புதுக்கோட்டை மீனவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை அவர்களின் படகுகளுடன் சிங்களப் படையினர் கைது செய்ததற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, நேற்று மாலை கோவளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி மீன்பிடித்ததாக குற்றஞ்சாட்டி 23 மீனவர்களையும், அவர்களின் 5 மீன்பிடி படகுகளையும் சிறைபிடித்து சென்றுள்ளனர். மீனவர்கள் அனைவரையும் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 221 தமிழக மீனவர்கள் […]
Tag: இலங்கை கடற்படை
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.. இன்று காலை புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, மாலை 3 மணியிலிருந்து 4 மணிக்குள் இலங்கை பகுதியான காரைநகர் தென்கிழக்கே கோவளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி மீன்பிடித்ததாக குற்றம் சுமத்தி 4 படகுகளில் இருந்த […]
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், இலங்கை வசம் உள்ள விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 16/11/2022 அன்று இரவு தமிழக மீனவர்கள் 4பேர் உட்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது […]
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து இன்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடலுக்கு சென்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டி அடித்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு விசைப்படைகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், அந்த […]
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, படகுகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது போன்றவை எல்லாம் தொடர்கதையாகவும், துயர் கதையாகவும் நடந்து வரக்கூடிய சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் சார்பாக ஒரு மனு ரிட் மனு என்பது தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கின்றது. இந்த சூழலில் இன்று வழக்கு மூன்றாவது வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சூழலில், […]
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கச்சதீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்ததோடு, அவர்களுடைய வலைகளை சேதப்படுத்தி இருக்காங்க. குறிப்பாக பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகளில் இந்த வலைகளை சேதப்படுத்தி இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு படகுக்கு குறைந்தது 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மீனவர்கள் […]
இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு படகில் சட்டவிரோத வகையில் புலம்பெயர முயன்ற 85 பேரை அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையை சேர்ந்த ரணவிக்ரமா என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்நிலையில், மீன்பிடி படகு ஒன்று சட்டவிரோத வகையில் சிலரை ஏற்றி கொண்டு பட்டிகலோவா பகுதியில் சென்று கொண்டிருந்தது. இதனை கவனித்த கடற்படை அதிகாரிகள் படகை தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த படகில் 85 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் 60 பேர் ஆண்கள், 14 பேர் பெண்கள் […]
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் அவர்களை பிடித்து செல்வது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது முல்லைத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாகையை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் மீனவரிடமிருந்து விசைப்படகு ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளது இலங்கை கடற்படை.. […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் படகு மூலம் இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் இலங்கையிலிருந்து தமிழகம் வர முயற்சித்த 14 இலங்கை தமிழர்களை கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மன்னார் பேசாலை பகுதி வழியாக வர முயற்சித்த இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 5 சிறுவர்களும், 5 பெண்களும் அடங்குவர். அதன்பிறகு இலங்கை கடற்படை […]
கடந்த மாதம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 7 ஆம் தேதி 11 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 1 மாதமாக சிறையில் இருந்து அவதிப்பட்ட 11 மீனவர்களையும் அதிகாரிகள் ஊர்காவல்த்துரை நீதிமன்றத்தில் ஆஜர் […]
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் விசைப்படகுடன் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 26 நாட்களில் தமிழகம், காரைக்காலைச் சேர்ந்த 78 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 21 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 2 விசைப்படகு மற்றும் 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் 500க்கு அதிகமான விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் அவர்கள் கச்சதீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துகொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 12 மீனவர்களை கைது செய்து 2 விசைப்படகுகளையும் பறிமுதல் […]
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று நேற்றைய தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 16 தமிழக மீனவர்களை கைது செய்து 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததாகவும், அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைக்கு அழைத்து […]
இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்துள்ளனர். அதாவது கச்சத்தீவு அருகே 2 விசைப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகையை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இலங்கைக் கடற்படை மீண்டும் அத்துமீறி நடந்துள்ளது.
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக படகுகளை ஏலம் விடப்போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது, எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து யாழ்ப்பாணம், காரைநகர், காங்கேசன்துறை, தலைமன்னார் போன்ற பல்வேறு இடங்களிலும் நிறுத்தி வைத்துள்ளனர். அதன்படி கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் இலங்கை கடற்படையினரால் 100-க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை வருகின்ற 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 43 மீனவர்கள் 6 விசைப்படகுகளில் கடந்த மாதம் 18ஆம் தேதி மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்கள் 43 பேரையும் கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 25 நாட்களாக சிறையில் இருந்த மீனவர்களை நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனையடுத்து […]
இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 43 மீனவர்களை மீண்டும் ஜனவரி 13ஆம் தேதி வரை சிறை நீட்டிப்பு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 6 விசைப்படகுகளில் 43 மீனவர்கள் கடந்த 18ஆம் தேதி மீன் பிடிக்க நடுக்கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லையை தாண்டி வந்ததாக கூறி 43 பேரையும் கைது செய்துள்ளனர். இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மீனவர்களை யாழ்பாணம் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் […]
இலங்கை கடற்படையினரை கண்டித்து மீனவர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையம் அருகே மீனவர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த மீனவரின் விசை படகை இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியுள்ளது. இதில் மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். எனவே உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வளாக […]
இலங்கை கடற்படை வங்கக்கடலில் கப்பல் மோதி படகு மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தில் மாயமான தமிழக மீனவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 18-ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினத்திலிருந்து சேவியர் (32), ராஜ்கிரண் (வயது 30), சுகந்தன் (23) ஆகிய மூன்று தமிழக மீனவர்களும் வங்கக் கடலுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து தமிழக மீனவர்கள் மூவரும் வங்க கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்த […]
இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி கைது செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.. அதன்பிறகு நடுக்கடலில் கைது செய்யப்பட்ட மீனவர்களை இந்திய கடற்படையிடம் இலங்கை […]
இலங்கை கடலில் ஒரு சரக்கு கப்பல் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், சரக்கு கப்பலான MSC Messina, நேற்று முன் தினம், சிங்கப்பூருக்கு செல்ல கொழும்பிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது Great Basses Reef என்ற கலங்கரை விளக்கத்திலிருந்து சுமார் 480 மைல் தூரத்தில் பயணித்த போது திடீரென்று கப்பலில் தீ பற்றி எரிந்துள்ளது. மேலும் கப்பலின் எஞ்சின் அறைக்கும் தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SAR Container ship #MSCMessina with […]
வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் பாம்பன் மீனவர்களின் விசைப்படகுகள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. படகு சேதமான நிலையில் துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர் தப்பிய 9 மீனவர்கள் கரை திரும்பி உள்ளனர். எல்லை தாண்டியதாக கூறி நடுக்கடலில் மீன்பிடித்த மீனவர்கள் இலங்கை படை துப்பாக்கியால் சுட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மீனவர்கள் கரை திரும்பினர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதால் 3000 மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் கரை திரும்பியதாக புகார் அளித்துள்ளனர். நீண்டகாலமாகவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வருகின்றது. அன்றாட பிழைப்புக்காக உயிரை பணையம் வைத்து கடலுக்கு செல்லும் […]
இராமேஸ்வரம் தனுஸ்கோடி அருகே தமிழக மீனவர்கள் சென்ற படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது. கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் காயமடைந்தார் . மேலும் அவர்கள் மீனவர்களை துப்பாக்கியயை காட்டி மிரட்டி விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினர் மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர் எனவும் படகு ஒன்றுக்கு 1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.