உத்திரபிரதேச மாநிலத்தில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன் வழங்கப்பட இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் செல்போன் மற்றும் லேப்டாப்புகளின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களால் அதை வாங்குவது கடினமான ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் அரசாங்கம் லேப்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு போனை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசு வழங்கும் இலவச லேப்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு போனை […]
Tag: இலவச லேப்டாப்
தமிழக அரசின் சார்பாக மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020-2021 ஆம் கல்வியாண்டில் 5 லட்சத்து 32 ஆயிரம் லேப்டாப்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. எனவே மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு இலவச லேப்டாப்புகளை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை செய்த தலைமை நீதிபதி, […]
தமிழக அரசின் சார்பாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் வருடம் முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா காரணமாக லேப்டாப் உற்பத்திக்கு தேவையான உதிரி பாகங்கள் உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு ஏற்கனவே பங்கேற்ற லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து இலவச லேப்டாப் […]
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் தடைபட்ட, அரசு பள்ளிகளின் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம், நிலைமை சீரடைந்த பிறகும் இன்று வரை மீண்டும் தொடங்கப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மடிக்கணினி வழங்க நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டம் கைவிடப்படுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது. அத்தகைய நடவடிக்கை எதையும் தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது. தகுதியுள்ள அனைத்து […]
அரசு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வரும் செய்தி போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில தினங்களாக அரசு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குகிறது.அதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் என குறிப்பிட்டு ஒரு இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த குறுஞ்செய்தி பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். உங்கள் பகுதியில் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஏழை மாணவர்களுக்கு உதவி கிடைக்கட்டும் அதிகம் பகிரவும் என குறிப்பிட்டு […]