இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில்விளையாடுகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 3ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் டி20 தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழி நடத்துவார் என்றும், ஒருநாள் தொடரில் இந்திய […]
Tag: இலங்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கடத்தப்படுகிறது. அந்த வகையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் பீடிஇலை கடத்தலும் அதிகரித்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி அருகே அமைந்துள்ள வேம்பார் கடலோர எல்லைக்குட்பட்ட பெரியசாமிபுரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சுப்பிரண்டு பிரதாபன் உத்தரவின் பெயரில் காவல் படை போலீஸ் […]
இலங்கையில் பல மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக உலக நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளும் உதவி வருகிறது. அதிலும் குறிப்பாக விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் சிக்கித் தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ஐ.நா போன்ற அமைப்புகள் நேரடியாக உதவிகளை வழங்குகிறது. ஐ.நா-வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பாக 47 ஆயிரத்து 69 விவசாய குழு குடும்பங்களுக்கு ஏற்கனவே 2300 டன் உரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து பின் […]
இலங்கை மந்திரி நிமல் சிறிபால டி சில்வா இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இந்த கப்பல் சேவையானது புத்தகயா செல்லும் யாத்திரீகர்களுக்கும் வர்த்தக பயணங்களை மேற்கொள்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். இது குறித்து கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வருகிற ஜனவர் மாத மத்தியில் இருந்து இந்த திட்டத்தின் முதற்கட்டமாக இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கும், பாண்டிச்சேரிக்கும் இடையான கப்பல் […]
இலங்கையின் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் பிற ஆராய்ச்சி மையங்கள் இணைந்து அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திடீரென அதிகரித்த கால்நடைகள் உயிரிழப்பு குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வில் கடந்த 12-ஆம் தேதி மட்டும் 1,660 -க்கும் மேற்பட்ட ஆடு, மாடு மற்றும் எருமைகள் இறந்துள்ளதாக வேளாண்மை அமைச்சகத்தின் கால்நடை பிரிவு கூறியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஆடு, மாடு உயிரிழப்பிற்கு தற்போது நிலவி வரும் அசாதார வானிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் […]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 300க்கும் அதிகமான விசை படகுகளுடன் கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி அன்று மீன் பிடிப்பதற்காக சென்றிருக்கிறார்கள். இலங்கை கடற்படையினர் அந்த சமயத்தில் சோதனை பணியை மேற்கொண்டிருந்த நிலையில், எல்லையைத் தாண்டி சென்றதாக கூறி ஐந்து விசை படகுகளை கைப்பற்றியதோடு, மீனவர்கள் 24 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். […]
கடந்த 5-ம் தேதி வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை புயலாகவும் வலுவடைந்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்ற நிலையில் இரவில் தீவிர புயலாக மாறியது. புயல் கரையை கடந்த நிலையில் 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி உள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் எதிரொலியாக கொழும்பு மற்றும் பல்வேறு நகரங்களில் வானம் […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அந்த நாட்டின் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசி, கொரோனா நெகடிவ் சான்றிதழ் போன்றவற்றை சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இது குறித்து இலங்கை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா கட்டுப்பாடுகளை அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை வந்த பின் ஒருவேளை அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் தனியார் மருத்துவமனை, ஹோட்டல் அல்லது […]
இலங்கை நாட்டில் பால் பொருட்களுக்கு இறக்குமதியை தவிர்த்து விட்டு உள்நாட்டிலேயே பால் தொழில் வளம் மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட பட்டுள்ளது. இதற்காக இலங்கை நாட்டுக்கு இந்தியா தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது. இது தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் நடைபெற்ற நிலையில், இந்தியா சார்பில் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் அமுல் பால் பொருட்களை விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் சங்கத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். இவர்களுடன் இணைந்து பால் உற்பத்தியை […]
கடந்த 2019 -ஆம் வருடம் ஏப்ரல் மாதம் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளில் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டினர் உட்பட 265 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இலங்கையின் மட்ட குளியா என்னும் நகரை சேர்ந்த முகமது பதுர்தீன் முகமது ஹர்னாஸ்(38) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பதுர்தீனை நேற்று முன்தினம் தனது […]
இலங்கையில் விமானிகள் தங்களது பணியை ராஜினாமா செய்து வருவது அரசுக்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது. இலங்கையில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் வேலையை இழந்துள்ளனர். மேலும் வேலையில் இருப்பவர்களுக்கும் குறைவான ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்சில் பணியாற்றி வரும் விமானிகளுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் குறைந்த ஊதியம், வருமான வரி உயர்வு ,டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பிரச்சனைகளால் விமானிகள் […]
இலங்கையில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தின் வெளியில் மும்பை தாக்குதலை குறிப்பிட்டு தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மும்பையில் கடந்த 2008 ஆம் வருடம் நவம்பர் 26 ஆம் தேதி அன்று தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் நாட்டில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை மேற்கொண்டனர். அந்த தாக்குதலில் வெளிநாட்டை சேர்ந்த சிலர் உட்பட 166 பேர் பலியாகினர். தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதிகள் 9 பேரை பாதுகாப்பு படையினர் […]
இலங்கையில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக மந்திரி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இலங்கையில் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு போன்ற பொருளாதார நெருக்கடியை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்கிய பின் நிலைமை ஓரளவு சீரடைந்த போதும் அதிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. இந்நிலையில் இலங்கையில் நீதி, சிறை விவகாரம் மற்றும் […]
சுதந்திரா கட்சி இலங்கை மந்திரிகள் இரண்டு பேரை இடைநீக்கம் செய்துள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே தலைமையிலான ஆட்சியில் நிமல் சிறிபாலா டி சில்வா என்பவர் சிவில் விமான போக்குவரத்து மந்திரியாகவும், மகிந்த அமர வீரா என்பவர் வேளாண் மந்திரியாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர்கள். இந்நிலையில் மேற்கூரிய மந்திரிகளையும், அதே கட்சியில் உள்ள 3 இளநிலை மந்திரிகளும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுவதாக மத்திய குழு கூட்டத்தில் முடிவு […]
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கச்சிமடத்தின் மீனவர்கள் 15 பேர் இரண்டு விசை படகுகளுடன் கடந்த ஐந்தாம் தேதி அன்று மீன்பிடிப்பதற்காக சென்றிருக்கிறார்கள். எல்லையை தாண்டி சென்றதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை, கடந்த ஏழாம் தேதி அன்று மன்னாரில் இருக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி 17ஆம் தேதி வரை அவர்களை சிறையில் வைத்திருக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். அதன் பிறகு அவர்களை வவுனியா சிறையில் அடைத்தனர். இன்று […]
ஐ.நா. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 1948-ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது. அன்று முதல் தற்போது வரை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன், பணவீக்கம், மின் தடைகள் போன்ற பிரச்சினைகளையும் சமாளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விலையேற்றம், உணவு மற்றும் மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதன் விளைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தற்போது இலங்கையில் உணவு பற்றாக்குறை […]
இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அரையிறுதிக்கு சென்றுள்ளது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று குரூப் 1 பிரிவின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னி மைதானத்தில் மோதியது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என 5 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லும். […]
இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று குரூப் 1 பிரிவின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னி மைதானத்தில் மோதியது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என 5 புள்ளிகள் பெற்று உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு […]
சூப்பர் 12 கடைசி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இலங்கை டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று குரூப் 1 பிரிவின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னி மைதானத்தில் மோதி வருகிறது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என 5 புள்ளிகள் பெற்று உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி […]
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இலங்கை காங்கிரஸ் கட்சியின் தலைவரான செந்தில் தொண்டமான் கடிதம் எழுதினார். தமிழ்நாட்டு முதலமைச்சரான மு. க. ஸ்டாலினுக்கு இலங்கை நாட்டை சேர்ந்த தொழிலாளர் காங்கிரஸ் தலைவரான செந்தில் தொண்டைமான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அந்தக் கடிதத்தில் அவர் கூறியதாவது, “தமிழக தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் இலங்கையிலிருந்து வந்த மலையக மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அங்கு அரசு நிறுவனங்கள் பல கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. அந்த வகையில் அரசுக்கு சொந்தமாக செயல்பட்டு வரும் விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடும் நஷ்டத்தில் தடுமாறி வருகின்றது. இதன் காரணமாக அதன் பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த சூழலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை தேர்ந்தெடுக்கப்பட்ட முதலில் முதலீடாளர்களிடம் விற்று உரிமையை கைமாற்றுவதற்கான நடவடிக்கை தொடங்க அதிபர் […]
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்களை இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுவிக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழ் நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை படையினரால் கைது செய்யப்படுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருக்கிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் மூன்று பேர் கடந்த 20ஆம் தேதி அன்று மீன்பிடிக்க சென்றுள்ளனர். எல்லையை தாண்டி சென்று மீன் பிடித்தார்கள் என்று இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது. அதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருக்கும் சிறையில் அடைத்து விட்டனர். […]
ரஷ்ய அதிபர் புதினை பொறுப்பில் இருந்து நீக்குவது பற்றி தீவிர விவாதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரஷ்ய மூத்த அதிகாரிகள் புதினை அதிபர் பொறுப்பில் இருந்து மாற்றுவது பற்றி தீவிரமாக விவாதம் மேற்கொண்டு வருவதாக உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தலைவர் தகவல் தெரிவித்திருக்கிறார். உக்ரைன் போர் முடிவதற்கு உள்ளாகவே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக உக்ரைன் மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் கூறியதாக பத்திரிகைகள் தெரிவித்துள்ளது. மேலும் புதினை ஆட்சியில் இருந்து நீக்குவது பற்றி ஏற்கனவே விவாதங்கள் […]
இலங்கை தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் அணில் விக்ரமசிங்கே உறுதி அளித்துள்ளார். இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்து வரும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. கொழும்பு போய் சேர்ந்த மருந்து பொருட்களை இலங்கை அதிபர் அணில் விக்ரமசிங்கே பெற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரணில் விக்ரமசிங்கே இலங்கை மலையக தமிழர்கள் சிலர் […]
ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். இந்நிலையில் இன்று குரூப் 1 பிரிவிலுள்ள […]
இலங்கையில் வாழும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள மலைப்பகுதிகளில் ஏராளமான தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மருந்து பொருட்கள் நேற்று கொழும்பு போய்ச் சேர்ந்தது. அவற்றை அதிபர் ரணில் விக்ரமசிங் பெற்றுக் கொண்டார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை இலங்கை சமூகத்துடன் மேலும் சிறப்பாக இணைப்பது குறித்து ஆராய ஒரு […]
டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸ் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் ‘மன்கட்’ விக்கெட்டை தவிர்க்க வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் உள்ள நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆன […]
சூப்பர் 12 சுற்றில் இலங்கையை 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் 1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.. இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் […]
இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 167 ரன்கள் குவித்தது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் 1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.. இரு பிரிவிலும் முதல் 2 […]
இலங்கை மந்திரியான டயானா கேமேஜ் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவராக இருப்பினும் இலங்கை பாஸ்போர்ட் வைத்திருக்கின்றார். இந்த நிலையில் சமீபத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் எம் பி ஆவதை தடை செய்வதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டயானா காமெேஜுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா கொழும்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த நிலையில் அதனை விசாரித்த தலைமை மாஜிஸ்திரேட் டயானா கேமேஜ் எப்படி இலங்கை பாஸ்போர்ட் பெற்றார் […]
இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சூப்பர் 12 போட்டிகள் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் 1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.. இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் […]
ஆஸ்திரேலியாவுக்காக டி20யில் அதிவேக அரைசதம் அடித்ததன் மூலம் டேவிட் வார்னரின் சாதனையை மார்கஸ் ஸ்டோனிஸ் முறியடித்துள்ளார். யுவராஜ் சிங்கிற்கு அடுத்தபடியாக ஸ்டோய்னிஸ் இணைந்துள்ளார். ஐசிசி டி20 உலக கோப்பை 19வது போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மார்க்கஸ் […]
டி20 உலகக்கோப்பையில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது ஆஸ்திரேலியா. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய குசால் மெண்டிஸ் 5 ரன்னில் […]
கொரோனாவை தொடர்ந்து பொருளாதார நெருக்கடி இலங்கையை பாதித்திருப்பதால் நாட்டின் சுற்றுலாத்துறை வெகுவாக பாதித்திருக்கிறது. இதனால் சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்த்து அந்த துறையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இந்த சூழலில் உலக அளவில் சுற்றுலாவிற்கு ஏற்ற பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வேர்ல்டு டு பேக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டு இருக்கிறது இதில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னணி இடத்தை அது அதிலும் குறிப்பாக 12 இடங்களில் இலங்கையையும் அந்த இணையதளம் […]
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கரம் கொடுத்து தாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் அளவிற்கு கடன் வழங்கியுள்ளது. இந்தியாவின் இந்த உதவியால் இலங்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படாமல் பாதுகாக்கப்பட்டு இருப்பதாக நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனதா விமுக்த்தி பெரமுனா பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அந்த கட்சி தலைவர் அனுரா […]
இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவிற்கு உச்சநீதிமன்றம் மனித உரிமை மீறல் வழக்கில் சம்மன் அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே 2011 ஆம் வருடத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் காணாமல் போன வழக்கு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு தொடர்பில் கடந்த 2018 ஆம் வருடத்தில் அவருக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் சமன் அனுப்பி இருக்கிறது. ஆனால் கோட்டபாய ராஜபக்சே தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறி நீதிமன்றத்தில் […]
இலங்கை அணி நெதர்லாந்தை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் 9வது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து – இலங்கை அணிகள் இன்று இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு முதல் ஜீலாங்கில் மோதியது.. இப்போட்டியில் காயமடைந்த சமீரா மற்றும் பிரமோத் ஆகியோருக்கு பதிலாக பினுரா மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷானகா முதலில் பேட்டிங் […]
டி20 உலகக்கோப்பை கடைசி தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணி 163 ரன்களை நெதர்லாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. 2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் 9வது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து – இலங்கை அணிகள் இன்று இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் ஜீலாங்கில்விளையாடி வருகிறது .. நடப்பு ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கை அணி ஐக்கிய அரபுக்கு எதிராக கடந்த போட்டியில் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து சூப்பர் 12 கட்டத்தில் இடம்பிடிக்கும் […]
டி20 உலகக் கோப்பையின் 9வது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து – இலங்கை அணிகள் மோதுகிறது. 2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் 9வது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து அணியுடன் இலங்கை இன்று இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு மோதவுள்ளது.. நடப்பு ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கை அணி ஐக்கிய அரபுக்கு எதிராக கடந்த போட்டியில் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து சூப்பர் 12 கட்டத்தில் இடம்பிடிக்கும் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். நமீபியாவுக்கு எதிரான முதல் […]
இந்த வருடத்திற்கான புக்கர் பரிசை புனைக் கதைகான பிரிவில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக் வென்றுள்ளார். எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவமிக்க விருதாக சர்வதேச புக்கர் பரிசு கருதப்படுகின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு வருடம் தோறும் இந்த புக்கர் பரிசு வழங்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான புக்கர் பரிசுக்கு உலகம் முழுவதிலிருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்ட சூழலில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் […]
இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பெட்ரோல் விலையை குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கின்ற இலங்கை பொருளாதாரம் முன்னோடி இல்லாத விதமாக இந்த வருடம் 9.2% சுருங்கும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் வருடாந்திர பண வீக்க விகிதம் 70 சதவீதத்தை நெருங்கி இருக்கிறது இருப்பினும் எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தீர்மானித்திருக்கிறது. அதன்படி இலங்கை அரசு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் […]
இலங்கை அரசு இந்தியாவிலிருந்து இறக்குமதியான ரயில் பெட்டிகளில் இயந்திர கோளாறுகள் ஏற்படுவதாக அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டிலிருந்து சுமார் 160 ரயில் பெட்டிகளை இலங்கை இறக்குமதி செய்தது. இந்தியாவின் கடன் எல்லைக்குள்ளான சுமார் 120 கோடி ரூபாயில் இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளது தெரிய வந்திருக்கிறது. நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகிய வேறுபாடுகள் அந்த பெட்டியில் உள்ளது. இதன் காரணமாக, அந்த ரயில்கள் இலங்கை தண்டவாளங்களில் சரியாக செயல்படாமல் இருக்கிறது. எனவே, […]
சீன அரசு, இலங்கை நாட்டிற்கு 500 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மருந்துகளை இலவசமாக அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் அதிக அளவிலான மருத்துவ உதவியை சீனாவிடம் இருந்து பெற்று வருகிறது. கொரோனா பரவிய காலகட்டத்தில் அந்நாட்டிற்கு சோதனை உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் தடுப்பூசிகளை சீனா அனுப்பியது. அதன் மூலம் கொரோனாவிலிருந்து இலங்கை மீண்டு வர உதவியாக இருந்தது. அந்த வகையில், சீனா தன் 50 கோடி யுவான் […]
இலங்கையில் பாதித்து வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இலங்கையில் மேற்கு மாகாணத்தில் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கண்டி, காலோ, யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த நிலையில் இலங்கையில் கடந்த வருடத்தை விட 300 மடங்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். அதாவது கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 20,000 ற்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் […]
இலங்கையில் மீண்டும் மஹிந்த ராஜபக்சே பிரதமராக வாய்ப்பு இருக்கிறது என்று மந்திரியான லோகோன் ரத்துவதை கூறியிருக்கிறார். நிதி நெருக்கடி இலங்கை நாட்டையே மொத்தமாக புரட்டிப் போட்டது. இதனால், மக்கள் பணியிழப்பை சந்தித்ததோடு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, அதிகபட்சமான விலை ஏற்றம் என்று கடுமையாக பாதிப்படைந்தார்கள். மேலும் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தினர். எனவே, அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மற்றும் அதிபர் கோட்டபாய ராஜபக்சே இருவரும் ராஜினாமா செய்தனர். எனவே, அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை […]
கொழும்பு நகருக்கு அருகில் 20 நாட்களுக்கும் மேலாக கச்சா எண்ணெய் கப்பல் காத்திருக்கும் நிலையில் 57 கோடி ரூபாய் இல்லாமல் இலங்கை அதனை வாங்க முடியாமல் இருக்கிறது. இலங்கை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. எனவே, அங்கு கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருகிறது. இந்நிலையில் 99 ஆயிரம் டன் எடை கொண்ட கச்சா எண்ணெயுடன் கப்பல் ஒன்று கடந்த 20ஆம் தேதி அன்று இலங்கை கடல் எல்லைக்கு சென்றது. […]
விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டு போர் 2009 ஆம் வருடம் மே மாதம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த போரின் போது ஏராளமான விடுதலை புலிகள் பிடிக்கப்பட்டு பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இலங்கையில் ஆட்சிகள் மாறினாலும் கட்சிகள் மாறாமல் அவர்கள் சிறைவாசம் அனுபவித்து வரும் சூழ்நிலை இன்னும் மாறவில்லை. இந்த சூழலில் இலங்கை நாடாளுமன்றத்தில் முன் […]
இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சீன நாட்டுடன் கடன் மறுசீரமைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாக கூறியிருக்கிறார். இலங்கை வரலாறு காணாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. எனவே, சீன போன்ற பல நாடுகளிடம் 47, 486 கோடி ரூபாயை கடனாக பெற்றது. அதனை திரும்ப செலுத்த முடியாமலும், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு அன்னிய செலவாணி கையிருப்பு இல்லாமலும் தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் உதவி கேட்டது. பல தடவை மேற்கொள்ளப்பட்ட […]
இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களின் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை நாட்டில் முல்லை தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் சிலர் சட்டவிரோதமாக மீன் பிடித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அதிகாரிகளும் அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் நேற்று மீன் பிடிப்பவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் ஐநா தீர்மானத்திற்கு பல்வேறு நாடுகள் ஆதரவளித்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியதால் ஆட்சியர்களுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சே போன்றோர் பதவி விலகியுள்ளனர். இதனை அடுத்து ரணில் விக்ரமசிங்கே அதிபரான நிலையில் அவரது ஆட்சியை எதிர்த்தும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போராட்டக்காரர்கள் மீது ராணுவம், போலீசரும் தாக்குதல் நடத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் […]