இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் விரும்புவார்கள். ஏனெனில் மற்ற போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்தில் கட்டணம் மிகக்குறைவு. அதன் பிறகு சிலர் வேலை மற்றும் சொந்த காரணங்களுக்காக சில சமயங்களில் வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். அந்த சமயத்தில் தங்களுடைய பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் போன்றவற்றையும் உடன் எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒருவேளை உங்களுடைய இருசக்கர வாகனத்தை நீங்கள் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் ரயில் […]
Tag: இருசக்கர வாகனம்
புதுச்சேரியில் இருசக்கர வாகனத்திற்கு ஹெல்மெட் கட்டாயம், மீறினால் 1000 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதங்கள் லைன்சென்ஸ் ரத்து செய்யப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கைபேசியில் பேசாமல் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் விபத்தினை தவிர்க்கும் : முறையற்ற வகையில் மோட்டார் வாகனம் இயக்குவதால் அனுதினமும் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. 2019 முதல் 2021 வரை புதுவையில் 3,410 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். […]
வட கிழக்கு டெல்லியின் பஜன்புரா பகுதியில் இருசக்கர வாகனத்தை தேசியக் கொடியைப் பயன்படுத்தி சுத்தம் செய்ததாக 52 வயது நபர் ஒருவரை 1971 தேசிய மரியாதையை அவமதிப்பது தடுப்புச் சட்டம் பிரிவு 2 இன் கீழ் வழக்குப்பதிவு செய்து டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் அவரது இருசக்கர வாகனம் மற்றும் கொடியை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட நபர் டெல்லியின் வடக்கு கோண்டா பகுதியில் வசித்து வருபவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இருசக்கர வாகனத்தை தேசியக் கொடியால் […]
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் அரசு பேருந்து திடீரென்று தீ பற்றி எரிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு பேருந்தின் டீசல் டேங்க் மீது இருசக்கர வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த மூன்று பேரில் பிரவீன் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்தில் இருந்த பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு சக்கர வாகனங்களை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக இலுப்பூர் காவல்நிலையத்தில் வாகனத்தை பறிகொடுத்த கணேசன் (60) மற்றும் சாதிக் பாட்ஷா (44) ஆகிய 2 பேரும் தனித்தனியே புகார் கொடுத்திருந்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மேடுகாடுபட்டி பகுதியில் ஒரு […]
நியூயார்க்கில் சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு புல்டோசர் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை நியூயார்க்கின் ஏரிக் ஆடம்ஸ் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட இந்த இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்துவது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் என தெரிவித்துள்ள ஆடம்ஸ் மேயர் இந்த இருசக்கர வாகனங்கள் தயாரிக்கப்படுவது கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் அதிகரிப்பதாக கவலை தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட 2000 வாகனங்களில் முதல் கட்டமாக 100 […]
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள இராமயன்பட்டி அருகில் சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி உடனே காரைவிட்டு இறங்கி ஆம்புலன்சை வரவழைத்து ஆபத்தான சூழ்நிலையில் இருந்த சுரேஷை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதுமட்டுமல்லாமல் அமைச்சர் அவர் அட்மிட் செய்யப்பட்ட அரசு மருத்துவமனையின் முதல்வரை தன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு பரிந்துரை செய்தார். அதன்பிறகே அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார். இதன் காரணமாக அவ்விடத்தில் […]
இறந்த தம் மகனின் உடலை தந்தை இருசக்கர வாகனத்தில்,எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மாநிலத்தில் உள்ள, அன்னமையா என்ற மாவட்டத்தில் உள்ள சிட் வேல் கிராமத்தைச் சேர்ந்த, ஜெசேவா என்ற சிறுவன், சீறுநீரகக் கோளாறு காரணமாக, திருப்பதியில் உள்ள எஸ்.வி.ஆர். ரூயா அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் […]
மின்சார வாகனங்களின் விலை பற்றி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இன்றைய நவீன உலகில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் தனிமனித அந்தஸ்து அடையாளமாக கருதப்படும் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் மற்றும் மாற்று எரிசக்தி போன்றவற்றை கருத்தில் கொண்டு தற்போது பயன்பாட்டில் […]
திருப்பத்தூரில் வக்ஃபு நிறுவனப் பணியாளா்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட பின்,வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு புதிய இருசக்கர வாகனங்களை வாங்குவதற்கான மானியம் வழங்கும் திட்டமானது செயல்பட்டு வருகிறது. எனவே இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் இருந்து 50% தொகை மானியமாக வழங்கப்படும். அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வஃக்பு நிறுவன பணியாளர்களுக்கு மானிய […]
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்போது அத்திட்டத்தில் சிறிய மாற்றம் கொண்டு வர இருப்பதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியான நபர்களுக்கு மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூபாய் 25,000 க்கு குறைவாக அந்த இருசக்கர வாகனத்தை வாங்க முடியும். ஆகவே தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தற்போது இரு சக்கர […]
காய்கறி வியாபாரி ஒருவர் ரூ.22,000 மதிப்பிலான நாணயங்களை சேமித்து வைத்து இரு சக்கர வாகனம் வாங்கி உள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப அசாம் மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்த காய்கறி வியாபாரியான ஹஃபிஸுர் அகந்த் என்பவர் ஒரு வருடத்திற்கும் மேலாக தான் சேமித்து வைத்த ரூ.22,000 மதிப்பிலான நாணயங்களை கொடுத்து இருசக்கர வாகனம் ஒன்று வாங்கி உள்ளார். மேலும் இது குறித்து ஹஃபிஸுர் அகந்த், அதிகமான […]
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் பெண்கள் உள்பட 3 பேர் காயமடைந்த நிலையில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் சதீஷ்குமார் (29) என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் தனது சகோதரர் தனபாலன்(25) மற்றும் பெரியம்மா பஞ்சவர்ணம்(35) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் மேலமடை பகுதியில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இருசக்கர வாகனத்தை […]
இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள வந்தலைக்கூடலூரில் ஜோசப்- ஆர்க்னஸ் மேரி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்த நிலையில் ஜோசப் தன் இருசக்கர வாகனத்தில் அவரது மனைவியை அழைத்துக்கொண்டு சமயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று உள்ளார். அப்போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி […]
இந்தியாவில் மாவட்டங்கள் மற்றும் வாகனத்தின் வகைகளின் அடிப்படையில் பதிவெண்கள் வழங்கப்படுகிறது. அந்தவகையில் வெள்ளை நிற நம்பர் பிளேட்டுகளில் கருப்பு நிறத்தில் எண்கள் பதியப்பட்டால், அது தனிநபரின் வாகனம் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் டெல்லியிலும் வாகனங்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு டெல்லியில் வழங்கப்படும் இருசக்கர வாகனங்களின் முதலில்DL எனும் இரண்டு எழுத்துக்கள் டெல்லி மாநிலத்தை குறிக்கிறது. பின்னர் வரும் இரண்டு எண்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்டத்தில் குறிக்கும். அதன் பின்னர் வரும் எழுத்துக்களில் C என்பது […]
சீனாவில் வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் ஓட்டி சென்றவர் மீது மோதிய விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தில் ஷெங் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சிக்னலில் ஒளிர்ந்து கொண்டிருந்த சிவப்பு விளக்கையும் மீறி ஷெங் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பக்கவாட்டு திசையில் வேகமாக வந்த லாரி ஒன்று ஷெங் மீது மோதியது. இதனால் ஷெங் லாரியின் சக்கரங்களில் உரசியபடி அதிர்ஷ்டவசமாக […]
இருசக்கரம் வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் போடாமல் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் போட்டு செல்ல வேண்டும் என்று அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை சார்பாக மக்களிடத்தில் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் ஹெல்மெட் போடாமல் அலட்சியமாக இருப்பதால் சாலை விபத்துகளில் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஈரோட்டில் அதன் உரிமையாளர்களிடம் காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். ஆனாலும் இந்த மாவட்டத்தில் 75 சதவீதம் பேர் […]
கனடா நாட்டில் 14 வயது சிறுமி இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்ற போது விபத்து ஏற்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள Grande Prairie என்ற நகரின் அருகில் 14 வயதுடைய சிறுமி மாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் எதிர்பாராமல் நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிறுமி பரிதாபமாக பலியானார். இந்த விபத்தில் வேறு எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, விபத்தில் சிக்கிய சிறுமியின் பெயர் […]
இன்று தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய தமிழக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், தமிழக அரசு மகளிருக்கு வழங்கும் இருசக்கர வாகன உதவித் தொகை நிறுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கூறிய அறிவிப்பு உழைக்கும் பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் வாகன உதவி என்பதற்கு மேல் யாரையும் எதிர்பாராமல், சார்ந்திராமல் வாழ பழகும் பெண்கள் முன்னேற்றத்தின் இயற்கையாக பாருங்கள். எனவே […]
அமெரிக்க நாட்டில் லிசா பேன்ஸ் என்ற பிரபலமான நடிகை மீது இருசக்கர வாகனத்தை மோதி கொன்று விட்டு தப்பிச்சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். அமெரிக்காவை சேர்ந்த நடிகை லிசா பேன்ஸ்(65), ஹாலிவுட்டில் Cocktail, Gone Girl போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது வரை 80 க்கும் அதிகமான படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்திருக்கிறார். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வசித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 4 ஆம் தேதி அன்று […]
வக்பு நிறுவனங்களில் வேலை பார்க்கும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் ரூபாய் மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் வேலை பார்க்கும் உலமாக்கள் தங்களின் பணிகளை செம்மையாகவும், சிறப்பாகவும், சமயப்பணி ஆற்றுவதற்கும் புதிய இருசக்கர வாகனம் வாங்குவதற்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அந்த தொகை கொடுத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி […]
சரக்கு வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி சிவன் கோவில் நந்தவனம் தெருவில் மீனா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் தனது உறவினரான பராசக்தி காலனியைச் சேர்ந்த ஈஸ்வரியும் இருசக்கர வாகனத்தில் பழைய விருதுநகர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வாகனத்தை மீனா ஓட்டி வந்தார். இதனையடுத்து பின்தொடர்ந்து வந்த சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் ஈஸ்வரி படுகாயமடைந்து சம்பவ […]
ராமநாதபுரத்தில் 9,000 மீட்டர் மின் கம்பியை திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள செங்கப்படை கிராமத்தில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இந்த மின் நிலையத்தில் இருந்து பல கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுவதற்காக மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிலாங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைத்திருந்த 9,000 மீட்டர் அளவுள்ள மின்கம்பி திருடுபோய் உள்ளது. இச்சம்பவம் குறித்து […]
மின்சார கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாறைமேடு பகுதியில் கட்டிட மேஸ்திரியான கஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் வாலாஜா பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கஜேந்திரன் கலந்து கொண்டுள்ளார். அதன் பின்னர் திருமண விழா முடிந்தவுடன் கஜேந்திரன் பாறைமேடுக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து மேல்வேலம் பகுதியில் செல்லும் போது கஜேந்திரன் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் சாலையோரம் இருக்கும் மின்சார […]
இரு சக்கர வாகனம் மோதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவர் துறையூர் செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். இந்நிலையில் மங்கூன் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் செல்வத்தின் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டது. இதனால் வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கார்த்திக் புதுக்கோட்டைக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். இதனை அடுத்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் மது போதையில் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். அதன்பின் புதுப்பட்டி செட்டி ஊரணிகரை அருகே சென்று கொண்டிருந்தபோது கார்த்திக் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து தாக்கிய 2பேரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வள்ளல் பரி பகுதியில் விஜய மாடசாமி(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கைவினைத் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனம் மூலம் வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து வசந்தநகர் பகுதியில் வழியாக சென்றுகொண்டிருந்த போது இருவர் மாடசாமியை வழிமறித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் வைத்திருந்த 30,000 ரூபாயை பறித்ததோடு […]
நாமக்கல் மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மது பாட்டில்களை கடத்தி வந்த 2மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையில் காவல்துறையினர் சாமுண்டி தியேட்டர் அருகே மது விலக்கு தொடர்பாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த இளைஞன் போலீசாரை கண்டதும் வாகனத்தை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். இதனை தொடர்ந்து […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கீழ்குடி கிராமத்தில் நூருதுஅம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது உறவினர் ராஜசேகரன்(33) என்பவருடன் டி.எம்.கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மூதாட்டியின் சேலை எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் சிக்கியுள்ளது. இதனையடுத்து மூதாட்டி தவறி கீழே விழுந்துள்ளார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் […]
கர்நாடக மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தில் லிங்காசுகூர் என்ற பகுதி அருகே கார் மற்றும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாகாக்லோட் என்ற பகுதியிலிருந்து பசவராஜ் என்பவர் தனது மனைவியின் தங்கை மற்றும் மகன் ஷரத் ஆகியோருடன் லிங்காசுகூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் […]
நாமக்கல் மாவட்டத்தில் ஹோட்டல் உரிமையாளர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ஞானபிரகாஷ்(55) என்பவர் திருச்செங்கோடு சந்தைப்பேட்டை மேடு பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் திருச்செங்கோடு ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவராக இருந்து வருகின்றார். இந்நிலையில் ஞானபிரகாஷ் ஈரோடு சாலையில் உள்ள வேளாண் காலனி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் வேகத்தடையில் ஏறும்போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து தலையில் பலத்த காயமடைந்த ஞானப்பிரகாச […]
விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கரவாகனத்தை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் அழகு ராஜா(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இரு சக்கர வாகனத்தை அருகிலுள்ள மல்லி கிட்டங்கி தெருவில் நிறுத்தி வைத்து கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவர் திரும்பி வந்து பார்க்கையில் இருசக்கர வாகனம் அங்கு இல்லை. இதனைதொடர்ந்து அழகுராஜாவின் இரு சக்கர வாகனத்தை கே.கே.எஸ்.எஸ்.எம் அழகர் மற்றும் சதீஷ்குமார் எடுத்தது தெரியவந்துள்ளது. […]
விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தொழிலதிபர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனி அருகில் உள்ள காந்தி நகரில் முருகன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பிரபாகரன்(36). இவர்கள் சொந்தமாக தொழில் நிறுவனம் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை சாலையில் உள்ள இவர்களது தொழில் நிறுவனத்திற்கு முருகன் மற்றும் அவரது மகன் இருசக்கர வாகனத்தில் தனித்தனியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த லாரி […]
ஆந்திரா மாநிலத்தில் கொரோனா பாதித்த மாமனாரை மருமகன் இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது வழியிலேயே அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் நோயாளிகளை அழைத்து செல்வதற்கு […]
திருவள்ளூரில் , கும்மிடிப்பூண்டி பகுதியில் மின் கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி, கொத்தனார் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ,கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மங்கலம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் 34 வயதுடைய தங்கராஜ் . இவர் அந்தப் பகுதியில் ஆத்துமேடு கிராமத்தில் வசித்து வந்துள்ளார். கொத்தனாராக பணியாற்றும் இவர், நேற்று மங்கலத்தில் இருந்து ஆத்துமேடு கிராமத்திற்கு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோரத்தில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒர்க் ஷாப் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் தீ பிடித்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கழுகு மலை அண்ணா புது தெருவில் சிங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருடைய மகன் ஆனந்த்(27) ஒரு ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இவர் கடந்த செவ்வாய் கிழமை அன்று மலையில் பழங்கோட்டை ரோட்டில் உள்ள தனது ஒர்க் ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஆனந்த் தனது நண்பரை பார்ப்பதற்காக கரடிகுளம் […]
ஆந்திராவில் உயிரிழந்த தாயை இருசக்கரத்தில் வைத்து கொண்டு சென்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சிகாகுளம் பகுதியில் மஞ்சுளா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உடல்நலம் சரி இல்லாததால் அவரது மகன் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து மஞ்சுளா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மஞ்சுளாவின் உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால் கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் ஓட்டுநர்கள் […]
இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் போதே கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013இல் பஸ் மோதிய விபத்தில் பெண் பல் மருத்துவர் 90% ஏற்பட்டதில் கூடுதல் இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரபாகரன் அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் […]
இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தவரை மர்ம நபர் இருவர் சரமாரியாக தாக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் ஹரிஷ். இவர் நள்ளிரவு திரைப்படம் பார்த்துவிட்டு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்று கொண்டிருந்த ஒருவர் ஹரிஷிடம் தமக்கு யாரும் உதவவில்லை. நீங்களாவது கொஞ்சம் லிஃப்ட் தாங்களேன் என்று கேட்டுள்ளார். அதனை ஏற்றுக்கொண்டு ஹரிஷ் அவர் சொன்ன இடத்திற்கு தமது […]
இருசக்கர வாகனத்தில் இருந்து விஷப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் சாமர்த்தியமாக பிடித்துள்ளனர். கரூர் மாவட்டம் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த செல்வநாயகம் என்பவரின் மகன் வேலை நிமிர்த்தமாக கரூர் நகர கடைவீதி, காமராஜர் சிலை பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் வாகனத்தில் ஏதோ நெளிவது போல் இருந்தது. வண்டியிலிருந்து இறங்கி தன் வாகனத்தில் சோதனை செய்த போது ஒரு பாம்பு சுற்றி இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தீயணைப்பு வீரர் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை திருட முயற்சி செய்த 2 மர்ம நபர்களுக்கு அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் என்பவர். மளிகை கடை வைத்து நடத்தி வரும் இவர் தன் இரு சக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். தனியாக நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் 2 பேர் திருட முயற்சி செய்தனர். […]
அம்மா இரு சக்கர வாகனம் வாங்க பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது, “குமரி மாவட்டத்தில் வசிக்கும் பெண்கள் அனைவரும் பணிபுரியும் இடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் சென்று வருவதற்கு ஏற்ற வகையில் இருசக்கர வாகனம் வாங்க அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் இந்த வருடம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களில் பணியாற்றும் மகளிர்கள், கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் […]
மதுரையில் உள்ள திடீர் நகரில் நள்ளிரவில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கும் கும்பலை கைது செய்ய கோரி வாகன உரிமையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். திடீர் நகரில் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை அப்பகுதியில் உள்ள ரவுடிகள் அடித்து நொறுக்கி உள்ளனர். ரவுடிகள் அங்கு வந்து செல்லும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. ரவுடி கும்பலை கைது செய்யக்கோரி பெரியார் பேருந்து நிலையம் அருகே வாகன உரிமையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது […]
புதுச்சேரியில் நள்ளிரவில் இரண்டு இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் கங்காதரர். இவர் வீடு முன்பு கார் நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் கார் திடீரென நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தது. இது தொடர்பாக பெரியகடை காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்து பார்த்த போது கார் மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் எரிந்து இருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து பெரியகடை காவல்துறையினர் வழக்குப் […]
செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் இருசக்கர வாகனங்களில் படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நேற்றே தென் மாவட்டங்களுக்கு படையெடுத்து எடுத்து சென்று உள்ளனர். கார், வேன், லாரி மூலமாக தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடுதலாக செலவு செய்வதைவிட இருசக்கர வாகனத்திலேயே குடும்பத்துடன் பயணிக்க பொதுமக்கள் முன் வந்துள்ளனர். ஒரு மணி நேரத்தில் சுமார் பத்தாயிரம் இருசக்கர வாகனங்கள் பரனூர் சுங்கச்சாவடியை […]
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 25-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் 500-டிற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில் பல வாகனங்கள் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்திருப்பதாக காவல் நிலைய அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில் மார்த்தாண்டம் காவல்துறை ஆய்வாளர் ஆதிலிங்கம் போஸ், உதவி ஆய்வாளர் […]
விருதுநகரில் மார்க்சஸ் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாத்திமா நகரை சேர்ந்த முருகன் என்பவர் மார்க்சஸ் கம்யூனிஸ்ட் நகர செயலாளராக உள்ளார். வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த முருகனின் இருசக்கர வாகனத்தில் அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர். சத்தம் கேட்டு வெளியே வந்த அவர் வாகனம் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தீ அணைக்கப்பட்டது. […]
கந்து வட்டி மற்றும் ஆறு லட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு ள்ள காசி மீது நாகர்கோவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது பெண் மருத்துவர் உட்பட தமிழகம் முழுவதும் சமூக வலைத்தளங்கள் மூலமாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி, பாலியல் வன்முறை செய்ததோடு அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கன்னியாகுமரியைச் சேர்ந்த காசி என்பவர் கைது செய்யப்பட்டு, […]
கோவை திருச்சி சாலையில் அதி வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஊரடங்கினால் சாலையில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் நிலையில் கோவை திருச்சி சாலையில் கார் ஒன்றை இளைஞர் அதி வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அதி வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் […]