டெல்லியில் 18 வயது முதல் 59 வயதுடையவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை டோஸை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. தலைநகரில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 18 வயது முதல் 59 வயதுடையவர்கள் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதற்காக கோவின் இணையத்தளத்தின் தேவையான மாற்றங்கள் அனைத்தும் செய்யப்பட்டு உள்ளதாகவும் இணையதளம் […]
Tag: இலவசம்
வண்ண வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அலுவலகத்தில் “கியோஸ்க்”அமைப்பு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்தல் பிரிவு அலுவலகங்களில் நாம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை அதிகாரிகள் பரிசீலனை செய்து ஒப்புதல் வழங்கியது வண்ண வாக்காளர் அடையாள அட்டை வீடு தேடி வினியோகிக்கும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. அதனைப்போலவே அடையாள அட்டை தொலைந்தால் அல்லது சேதம் அடைந்தால் பழைய கருப்பு வெள்ளை […]
மாமல்லபுரம் புராதன சின்னங்களை பொதுமக்கள் இன்று இலவசமாக கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பண்டைய காலத்து பாரம்பரியம் மற்றும் கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை போன்ற […]
கோயில் நகரமான மதுரை, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்கள் தொல்லியல் சுவடுகளை சுமக்கும் தொன்மையின் சிகரமாக விளங்குகிறது. இந்த பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கவும், அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும் உலகம் முழுவதும் இன்று பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இந்த உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதான சின்னங்களை இன்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகள் இலவசமாக சுற்றி பார்க்க தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 3-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் திடீரென தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அலை தாக்காமல் இருக்க தனியார் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தலைநகர் டெல்லியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. எனவே […]
நேற்று முன்தினம் 2-வது முறையாக பிரமோத் சாவந்த் கோவா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் எம்எல்ஏக்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் புதிய அமைச்சரவையின் முதல் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிரமோத் சாவந்த் தனது டுவிட்டர் பதிவில், “அமைச்சரவை 3 இலவச சிலிண்டர் விநியோக திட்டத்தை புதிய நிதியாண்டு முதல் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். கோவா சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு […]
மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலா பயணிகள் புராதான சின்னங்களை இலவசமாக கண்டுகளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெண்களின் மகத்தான சாதனைகளை போற்றும் வகையில் சர்வதேச அளவில் மார்ச் 8ஆம் தேதி பெண்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு அரசு சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் மிக முக்கிய மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்தில் […]
இன்றைய காலகட்டத்தில் ஆணுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். ஆண்களுக்கு தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்று போட்டியாக அனைத்து துறைகளிலும் அவர்கள் சாதித்து வருகின்றனர். தங்களுடைய ஈடு இணையற்ற உழைப்பின் காரணமாக அன்பால், தியாகத்தால் சமூக வளர்ச்சியில் அளப்பரிய களப்பணி ஆற்றும் இந்த உலகத்தை இயக்கும் அச்சாணியாக பெண்கள் திகழ்கின்றனர். இந்த பெருமைக்குரிய பெண்களை போற்றும் விதமாக இன்று (மார்ச் 8ஆம் தேதி) ஒவ்வொரு வருடமும் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு […]
மகளிர் தினத்தையொட்டி அனைத்து பயணிகளுக்கும் இலவச பயணத்தை வழங்குவதாக மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது பெண்கள் தங்களின் வாழ்வில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்கின்றனர். இத்தகைய பெருமைக்குரிய பெண்ணினத்தை போற்றும் வகையில் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் மகளிர் தினத்தை ஒட்டி மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என கொச்சி மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அனைத்து பயணிகளுக்கும் வரம்பற்ற இலவசப் பயணத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் மார்ச் 8 […]
நாடு முழுவதும் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதனால் தேர்தல் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் கோவாவில் வருகின்ற 14ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் அறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் நிதின்கட்கரி வெளியிட்டார். அதில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு உயர்த்த மாட்டோம் என்றும், எல்பிஜி சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு இனிமேல் 3 […]
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்த தடுப்பூசியை மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில நாடுகளில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் வருகின்ற 19ஆம் தேதி முதல் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று வெள்ளை […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில், தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு விதித்து, பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். மேலும் பொதுமக்கள் பொருளாதார ரீதியாகவும் சிரமப்பட்டு வந்தனர். தற்போது அரசின் கடுமையான முயற்சியாலும், தடுப்புசி மீது மக்கள் ஆர்வம் செலுத்தியதாலும், கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த […]
ஆம்பூர் பிரியாணி கடையில் இரண்டு பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம், ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் என்று அதிரடி சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சொத்துபாக்கத்தில் இயங்கிவரும் ஆம்பூர் பிரியாணி கடையில் இன்று ஒரு நாள் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முழு பிரியாணி இரண்டு வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம், அதேபோல் ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் பிரியாணி இலவசம் போன்ற சலுகையை அறிவித்து […]
மேல்மருவத்தூர் அருகே சோத்துபாக்கம் பகுதியில் ஆம்பூர் பிரியாணி கடை ஒன்று உள்ளது. அந்த பிரியாணி கடையில் ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு கிலோ சிக்கன் பிரியாணி இலவசம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனைப் போலவே 2 கிலோ சிக்கன் பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தக்காளி விலை தமிழகத்தில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வித்தியாசமானதாக உள்ளது. மக்களை கவரும் வகையில் […]
கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட கருப்பு பூஞ்சைத் தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, கோவை அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரை காப்பாற்றியுள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்தவர் கோவிந்தராஜன். அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பின்னர் கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு, அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருப்பு பூஞ்சைத் தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து […]
நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு பல நிறுவனங்களும் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் உள்ளிட்ட அறிவிப்புகளை மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படவுள்ள நிலையில் […]
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி தனது வாடிக்கையாளர்களுக்கு 71 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலை இலவசமாக வழங்குகிறது. இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையைப் பெறலாம். சிட்டி பேங்க் கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்கள் 71 லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெற முடியும். சிட்டி பேங்க் பிளாட்டினம் […]
இந்தியாவில் உஜ்வாலா யோஜனா 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தில் தற்போது வரை பெரும்பாலான மக்கள் பயனடைந்துள்ளனர். இதில் மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்குவதோடு, நிரப்பப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்பு ஆகியவை கொடுக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் pmuy.gov.in என்ற இணையதளம் மூலம் இணையலாம். மானியத்தை பெறுவதற்காக பிபிஎல் கார்டு, வங்கியில் சேமிப்பு கணக்கு மற்றும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். மேலும் குடும்பத்தில் யாருக்கும் ஏற்கனவே எல்பிஜி இணைப்பு இருக்க கூடாது என்று […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதிலும் ஒருசில மாநிலங்களில் மக்களை தடுப்பூசி செலுத்த தூண்டும் வகையில் மக்களை கவரும் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் அம்தாவத் மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்தாவத் மாநகராட்சியில் மக்கள் 100% தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக தடுப்பூசி போடும் […]
தீபாவளியை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. ஐபோன் 12 அல்லது ஐபோன் 12 மினி வாங்கினால் உங்களுக்கு ஒரு ஜோடி ஆப்பிள் ஏர்பாட்ஸ் இலவசமாக பெறலாம் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சலுகை ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களை ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் வாங்குவோருக்கு மட்டும் பொருந்தும். இது அக்டோபர் 7ம் தேதி தொடங்கியது. மேலும் ரூ .9000 முதல் ரூ. 46,120 வரை தள்ளுபடி பெறலாம். […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் ஒரு குடும்பத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்று உத்திரப்பிரதேசம். இங்கு தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு இம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள், காங்கிரஸ் போட்டி போட்டு வருகின்றன. உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் 403 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு மகாராஷ்டிரா […]
தமிழகத்தில் அடுத்த மாதத்திலிருந்து மாற்று வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இது அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த […]
18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளும் தமிழகத்தில் உள்ள அனைத்து இ சேவை மையங்களில் வழங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து 342 இ-சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை தேவைப்படும் வாக்காளர்களுக்கு […]
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் வகையில் அவரது பெயர் கொண்டவருக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று கரூரில் ஒரு பெட்ரோல் பங்க் அறிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கமும், பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிக்குமாரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஹாக்கி அணியினர் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகளில் அமெரிக்காதான் கொரோனாவால் அதிகளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது. அதனால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தவதை அமெரிக்க அரசு தீவிரப்படுத்தி வருகிறது. ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டாததால், பல சலுகைகளை அந்நாட்டு அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அமெரிக்காவின் வாஷிங்டன் நகர மேயர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி கொரோனா தடுப்பூசி […]
இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று மதுரை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், விவசாயிகளின் சுமைகளை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில் மதுரை மாநகராட்சி அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. விவசாயிகள் விவசாயிகளுக்கான சான்றுகள் அல்லது உழவர் அடையாள அட்டை இருந்தால் அவற்றை காண்பித்தால் உரம் இலவசமாக […]
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி அமைத்தபோது மக்கள் அனைவருக்கும் இலவச தொலைக்காட்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச டிவி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு 2000 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் யாருக்கும் கொடுக்காமல் 10 ஆண்டுகளாக சமுதாயக் கூடத்தில் வீணாக இருக்கின்றது.இதையடுத்து தொலைக்காட்சிப் பெட்டி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை சேதம் […]
இளைஞர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் பிரித்தானிய அரசு கபாப், டாக்ஸி சவாரி, சினிமா டிக்கெட்டுகள் உள்ளிட்ட இலவசங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 18 முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு பிரித்தானியாவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இலவச திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 30 நிறுவனங்கள் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்வார்கள் […]
தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி […]
மாணவ மாணவியர்கள் இலவசமாக தங்கும் விடுதி வசதியுடன் எம்பில் படிப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்மொழி வளர்ச்சிக்கு என தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டது உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம். தமிழக பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்டம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. 2021 22 ஆம் ஆண்டுக்கான ஆய்வியல் நிறைஞர் பட்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. மாணவர்கள் முதுகலை படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் 50% […]
பெண்களுக்கு கட்டணம் இன்றி டிக்கெட் வழங்கப்பட்டு இலவசமாக பயணம் செய்கின்றனர். தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படும் நகரம் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்காக அரசு அறிவித்தது. இதனையடுத்து கடந்த மே மாதத்தில் இருந்து சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 288 அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பேருந்தின் முன்புறம் இது குறித்து […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் தெலுங்கானாவில் ஒரு நாள் இலவசமாக மதுபானம் வழங்க அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. நுகர்வோர் முதலில் மதுக்கடைகளுக்கு செல்ல ஊக்குவிக்கும் வகையில் மதுபான உரிமம் பெற்ற ஒயின்ஷாப்பில், வாரத்தில் ஒருநாள் […]
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் கொரோனா காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தங்களது பெற்றோர்கள் கணவன் மனைவி குழந்தைகள் தாய் தந்தை என்ற பல உறவுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் உதவித்தொகை வழங்கி வருகின்றன. அந்த குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் உள்ள மிகப்பிரபலமான பள்ளிகளில் ஒன்றான ஹைதராபாத் பப்ளிக் பள்ளி, கொரோனாவால் பெற்றோரை இழந்த […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்க […]
பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை பிரதமரால் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தை ஜூலை முதல் நவம்பர் […]
சமூக நலத் துறை வாயிலாக செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களின் நினைவாக தமிழக அரசால் இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் எப்படி இலவச தையல் இயந்திரம் பெறலாம் என்பதைப் பார்ப்போம். ஏழைப் பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்த தையல் இயந்திரம் பெறுவதற்கு தகுதியானவர்கள். மேலும் இவர்களது மாத வருமானம் ரூ.12,000க்கு மிகாமல் இருக்கவேண்டும். விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் வயதுச் சான்றிதழ் பாஸ்போர்ட் சைஸ் […]
தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்ற கொண்ட பிறகு பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். முதலில் தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று அறிவித்திருந்தார் அதைத்தொடர்ந்து திருநங்கைகளுக்கும் பேருந்துகளில் கட்டணம் இல்லை என அரசாணை பிறப்பித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரப்பூர்வ ஆணையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் 40 சதவீதம் […]
தமிழகம் முழுவதும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவருடன் செல்லும் ஒரு உதவியாளரும் கட்டணம் இலவசம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்ற கொண்ட பிறகு பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். முதலில் தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று அறிவித்திருந்தார் அதைத்தொடர்ந்து திருநங்கைகளுக்கும் பேருந்துகளில் கட்டணம் இல்லை என அரசாணை பிறப்பித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற […]
நவம்பர் மாதம் வரை ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடை மூலம் இலவச உணவு தானியம் விநியோகிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. இதனால் பல மாநிலங்களில் தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. இன்று மாலை 5 மணிக்கு நேரலையில் மக்களுடன் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கிறார். அதில் இந்தியாவில் மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய […]
கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசே முழுமையாக நடத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. இதனால் பல மாநிலங்களில் தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. வரும்காலத்தில் தடுப்பூசிகள் உற்பத்தி வெகுவாக அதிகரிக்கப்படும். இன்று மாலை 5 மணிக்கு நேரலையில் மக்களுடன் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கிறார். அதில் இந்தியாவில் மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பு […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் நாளை முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் தமிழக அரசு இன்று அறிவித்தது. அதுமட்டுமில்லாமல் மருத்துவமனையில் இல்லாமல் வீட்டில் தனிமைப்படுத்தி […]
தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண நிதி வழங்கி உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக கோடை உழவு செய்து தர டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான டாபேயும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள விவசாயிகளுக்கு தமிழக வேளாண் துறையுடன் இணைந்து […]
தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் முகாமானது நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல்வேறு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புளியங்குடி பகுதியில் உள்ள ஆர்.சி.மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி இலவசமாக பொதுமக்களுக்கு போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை நகர சபை ஆணையாளர் […]
கொரோனா பரவல் காரணமாக அத்தியாவசிய தேவை இன்றி தவித்த மக்களுக்கு உதவி செய்த இளைஞர்களை அனைவரும் பாராட்டி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து பகல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி அளித்துள்ளது. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
ஊடகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இதற்காக மத்திய அரசு போராடி வருகின்றது. இதை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு மிகப்பெரிய அளவில் பத்திரிகை ஊடகம், இணையதளங்களில் பணிபுரியும் நபர்களுக்கு இலவசமாக தடுப்பு ஊசி […]
தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் மு க ஸ்டாலின் பல முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதைப்பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் முக ஸ்டாலினுக்கு காலை ஆளுநர் காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இன்று தலைமை செயலகத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். முதலமைச்சராக […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதற்காக மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியும் போடப்பட்டு […]