ரியோ ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் மற்றும் இத்தாலி பேபியோ போக்னினி ஆகியோர் மோதினார். இதில் 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற கார்லோஸ் அல்கராஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனிடையே இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவை சேர்ந்த டியகோ ஸ்கெவெர்ட்ஸ்மேனுடன் ,கார்லோஸ் அல்கராஸ் இருவரும் மோதுகின்றன .
Tag: இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில்இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார் . 26-வது உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயினில் வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது .இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 16-வது இடத்திலுள்ள இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ,சக நாட்டவரான 19-வது இடத்தில் இருக்கும் லக்ஷயா சென்னை எதிர்த்து மோதினார். இதில் முதல் செட்டை இழந்த ஸ்ரீகாந்த் அடுத்து 2-வது மற்றும் 3-வது செட்டை கைப்பற்றினார். இறுதியாக […]
உலக இறுதிச்சுற்று பேட்மிட்டண் போட்டியில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். உலக இறுதிச்சுற்று பேட்மிட்டண் போட்டி இந்தோனேசியாவில் உள்ள பாலி நகரில் நடைபெற்று வருகிறது இதில் ‘குரூப் ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து லீக் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார் .இதில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சேர்ந்த போன்பவி சோச்சுவாங்கிடம் , சிந்து தோல்வியடைந்தார். இதனால் ‘குரூப் […]
ஆஸ்ட்ராவா ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்ற சானியா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்ட்ராவா ஓபன் டென்னிஸ் போட்டி செக்குடியரசில் நடைபெற்று வருகிறது .இதில் மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா- சீன வீராங்கனை சூவாய் ஜாங் ஜோடி , ஜப்பானின் ஹோஜூமி-நினோமியா ஜோடியை எதிர்கொண்டது . இதில் சானியா ஜோடி 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் . கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரை இறுதி ஆட்டத்தில் செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், ஜெர்மனியை சேர்ந்த ஸ்வரேவ் ஆகியோர் மோதினர் . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே போட்டி பரபரப்பாக நடைபெற்றது . இதில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்க்கு, […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற மெட்வதேவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெட்வதேவ், கனடாவை சேர்ந்த பெலிக்ஸ் அஜெர் அலியாசிசை எதிர்கொண்டார். இதில் 6-4, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற […]
டோக்கியோ பாராஒலிம்பிக்கில் பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் . 16-வது பாரா ஒலிம்பிக் போட்டியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் . இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்த போட்டி அரையிறுதி சுற்றில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் அரையிறுதி சுற்றில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா, கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சன்யேவை எதிர்கொண்டார் . இதில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி ரவிக்குமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.
விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இத்தாலிய வீரராக மேட்டியோ பெரெட்டினி சாதனை படைத்தார் . விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும் , ‘ நம்பர் 1’ வீரருமான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச், கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவுடன் மோதினார் . இதில் 7-6, 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து […]
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் டென்மார்கை வீழ்த்தி இங்கிலாந்துஅணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் லண்டனில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலி அணி ஸ்பெயின் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – டென்மார்க் அணிகள் மோதிக்கொண்டது. தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் அதிரடி ஆட்டத்தை காட்டியதால் […]
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி , ஸ்பெயின் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது . 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி(யூரோ)விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்திய நேரப்படி லண்டனில் இன்று அதிகாலையில் நடந்த அரையிறுதி சுற்றில் தரவரிசை பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கும் இத்தாலியும், 6-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியும் மோதிக்கொண்டது. இதில் போட்டியின் தொடக்கத்திலிருந்தே விறுவிறுப்பாக நடந்த முதல் பாதியில் ஆட்டத்தில் இரு அணிகளும் […]