ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை அடுத்த தாடே பல்லியில் வசிப்பவர் ஷாஷிகாந்த். இவர் ஐடி ஊழியர் ஆக பணியாற்றி வந்த நிலையில் கொரோனா காலத்தில் போது சோதனை அடிப்படையில் கருப்பு அரிசியை பயிரிட தொடங்கியுள்ளார். ரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் சாகுபடி செய்து ஏக்கருக்கு 25 முதல் 30 மூட்டைகள் வரை சாகுபடி செய்துள்ளார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு போகத்திலும் பாஸ்மதி அரிசி மற்றும் சர்க்கரை இல்லாத அரிசியை பயிரிடப்பட்டு அறுவடை செய்துள்ளார். தற்போதும் அவர் ஐடி வேலையை […]
Tag: இயற்கை விவசாயம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மேல்பாப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் படிப்பு முடிந்தவுடன் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் அந்த வேலையை உதறி தள்ளிவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளார். தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் வேர்கடலையை பயிரிட்டுள்ள அருண்பாண்டியன் அதில் ஊடுபயிராக பாரம்பரிய நாட்டு துவரையை பயிரிட்டுள்ளார். மீதமுள்ள 3 ஏக்கர் நிலத்தில் கேழ்வரகு, உளுந்து […]
இந்தியாவில் கடந்த 2005-ம் ஆண்டு மத்திய அரசு இயற்கை வேளாண்மை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் 27.8 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலப்பரப்பில் மட்டுமே இயற்கை விவசாயம் நடைபெறுகிறது. நம் நாட்டில் மொத்தம் 1401 லட்சம் ஹெக்டேர் நிகர விவசாய பரப்பில் இது 2 சதவீதம் ஆகும். இந்நிலையில் இயற்கை விவசாயத்தில் மத்திய பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதில் சிக்கிம் மட்டும் முழுமையாக […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள வகுரணி என்ற கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணகுமார் என்பவர் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். இவர் மூன்று வருடங்களாக பப்பாளி, கொய்யா உள்ளிட்டவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ளார். ஆனால் சந்தையில் இயற்கை பழங்களுக்கு தனியாக மதிப்பில்லை. இருப்பினும் மக்களுக்கு நல்ல ஆரோக்கியமான பழங்களை கொடுக்கிறோம் என்ற மகிழ்ச்சி மட்டும் மிச்சமாகிறது என்று கூறுகிறார் கிருஷ்ணகுமார். மேலும் அவர், “என்னிடம் உள்ள 9 1/2 ஏக்கர் நிலத்தில் கடந்த 20 […]
விவசாயிகள் அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்களைப் பயன்படுத்தி மலை காய்கறிகளை சாகுபடி செய்து வரும் நிலையில் நீலகிரியில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் தனது 78 வயதிலும் தனியாக இயற்கை விவசாயம் செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார். மலையின் ரம்யத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் அழகிய நகரம் நீலகிரி. மேகங்கள் தவழும் இந்த நிலத்தில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் மண்ணிற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் ஆரோக்கியமாக அமைந்துள்ளது. இந்நிலையில் அதிக லாபம் ஈட்ட […]
இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் போது நஞ்சற்ற வேளாண் முறையை அடுத்த தலைமுறைக்கு தருவதோடு, ஆரோக்கியமான உணவையும் நாம் பெற முடியும். விவசாயத்தை இயற்கை முறையில் மேற்கொள்வது எப்படி ? என்பது பற்றி பார்ப்போம். * இயற்கை வேளாண்மையின் முதற்படி அனைத்து விதமான பயிர்களையும் விளைவிப்பதற்கு ஏற்ப நிலத்தை தயார் செய்வது. * விளைநிலங்களில் ஒரே மாதிரியான பயிர்களை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்வதை தவிர்த்து, பயிர்களை சுழற்சி முறையில் தேர்வு செய்து சாகுபடி செய்தால் மகசூல் […]
நாட்டில் விவசாயம் செய்பவர்களின் நிலை காலம்காலமாக மாறாமல் அப்படியே இன்றும் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் மாற்றி யோசித்து பார்த்தால் விவசாயிகள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். அவ்வாறு தலைமுறை, தலைமுறையாக விவசாயம் செய்து வந்த விவசாயி ஒருவர் கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறார். அப்போது இயற்கை விவசாயம் பக்கம் திரும்பி, இன்றைக்கு பல லட்சங்களை வருமானமாக ஈட்டும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக இயற்கை விவசாயம் மூலம் வருமானம் ஈட்ட முடியாது என்ற கூற்றையும் மாற்றிக் காட்டியிருக்கிறார். […]
செயற்கை உரம் இல்லாமல் இயற்கை விவசாயத்தில் சாதித்து வெற்றி காணும் கரூரை சேர்ந்த பெண் விவசாயி. கரூர் மாவட்டம் பள்ளபட்டியை அடுத்து லிங்கமநாய்கன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு இயற்கை வளங்களோடு வசித்து வருபவர் சரோஜா. விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக கடந்த 8 வருடங்களுக்கு முன்பு கடவூரில் உள்ள நம்மாழ்வாரின் வானகத்தில் இயற்கை விவசாயம் குறித்து பயிற்சியை பெற்றார். நாம்மாழ்வாரின் ஆலோசனையின்படி நந்தவன தோட்டத்தை 20 ஏக்கர் நிலத்தில் உருவாக்கி மிளகாய், வெங்காயம், முருங்கை, உளுந்து, […]
விவசாயத்துறையில் தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வரும் சூழல் தெரிகிறது. அதிலும் குறிப்பாக இயற்கை விவசாயத்தினை முன்னெடுத்துச் செல்லும் முயற்சி முதல்வரின் பேச்சு, அறிக்கைகளில் தெரிகிறது. மண்ணின் வளமே மக்கள் வளம் என்று பசுமை தாரக மந்திரத்தை முதல்வர் உச்சரிப்பது வரவேற்புக்குரிய செயல் ஆகும். இதனிடையில் விவசாயத்திற்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்தைத் முன்னெடுத்துச் செல்லவும், விவசாயிகள் நலனை கவனத்தில் கொள்ளவும் சில ஆலோசனைகளை முன் […]
16 வயதில் இயற்கை விவசாயத்தை செய்யத் தொடங்கி 23 வயதில் சாதித்து அனைத்து இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கிய கேரளாவை சேர்ந்த சூரஜ் என்பவரை பற்றி இதில் நாம் பார்ப்போம். பத்தாம் வகுப்பு முடித்த பிறகு சுயமாக விவசாயம் செய்ய ஆரம்பித்து அடுத்த ஏழு வருடங்களில் நிறைய முன்னேற்றங்களை கண்ட சூரஜை ‘இவன் எப்படி விவசாயம் செய்ய போறான்’ அதெல்லாம் சரி வருமா? என்று பலரும் கேட்ட கேள்விக்கு பதிலாக தற்போது விளங்குகிறார். கேரளாவின் நம்பிக்கைக்குரிய இளம் விவசாயியாக […]
இயற்கை விவசாயம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் அசத்தும் வேளாண் பட்டதாரி இளைஞரை பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம் . புதுச்சேரி அருகே கூனிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவர் ஒரு வேளாண் பட்டதாரி வீரப்பனுக்கு சிறுவயது முதலே விவசாயத்தின் மீது இருந்த நாட்டத்தால் படித்து முடித்ததும் நேராக வயலில் இறங்கி விவசாயம் செய்து வருகிறார். பட்டம் பெற்று முடித்ததும் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களான காட்டுயானை, பாசுமதி, ராஜபோகம் போன்ற நெல் வகைகளை பயிரிட்டு […]