மணிப்பூர் ஆளுநரும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநருமான இல.கணேசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வந்திருந்த இல.கணேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tag: இல கணேசன்
மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க ஆளுநரான இல. கணேசன் விருது வழங்கும் விழாவின் போது இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியை ‘தள்ளிய’ வீடியோ வைரலாகி வருகிறது. 20 அணிகள் இடையேயான 131-வது தூரந்த் (டுராண்ட்) கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டியில் பெங்களூரு எப்.சி மற்றும் மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதியது. கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த கால்பந்து போட்டியின் இறுதி போட்டியில் மும்பை சிட்டி எஃப்சியை 2-1 […]
மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராக இல கணேசன் பதவியேற்றுக்கொண்டார். தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பதவி ஏற்றுக் கொள்வதற்காக நேற்று மணிப்பூர் தலைநகர் இம்பால் என்ற இடத்திற்கு சென்றார். மணிப்பூர் விமான நிலையத்தில் மணிப்பூர் அதிகாரிகள் இவரை வரவேற்றனர். இன்று காலையில் கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஐகோர்ட் நீதிபதி சஞ்சய்குமார் இல கணேசனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய […]
மணிப்பூர் ஆளுநராக பாஜக முன்னாள் தலைவர் இல.கணேசன் பதவியேற்றுக் கொண்டார். மணிப்பூர் ஆளுநராக இருந்த நஜ்மா அப்துல்லாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அதிகாரப்பூர்வமாக இன்று இல.கணேசன் பதவிஏற்றுக்கொண்டார். இதுவரை தமிழகத்தில் இருந்து இரண்டு பாஜக தலைவர்கள் ஆளுநராக பதவி ஏற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன்பு பாஜகவில் தேசிய குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவரான இவர் தமிழக பாஜக தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
தமிழக பா.ஜனதா மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று பிறப்பித்தார். மணிப்பூர் கவர்னராக 2019] ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி நஜ்மா ஹெப்துல்லா நியமிக்கப்பட்டார். கடந்த 10-ந்தேதி முதல் அவர் விடுப்பில் சென்றார். அதைத்தொடர்ந்து சிக்கிம் மாநில கவர்னர் கங்கா பிரசாத் மணிப்பூர் மாநில கவர்னர் பொறுப்பையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மணிப்பூர் […]
மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராக இருக்கக் கூடிய தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் அவர்களை தற்போது மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவினை பிறப்பித்துள்ளார்.. கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் பெரும்பாலான மாநிலத்தின் ஆளுநர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த வாய்ப்பு தஞ்சையை சேர்ந்த 76 வயதான […]
மனுஸ்மிருதியில் இல்லாததை ஒன்றை இருப்பதாகக் கூறிய திரு திருமாவளவன் வீண் விளம்பரம் தேடுவதாக பாஜக மூத்த தலைவர் திரு இலகணேசன் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் இடம் பேசிய திரு இலகணேசன் மனுஸ்மிருதி குறித்து திரு திருமாவளவன் அநாகரீகமாக பேசியதாகவும் அரசியல் தலைவராக இருப்பவர் நாகரீகத்தோடு பேச வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ உள் இட ஒதுக்கீடு குறித்து ஆளுநர் முடிவு எடுத்திருக்க வேண்டும். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் முடிவெடுக்காமல் இருக்கிறார்கள் என திரு இல கணேசன் […]