தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல் இயங்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என கூறப்பட்ட நிலையில் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட நேரத்தில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக்த்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை […]
Tag: இயங்கும்
தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டதை எதிர்த்து தனியார் பள்ளிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன. இதையடுத்து தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்புடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சர் அம்பில் மகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.
9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் கல்லூரிகள் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். தற்போது உருமாற்றம் கண்டு OMICRON உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியா முழுவதும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. தமிழகத்தில் […]
புதுக்கோட்டை புதிய பேருந்து லிட்டில் நாளை முதல் காய்கறி மார்க்கெட் மீண்டும் செயல்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் நாளை முதல் தமிழக அரசு, தமிழகத்தில் சில தளர்வுகளை அறிமுகம் செய்துள்ளது. மேலும், தமிழகத்தில் தொற்று குறையாத மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறையில் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது […]
தமிழகத்தில் நாளை மெட்ரோ ரயில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை […]
அம்மா உணவகத்திற்கு நாளை ஊரடங்கும் போதும் எந்தவித தடையும் இன்றி இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. சென்னையில் அம்மா உணவகங்களுக்கு நாளை முழு ஊரடங்கில் […]
தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் திரையரங்குகள் தொடர்ந்து இயக்கப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்ததால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுகாதாரத் துறையுடன் இணைந்து ஆலோசனை நடத்தி தமிழகத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இதில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டது. மற்ற நாட்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டது. இதில் திரையரங்குகள் மால்கள் […]
துபாயில் மேம்படுத்தப்பட்ட மூன்று நாள் வாகன கண்காட்சியில் புதிதாக மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துபாயில் கஷ்டம் சோ என்ற தலைப்பில் நவீன முறையில் மேம்படுத்தப்பட்ட மூன்று நாள் வாகன கண்காட்சி நேற்று தொடங்கி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. அந்த கண்காட்சியை தீயணைப்பு துறையின் பொது இயக்குநர் ராஷித் தானி அல் மத்ரூசி தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவரிடம் புதிதாக அறிமுகமான மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனத்தின் சாவியை ஒப்படைத்தனர். அப்போது அவர் […]