உணவு பொருட்களின் விலை உயர்வை தடுப்பதற்காக அவசரநிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கடந்த சில நாட்களாக உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதற்காக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசரநிலை கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகளுக்கு 132 பேர் ஆதரவும் 51 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். மேலும் அவசரகால சட்டம் கொண்டு வரப்பட்டால் அது இலங்கையில் ராணுவ ஆட்சி உருவாக வழிவகுக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல்வேறு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை […]
Tag: இலங்கை
உலக புகழ்பெற்ற ஜிப்ஸி இசைக்குழுவின் தலைவர் மறைவுக்கு ஆஸ்திரேலியா அமைச்சர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் சிங்கள இசைக் கலைஞரும் புகழ்பெற்ற ஜிப்ஸி இசைக்குழுவின் தலைவருமான சுனில் பெரேரா உடல் நலக்குறைவால் கொழும்பில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர் நேற்று எதிர்பாராவிதமாக உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பு செய்தி அறிந்த ஆஸ்திரேலியாவின் சுங்கம், சமூக பாதுகாப்பு மற்றும் பன்முக கலாச்சார விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் Jason Wood தனது ஆழ்ந்த இரங்கலை […]
இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன் நடித்த Never Have I Ever தொடரின் மூன்றாம் சீசன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் Mississauga என்ற பகுதியில் வசிக்கும் 19 வயதான மைத்திரேயி என்ற நடிகை, இலங்கையிலிருந்து கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்தவர். இவர் நடிப்பில் வெளியான, Never Have I Ever என்ற நெட்ப்ளிக்ஸ் தொடர் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இத்தொடரில், இவர் தேவி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் அதிகம் […]
சர்வதேச ஊடகங்களில் வெளியான இலங்கையில் கடுமையான உணவுபஞ்சம் உண்டாகும் என்று வெளியான செய்தியை இலங்கை அரசு மறுத்துள்ளது. இலங்கையில், கடந்த சில வருடங்களாக பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, கொரோனா காரணமாக நாட்டின் முக்கிய வருவாய் துறையான சுற்றுலா முடக்கப்பட்டது. எனவே, உணவு பொருட்கள் உட்பட முக்கியமான பொருட்களை, பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதில் சிக்கல் உருவானது. மேலும் நாட்டில் இருப்பு குறைந்தது. எனவே உணவு பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே, […]
நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையைச் சேர்ந்த நபரின் பக்கத்து வீட்டார் தான் அவரை மூளைச்சலவை செய்ததாக அவரின் தாயார் தெரிவித்துள்ளார். ஆக்லாந்தில் இருக்கும் கவுண்ட்டவுன் என்ற பல்பொருள் அங்காடியில், நேற்று முன்தினம் இலங்கையைச் சேர்ந்த நபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் ஆறு நபர்கள் பலத்த காயமடைந்தனர். எனவே, காவல்துறையினர் அந்த நபரை சுட்டு கொன்றதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது, அவரது பெயர் Ahamed Aathill Mohammad Samsudeen என்று தெரியவந்துள்ளது. மேலும் அவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், […]
அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்ததை தொடர்ந்து அரசு அப்பொருட்களுக்கு ஒரே மதிப்பை நிர்ணயித்துள்ளது. இலங்கையில் அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதனடிப்படையில் இலங்கை அரசு அப்பொருட்களின் ஒரே மதிப்பை நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் ஒரு கிலோ சர்க்கரை மொத்த விலையில் 116 ரூபாய் எனவும் சில்லரையில் 122 ரூபாய் என்றும் இலங்கை அரசு விலையை நிர்ணயம் செய்துள்ளது. இதனையடுத்து ஒரு கிலோ கீரை […]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத பட்டியலில் தொடர்ந்து வைத்துள்ள பிரிட்டனின் மேல்முறையீட்டு ஆணையத்தின் தீர்மானத்தை இலங்கை அரசு பாராட்டியிருக்கிறது. பிரிட்டனின் வெளியுறவு துறை அமைச்சரான பிரீத்தி படேலுக்கு, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில், இலங்கை மற்றும் பிரிட்டனுக்கு இடையேயான கூட்டுறவு பாராட்டுக்குரியது. சர்வதேச அளவில் தீவிரவாதத்தை அடக்குவதும், பொதுமக்களுக்கு பயங்கரவாதத்தால் ஏற்படும் பதற்றத்தை போக்குவதிலும் பிரிட்டன் தொடர்ந்து தங்களுடன் சேர்ந்து செயல்படுவதில் உறுதியாக இருக்கிறோம். விடுதலைப் புலிகள் […]
கொரோனா காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்தவர்களுக்கு இலங்கையைச் சேர்ந்தவர் உதவி செய்து வருகிறார். இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அங்கு கடந்த 20ஆம் தேதி முதல் வரும் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பொருளாதார ரீதியாகவும் வேலை இன்றியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வருமானமின்றி தவிக்கும் மக்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து ஒருவர் உதவி செய்கிறார். அவர் கொழும்பில் உள்ள களனி பகுதியைச் சேர்ந்த […]
இலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அதிபர் அறிவித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் செப்டம்பர் 6ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு தொடரும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். கடந்த 24 நேரத்தில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது […]
இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே, நாட்டின் அனைத்து மக்களுக்கும் அடுத்த மாதம் 10ஆம் தேதிக்குள் 2 தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இலங்கையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. எனினும் அதிபர் கோட்டபாய ராஜபக்சே, ஊரடங்கு அமல்படுத்த மறுத்து வந்தார். இறுதியில் புத்த மத குருக்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் கொடுத்த அழுத்தத்தினால் இம்மாதம் 30ஆம் தேதி வரை பத்து தினங்களுக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தினார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாட்டு மக்களுடன் அதிபர் தொலைக்காட்சியில் […]
கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வந்த நிலையில் இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது சில நாட்களாகவே தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் கொரோனாப் பரவலை தடுக்க மருத்துவ வல்லுனர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் வணிகர்கள் என பல தரப்பினரும் உடனடியாக ஊரடங்கு அமல்படுத்த கோரிக்கை விடுத்தனர். இதனையேற்றுக்கொண்ட அந்நாட்டு அரசு, ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல் […]
இலங்கையிலிருந்து கனடாவிற்கு அகதியாக வந்த பெண், தன் தாயின் நகையை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார். உலகின் பல நாடுகளில் தற்போதும் பல தாய்மார்கள் தங்கள் பெண்பிள்ளைகளின் திருமணத்தில் தனக்கு மிகவும் பிடித்த நகையை மகளுக்கு ஆசையாக அணிந்துவிடுவார்கள். அதைப்போல ஒன்ராறியோவில் வசிக்கும் 30 வயதான சுஜா என்ற பெண், சிறுவயதில் போரிலிருந்து தப்பி தன் பெற்றோருடன் இலங்கையிலிருந்து கனடா நாட்டிற்கு அகதியாக வந்திருக்கிறார். சுஜாவின் தாய், சுஜாவின் திருமணத்தின் போது ஒரு நெக்லஸை பரிசாக கொடுத்திருக்கிறார். அதாவது, […]
இலங்கையில் கொரோனா நான்காவது அலை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் நாடுதழுவிய அளவில் நான்கு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் இதன் மூலமாக மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் எனவும் இலங்கை அரசுக்கு மருத்துவர்கள் சங்க பேரவை வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல் படுத்தப் […]
அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக 12 வயதை கடந்த இளம்பருவத்தினருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கையிலும் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. இதனால் அந்நாட்டு அரசு தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதுக்குறித்து அந்நாட்டின் பிரதமர் ராஜபக்சே கூறுவதாவது “கொரோனா பரவலை […]
இலங்கை மக்கள், இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தியிருந்தால், தங்கள் நாட்டிற்கு செல்ல முன்பதிவுகள் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த மக்கள், முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருந்தால், அவர்களின் குடியுரிமை கடவுசீட்டை வைத்து இலங்கைக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளும் எடுத்திருக்க வேண்டும் என்று CAASL தெரிவித்துள்ளது. கடந்த 2 வாரங்களில் இந்தியா சென்ற பயணிகள், இலங்கை திரும்புவதற்கு வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து முன்பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை. 2 வயதிலிருந்து 18 வயது […]
இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் ஒரு ஸ்ப்ரே விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்த SaNOtize என்ற நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவின் Glenmark என்ற நிறுவனம் இப்புதிய மருந்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. ஸ்ப்ரே போன்று இருக்கும் இந்த Nitric Oxide Nasal Spray மருந்தானது, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஹொங்ஹொங், இலங்கை, மியான்மர், கம்போடியா, தைவான், புரூனே, நேபாளம், வியட்நாம் மற்றும் TImer Leste போன்ற நாடுகளில் உருவாக்கப்பட இருக்கிறது. […]
உலகின் மிகப்பெரிய கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர். இலங்கையிலுள்ள ரத்தினபுரி என்ற இடத்தில் அதிக அளவு ரத்தினங்கள் கிடைக்கின்றன. இதனால் அப்பகுதியை ‘ரத்தின தலைநகரம்’ என்று அழைக்கின்றனர். இதனையடுத்து கமாகே என்பவர் அப்பகுதியில் வசித்து வருகிறார். அவர் ரத்தின கற்கள் விற்கும் வியாபாரம் செய்து வாழ்கிறார். இந்த நிலையில் கமாகே தனது வீட்டின் பின்புறம் தொழிலாளர்களை வைத்து கிணறு ஒன்று தோண்டியுள்ளார். அப்பொழுது அங்கே பெரிய கல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தக் கல்லை சாதாரணமாக […]
இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை இந்தியா எடுத்துள்ளது. இலங்கைக்கு எதிராக 2-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தட்டுத்தடுமாறி 20 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து 5 விக்கெட் இழந்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் தவான் 40 ரன்களும், பின்னர் விளையாடிய தேவ் தத் படிக்கல் 29 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த சஞ்சு சாம்சனும் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். […]
இலங்கை சினோபார்ம், பைசர், கோவிட்ஷீல்ட் ஆகிய கொரோனா தடுப்புசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே இலங்கையில் சீனாவின் சினோவேக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் இலங்கை சீனாவின் மற்றொரு தடுப்பூசியான சினோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்ததோடு பைசர், கோவிட்ஷீல்ட்ஆகிய தடுப்பூசிகளும் ஒப்புதல் அளித்துள்ளது. சீனா 1.6 மில்லியன் […]
இலங்கை அரசானது, சீன நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதற்காக அந்நாட்டின் தேசிய கொடியுடன் ஒரு நாணயத்தை வெளியிட்டிருக்கிறது. இலங்கை மற்றும் சீன நாடுகளுக்கு இடையே தூதரக உறவு உருவாகி 65 வருடங்கள் நிறைவானது. இதனை நினைவு கூறும் வகையிலும், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி 100ஆவது வருடத்தை நிறைவு செய்ததற்காகவும், இலங்கையின் மத்திய வங்கி, 1000 ரூபாய் நாணயத்தை வெளியிட்டிருக்கிறது. இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் சீனா மற்றும் இலங்கை நாடுகளின் தேசியக் கொடிகள் […]
மாலத்தீவின் முன்னாள் மாஜி அமைச்சர் 15 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ளார். கொழும்பு காவல்துறையினருக்கு வந்த ரகசிய அழைப்பில், 15 வயதுடைய ஒரு சிறுமியை இணையதளத்தில் விற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்பு ஒரு நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிறுமியை பல பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது மாலத்தீவின் முன்னாள் நிதியமைச்சரான முகமது அஸ்மலி உட்பட […]
மன்னார் வளைகுடா அருகே பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த மீனவர்கள் எல்லைகளைத் தாண்டி தருவதாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை சிறைபிடித்து செல்வது துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. பல மீனவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப் பட்ட போதும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. இதே போல் தான் தற்போது, […]
இலங்கை முன்னாள் அதிபரான ரணில் விக்ரமசிங்கே ஒன்பதாவது தடவையாக நேற்று எம்.பி ஆக பொறுப்பேற்றுள்ளார். இலங்கையில், கடந்த 1977 ஆம் வருடத்திலிருந்து நடந்த அனைத்து பாராளுமன்ற தேர்தலிலும் எம்.பியாக வெற்றி பெற்றவர் என்ற சாதனையை ரணில் விக்ரமசிங்கே நிகழ்த்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக, கடந்த 1977 வருடத்தில் முதல் தடவையாக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் உறுப்பினரானார். அதனைத்தொடர்ந்து, கடந்த 1994 ஆம் வருடத்தில், அந்த கட்சியின் தலைவராக பதவியேற்றுள்ளார். 4 தடவை […]
மருத்துவ குழு எச்சரிக்கை விடுத்தும் இலங்கை அரசு பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கடந்த மே மாதம் 21ஆம் தேதி அங்கு முழு ஊரடங்கு மற்றும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று (21ஆம் தேதி )முதல் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மாகாணங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை தற்போதைக்கு தளர்த்த வேண்டாம் என்று இலங்கை மருத்துவ நிபுணர் குழுவினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். […]
வேதி பொருட்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்று திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் கடல் மாசடைந்துள்ளதால் இலங்கை அரசு இழப்பீடு கேட்டுள்ளது. இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்துக்கு அருகே கடந்த மாதம் குஜராத்திலிருந்து வேதிப்பொருள்கள் மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகியவற்றை ஏற்றி வந்த சிங்கப்பூரை சேர்ந்த “எக்ஸ்பிரஸ் பியர்ல்” என்ற கப்பல் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. அந்த தீ விபத்தில் 25 ஊழியர்கள் கப்பலிலிருந்து பத்திரமாக வெளியே மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பற்றி எரிந்த தீயானது சிறிது நேரத்திற்கு பிறகு […]
சுவிட்சர்லாந்து அரசு மருத்துவக் கருவிகளை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். சுவிட்சர்லாந்திலிருந்து, கொரோனா ஆண்டிஜன் சோதனை கருவிகள் அரை மில்லியன், வென்டிலேட்டர்கள் 50, பரிசோதனை உபகரணங்கள் 3.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்புடையது, ஆக்சிஜன் உருவாக்கக்கூடிய கருவிகள் 150 போன்றவை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பிற்கு, கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 16 டன் மருத்துவ கருவிகள் சூரிச்சிலிருந்து, ஒரு விமானத்தின் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக இலங்கையில் பலத்த மழை பெய்து வருவதால் களு, களனி, தெதரு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, அதிகளவு தண்ணீர் அணைகளிலிருந்து திறக்கப்பட்டதால் கொழும்பு, கம்பா, கலுட்ரா, பட்டாளம், ரத்னபுரா என பத்து மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளனது. மேலும் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 60 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 2.71 லட்சம் பேர் […]
இலங்கையில் கனமழை வெள்ளம் ..!!
இலங்கையில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இலங்கையின் மாவனல்லை, தேவகளம் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கொழும்பூர், வத்தரணுவெண்லா, சீதாவக்க கடுவலை போன்ற இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் விமானப்படை களமிறங்கியுள்ளது. களனி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான […]
இலங்கையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மே மாதம் இடைப்பகுதியிலிருந்து, ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராததால், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜூன் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஊரடங்கு தொடர்பான விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றிய ஆயிரக்கணக்கானோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது வரை, 1,89,241 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் […]
இத்தாலி அரசு இந்தியா, வங்காளதேசம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு பயண தடையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. எனவே இத்தாலி அரசு கடந்த ஏப்ரல் மாதத்தின் கடைசியில் இந்திய மக்கள் தங்கள் நாட்டிற்குள் வர தடை விதிப்பதாக அறிவித்திருந்தது. இந்த கட்டுப்பாடு, இன்றுடன் முடிவடைந்தது. எனினும் இந்தியாவில் தற்போதும் கொரோனா பரவல் இருப்பதால், ஜூன் 21ம் தேதி வரை இத்தடையை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா […]
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், தங்கள் மக்களை கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இலங்கையில் இருக்கும் அமெரிக்க மக்கள் கவனமுடன் இருக்குமாறு அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அதாவது இலங்கையில் கொரோனா அதிகரித்து வருவதால், ஏற்கனவே இலங்கை செல்லும் மக்களுக்கு அமெரிக்க நோய் தடுப்பு மையம் சில வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவித்திருந்தது. இது மட்டுமல்லாமல் இலங்கையில் தீவிரவாத தாக்குதல்களும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது மார்க்கெட்டுகள், உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள், விமான நிலையங்கள், […]
அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் அடுத்த மாதம் (ஜூன் ) நடைபெறவிருந்த ஆசிய கோப்பை போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வரும் நிலையில் இலங்கையில் நடக்கும் ஆசிய போட்டியில் ஒத்திவைக்க ஆசிய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்து, அறிவித்துள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் 2023 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும், 2022 ஆம் ஆண்டு ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தான் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ரயில், பேருந்து, போக்குவரத்துக்கு ஆகியவற்றிற்கு 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தொடங்கிய இந்த தடை செவ்வாய்க்கிழமை காலை வரை அமலில் இருக்கும் என்றும், சுகாதாரம், […]
ஊரடங்கு காலகட்டத்தை நாம் எவ்வாறு எதிர்கொண்டோம் என்றும் அது குறித்து ஒரு நபரின் அனுபவங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை நம்மில் ஒருவர் கூட நினைத்து பார்த்திராத அளவிற்கு நம் வாழ்க்கை முறையை மாற்றியது கொரோனா என்னும் கொடிய வைரஸ். அதனால் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு தொடங்கி முகக்கவசம் வரை கூறலாம். எனினும் அந்த ஊரடங்கு காலகட்டத்தை நாம் எவ்வாறு எதிர்கொண்டோம் என்று பார்ப்போம். ஊரடங்கின் போது வெளிநாடுகளில் பலர் பணிக்கு செல்ல […]
இலங்கையில் பிறந்து, கனடாவில் வசிக்கும் ஒரு நபர் புலம்பெயர்ந்தவர்களை கடத்தியதால் அமெரிக்காவில் இரண்டரை வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவில் வசிக்கும் ஸ்ரீ கஜமுகம் செல்லையா என்ற 55 வயது நபர், அமெரிக்காவில் பிற நாட்டை சேர்ந்தவர்களை பணத்திற்காக கடத்திக் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இவர் இலங்கையிலிருந்து சட்டத்திற்கு மாறாக புலம்பெயர்ந்தவர்களை கரீபியன் வழியே அமெரிக்க நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டியுள்ளார். அதன் படி, ஒரு படகில் புலம்பெயர்ந்தவர்கள் சுமார் 150 பேருடன் அமெரிக்காவிற்குள் செல்வதற்கு முயன்றிருக்கிறார். […]
உலகம் முழுவதிலும் இந்த வருடத்தின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் ஏற்படும் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏராளம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனாலும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மக்கள் தங்களை வீட்டில் இருந்து பாதுகாத்துக் கொண்டால் […]
கனடாவில், இளைஞர் ஒருவர் தன் பெற்றோர் கண்முன்னே கடலில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலிருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்த தம்பதிகள் Don Jayasinghe மற்றும் Chandima. இவர்களது மகன் Supul Jayasinghe (21). இந்நிலையில் இவர்கள் மூவரும் கடந்த ஏப்ரல் 21ம் தேதியன்று Supul ன் தேர்வு முடிவடைந்ததை கொண்டாடுவதற்காக Flatrock பகுதியிலிருக்கும் கடற்கரைக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது உயரமாக இருந்த பாறையில் Supul தன் நாயுடன் ஏறியுள்ளார். இதனை கண்ட Supulன் தந்தை […]
இலங்கையில் நடத்தபட்ட தொடர் குண்டுவெடிப்பில் சம்பந்தபட்டவர்களை சிஐடி கைது செய்துள்ளது. இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 2019 ஆம் ஆண்டில் ஏப்ரல் 21ஆம் தேதி 40 பேர் உள்பட 250 மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர் . இத்தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இக்கொடூர சம்பவத்திற்காக 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தற்போது சிஐடி போலீசார் தொழில் மற்றும் வர்த்தக துறை மந்திரி ரிஷாத் பதியுதீன் மற்றும் […]
இந்தியாவைப் போலவே இலங்கையிலும் புதிய உருவ மாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதன்படி தற்போது இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் தாக்குதல் பரவி வருவதாக கூறியுள்ளார். மேலும் இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களை விட இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும் மக்களிடையே மிக வேகமாக பரவ கூடியதாகவும் […]
இலங்கையில் புதிய கொரோனா வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நோய் தடுப்பில் நிபுணர் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவா்தனபுரா பல்கலைக்கழகத்தில் நோய்த்தடுப்பியல் மற்றும் அணு அறிவியல் துறைத் தலைவரான […]
இது வரை இல்லாத அளவிற்கு தொற்று திறனுடன் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதற்காக மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கட்டாயமாக்கி […]
இலங்கையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 பேருக்கு ரத்த உறைவு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக உலக நாடுகள் அனைத்திலும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதியிலிருந்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 902500 பேருக்கு இந்தியாவிடமிருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அதில் ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 3 […]
இலங்கையில் அதிகமாக பரவி வரும் கொரோன வைரஸ் காரணமாக வெளிநாட்டிலிருந்து வரும் மக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். உலக நாடுகளில் கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனவைரஸ் இந்த வருடம் சற்று குறைவாகவே இருந்து வந்தது. ஆகையால் மக்கள் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்தனர்.இலங்கையில் தற்போது கொரோனாவின் அச்சுறுத்தல் மிகவேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதாக அரசின் மூத்த சுகாதார அதிகாரி கூறியுள்ளார். இலங்கையில் இந்த […]
ஹட்டன் நகரில் பெரிய வீதியில் பேருந்து மோதி ஒரு இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஹட்டனில் நேற்று மதியம் 2.00 மணியளவில் தனியார் பேருந்து ஒன்றில் மோதி இளைஞர் ஒருவர் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை ஹட்டன் நகர காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த இளைஞரின் உடல் டிக்கோயா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பேருந்து ஓட்டுனரை கைது செய்துள்ளனர். எனினும் உயிரிழந்த இளைஞர் குறித்த எந்த தகவலும் தற்போதுவரை தெரியவில்லை. […]
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து மீண்டும் இலங்கைக்கு நீந்தியவாறு இலங்கை விமானப் படை வீரர் ரோஷன் சாதனை படைத்துள்ளார். இலங்கையின் விமானப்படை வீரரான ரோஷன் அபிஸ் பல நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்ட ஏராளமான பரிசுகளைப் பெற்றுள்ளார். அதை தொடர்ந்து இலங்கையை சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவரின் 50 வருட கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் வரை ரோஷன் அபிஸ் தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்தார். தலைமன்னர் ஊர்முனை கடலில் குதித்து நீந்தியவாறு துவங்கியவாறு இலங்கை கடலோர […]
பெரிய அளவிலான மோசடி செய்து வந்த ஒரு நபர் குறித்து தகவல் கூறுபவர்களுக்கு ஒரு மில்லியன் தொகை வழங்கப்படவுள்ளது. மிகப்பெரிய அளவில் மோசடி செய்த ஒரு நபரை குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு மில்லியன் தொகை வெகுமதியாக அளிக்கப்படும் என்று காவல்துறையினர் அறிவித்திருக்கின்றனர். அதாவது தற்போது தேடப்பட்டு வரும் இந்த நபர், மருத்துவராக, பொறியாளராக, ஆசிரியராக மற்றும் தொழிலதிபராகவும் நடித்து பல்வேறு விதங்களில் மோசடி செய்திருக்கிறார். இதனால் காவல்துறையினர் மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தற்போது தலைமறைவாகி இருக்கும் […]
இலங்கையில் இரண்டு கட்சிகளுக்கிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதால் மே தினத்தை தனியாக நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முடிவெடுத்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையில் பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வருகின்ற மே தினத்தை தனியாக நடத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளது. மேலும் இந்த முடிவானது கட்சியின் தொழிற்சங்கங்களும் செயற்பாட்டாளர்களின் கோரிக்கைக்கும் ஏற்ப எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை சிரேஷ்ட உதவியாளரான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான இறுதி முடிவு விரைவாக […]
இலங்கையில் இராணுவ ஓட்டுநர் குடிபோதையில் வாகனத்தை இயக்கி 5 வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் உள்ள கண்டி நகரில் கட்டுகஸ்தோட்ட என்ற வீதியில் இராணுவ ஓட்டுனர் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் கண்மூடித்தனமாக ஓட்டிச்சென்று ஐந்து வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதனால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர் அதிக குடிபோதையில் வாகனத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்த வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
உடல் ஊனமுற்ற மற்றும் மரணமடைந்த ராணுவ வீரர்களுடைய மனைவிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார். உடல் ஊனமுற்ற மற்றும் மரணமடைந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய உதவி தொகையை பெறுவதற்கு போராட்டங்களில் ஈடுபட வேண்டிய தேவையில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுடைய கோரிக்கையை பூர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளன என்றும் தெரிவித்திருக்கிறார். அதாவது ஊனமுற்ற மற்றும் மரணமடைந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் […]
ஆஸ்திரேலியாவிற்கு வீட்டு வேலை செய்வதற்காக இந்திய பெண்ணை அழைத்து சென்று இலங்கை தம்பதியினர் எட்டு வருடங்களாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். விக்டோரியா உச்சநீதிமன்றத்தில் நேற்று இலங்கை தம்பதியினர் பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை, அரசு வழக்கறிஞர் Richard Maidment நீதிமன்றத்தில் விவரித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டு பெண்ணை ஏமாற்றி ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துசென்றுள்ளனர். தினந்தோறும் 3.39 டாலர்கள் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதை தெரியப்படுத்தியுள்ளார். […]