அடுக்குமாடி குடியிருப்பின் சமையலறையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம், காக்கநாடு நீலம்பாடிஞ்சியத்தில் உள்ள அஜந்தா அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அப்போது b3 என்ற குடியிருப்பில் அபர்ணா ரெஜி என்ற பெண்ணும், அவரின் உறவினரான ஆலன் ராஜுவும் சமையலறையில் தொட்டி வைத்து கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளனர். சுமார் ஒன்றரை […]
Tag: இரண்டு பேர்
அரசு பேருந்து மீது கல் வீசிய தொழிலாளிகள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் தடம் எண் 17 என்ற அரசு பேருந்து பொள்ளாச்சி – ரமண முதலிபுதூருக்கு இயங்கி வருகிறது. இந்தப் பேருந்தை கடந்த 17ஆம் தேதி அன்று இரவு ஓட்டுநர் அருண் பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்று கொண்டிருக்கும்போது கோட்டூர் அருகில் ரமண முதலிபுதூர் தண்ணீர் மடம் பகுதியில் உள்ள வளைவில் சென்றது. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 […]
மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ஆளுநர் இரங்கல் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மதுரையில், வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழா நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கள்ளழகர் தங்கக் குதிரையில் அமர்ந்து வைகை ஆற்றுக்கு வருவதை பார்க்க ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண்ணும், ஆணும் மூச்சு திணறி மயங்கி விழுந்தனர். சற்று நேரத்தில் அவர்கள் […]
மகாராஷ்டிராவில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா, அமெரிக்காவிலிருந்து வந்த இருவருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஏற்கனவே 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 10 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் சற்று அச்சத்தில் உள்ளனர். மேலும் இதுவரை இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கும், […]
பிரித்தானிய நாட்டின் ராணிக்கு அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மொபைல் போன் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து அவர் இருவரை மட்டுமே தொடர்பு கொள்வாராம். பிரித்தானிய இராணி அந்த தனிப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து தன்னுடைய மகள் இளவரசி ஆன் மற்றும் பந்தய மேலாளர் ஜான் வாரன் ஆகிய இருவருடன் மட்டுமே தொடர்பு கொண்டு பேசுவாராம். பிரித்தானியாவின் M16 அமைப்பின் சிறப்பம்சங்கள் கொண்ட சாம்சங் மொபைல்போனையே ராணி பயன்படுத்தி வருகிறார். இந்த போன் மூலம் உலகின் எந்த மூலையில் […]
தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 44 பேருக்கு நல்லாசிரியர் விருதை காணொளி வாயிலாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார். இந்தியாவில் முன்னாள் ஜனாதிபதியான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி அன்று ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அவரை கவுரவிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேருடன் சேர்த்து மொத்தம் 44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் […]
மதுரையில் பராமரிப்பு பணியின் போது பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .இடிபாடுகளில் இருந்து சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அருகே உள்ள மேல வடம் போக்கி தெருவில் 50 ஆண்டுகள் பழமையான ஒரு வீட்டில் பராமரிப்பு பணியில் 5 பேர் ஈடுபட்டு வந்தனர். மதியம் ஒரு மணி அளவில் திடீரென வீடு இடிந்து விழுந்ததில் இருவர் தப்பி வெளியே ஓடி வந்துவிட்டனர். மற்ற […]