பிளஸ் டூ முடித்த ஆர்வமுள்ள மாணவர்கள், பெண்களுக்கு ஆடை வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பட்டயப் படிப்பை கிண்டியில் உள்ள ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையம் இலவசமாக வழங்குகிறது. இந்தப் பயிற்சி ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது. பயிற்சி முடிந்ததும் ஆயத்த ஆடைத் துறையில் மாணவர்கள் உறுதியாக வேலை வாய்ப்பை பெற முடியும். இந்தத் திட்டத்தின்படி தினமும் 3 முதல் 4 மணி நேரம் செலவு செய்து ஆறு மாதம் முதல் ஒரு வருடத்தில் பயிற்சியை முடித்து […]
Tag: இலவச படிப்பு
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகள் இலவசமாக படிப்பில் சேர விரும்புவோர் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் https://unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இலவசமாக பயில விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு மருத்துவ படிப்பு கலந்தாய்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5சதவிகித உள்ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 18 ஆம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் 3 நாட்கள் நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில், […]