Categories
உலக செய்திகள்

இலங்கையில் வெடித்த மாணவர்கள் போராட்டம்…. போலீஸ் நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக கொந்தளிப்புக்குள்ளான மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். அப்போது அதிபர் மாளிகை மற்றும் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடியனர். இதன் காரணமாக ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து அதிபராகயிருந்த கோத்தபயராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். இலங்கையில் புது அதிபராக ரணில் விக்ரம சிங்கே சென்ற மாதம் 21ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையில் ரணில் விக்ரம சிங்கே தலைமையிலான புது அரசு அமைந்தாலும், அதிபர் கோத்தபயராஜபக்சேவுக்கு […]

Categories
உலக செய்திகள்

“பொருளாதார நெருக்கடி” இலங்கைக்கு வருகை புரியும் சர்வதேச நிதிய குழு…. வெளியான முக்கிய தகவல்….!!!

இலங்கைக்கு கடன் கொடுப்பதற்கு ஐஎம்எப் முடிவு செய்துள்ளது. இலங்கையில் அன்னிய செலவாணி பற்றாக்குறையினால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் நாட்டு அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை அரசு ஐஎம்எப் இடமிருந்து கடன் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக நிதி மந்திரி அலி சாப்ரி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அமெரிக்காவுக்கு சென்று ஐஎம்எப் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு ஐஎம்எப் நிபந்தனைகளுக்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டதால் […]

Categories
உலக செய்திகள்

“தாய்லாந்தில் தஞ்சம் புகுந்த கோத்தபாய ராஜபக்சே”… அடுத்த வாரம் இலங்கை திரும்புகிறார்…!!!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கடும் அவதிக்கு ஆளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக  இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே  காரணம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கடந்த மாதம் தொடக்கத்தில் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து ஜூலை 13ஆம் தேதி கோத்தபாய ராஜபக்சே குடும்பத்துடன் மாலத்தீவுக்கு தப்பி ஓடி உள்ளார். அதன் பின் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சிங்கப்பூரிலிருந்து அவரது […]

Categories
உலக செய்திகள்

இலங்கையும், இந்தியாவும் ஒரு நாணயத்தின் 2 பக்கங்கள்…. அதிபர் ரணில் விக்ரமசிங்கே புகழாரம்….!!!!

இந்தியா இலங்கைக்கு ட்ரோனியர் விமானத்தை வழங்கி உள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கட்டுநாயக்க சர்வதேச விமானப்படை தளத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா ட்ரோனியர் விமானத்தை இலங்கைக்கு வழங்கியது. இந்த விமானம் கடல் சார் கண்காணிப்பு திறனை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கலந்து கொண்டு பேசினார். அவர் முன்னாள் பிரதமர் நேரு இலங்கைக்கு செய்த உதவிகள் குறித்து கூறினார். அதன்பிறகு இலங்கையும், இந்தியாவும் ஒரு நாணயத்தில் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

இலங்கைக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி…. வாரி வழங்கிய ஓபிஎஸ்…..!!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டிற்கு தமிழக அரசின் சார்பாக நிதி உதவி வழங்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து தனது குடும்பத்தின் சார்பில் 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அப்போது அறிவித்தார். இந்நிலையில் சட்டசபையில் அளித்த வாக்குறுதியின் படி தனது மூத்த மகன் ரவீந்திரநாத் மற்றும் இளைய மகன் ஜெயப்பிரதீப் வங்கி கணக்கில் இருந்து தலா 25 லட்சம் என மொத்தம் […]

Categories
உலக செய்திகள்

“புதிய பங்களிப்பாக இந்தியா வழங்கும் டோர்னியர் விமானம்”…. இந்திய தூதர் கோபால் பாக்லே பேச்சு….!!!!!

கடந்த 2018 ஆம் வருடம் இந்தியா இலங்கை இடையே டெல்லியில் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கடல் பகுதி கண்காணிப்புக்கான இரண்டு டோர்னியர் விமானங்களை வழங்க வேண்டும் என இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சூழலில் இலங்கை கடற்படைக்கு ஒரு டோர்னியர் விமானத்தை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ளது. கொழும்பு  சர்வதேச விமான நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள இலங்கை விமானப்படை தளத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அந்த நாட்டு அதிபர் ரணில் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் கடற்படையில் இலங்கை இணையப்போகிறதா….? வெளியான பரபரப்பு தகவல்….!!!!

போர் பயிற்சி தொடர்பாக பரவிய தகவல்களுக்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள அம்பந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் உளவு கப்பலான யுவான்‌ வாங்-5 நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் போர்க்கப்பலான பி.என்.எஸ் தைமூர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் சீனாவில் கட்டப்பட்டது. இதனையடுத்து தற்போது பாகிஸ்தான் நாட்டின் போர்க்கப்பலும் இலங்கை அரசும் சேர்ந்து கூட்டாக போர் பயிற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இலங்கை கடற்படை மறுப்பு தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி…. தமிழ் அமைப்புகள் மீதான தடை ரத்து…. வெளியான அறிவிப்பு….!!

தமிழ் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது. இலங்கையில் வாழும் பல்வேறு மக்கள் இனப் பிரச்சனை காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெவ்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு விதமான அமைப்புகளை தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பிற நாடுகளில் வசிக்கும் இலங்கை வாழ் தமிழர்களிடம் அரசாங்கம் உதவி கோரியுள்ளது. இதன் காரணமாக தமிழ் அமைப்புகளின் மீதான தடையை […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு நாங்கள் போர் விமானங்களை வழங்குவோம்…. வெளியான தகவல்….!!!!

இலங்கை நாட்டிற்கு 2 டோர்னியர் 228 ரக ராணுவ விமானங்களை இந்தியா விரைவில் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி அந்நாட்டு மக்களை அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்குகூட இன்னல் அடையும் நிலைமைக்கு தள்ளி இருக்கிறது. அதுமட்டுமின்றி மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அடுத்தடுத்த அரசியல் தலைவர்களின் பதவி ராஜினாமா போன்ற காரணங்களாலும் இலங்கையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே நிலவி வருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் 2 ராணுவ விமானங்களை அந்நாட்டுக்கு பரிசாக வழங்க இந்தியா முடிவுசெய்து […]

Categories
தேசிய செய்திகள்

இலங்கைக்கு 2 விமானங்கள்….. பரிசாக வழங்கும் இந்தியா….. வெளியான தகவல்….!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை அதிலிருந்து மீளுவதற்கு முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இலங்கைக்கு இந்தியா கடன் உதவியும் அளித்து வருகின்றது. இந்நிலையில் இலங்கைக்கு இரண்டு ராணுவ விமானங்களை இந்தியா பரிசாக வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி பிரிஸ், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவின் டார்னியர் ராணுவ […]

Categories
உலக செய்திகள்

இலங்கை வராத சீன உளவு கப்பல்…. என்ன காரணம் தெரியுமா?…. லீக்கான தகவல்….!!!!

சீன உளவுகப்பல் யுவான் வாங்-5 சென்ற 11ஆம் தேதி இலங்கையின் அம்பந்தொட்டை துறைமுகத்துக்கு வருவதாக இருந்தது. அத்துடன் 17-ஆம் தேதிவரை அங்கேயே நங்கூரமிட்டு நிறுத்தப்படும் என கூறப்பட்டது. எரிப்பொருள் நிரப்புதல் ஆகிய காரணங்களுக்காக அந்த கப்பல் வருவதாக கூறப்பட்டது. எனினும் அது உளவு பார்க்க வாய்ப்பு இருப்பதாக அதன் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் கப்பலின் வருகையை தள்ளிப்போடும்படி சீனாவிடம் இலங்கை தெரிவித்தது. இருப்பினும் அதற்குள் அந்த கப்பல் இந்திய பெருங்கடலில் நுழைந்துவிட்டது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை, இந்தியாவிலிருந்து ஊழியர்களை தேர்ந்தெடுங்கள்… பிரிட்டன் சுகாதார செயலர் அறிவிப்பு…!!!

பிரிட்டன் நாட்டின் புதிய சுகாதாரச் செயலர், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் சுகாதாரத் துறை ஊழியர்களை உடனே வரவழையுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார். பிரிட்டன் நாட்டின் சுகாதாரச் செயலராக பதவியேற்று இருக்கும் Steve Barclay, பிற நாடுகளில் இருந்து சுகாதாரத் துறைக்கு ஊழியர்களை தேர்ந்தெடுக்க விரைவாக பணியாற்றுங்கள் என்று அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதில், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில் அவர் கவனமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், செவிலியர் […]

Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து வெளியேறிய கோட்டபாய ராஜபக்சே…. தாய்லாந்தில் தஞ்சமடைந்ததாக தகவல்…!!!

இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே சிங்கப்பூரிலிருந்து நேற்று வெளியேறிய நிலையில் தாய்லாந்தில் தஞ்சமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்ததால் அப்போது அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பினார். சிங்கப்பூரில் ஒரு மாதம் தங்கியிருந்த அவர், அந்நாட்டில் தங்கக்கூடிய கால அவகாசம் முடிந்ததால் அங்கிருந்து நேற்று வெளியேறி விட்டார். இதைத்தொடர்ந்து தாய்லாந்து நாட்டிற்கு சென்றிருக்கிறார். தாய்லாந்து அரசு, தற்காலிகமாக அவர் தங்கள் நாட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்கி இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: தமிழக மீனவர்களை உடனே மீட்டு கொடுங்க; மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம் ..!!

இலங்கை கடற்படை கைது செய்த 9 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார். கடந்த பத்தாம் தேதி நாகையைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார். எல்லை தாண்டி மீனை மீன்பிடித்ததாக கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது,  நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தி சிறையில் அடைத்து இருக்கிறார்கள். அந்த 9 மீனவர்களையும் விடுவிக்க […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து ஓடும் ராஜபக்சே…. சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஜூலை 9 ஆம் தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். இருப்பினும் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபய தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு […]

Categories
உலக செய்திகள்

“தடையை மீறி இலங்கை துறைமுகத்துக்கு நுழைந்த சீன உழவு கப்பல்”…. சீனா எச்சரிக்கை…!!!!!

உளவு  கப்பல் விவகாரத்தில் இந்தியா தேவை இல்லாமல் தலையிட வேண்டாம் என சீனா  எச்சரிக்கை எடுத்துள்ளது. சீனா தனது யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சி கப்பலை இலங்கையின் ஹம்பன் தொட்டா துறைமுகத்தில் ஆறு நாட்கள் நிறுத்தி செயற்கைக்கோள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு இலங்கை அரசும் ஒப்புதல் அளித்தது இதற்கிடையே சீனா ஆராய்ச்சி கப்பல் என்று கூறுவது உண்மையில் ஒரு உலக கப்பல் எனவும் அது இலங்கையில் நிறுத்தப்படுவது இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் […]

Categories
உலக செய்திகள்

100 நாட்களைக் கடந்து நடைபெற்ற போராட்டம்….. முடிவுக்கு வந்தது எதற்காக….? இதோ முழு தகவல்…..!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் ராஜபக்சே குடும்பத்தினர் தான் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக பொதுமக்கள் ராஜபக்சே குடும்பத்தினரை அனைத்து பதவிகளில் இருந்தும் விலக வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் கோத்தபய தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்று அங்கிருந்து பின் சிங்கப்பூருக்கு சென்றார். […]

Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார் கோட்டபய ராஜபக்சே..!!

சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்சே தாய்லாந்துக்கு பயணம் செய்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அங்கு போராட்டங்கள் வெடித்த நிலையில், முன்னாள் அதிபராக இருந்த கோட்டப்பய ராஜபக்ச சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்து இருந்தார். இந்நிலையில் தற்போது சிங்கப்பூரிலிருந்து அவர், தாய்லாந்து சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விசா காலம் முடிந்ததால் சிங்கப்பூரிலிருந்து அவர் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் போர்க்கப்பலை நிறுத்த… அனுமதி வழங்கிய இலங்கை…!!!

இலங்கை அரசு, சீனாவின் தயாரிப்பான பாகிஸ்தான் தைமூர் போர்க்கப்பலை தங்கள் துறைமுகத்தில் நிறுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு, சீன உளவுக்கப்பலை ஹம்பந் தோட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கியது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், அதனை பொருட்படுத்தாமல், சீனா தங்களின் கப்பலை இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது. இந்நிலையில் சீனா, பாகிஸ்தான் நாட்டிற்காக பி.என்.எஸ் தைமூர் கப்பலை தயாரித்திருக்கிறது. வரும் 15ஆம் தேதி அன்று இந்த கப்பலை கராச்சிக்கு  அனுப்ப சீனா திட்டமிட்டு இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

இலங்கை பிரச்சனையில் இந்தியா தேவையின்றி தலையிடக்கூடாது… எச்சரிக்கும் சீனா…!!!

தங்கள் நாட்டின் உளவு கப்பல் இலங்கை நாட்டிற்கு வருவதுதற்கு, இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால் சீனா எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சீன அரசு தங்கள் நாட்டின் யுவான் வாங் 5 என்னும் போர்க்கப்பல் இலங்கையின் ஹம்பன்தொட்டா துறைமுகத்தில் ஆறு நாடுகளுக்கு நிறுத்தப்பட்டு செயற்கைக்கோள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபடும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இலங்கை அரசு, அதற்கு அனுமதி வழங்கியது. ஆனால், இந்தியா, சீனாவின் உளவு கப்பலால் எங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று இலங்கை அரசிடம் தெரிவித்தது. அதன் பிறகு, […]

Categories
உலக செய்திகள்

தப்பி ஓடும் கோத்தபய ராஜபக்சே….. மாலத்தீவு, சிங்கப்பூர் அடுத்து எங்க தெரியுமா?…… வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஜூலை 9 ஆம் தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். இருப்பினும் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபய தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு […]

Categories
உலக செய்திகள்

காலி முகத்திடலில் இருந்து வெளியேறும் மக்கள்…. புது வடிவில் போராட்டம் நடத்த முடிவு…. வெளியான அறிவிப்பு…..!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் ராஜபக்சே குடும்பத்தினர் தான் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக பொதுமக்கள் ராஜபக்சே குடும்பத்தினரை அனைத்து பதவிகளில் இருந்தும் விலக வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் கோத்தபய தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்று அங்கிருந்து பின் சிங்கப்பூருக்கு சென்றார். […]

Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து வெளியேறும் கோத்தப்பய….. தாய்லாந்தில் தஞ்சமடைவதாக தகவல்…..!!!!

கோத்தப்பய தாய்லாந்தில் தஞ்சமடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கொண்டு வந்தனர். இதன் காரணமாக கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் இலங்கையை விட்டு வெளியேறி மாலத்தீவில் தஞ்சம் அடைந்தார். அங்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மாலத்தீவில் இருந்து கோத்தப்பய சிங்கப்பூருக்கு சென்றார். இங்கிருந்து […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: இவர்களுக்கு ராமாயண ரயில் சேவை…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணவும், அன்னிய செலாவணி கையிருப்பை மேம்படுத்தவும் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக சுற்றுலாத் துறையை சீரமைக்க முடிவுசெய்துள்ளது. அந்த வகையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது, ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களை இந்திய சுற்றுலா பயணிகளுக்கு சுற்றிகாட்டுவதற்காக சிறப்பு ரயில் சேவையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. ராமாயண பாரம்பரியத்தின்படி பகிரப்பட்ட கலாசார மற்றும் மத மதிப்பீடுகளை மேம்படுத்துவதில் இணைந்து பணிபுரிய சென்ற 2008 […]

Categories
உலக செய்திகள்

264% மின்கட்டண உயர்வு…. இலங்கையில் இன்று முதல் அமல்….!!!!

இலங்கையில் வரலாறு காணத அளவிற்கு, மின்கட்டணத்தை 264% உயர்த்தியுள்ளது அந்நாட்டு மின்சார வாரியம். கடந்த 9 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவிற்கு மின் கட்டண விலை உயர்ந்துள்ளது. இந்த மின் கட்டண உயர்வானது, மிகவும் குறைந்த அளவில் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படும் என கூறப்படுகிறது. இன்று முதல் இந்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என இலங்கை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

Categories
உலக செய்திகள்

OMG: இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு….. மின்கட்டணம் உயர்வு….!!!!

இலங்கையில் வரலாறு காணத அளவாக, மின்கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த அந்நாட்டு மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவாக இந்த விலை உயர்வு உள்ளது. இந்த மின் கட்டண உயர்வானது, மிகவும் குறைந்த அளவில் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதிக சிரமத்தையும், அதே வேளையில் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு குறைந்த அளவில் விலை உயர்வு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் எதிர்ப்பை மீறி… இலங்கைக்கு வரும் சீன கப்பல்…. வெளியான தகவல்…!!!

இலங்கையின் கோரிக்கையை மீறி, சீன நாட்டின் கப்பல் ஹம்பந்தோட்டா என்னும் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா தங்களின் யுவான் வாங்-5 என்னும் போர்க்கப்பலானது, இலங்கை நாட்டின் தென் பகுதியில் இருக்கக்கூடிய ஹம்பந்தோட்டா துறைமுகத்திற்கு வரவுள்ளது என்று அறிவிப்பை வெளியிட்டது. மேலும் அந்த கப்பல் இம்மாதம் 11ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை அந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, செயற்கைக்கோள் தகவல்களை திரட்டுவது குறித்த ஆய்வுகளில் ஈடுபடும் என்று கூறியது. ஆனால், சீனாவிலிருந்து வரும் அந்த கப்பல், உளவு […]

Categories
உலக செய்திகள்

ராமேஸ்வர மீனவர்களின் விசைப்படகுகள் அரசுடைமையாக்கப்பட்டது…. நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

இலங்கை நாட்டின் கிளிநொச்சி நீதிமன்றம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை அரசுடைமையாக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி அன்று மீன்பிடிப்பதற்காக சென்றனர். அப்போது எல்லை பகுதியை கடந்து மீன் பிடித்ததாக விசைப்படகுடன் சேர்த்து கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். எனவே, விசைப்படகுகளின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. எனினும், உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், பல லட்சங்கள் மதிப்பு கொண்ட அந்த விசைபடகுகளை கிளிநொச்சி நீதிமன்றம் அரசுடைமைக்குவதாக […]

Categories
உலக செய்திகள்

“பிராந்திய ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் நிறைய அரசியல் உள்ளது”….. ரணில் விக்ரமசிங்கே கருத்து…!!!!!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கையை மீட்பதற்கு அந்த நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பொதுமக்களின்   தொடர் போராட்டங்களால் அங்கு ஆட்சி கலைக்கப்பட்டிருந்த நிலையில் அதிபராக இருந்த கோத்தபய  ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதனை அடுத்து இலங்கையில் அதிபராக பதவி ஏற்ற ரணில் விக்ரமசிங்கே  பொருளாதார நெருக்கடியில் சரி செய்யும் முயற்சியில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இதற்கு இடையே இலங்கை அரசிற்கு இந்தியா சார்பில்  இதுவரை 5 மில்லியன் […]

Categories
உலக செய்திகள்

“சீன கப்பல் வருகையை முன்னெடுத்து போக வேண்டாம்”…. வெளியுறவுத்துறை அமைச்சகம் கோரிக்கை….!!!!

இலங்கை நாட்டின் தென் பகுதியிலுள்ள ஹம்பந்தோட்டா ஆழ்கடல் துறைமுகமானது, சீனாவிடம் கடன்பெற்று மேம்படுத்தப்பட்டது. அக்கடனை திருப்பி செலுத்த முடியாததால், அந்த துறைமுகத்தை சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு அளித்துள்ளது. இதற்கு இந்தியாவானது கடும் எதிர்ப்பை அப்போது பதிவு செய்திருந்தது. இதனிடையில் சீனாவின் “யுவான் வாங்-5” எனும் உளவுகப்பல், ஹம்பன்தொட்டா துறைமுகத்துக்கு வருவதாக தகவல் வெளியாகியது. செயற்கைகோள் கண்காணிப்பு, கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வசதிகள் போன்றவற்றை கொண்டதாக கூறப்படும் சீனாவின் அதிநவீன உளவு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதிக்கு […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1 வருடமாகும்…. அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்…!!!!

பொருளாதார நெருக்கடியானது ஒரு வருடத்திற்கு நீடிக்கும் என அதிபர் கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதோடு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடி தொடர்பாக தலைநகர் கொழும்புவில் 2 நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கம் முடிவடைந்த பிறகு அதிபர் ரணில் விக்ரமசிங்கே செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் அடுத்த 6 மாதம் முதல் 1 வருடத்திற்கு நாம் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சே… சிங்கப்பூரில் 2 வாரங்கள் தங்குகிறாரா?… வெளியான தகவல்…!!!

இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே மேலும் 14 நாட்களுக்கு சிங்கப்பூரில் தங்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இலங்கையில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டவுடன் அங்கிருந்து தப்பிய கோட்டபாய ராஜபக்சே குடும்பத்தினருடன் மாலத்தீவிற்கு சென்றார். அங்கிருந்து அவர் சிங்கப்பூர் சென்றதாக தகவல் வெளியானது. சிங்கப்பூர் அரசு, அவர் தங்கள் நாட்டில் இரண்டு வாரங்கள் தங்க அனுமதியளித்தது. எனினும், அவருக்கு நாங்கள் அரசியல் தஞ்சம் அளிக்கவில்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் அவரின் விசா காலம் வரும் 11ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: பொதுமக்கள் போராட்டம்…. காவல்துறையினரை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு….!!!

போராட்டக்காரர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் ராஜபக்சே குடும்பத்தினர் தான் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக பொதுமக்கள் ராஜபக்சே குடும்பத்தினரை அனைத்து பதவிகளில் இருந்தும் விலக வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் கோத்தபய தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்காக ஆதரவு தெரிவித்த பிரிட்டன் பெண்…. பாஸ்ப்போர்ட்டை கைப்பற்றிய அதிகாரிகள்…!!!

பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் இலங்கையில் வசித்து வரும் நிலையில், போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததால் அவரின் பாஸ்போர்ட் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஸ்காட்லாந்தை சேர்ந்த கெய்லீ ஃப்ரேசர் என்ற பெண் இலங்கையில் வசித்து வருகிறார். அவர், இலங்கையில் நடக்கும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அந்நாட்டு மக்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், அவரின் குடியிருப்பிற்கு சென்ற அதிகாரிகள் அவரின் பாஸ்போர்ட்டை கைப்பற்றினார்கள். இது குறித்து கெய்லீ ஃப்ரேசர் தெரிவித்ததாவது, அதிகாரிகள் என் பாஸ்போர்ட்டை கேட்டார்கள். தரவில்லை என்றால் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் பதற்றம்…. தொடர்ந்து கரை ஒதுங்கிய 3 சடலங்கள்…!!!

இலங்கையின் காலி முகத்திடல் கடற்கரையில் அடுத்தடுத்து மூன்று இளைஞர்களின் உடல்கள்  கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி அன்று காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் குடில்கள் நீக்கப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தின் முன்னணியாளர்கள் கைதானார்கள். இந்நிலையில் கடந்த 26ம் தேதி அன்று அந்த பகுதியில் 35 வயதுடைய ஒரு இளைஞரின் சடலம் கரை […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: போராட்டக்காரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்…. காவல்துறையினர் கடும் எச்சரிக்கை….!!!

போராட்டக்காரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இலங்கை நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதன் காரணமாக கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றார். அங்கிருந்து மறுநாள் சிங்கப்பூருக்கு சென்ற கோத்தப்பய தன்னுடைய அதிபர் […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை சிறையிலிருந்து….. ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை….. வெளியான தகவல்….!!!!

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 21ம் தேதி 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 6 மீனவர்களை கைது செய்தனர். அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். அவர்களை ஆகஸ்ட் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து 6 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 6 மீனவர்களையும் விடுதலை செய்து மன்னார் […]

Categories
உலக செய்திகள்

“உரிய நேரத்தில் உதவிக்கரம் நீட்டிய இந்தியா”…. நன்றி சொன்ன இலங்கை அதிபர்….!!!!

இலங்கை நாடாளுமன்றம் 7 நாள் இடைவெளிக்கு பின் நேற்று மீண்டுமாக கூடியது. அப்போது புதிய அதிபர் ரணில் விக்ரம சிங்கேவுக்கு நாடாளுமன்ற வாயிலில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சபா நாயகர் மகிந்த யாபா அபயவர்த்தனா, நாடாளுமன்ற செயலாளர் தம்மிகா தசநாயகா போன்றோர் வரவேற்றனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் இலங்கை அரசின் கொள்கை அறிக்கையை வெளியிட்டு ரணில் விக்ரம சிங்கே பேசினார். அதாவது அவர் பேசியதாவது  “இலங்கை பொருளாதாரத்தை நவீனப்படுத்த வேண்டும். இனி வெளிநாட்டு […]

Categories
உலக செய்திகள்

இக்கட்டான சூழலில் உதவி…. பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி… -ரணில் விக்ரமசிங்கே…!!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இக்கட்டான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு உதவிகள் அளித்ததற்கு நன்றி கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால், அந்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பல இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே தீவிர போராட்டங்களில் களமிறங்கினர். நெருக்கடி அதிகரித்ததால் அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டில் இருந்து தருப்பினார். அதன் பிறகு, ரணில் விக்ரமசிங்கே நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் நிதி நெருக்கடிக்கு எதிரான மக்களின் போராட்டம் அடங்கவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

எரிபொருள் தட்டுப்பாட்டை போக்க புதிய திட்டம்…. இலங்கை அரசு அறிவிப்பு….!!!!!!!

இலங்கையில் மீண்டும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து இருக்கின்றது. கொரோனா பெருந்தொற்றுக்கு  பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அன்னிய செலவாணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவு வருகிறது. நிலக்கரி வாங்க பணமில்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் மின் வெட்டு அமலில் […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் உளவு கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி…. இந்தியாவிற்கு குடைச்சல் கொடுக்கும் சீனா….!!!!!!

அம்பத்தோட்ட துறைமுகத்தில் சீனாவில் உளவு கப்பலை நிறுத்துவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியிருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கருமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்ததை அடுத்து கோத்தபய ராஜபக்சே, மகேந்திர ராஜபக்சே அதிபர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். கோத்தபய நாட்டை விட்டே ஓடிவிட்டார். இந்த நிலையில் இலங்கைக்கு ஏற்கனவே கடன் மேல் கடன் கொடுத்து இங்குள்ள அம்ப  தோட்டத்து துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு எடுத்திருக்கின்ற சீனா இங்கிருந்து இந்தியாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

மகிந்த ராஜபக்சேவின் நாட்டைவிட்டு வெளியேற தடை நீட்டிப்பு…. உச்சநீதிமன்றம் அறிவிப்பு…!!!

இலங்கையின் முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியதால் அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பினார். தற்போது அவர் சிங்கப்பூரில் இருக்கிறார். இதனைத்தொடர்ந்து நாட்டின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இந்நிலையில் முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்சே, நாட்டை விட்டு நாளை வரை வெளியேறக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

கோட்டபாய நாடு திரும்ப இது சரியான நேரம் கிடையாது…. -ரணில் விக்ரமசிங்கே…!!!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாடு  திரும்புவதற்கு இது சரியான நேரம் கிடையாது என்று கூறியிருக்கிறார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து நாட்டில் வன்முறை வெடித்தது. இதனைத்தொடர்ந்து அதிபர் கோட்டாபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பி, ராணுவ ஹெலிகாப்டரில் மாலத்தீவிற்கு சென்று, அதன் பின்பு சிங்கப்பூருக்கு சென்று விட்டார். அங்கிருந்து கொண்டு தன் ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். இதனைத்தொடர்ந்து அவர் விரைவில் நாடு திரும்ப இருப்பதாக நாடாளுமன்ற பேச்சாளரான பந்துல குணவர்த்தன கூறியிருந்தார். […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: எனக்கு வீடு இல்லை… போராட்டக்காரர்களுக்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்கே….!!!!!

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் நிதிநெருக்கடியை தொடர்ந்து சென்ற சில மாதங்களாக அந்நாடு போராட்டத்தில் சிக்கி உருக்குலைந்து போயுள்ளது. இறக்குமதியாககூடிய பொருட்களை வாங்ககூட போதிய நிதி வசதி இல்லாத நிலையில், உணவு, எரிபொருள், உரம் ஆகிய பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளது. கிடைக்கும் பொருட்களை வாங்ககூட மக்கள் நாள்கணக்கில் நீண்ட வரிசையில் நின்று பெற்று செல்லகூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே […]

Categories
உலக செய்திகள்

கடும் நெருக்கடியில் இலங்கை… உணவு பணவீக்கம் 90.0%-ஆக அதிகரிப்பு…!!!

இலங்கையில் பணவீக்கம் 60.8% மற்றும் உணவிற்கான பண வீக்கம் 90.9% அதிகரித்திருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு சுமார் 63 லட்சம் மக்கள் உணவுக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும், விலையற்றம் பல மடங்காக அதிகரித்து இருக்கிறது. எரிபொருளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மக்கள் பல நாட்களாக எரிபொருள் வாங்க காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: அதிபர் மாளிகையில் எடுக்கப்பட்ட ரூ. 17.85 மில்லயன் டாலர்…. நீதிமன்றத்தில் ஒப்படைப்பு….!!!!

அதிபர் மாளிகையில் இருந்து எடுக்கப்பட்ட பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபரை பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்கள் கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அப்போது அதிபர் மாளிகையில் இருந்து கோடிக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டது. இந்த பணத்தை போராட்டக்காரர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அதிபர் மாளிகையில் எடுக்கப்பட்ட ரூ. 17.85 மில்லியன் டாலர் பணத்தை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு நிதியுதவி கிடையாது…. திட்டவட்டமாக மறுத்த உலக வங்கி…!!!

இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் நிலையில், உலக வங்கி அந்நாட்டிற்கு நிதியுதவி அளிக்கப் போவதில்லை என்று உறுதியாக மறுத்திருக்கிறது. இலங்கை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், உலக வங்கியும் நிதியுதவி அளிக்கப் போவதில்லை என்று உறுதியாக மறுத்துவிட்டது. இது பற்றி உலக வங்கி தெரிவித்ததாவது, இலங்கை நீடித்த பொருளாதாரத்திற்குரிய திட்டங்களை சரியாக வகுக்க வேண்டும். அதுவரை, அந்நாட்டிற்கு உதவி வழங்கப்படாது. எனினும், […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கும் வரும் கோத்தபய ராஜபக்சே…. சந்திக்க போகும் பிரச்சனைகள்…. வெளியான தகவல்….!!!

முன்னாள் அதிபர் விரைவில் நாடு திரும்புவார் என கூறப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி தற்போது சிங்கப்பூரில் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்….. ஆகஸ்ட் 14ம் தேதி வரை நீட்டிப்பு…..!!!!

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டதும் அவரும் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் இலங்கையில் மீண்டும் அவசர நிலையை ரணில் விக்ரமசிங்க கடந்த ஜூலை 19 ஆம் தேதி அறிவித்தாா். அதன்பின், நடந்த முடிந்த அதிபர் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க முதல்முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை முன் ரணில் பதவி […]

Categories
உலக செய்திகள்

மக்கள் அமைதி வழியில் போராட வேண்டும்…. அதிபர் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை…!!!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நாட்டு மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இலங்கை கடும் நெருக்கடியான நிலையில் இருக்கிறது. இந்நிலையில், அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அதன்பிறகு, போராட்டக்காரர்கள் அவரின் அரசையும் எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது பற்றி அவர் தெரிவித்ததாவது, நாட்டின் சட்டன் அடிப்படையில் அனைத்து மக்களும் அமைதியான வழியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி இருக்கிறது. நாட்டில் அமைப்பை மாற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தை நடத்தும் இளைஞர்கள் கோரிக்கை […]

Categories

Tech |