இந்திய முழுவதும் ஆகஸ்ட் 31ம் நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் முழுமையாக இறைச்சி விற்க மற்றும் இறைச்சிக்காக ஆடு கோழி போன்றவற்றை வெட்டத் தடை விதித்து பெங்களூரு பெருநகரக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தடை பெங்களூர் பெருநகரக் கழகத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நாளன்றும் இதேபோன்று அங்கு இறைச்சி விற்பனை மற்றும் இறைச்சிக்காக விலங்குகளை வெட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tag: இறைச்சி கடைகள்
கடந்த வாரம் கேரள மாநிலத்தில் சவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து தஞ்சையில் சவர்மா சாப்பிட்ட 3 மாணவிகள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஷவர்மா உணவு கடைகள் சோதனையிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் சவர்மா உள்ளிட்ட இறைச்சி கடைகளை விற்பனை செய்யும் கடைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. அதன்படி சமைக்காத இறைச்சியை 18 […]
காந்தியடிகள் அமரத்துவ தினத்தை முன்னிட்டு மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசாணையின்படி மகாத்மா காந்தியடிகள் அமரத்துவ தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையான இன்று மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சிகள் விற்பனை செய்யக்கூடாது. மேற்கண்ட கடைகளை திறந்து வைக்கவும் கூடாது. அதனை மீறி […]
ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட “ஒமிக்ரான்” தொற்று உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக […]
உரிமம் இல்லாத இறைச்சிக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம், பனகல் கிராமத்தில் முகமது அலி என்பவர் உரிமம் இல்லாமல் இறைச்சிக்கடையில் ஆடு, கோழி வெட்ட படுவதாக அந்த கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். விலங்குகள் வெட்டப்படுவதை முறைப்படுத்தும் விதிமுறைகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த எஸ் […]
தமிழகம் முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தீபாவளியன்று தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகளைத் திறக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து தமிழ்நாடு அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் ஜெயின் மத வழிபாட்டுத் தலங்களை சுற்றியுள்ள இறைச்சி கடைகள் தீபாவளியன்று மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் கொரோணா பரவல் மற்றும் காற்று மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் நவம்பர் 4ஆம் தேதி மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கடைகளுக்கும் இயங்க தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மண்டல அலுவலர்களும் […]
மதுரையின் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி எச்சரித்துள்ளது. அதன்படி அனுமதிக்கப்படாத இடங்களில் ஆடு, மாடு வதை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தெருக்களில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு […]
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் அரசு அறிவித்துள்ள தடை உத்தரவை மீறி வியாபாரிகள் இறைச்சி கடைகளை திறந்தனர். அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கும், தினமும் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் சனிக்கிழமையில் இறைச்சி கடைகளில் கூட்டமாக குவிந்தனர். அதனை தொடர்ந்து இறைச்சி கடைகள் சனிக்கிழமை அன்று செயல்பட அரசு தடைவிதித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை, சிவகங்கை, […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
இறந்த பறவைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பறவைகளின் இறைச்சியை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக் கூடாது என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வகுத்து சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர ஆணையாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “இறைச்சிக் கடைகளில் ஒரே நேரத்தில் 3-க்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென இறக்கும் பட்சத்தில் உடனடியாக கோட்ட சுகாதார ஆய்வாளருக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கடைகளில் […]
வருகிற 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாட உள்ள நிலையில் அன்று இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மாநகராட்சி கமிஷனர் ஜி. பிரகாஷ் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பது பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் இறைச்சி கூடங்கள், இறைச்சிக் கடைகள் அனைத்தும் வரும் 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட இருப்பதால் அரசு உத்தரவின்படி மூடப்பட வேண்டும். ஆடு மாடு மற்றும் இதர […]
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடங்களில் அனைத்து கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வருகின்ற 15ஆம் தேதி சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடங்களில் அனைத்து இறைச்சி கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதனை மீறி இறைச்சி கடைகளை திறக்க அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இறைச்சி பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதனால் சென்னை மக்கள் 15ஆம் தேதி இறைச்சி சாப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளது. […]
சேலம் அருகே இறைச்சி, மீன்கள், வாங்குவதற்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைகளில் மக்கள் வாங்குவதற்கு திரண்டனர். வேகமாக பரவி வரும் கோரனோவை கட்டுப்படுத்துவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொது மக்கள் சமூக இடைவெளி விட்டு நின்று பொருட்கள் வாங்கி செல்லுங்கள் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அதனால் கொரோனா வைரஸ் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் இயங்கும் இறைச்சி மற்றும் […]