உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து 5-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் தலைநகர் கீவில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் ரஷ்ய படையினர் கீவ் நகரை கைப்பற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவின் இந்த மோதல் போக்கை கண்டித்து அமெரிக்கா, பிரான்ஸ் ,ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதலால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன. இந்த நிலையில் 2-ஆம் உலகப் […]
Tag: இரண்டாம் உலகப்போர்
அமெரிக்காவில் சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலம் இரண்டாம் உலகப்போருக்கு பின் வெகுவாக குறைந்திருக்கிறது. அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டிருக்கும் தரவுகளில் கடந்த 2020 ஆம் வருடத்தில், சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலம் 77 வருடங்களாக குறைந்திருக்கிறது. இது, கடந்த 2019 ஆம் வருடத்தை விட ஒன்றே முக்கால் வருடங்கள் குறைவு என்று தேசிய சுகாதார புள்ளியியல் மையத்தின் தகவல்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. மேலும், அந்நாட்டில் உயிரிழப்பிற்கான காரணங்கள், புற்றுநோய் மற்றும் இதயநோய் என்று […]
பிரிட்டனில் ஒரு பெண் குப்பைத்தொட்டியில் போட வைத்திருந்த பையில் வெடிகுண்டு ஒன்று இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் Swinton என்ற நகரத்தைச் சேர்ந்த 82 வயது பெண் நேற்று காலையில் தன் வீட்டின் பின்புறம் இருந்த பொருட்களை சுத்தப்படுத்தியுள்ளார். எனவே அங்கு கிடந்த பொருட்களை வீதியில் இருக்கும் குப்பைத்தொட்டியின் அருகில் கொண்டு போட்டிருக்கிறார். அந்தப் பெண்ணின் உறவினர்கள், அவர் கொட்டிய குப்பையில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பயன்படுத்திய வெடிகுண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு […]
இங்கிலாந்தின் தென்கிழக்குப் வேல்ஸ் நகரில் உள்ளது டூலைஸ் ஆறு. இந்நிலையில் சம்பவத்தன்று டேங்கர் லாரி ஒன்று பால் ஏற்றி கொண்டு சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரி ஆற்றில் கவிழ்ந்து விழுந்ததால் பால் முழுவதுமாக ஆற்றில் கலந்து ஆறு பாலாறு போல காட்சி அளித்தது. இதை கண்ட மக்களும் ஆச்சர்யத்துடன் வந்து நீரை வைத்து பார்த்த போது அதில் பால் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து வீடியோக்களும், புகைப்படங்களும் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் […]
பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் பல வருடங்களாக தன் காதலரை தேடிய நிலையில் அவரின் மகன் தன் 75 வயதில் தந்தையை கண்டுபிடித்துள்ளார். அமெரிக்க வீரர்கள் சிலர் இங்கிலாந்தில் ராணுவ தளம் அமைத்திருந்தனர். இதில் Wilbert Willey என்ற வீரர் அழகான இளம்பெண் Betty என்பவரை நடன விடுதியில் சந்தித்து இருவரும் காதலித்துள்ளனர். இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததும் அவர் அமெரிக்காவுக்கு சென்று விட்டார். இதனால் தன் காதலர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் பல வருடங்களாக Betty […]
ஜெர்மனில், இரண்டாம் உலகப்போரின்போது போடப்பட்ட வெடிகுண்டுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜெர்மனியிலுள்ள கோர்ட்டிங்கன் நகரின் மையத்தில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் சந்தேகத்திற்கிடமான நான்கு பொருள்கள் இருந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஜெர்மன் ராணுவம் ஆகியோர் அந்த நான்கு பொருட்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அப்பகுதியில் இருந்த 8000 திற்கும் மேற்பட்ட பொதுமக்களை அவர்களது வீடுகளை விட்டு […]