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி’-க்கு  கிடைக்கக்கூடிய வெளிநாட்டு நிதியை குறைவாக காண்பிப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுகுறித்து பாபர் என்ற நபர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். மேலும், அந்த கட்சி, சரியான ஆவணங்களை வெளியிடுவதற்கு மறுப்பு தெரிவிப்பதாக குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையமானது, தங்களது செயலாளர்களிடம், தெஹ்ரிக் இ […]

Categories
உலக செய்திகள்

“போச்சா!”…. பாகிஸ்தான் பிரதமர் இந்த வேலைதான் பாக்குறாரா?…. தலிபான்கள் ஆவேசம்….!!!!

தலிபான்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை கடுமையாக விமர்சித்துள்ளனர். அதாவது தலிபான் செய்தி தொடர்பாளர் ஒருவர் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் கைப்பாவையாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செயல்பட்டு வருவதாக கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் தேசிய உணர்வுள்ள ஆப்கானியர்களை பாகிஸ்தான் அரசாங்கம் இஸ்லாமிய எமிரேட்ஸுக்கு எதிராக தூண்டி விட முயற்சி செய்கிறது. இது அவர்களுடைய சதிகளில் ஒன்று ஆகும். ஏற்கனவே பாகிஸ்தான் FATF அமைப்பினால் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அழிந்து விடும் என்று அவர் […]

Categories
உலக செய்திகள்

சம்மன் அனுப்பிய நீதிமன்றம்…. நேரில் ஆஜரான பாகிஸ்தான் பிரதமர்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

பயங்கரவாத தாக்குதல் வழக்கில் நீதிபதிகள் பிரதமரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பினர் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி பெஷாவர் நகரில் இருக்கும் ராணுவம் பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கி சூடு  நடத்தினர். இதில் 132 சிறுவர்கள் உட்பட மொத்தம் 147 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவமானது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் பாகிஸ்தான் பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

“டாப்” அணியாக திகழும் இந்தியா… நாமும் இதேபோல் முன்னேறுவோம்… பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் நம்பிக்கை…!

இந்திய அணியை போல நம் அணியும் ஒரு நாள் உலகை வெல்லும் என்று பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று தொடர்ந்து இரண்டு தொடர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு என்ன காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்திய அணி தற்போது உலகின் டாப் அணியாக திகழ்கிறது. இந்தியா அடிப்படை கிரிக்கெட் கட்டமைப்பை வெளிப்படுத்தியதால் இன்று […]

Categories
உலக செய்திகள்

“அதிபர் ஜோ பிடன் அரசிடம்”… இணைந்து பணியாற்ற… இம்ரான் கான் எதிர்பார்ப்பு..!!

அதிபர் சோபையுடன் அரசுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதிபர் ஜோ பிடன் தலைமையிலான அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்பட்டு, அமைதியை மேம்படுத்தும் பணியில் ஈடுபட எதிர்பார்ப்பில் உள்ளதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடந்த 2018ல் பாகிஸ்தான் அரசுக்கான அனைத்து விதமான பாதுகாப்பு நிதியுதவிகளையும், டிரம்ப் அரசு நிறுத்தி விட்டது. அதை மீண்டும் பெறும் முயற்சியில் இம்ரான் கான், இவ்வாறு தெரிவித்துள்ளார். வர்த்தகம், பொருளாதார மேம்பாடு, காலநிலை பாதிப்புக்கு […]

Categories
உலக செய்திகள்

ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி..! – பாக்., பாராளுமன்றத்தில் புகழாரம் சூட்டிய இம்ரான்!

சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை தியாகி என்றும், நம் நாட்டிடம் தெரிவிக்காமல் அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அவரை கொன்றது அவமானம் என்றும் பாக்., பாராளுமன்றத்தில் இம்ரான் பேசியுள்ளார். பாகிஸ்தான் இன்னமும் பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கி வருகிறது என அமெரிக்க வெளியுறவுத் துறை மதிப்பீடு அறிக்கை வெளியிட்டுள்ளது.  புதன் கிழமை அன்று  வெளியான அந்த அறிக்கையில் இந்தியா மற்றும் ஆப்கனை குறிவைத்து செயல்படும் பயங்கரவாத இயங்கங்களை பாகிஸ்தான் அரசு  ஒடுக்கவில்லை. மேலும் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாருக்கு […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து அட்டூழியம்… பசியால் வாடும் குழந்தைகள்… வெட்டுக்கிளிகளால் வேதனையடையும் விவசாயிகள்..!

பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்து வருவதால் தங்களது குழந்தைகள் பசியால் வாடும் சூழல் நிலவியுள்ளதாக அந்நாட்டு விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானின் பல பகுதிகளில் வெட்டுக்கிளிகள் கூட்டம் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்து வரும் நிலையில் பாகிஸ்தான் இதனை தடுப்பதற்கு சீனாவின் உதவியை நாடியுள்ளது. இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாண பகுதிகளில் விளைநிலங்களுக்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோதுமை பயிர்களை தின்று அழித்து நாசம் செய்து விட்டதாக அப்பகுதி விவசாயிகள் […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு உதவுங்க… பாகிஸ்தானை கதி கலங்க செய்த வெட்டுக்கிளிகள்… இம்ரான் கான் எடுத்த முடிவு!

 பாலைவன வெட்டுக்கிளிகளை சமாளிக்க முடியாததால்  பாகிஸ்தான் அரசு சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடியிருக்கிறது பாகிஸ்தான் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான வெட்டுக்கிளி தாக்குதலை சந்தித்து வருகின்றது. இதனால் பாகிஸ்தான் அதிரடியாக தேசிய நெருக்கடி நிலையை (அவசர நிலை) அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பொதுவாக வெட்டுக்கிளிகள் குளிர் காலங்களில் மட்டுமே காணப்படும். ஆனால் இந்த முறை,  அங்கு நிலவும் குறைந்த வெப்பநிலை காரணமாக தொடர்ச்சியாக வெட்டுக்கிளிகள் அங்கேயே டேரா போட்டு தங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் என்னசெய்வதென்று […]

Categories

Tech |