தஞ்சை மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணைமேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மண்டலக்குழு தலைவர் ரம்யாசரவணன் (தி.மு.க.) பேசியது, அண்ணாநகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு இயற்பியல் ஆய்வுக்கூடம், கூடுதல் வகுப்பறை கட்டிடம், தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்புகளும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகட்டிடமும் கட்ட நிதி ஒதுக்கிய மேயர், துணை மேயர், ஆணையருக்கு […]
Tag: இரு சக்கர வாகனம்
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனை கருதி தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், இருசக்கர […]
அம்மா இருசக்கர வாகனத்திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலில் இருந்து வருகிறது. இதன் மூலம் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் நீங்கள் வாங்கும் வாகனத்திற்கு 50% அல்லது ரூ.25,000/- தொகை வழங்கப்படும். உதாரணத்திற்கு ரூ.75,000/- இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு அம்மா வாகன திட்டத்தில் ரூ. 25,000/- மானியம் கொடுக்கப்படும். ரூ.50,000/-ற்குள் வாகனம் பெறுபவர்களுக்கு அதில் 50% மானியம் வழங்கப்படும். எப்படி விண்ணப்பிக்கவேண்டும்: இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க […]
சேத்தூர் அருகே இருசக்கர வாகனங்களை திருடிய நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் பகுதியில் உள்ள சேத்தூர் என்னும் இடத்தை சேர்ந்தவர் முத்துசாமி. சொக்கநாதன்புத்தூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர்கள் இருவருக்கும் சொந்தமான இரண்டு சக்கர வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காணாமல் போனது. இதனையடுத்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் இதுபற்றி அவர்கள் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கந்தசாமி, பாலமுருகன் அருண், குமார் […]