Categories
உலக செய்திகள்

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி… இலங்கை அதிபர் ரணில் விக்ரம் சிங்கே எச்சரிக்கை..!!

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இலங்கை அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். போராட்டம் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அதனை ராணுவ பலத்தை பயன்படுத்தி நசுக்குவோம் என அதிபர் ரணில் விக்ரம் சிங்கே எச்சரித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தை கலைக்க மாட்டோம் எனவும் ரணில் விக்ரம் சிங்கே உறுதி அளித்துள்ளார். இந்த நாட்டில் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பிரச்சனை உள்ளது எனவும் தேர்தல்களால் மக்களும் அரசியல் கட்சிகளும் சோர்ந்து போய் உள்ளதாகவும் கூறினார்.

Categories
உலக செய்திகள்

“இது எனக்கு ஜெலியில் இருப்பது போல் உள்ளது”…. தவிக்கும் இலங்கை அதிபர்…. லீக்கான தகவல்….!!!!

இலங்கை நாட்டில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு மற்றும் சிங்கப்பூருக்கு தப்பிசென்றார். சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான விசா காலம் முடிவடைந்ததை அடுத்து அதிபர் சென்ற 11ஆம் தேதி தாய்லாந்து நாட்டுக்கு சென்றார். அங்கு 90 தினங்கள் தங்கி இருக்க தாய்லாந்து அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. தலைநகர் பாங்காக்கிலுள்ள ஓட்டல் ஒன்றில் கோத்தபயராஜபக்சே தங்கி இருக்கிறார். இதனிடையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஓட்டல் அறையிலேயே இருக்கும்படியும், வெளியில் வர வேண்டாம் எனவும் கோத்தபய […]

Categories
உலக செய்திகள்

கோத்தபய ராஜபக்சே அமெரிக்க கிரீன் கார்டு கோரி விண்ணப்பம்…. லீக்கான தகவல்….!!!!

இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக கொந்தளிப்புக்குள்ளான அந்நாட்டு மக்கள் இதற்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் எனகூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் கடந்த மாதம் தொடக்கத்தில் தீவிரமடைந்ததை அடுத்து ஜூலை 13-ஆம் தேதி கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் மாலத்தீவுக்கு தப்பிஓடினார். இதையடுத்து அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற கோத்தபய தன் அதிபர் பதவியை ராஜினமா செய்தார். அதன்பின் சிங்கப்பூரில் அவரது விசா காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த […]

Categories
உலக செய்திகள்

BREAKING : மீண்டும் வெடித்தது போராட்டம்….. பெரும் பதற்றம்…..!!!!!

இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வான நிலையில், அவருக்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ஷை சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தற்காலிகமாக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இடைத்தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கேவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

விவசாய கடன் ரத்து….. பெட்ரோல் விலை குறைப்பு….. அதிபர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

விவசாய கடன் ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு என்ற மகிழ்ச்சியான அறிவிப்புகளை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ளார். இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டம் நடத்திய நிலையில், அந்நாட்டின் அதிபர் கோத்தப்பைய ராஜபக்சே கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பல அமைச்சர்களும் தங்களது பதவியை துறந்ததால் வேறு வழி இன்றி ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து நாட்டின் இடைகால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமித்துவிட்டு, சிங்கப்பூரில் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அதிபர் சிங்கப்பூரில் தஞ்சம் அடைகிறாரா….? வெளியுறவு அமைச்சகம் விளக்கம்….!!!

பிரபல நாட்டின் வெளியுறவு அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இதன் காரணமாக அதிபர் கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாலத்தீவு மக்கள் அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவை வெளியேறுமாறு […]

Categories
உலக செய்திகள்

Breaking: பதவி விலகினார் கோத்தபய ராஜபக்சே….!!!!!

இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை சபாநாயகருக்கு கோத்தபய அனுப்பி உள்ளார்.

Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரில் தஞ்சமடைய போகும் இலங்கை அதிபர்…. வெளியான தகவல்….!!!!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலைதீவிலிருந்து சிங்கப்பூருக்கு போக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சென்ற சனிக்கிழமை கோத்தபயராஜபக்சவின் மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். எனினும் அதற்கு முன்னதாகவே தன் இல்லத்தைவிட்டு வெளியேறிய கோத்தபய ராணுவத் தலைமையிடத்தில் பாதுகாப்பாக இருந்ததாகக் கூறப்பட்டது. இச்சூழ்நிலையில் கோத்தபய ராஜபக்ச இன்று காலை ராணுவ விமானம் வாயிலாக தன் மனைவியுடன் […]

Categories
உலக செய்திகள்

மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்….. அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடிய ராஜபக்சே…..!!!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறியதாக இலங்கை ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டதை அடுத்து அவர் தப்பியோடியுள்ளார். மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து இலங்கை அதிபர் மாளிகைக்கான பாதுகாப்பு பணியில் இருந்தும் போலீசார் விலகிக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிபர் மாளிகை உள்ளே போராட்டக்காரர்கள் நுழைந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் தெரிவிக்கின்றனர்.இலங்கை அதிபர்,  கோத்தபய ராஜபக்சே, அதிபர், […]

Categories
உலக செய்திகள்

#Breaking: மக்கள் அமைதி காக்க வேண்டும்…. இலங்கை அதிபர் டுவீட்….!!!!

இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. இலங்கையில் இரண்டாவது […]

Categories
அரசியல்

“அந்த நாட்டுல யாரு அதிபரா வந்தாலும் பிரச்சனை தான்”…. வைகோ கடும் குற்றச்சாட்டு….!!!!

சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில், ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு “ஈழத்தமிழருக்கு விடியல்” என்ற தலைப்பில் நடைபெற்றது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ஈழத் தமிழர் விடுதலைக்காக உயிர் நீத்தவர்களுக்கு வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். அதன்பிறகு மேடையில் பேசிய வைகோ, இந்தியா இன்று இலங்கைக்கு உதவுகிறது. ஆனால் இந்திய […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானில் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட இலங்கையர்!”…. இலங்கை அதிபருடன் பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தை…!!

பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான், இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சேவுடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் சியால்கோட் என்னும் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் இலங்கையை சேர்ந்த,பிரியந்தா குமாரா தியாவதனா என்பவர் பொது மேலாளராக இருந்தார். அப்போது, அவரது அலுவலகத்தின் சுவருக்கு அருகில் அனுமதியில்லாமல் ஒட்டப்பட்டிருந்த தெஹ்ரீக் – இ – லபைக் என்ற அமைப்பினரின் மத பிரச்சார சுவரொட்டியை கிழித்து வீசிவிட்டார். இதனையறிந்த, தெஹ்ரீக் – இ – லபைக் அமைப்பை சேர்ந்தவர்கள், […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணம்னு தெரியல..! திடீரென தள்ளி வைக்கப்பட்ட பேச்சுவார்த்தை… வெளியான முக்கிய தகவல்..!!

தமிழ் கட்சிக்கும், இலங்கை அதிபருக்கும் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று முதல் முறையாக இலங்கையின் முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டணியின் எம்.பி. சுமந்திரன் இந்த பேச்சுவார்த்தை திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை. இனி எப்போது பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது குறித்த தகவலும் வெளியிடப்படவில்லை. […]

Categories

Tech |