இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சீக்கராஜபுரம் பகுதியில் மணிகண்டன் மற்றும் சரவணன் என்ற 2 நபர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் சீக்கராஜபுரத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் திருவலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருவலம் சாலையில் இருந்து ஐயப்பன் என்பவர் சீக்கராஜபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் திருவலம் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது […]
Tag: இருவர் உயிரிழப்பு
தென்கொரியாவில் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்திய நபர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பரவி பல்வேறு நாடுகளை கதி கலங்க செய்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இருவர் தென்கொரியாவில் உயிரிழந்துள்ளனர். மேலும் இவர்கள் வேறு நோய்களால் ஏற்கனவே பாதிப்படைந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனரான Jeong Eun-Kyeong என்பவர் கூறியதாவது, cerebrovascular என்ற நோயால் நர்சிங் ஹோமில் […]
கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள ஆலாந்துறை பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவிகுமார். இவர் ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இவருடைய உறவினர் அனந்தராமன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று இரவு உறவினர் ஒருவரை செல்லூரில் உள்ள அவரது வீட்டில் விட்டு விட்டு காரில் திரும்பியுள்ளனர். அப்போது சிறுவாணி சாலையில் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் புது மாப்பிளை உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் விஜய பிரபாகரன்(26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்டின் வனஜா மேரி என்ற பெண்ணிற்கும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விஜயபிரபாகரன் அவருடைய உறவினர்கள் லியோ அமல ஜோசப் மற்றும் லாரன்ஸ் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் மாரியாயிபாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்- நிலக்கோட்டை சாலையில் […]
கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் மீது மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் அதே பகுதியில் வசிக்கும் அமிர்தவல்லி , விக்னேஸ்வரன், தனம், சசிகலா தேவி, சக்தி சுந்தரம், ஆகியோருடன் ஒரு காரில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று காலையில் அனைவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். காளிமுத்து காரை ஓட்டியுள்ளார். இன்று காலை 8.30 மணி அளவில் கடலூர் மாவட்டத்தில் […]
கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்புறத்தில் இடித்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர்கள் கோகுல் மற்றும் யோகராஜ். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் விடுமுறையை ஒட்டி பெங்களூருவில் உள்ள நண்பர்களை பார்க்க சென்றுள்ளனர். பின்னர் அன்றைய தினம் இரவில் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 12 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது கார் திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது .மேலும் முன்னால் […]
இரண்டு மோட்டர் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொழப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்திவர்மன். இவர் ஓய்வு பெற்ற அலுவலராக உள்ளார். நந்திவர்மன் தற்பொழுது சேத்துப்பட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று காலையில் நந்திவர்மன் சேத்துப்பட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நிர்மலா நகரைச் சேர்ந்தவர்கள் ராஜா, ரேணு,மஞ்சுளா. இவர்கள் மூவரும் மரம் வெட்டும் தொழிலாளர்களாக உள்ளனர். நேற்று […]
சாமி தரிசனத்திற்காக சென்ற இடத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யோக நரசிம்மர் கோவில் இருக்கிறது.இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் வேனில் வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் யோக ஆஞ்சநேயர் எழுந்தருளியிருக்கும் சின்ன மலை அடிவாரத்தில் உள்ள பாண்டவர் இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தீர்த்த குளியல் செய்துள்ளனர். […]
தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் அங்கு நடைபெற்ற சாலை பணியை செய்வதற்காக வேனில் சென்றுள்ளனர் . அப்போது வேன் தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள சாலையின் பிரிவில் சென்று கொண்டிருந்தது . திடீரென குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் வண்டியை நிறுத்த முயற்சி செய்துள்ளார். […]