கொரோனாவால் பலியானவர்களின் சடலத்தில் வைரஸ் 22 நாட்கள் தங்கியிருப்பதாக ஆஸ்திரேலிய ஆய்வு குழு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கொரோனவினால் இறந்தவர்களின் உடலில் 27 நாட்களுக்குப் பின்னரும் அந்த வைரஸ் உயிரோடு இருப்பதாக ஆஸ்திரேலிய ஆய்வு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தியை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மேந்திக்கா வித்தானகே தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியில் கொரோனவினால் இறந்தவரின் சடலத்தில் அல்லது அதற்கு வெளியே வெகு நாட்கள் கொரோனா வைரஸ் தங்கியிருக்க கூடும் […]
Tag: இலங்கை
இலங்கையில் உள்ள தனிமைப்படுத்த முகாமில் இருந்து வீட்டிற்கு திரும்பிய சிலர் வழியில் மதுபானம் அருந்தி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது இலங்கையில் உள்ள கண்டக்காடு பகுதியில் கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் வீடு திரும்பிய குழு ஒன்று செல்லும் வழியில் பேருந்தை நிறுத்தி மதுபானம் குடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். இவர்கள் கம்பஹா எனும் இடத்தை நோக்கி பயணித்த போது இடையில் பேருந்தை நிறுத்தி மதுபானம் அருந்தியதாக கம்பஹா மாவட்ட சுகாதார இயக்குனர் தெரிவித்துள்ளார். அதோடு மதுபோதையில் அவர்கள் […]
ஆடம்பர வாழ்க்கை பிடிக்காததால் கணவனிடமிருந்து விவாகரத்து கேட்ட பெண்ணின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சிறுவயது முதலே ஆடம்பரத்தை வெறுத்து எளிமையாக வாழ்ந்து வந்துள்ளார். கோடீஸ்வரராக இருந்தாலும் சக மாணவிகளுடன் பள்ளிக்கு செல்லும் போது கார்களை தவிர்த்து சைக்கிளில் சென்றுள்ளார். எளிமையாக வளர்ந்த இவருக்கு 2009 ஆம் ஆண்டு கொழும்புவில் உள்ள கோடீஸ்வர இளைஞர் ஒருவரை பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு கணவருடன் வசித்து வந்த பெண்ணிற்கு […]
சிறுமி ஒருவர் ஜூனியர் மாஸ்டர்செஃப் போட்டியில் கலந்து கொண்டு இலங்கை உணவுகளை சமைத்து பட்டத்தை வென்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஜோர்ஜியா(11). இவர் “Junior Masterchef Australia 2020” என்ற போட்டியில் கலந்து கொண்டு சிறந்த சமையல் வல்லுநருக்கான கோப்பையை பெற்றுள்ளார். இந்த போட்டியின் இறுதி சுற்று ஆஸ்திரேலிய தொலைக்காட்சியான நெட்வொர்க் 10-ல் ஒளிபரப்பப்பட உள்ளது. மற்ற போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளிய இந்த இலங்கை சிறுமி 25,000ஆஸ்திரேலிய டாலர் பணத்தை பரிசாக வென்றுள்ளார். இதையடுத்து […]
இரட்டை யானைக்குட்டிகள் இரண்டும் ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் மின்னேரியா தேசிய பூங்கா ஒன்றில் யானை ஒன்று அரியவகை இரட்டை யானைக்குட்டிகளை ஈனியுள்ளது. இந்த ஆண் மற்றும் பெண் இரட்டைக்குட்டிகள் சந்தோசமாக பூங்காவில் உலா வந்துள்ளன. இந்த அபூர்வ நிகழ்வையடுத்து, இதுபோன்று இனியும் இரட்டைக்குட்டிகள் பிறக்கலாம் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று அந்த இரண்டு யானைக்குட்டிகளும் மஹாசேனபுரா என்ற இடத்தில இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து யானைகளின் இறப்பு […]
தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இலங்கை கடற்படையினர் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவ்வப்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை துறைமுகங்களின் அருகே நிறுத்தி வைத்துள்ளனர். 2015ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 121 படகுகள் தமிழர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்த முடியாத அளவிற்கு […]
அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 90% பேர் நோய் அறிகுறி அற்றவர்கள் என சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதார அமைப்பின் செயலாளர் சஞ்சீவ முனசிங் கூறுகையில், “இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 90% பேர் நோய் அறிகுறி இல்லாதவர்கள். இருப்பினும் இதற்கு முன்னர் மக்களை அதிகமாக பாதித்த கோவிட் -19 வைரஸின் வகையை விட தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் வித்தியாசமானதாக இருக்கிறது. மேலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் பாதிப்பு நாம் […]
மனிதர்கள் அனுபவிக்கும் சூழ்நிலைகளை எவ்வாறாக கையாள வேண்டும் என்று பார்வையாளர்களுக்கு இலங்கை கலைஞர்கள் காணொளியாக விளக்கியுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இத்தகைய விஷயங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்று இலங்கை கலைஞர்கள் மிகச் சிறப்பாக காணொளியில் விளக்கி வருகின்றனர். தற்போது இலங்கைத் தமிழர் பாஸ்கியின் “பட்டிதொட்டி” என்ற குறும்படத்தின் 24வது பாகத்திற்கு “விளைவு வரும் போது விழிப்புடன் இரு” தலைப்பினை கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். பிரச்சினைகள் வரும் போது […]
தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை கடற்தொழில் அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கல் மற்றும் பாட்டில்களால் தாக்கப்பட்டனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டு ராமேஸ்வர மீனவர்கள் கரை திரும்பினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கியது மகிழ்ச்சி […]
மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் ஒருவர் மண்டை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் சுரேஷ் மண்டை உடைந்தது. அவரை […]
பிரபல தனியார் வங்கியான ஐசிஐசிஐ, இலங்கையில் தனது செயல்பாடுகளை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள நான்கு முக்கிய வங்கிகளில் ஒன்றாக ஐசிஐசிஐ வங்கி திகழ்கிறது. இந்தியாவைத் தாண்டியும் அமெரிக்கா, கத்தார், சீனா போன்ற நாடுகளிலும் ஐசிஐசிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. அதன்படி, இலங்கையிலும் ஐசிஐசிஐ வங்கி தனது கிளைகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் தனது செயல்பாடுகளை நிறுத்த அனுமதிக்க கோரி அந்நாட்டின் மத்திய வங்கியிடம் ஐசிஐசிஐ வங்கி விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த இலங்கை மத்திய […]
கொரோனா தொற்றினால் இலங்கையில் 49 வங்கிகள் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது இலங்கையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் அந்நாட்டில் 49 வங்கிகளை மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் மூடப்படும் 49 வங்கிக் கிளைகளிலும் கொடுக்கல் வாங்கல்கள் நடக்காது என்றும், டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களையும் ஏடிஎம் இயந்திரங்களையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூடப்பட இருக்கும் வங்கிகளின் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா இலங்கை கடற்படைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இந்தியா இலங்கை கடற்படைகளுக்கு இடையே சிலின்நெக்ஸ்ட் 20 என்ற பெயரில் இரு தரப்பு கூட்டுப்பயிற்சி இலங்கையின் திருகோணமலைக்கு அருகே அக்டோபர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் இலங்கை கடற்படை சார்பில் எஸ்.எல்.என். சயூரா என்ற ரோந்து கப்பலும் கஜபாகு என்கிற பயிற்சி கப்பலும் கலந்து கொள்கின்றனர். இந்திய கடற்படை சார்பில் நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கும் […]
இலங்கையில் மூன்றாம் கட்ட கொரோனா பரவல் தொடங்கியிருப்பதால் அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது மூன்றாம் கட்ட கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. அதனால் தற்போது வரை 4,300க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது வரை 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3,266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு 973 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் […]
சுனாமியின் போது காணாமல் போன ஐந்து வயது மகனை 21 வயதில் தாய் கண்டு பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் சுனாமியின் போது தனது ஐந்து வயது மகனை தொலைத்து 16 வருடங்கள் கழித்து பெரும் போராட்டத்திற்கு பிறகு கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சுனாமி ஏற்பட்ட சமயம் மருத்துவமனை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தேன். சுனாமி ஏற்பட்டதை தொடர்ந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது எனது ஐந்து வயது மகனை காணவில்லை. சுற்றிலும் […]
காதலனை அண்ணன் தாக்கியதால் தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இலங்கையில் பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனது வீட்டிற்கு செல்லும்போது தனது காதலனுடன் நடந்து சென்றுள்ளார். இதனைப் பார்த்த மாணவியின் அண்ணன் தனது நண்பர்கள் நான்கு பேரை அழைத்துக்கொண்டு மாணவியின் காதலனை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த காதலன் பொகவந்தலாவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதோடு மாணவியை அவரது அண்ணன் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்த மாணவி விஷம் […]
வெளிநாட்டில் கோடிஸ்வராக இருக்கும் பெற்றோரின் மகன்கள் தாய் நாட்டில் போதைப் பழக்கத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர் பிரான்ஸில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் கோடிஸ்வர பெற்றோர் இலங்கையில் இருக்கும் தங்களது மகன்கள் இருவருக்கும் ஆடம்பர வாழ்க்கை வாழ தொடர்ந்து பணம் அனுப்பி வந்தனர். இதனால் இரண்டு மகன்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதுடன் அதனை விற்பனை செய்யவும் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இருவரும் கொழும்பு காவல்துறையினரிடம் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களுடன் சிக்கியுள்ளனர். காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இவர்களது பெற்றோர் […]
இலங்கை கடற் பகுதியில் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ இந்தியா உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளதால் இலங்கை அரசு நன்றி தெரிவித்துள்ளது. பனாமா நாட்டிற்கு உரிமையான ‘ நியூ டைமண்ட்’ என்ற கப்பல் குவைத்தில் இருந்து மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 23 ஊழியர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அதன்பிறகு கப்பல் முழுவதும் தீ வெகுவாகப் பரவியது. […]
இலங்கை அருகே தீ விபத்தில் சிக்கிய கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று இந்திய கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கடலோர பாதுகாப்பு படை இயக்குனர், குவைத்திலிருந்து இந்தியா வந்துக்கொண்டிருந்த சரக்கு கப்பல் எவ்வாறு விபத்தில் சிக்கியது என்பது குறித்து விளக்கமளித்தார். மூன்று நாட்களாக இரு நாட்டு கப்பல் மற்றும் விமானம் மூலம் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை எடுத்துள்ளதாக அவர் கூறினார். இலங்கையிலிருந்து […]
இலங்கையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் எண்ணெய் கப்பலை அணைப்பதற்கு இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பனாமா நாட்டிற்கு உரிமையான ‘ நியூ டைமண்ட்’ என்ற கப்பல் குவைத்தில் இருந்து மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 23 ஊழியர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அதன்பிறகு கப்பல் முழுவதும் தீ வெகுவாகப் […]
ஐபிஎல் மும்பை அணியில் யார்க்கர் மன்னன் மலிங்காவுக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் சேர்க்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. யார்க்கர் என கூறினாலே முதலில் நினைவுக்கு வருவது மலிங்கா தான். இவர் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வருகின்றார். மும்பை அணி வெற்றி பெறும்போது இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படும். ஆனால் இம்முறை நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் மலிங்கா மும்பை அணியில் இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
இலங்கை துறைமுகத்திற்கு வந்த மூன்று ரஷ்ய போர்க் கப்பல்கள் குறித்த உண்மை வெளியாகியுள்ளது. இலங்கையின் தெற்கு பகுதியில் இருக்கின்ற ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு நேற்று முன்தினம் ரஷ்யாவின் மூன்று போர்க்கப்பல்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்தத் தகவலை இலங்கை கடற்படை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்களான அட்மிரல் டிரிபக், அட்மிரல் வினோகிராடோவ் மற்றும் போரிஸ்புட்டோமா ஆகியவை ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு நேற்று முன்தினம் வந்துள்ளன. அந்தக் கப்பல்கள் எரிபொருள் நிரப்புவதற்காகவும் […]
இந்திய திட்டத்தின் கீழ் இலங்கையில் 50 ஆயிரம் வீடுகள் கட்டும் பணி முடிவடைந்துள்ளதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது. இந்தியா வீட்டுவசதி திட்டங்களை இலங்கையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தத் திட்டத்தின் கீழ் மன்னார் பிராந்தியத்தில் 50,000 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு தோட்டப் பகுதியில் வசிக்கின்ற மக்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்டி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இவற்றைத் தவிர இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் மாதிரி கிராம வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3000 வீடுகள் […]
இலங்கையில் வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழைய கூடாது என்று அதிபர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்சே தற்போது பதவியேற்றுள்ளார். அதன் பின்னர் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய அதிபர் கோத்தபயா ராஜபக்சே, ” இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கக் கூடிய வகையில், அவர்களின் தொழில் துறையை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கு தடை தடை விதித்து, அதன் மூலமாக உள்நாட்டு மீன்களை சந்தைக்கு கொண்டு […]
இலங்கையில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு வீடு அமைத்து தருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு ‘உங்களுக்கு ஒரு வீடு- நாட்டிற்கு எதிர்காலம்’ என்ற திட்டத்தின் கீழ் வீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது அரசாங்கம் கூறியுள்ளது. இதனைத்தொடர்ந்து வீடுகள் அற்ற 14000 பேருக்கு நான்கு மாதங்களில் வீடுகள் அமைக்க எதிர்பார்த்துள்ளதாக, கிராமிய வீடு மட்டும் நிர்மாணிப்பு மற்றும் கட்டிடப் பொருள் தொழில் நிறுவனத்தின் ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக இந்த வீடமைப்புத் திட்டம் தற்போதைக்கு […]
மின் நிலையத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் இலங்கை முழுவதும் இருளில் சூழ்ந்துள்ளது. இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள கெரவலடியா என்ற இடத்தில் துணை மின் நிலையம் இயங்கி கொண்டிருக்கிறது. இலங்கையின் பிரதான மின் நிலையங்களில் ஒன்றான அங்கு நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இலங்கை முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கியுள்ளது. திடீரென ஏற்பட்ட மின் துண்டிப்பு காரணமாக மக்கள் அனைவரும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சாலைகளில் உள்ள […]
இலங்கையில் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றது 4 தமிழர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் அதிபர் கோத்தபாய ராஜபக்க்ஷ தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அண்ணனும் முன்னாள் அதிபருமான மஹிந்த ராஜபக்க்ஷ பிரதமராக இருந்து வந்தார. 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின் இலங்கை மக்கள் கட்சி 145 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளுக்கு 5 இடங்கள் கிடைத்தன. இதனைத்தொடர்ந்து மஹிந்த […]
இலங்கையில் புதிய மந்திரி சபை நேற்று பதவி ஏற்ற நிலையில் ராஜபக்சே குடும்பத்தில் நான்கு பேர் மந்திரியாகியுள்ளனர். இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவருடைய அண்ணனும், முன்னாள் அதிபருமான மகிந்தா ராஜபக்சே பிரதமராக இருந்து வந்துள்ளார்.225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு கடந்த ஐந்தாம் தேதி நடந்த தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின் இலங்கை மக்கள் கட்சி 145 இடங்களை கைப்பற்றி வெற்றி கண்டது. கூட்டணி கட்சிகளுக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன.பின்னர் […]
இலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளியான அசித்த ஹேமதிலக்க இலங்கை காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளியான அசித்த ஹேமதிலக்க இலங்கை காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இலங்கையின் முல்லேரியாவில் அசித்த ஹேமதிலக்கவை காவல்துறையினர் சுற்றிவளைத்த நிலையில், அவர்கள் மீது கையெறி குண்டுகளை ஹேமதிலக்க வீசியுள்ளார். அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஹேம திலக்க சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது […]
இலங்கையில் கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதும், கடந்த ஜூலை மாதம் ஒரு சில பள்ளிகள் மட்டும் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்ததால், பள்ளிகள் திரும்பவும் மூடப்பட்டன. இந்த நிலையில் இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கல்வித்துறை செயலாளர் சித்ரானந்தா […]
இலங்கை தாதா அங்கொட லொக்கா உயிரிழப்பு தொடர்பான உடற்கூறு ஆய்வு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நிழலாக இருந்தவர் தாதா அங்கொட லொக்கா. அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கோவையில் பிரதீப் சிங் என்ற பெயரில் வசித்து வந்துள்ளார். கோவை காளப்பட்டியில் தனது காதலியுடன் வசித்து வந்த அவர், சென்ற மாதம் ஜூலை 4 ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் உடல் மதுரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் […]
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்துவரும் நிலையில், இந்தியப் பிரதமர் மோடி போனில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை அதிபராகப் பதவியேற்ற கோத்தபய ராஜபக்ச மார்ச் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இச்சூழலில், நேற்று முன்தினம் தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கையில் எப்போதும் தேர்தல் நடைபெற்ற அன்றே வாக்கு எண்ணிக்கை […]
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அண்டை நாடான இலங்கைக்கு கடத்த 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி அரசு பொறுப்பேற்றது. ஆட்சி காலம் முடிய இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் அதிபர் கோத்தபாய ராஜபக்சே நாடாளுமன்றத்தை திடீர் என்று கலைக்க உத்தரவிட்டு இதற்கான அரசாணையில் கையெழுத்திட்டார். இந்த அரசாணை அமைச்சரைவைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கையில் […]
இலங்கை நிழல் உலக தாதாவான சர்வதேச குற்றவாளி அங்கொட லொக்காவின் உடல் முறை கேடாக எரிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையின் நிழல் உலக தாதாவும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில், தொடர்புடையவரான, அங்கொட லொக்கா, தமிழகத்தில் பதுங்கி இருந்த நிலையில், கடந்த மாதம் நான்காம் தேதி கோவை சேரன் மாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது குடியுரிமையை மறைத்து, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த […]
இலங்கையில் போதைப்பொருள் கடத்திய பூனையை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் இருக்கின்ற சிறை ஒன்றில் புகுந்த பூனையின் கழுத்தில் ஒரு சிறிய பிளாஸ்டிக் பை இருப்பதை அதிகாரிகள் கவனித்துள்ளனர். அந்த பிளாஸ்டிக் பைக்குள் 2 கிராம் ஹெராயின், இரண்டு சிம்கார்டுகள் மற்றும் ஒரு மெமரி கார்டு ஆகியவை இருந்திருக்கின்றன. அதனால் அந்தப் பூனை சிறையில் இருக்கின்ற ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று சிறையிலிருந்து பூனை தப்பி […]
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஐந்தாம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்டிருக்கின்ற அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வருகின்ற 5ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி தேர்தல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல் தற்போது நடக்க உள்ளது. இலங்கையில் கொரோனா பாதிப்பு தற்போது வரை குறையாத காரணத்தால் மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு […]
இலங்கையில் கொரோனா நெருக்கடியை சமாளிக்க ரூ.3000 கோடி ஒப்பந்தத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கையெழுத்திட்டுள்ளது. இலங்கையில் அதிகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தகைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பரஸ்பர கரன்சி பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் ரூ.3000 கோடி மதிப்பிலான பணத் தொகையை இலங்கை பெறுவதற்கு முடிவு செய்திருந்தது. இதற்கான ஒப்பந்தத்தை விரைவில் கையெழுத்தாகும் என இலங்கை அமைச்சர் பந்துலா குணவர்தணை சென்ற ஏப்ரல் மாதத்தின் இறுதியில் கூறியிருந்தார். […]
இலங்கையில் தேவாலயங்கள் மீது நடந்த தாக்குதலில் தொடர்புடையவரின் மனைவி இந்தியாவிற்கு தப்பி வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 21 இல் நடைபெற்ற ஈஸ்டர் திருநாள் அன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் இருக்கின்ற மூன்று தேவாலயங்கள் மற்றும் சொகுசு விடுதிகள் மீது தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அத்தகைய சம்பவத்தில் 260 நபர்கள் உயிரிழந்தனர் மேலும் 500க்கும் மேலான மக்கள் காயமடைந்தனர். இத்தகைய தாக்குதல் தொடர்பாக 200க்கும் மேற்பட்ட நபர்களை இலங்கை காவல்துறையினர் கைது செய்து விசாரணை […]
கள்ளத் தோணியில் இலங்கைக்கு மஞ்சள் கடத்த முயன்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனாவால் இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் 2500 ரூபாய் விற்கப்படுகிறது. ராமேஸ்வரம் அடுத்த வேதாளை கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள் மிளகு போன்றவற்றை கடத்த உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் பிரத்தியோக செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் தனிப்படை ஒன்று அமைத்து காவல்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எனவே வாகனங்கள் அனைத்தையும் தீவிர பரிசோதனை செய்த பிறகே […]
கறுப்பர் கூட்டம் கந்தசஷ்டி கவச பாடலை கொச்சைப்படுத்தி வரும் விவகாரத்திற்கு தற்போது இலங்கை ஜெயராஜ் பதில் அளித்துள்ளார். “சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்” எனத்தொடங்கும் கந்த சஷ்டி கவசம் பாடல் கேட்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. இந்தப் பாடல் வரிகளில் விளக்கமானது தலையில் தொடங்கி பாதங்கள் வரை ஒவ்வொரு உறுப்பாக விவரித்து அதனை வேல்கள் காப்பதாக இருக்கும். இந்தப் பாடல்களில் ஒவ்வொரு உறுப்பையும் காக்க சொல்வது குறித்து கேலி செய்தும் விமர்சனம் செய்தும் […]
இலங்கையில் பிச்சை எடுப்பவரின் வங்கிக்கணக்கில் 14 கோடி ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டு அதுபற்றிய தகவல் வெளிவந்துள்ளது இலங்கை கொழும்பு புறநகர்ப் பகுதியில் பிச்சை எடுப்பவர் ஒருவரது வங்கி கணக்கில் 14 கோடி ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நடத்திய விசாரணையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. போதைப் பொருள் விற்பனை செய்யும் மர்வின் ஜானா என்பவருக்கு உரிய பணமே அந்த பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில் போடப்பட்டு உள்ளது. பிட்சைகாரரின் பெயரில் அத்திடிய தனியார் […]
பணத்திற்கு ஆசைப்பட்டு தன்னை திருமணம் செய்தவர் இறந்த நிலையில், அவரது குடும்பத்தினர் வைத்திருக்கும் தனது சில சொத்துக்களை பெற ஸ்காட்லாந்து பெண் வழக்கு தொடரவுள்ளார். ஸ்காட்லாந்தை சேர்ந்த டையன் என்ற பெண் 2012ஆம் வருடம் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த சமயம் தன்னை விட 35 வயது சிறியவரான ப்ரியஞ்சனா என்ற இளைஞனை சந்தித்துள்ளார். பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து ப்ரியஞ்சனாவிற்காக அதிக அளவு பணத்தை செலவு செய்யத் தொடங்கினார் டையன். பிரிட்டனில் தனக்கு […]
ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் மாதம் இலங்கையில் வைத்து நடத்தலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் யோசனை கூறியுள்ளார் மார்ச் மாதம் 29ஆம் தேதி நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த முன்னாள் இந்திய அணியின் கேப்டனான சுனில் கவாஸ்கர் “வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் ஐபிஎல் நடத்த முடியாது. காரணம் அது பருவமழை காலம். அதனால் செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இலங்கையில் வைத்து […]
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானித்தால் நாங்கள் பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 2020 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆரம்பிக்கப்பட இருந்தது. இதனிடையே கொரோனா அச்சம் காரணமாக தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.. ஆனால் கொரோனா தாக்கம் குறையாததால் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஐ.பி.எல். தொடரை கால வரையின்றி ஒத்திவைப்பதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தது. இந்தநிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் […]
ஸ்ரீலங்கன் விமான சேவை சீனர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் சட்ட சபை உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார். வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வராத ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், வெளிநாட்டில் சிக்கியிருக்கும் சீனர்களை விமான சேவை மூலம் மீட்டு அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் சீனர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது எனவும் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் சட்டசபை உறுப்பினர் வசந்த சமரசிங்க […]
கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியாவில் உள்நாட்டு பயன்பாட்டு பற்றாக்குறையாக மாறிவிடக் கூடாது என்பதால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டிற்க்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்து கொடுப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது. இதைத்தொடர்ந்து ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா அமெரிக்காவிற்கு கொடுத்து உதவி செய்தது. மேலும் இலங்கை அரசும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் […]
கொரோனா அச்சம் காரணமாக இலங்கை முழுவதும் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இலங்கை முழுவதும் […]
கொரோனா அச்சம் காரணமாக 3 நாட்களுக்கு இலங்கையில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா ஓட்டு மொத்த உலகையும் கொலை நடுங்க செய்து வருகிறது. 140க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 69 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கொரோனாவின் பிடியில் இலங்கையும் சிக்கிவிட்டது. இலங்கையில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி […]
இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிறைக்கைதிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. மேலும் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் […]
இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கும் கொரோனா இதுவரை 4600க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கின்றது. மேலும் 1 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு […]