அலகாபாத்திலிருந்து தீன்தயாள் உபாத்யாயாவிற்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 6:40 மணிக்கு சண்டவுலி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த ரயிலின் 8 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் அந்த வழித்தடத்தில் மற்ற ரயில்கள் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் இந்த வழி தடத்தில் உள்ள ரயில்கள் திருப்பி விடப்படும் அல்லது வியாஸ் நகர் வழியாக தீன்தயாள் உபாத்யாயா சந்திப்புக்கு […]
Tag: #இரயில்விபத்து
ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம்புரண்டதில் 6 பெட்டிகள் வெடித்து தீ பற்றி எரிந்தது. ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு 56 டேங்கர்களில் கச்சா எண்ணெய் கொண்டுவந்த சரக்கு ரயில் இன்று அதிகாலை ஓங்கோல் பகுதியில் வந்தபோது தண்டவாளத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக தடம்புரண்டது. இதில் 6 பெட்டிகள் கவிழ்ந்ததில் கச்சா எண்ணெய் கீழே சிந்தியது. இதன் காரணமாகதீ பிடித்தடேங்கர்கள் எரியத் தொடங்கின. இது குறித்து தகவலறிந்து சம்பவ […]
ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரத்தில் இருந்து மெல்போர்ன் நோக்கி 160 பயணிகளுடன் சென்ற இரயிலானது, வாலன் பகுதியில் வந்தபோது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் 5 பெட்டிகள் முழுமையாக கவிழ்ந்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.