ஜார்கண்ட் மாநிலத்தில் இளம் பெண்ணை கொலை செய்து 50 துண்டுகளாக வெட்டிய கணவரின் கொடூர செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சாகிப்கஞ்ச் மாவட்டத்தின் போரியோ காவல் நிலைய எல்லையில் ரூபிகா பகதின் (22) என்பவர் வசித்து வந்தார். பழங்குடி இனத்தை சேர்ந்த இந்த இளம் பெண் தில்தார் அன்சாரி(28) என்பவரை காதலித்து உள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். 2 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் அண்மையில் திருமணம் […]
Tag: இளம்பெண்
மதுரையை சேர்த்த அபிநயா என்ற பெண் ஒருவர் சமூக ஊடகங்கள் மூலமாக சுமார் 28 ஆண்களுக்கு காதல் வலை வீசி வீழ்த்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 28 ஆண்களில் நான்கு பேரை அவர் திருமணம் செய்துள்ளார். நான்காவது திருமணம் செய்பவரிடம் இருந்து 30 நாட்களில் பல சவரன் நகைகளுடனும் பணத்துடனும் தலைமறைவாகியுள்ளார். பல மாதங்களாக இதையே வாடிக்கையாக கொண்டிருந்த இவர் சமூக வலைத்தளத்தில் முதலில் நண்பராக பழகி பின்பு காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். […]
கேரள மாநிலத்தில் உள்ள ஆம்பூரில் கத்தினாக்கள் என்ற பகுதியை சேர்ந்த சோனு என்ற 20 வயது இளம்பெண் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்துவிட்டு சென்னை கீழம்பாக்கத்தில் உள்ள பிரபல உணவகத்தில் கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையை சேர்ந்த நவீன் என்ற இளைஞருக்கும் இவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பு ரீதியாக பழகி வந்த நிலையில் நவீன் சோனுவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். நட்பாக பழகியதை நவீன் தவறாக புரிந்து கொண்டதால் […]
டெல்லியில் கிழக்கு கைலாஷ் பகுதியில் சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தை திடீரென இறந்து விட்டதால் அவரின் இழப்பை தாங்க முடியாமல் தவித்துள்ளார். இந்நிலையில் அவரிடம் குழந்தையை நரபலி கொடுத்தால் இறந்த தந்தை உயிரிழந்து விடுவார் என்று யாரோ சொல்லியுள்ளனர். அதனை நம்பிய அந்தப் பெண் தந்தையை உயிர்ப்பிக்க இரண்டு மாத குழந்தையை கடத்திச் சென்று நரபலி கொடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளார். இதனிடையே குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் போலீசாருக்கு தெரிய வந்த நிலையில் போலீசார் தீவிர நடவடிக்கை […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் கோமதி நகர் பத்திரகார்புரம் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலர் தெருவோரம் கடைகளை போட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.அதில் தீபாவளிக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மண் விளக்குகளை இளம் பெண் ஒருவர் திடீரென கம்புகளை கொண்டு அடித்து நொறுக்கினார். அவரின் வீட்டில் முன்னால் கடைகளை அமைத்துள்ளனர். அந்த ஆத்திரத்தில் அந்தப் பெண் முதலில் தண்ணீரைக் கொண்டு வந்து அவர்கள் மீது வீசி எறிந்தார். அதன் பிறகு கம்புகளை கொண்டு வந்து கடைகளை அடித்து […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டோராடூன் பகுதியில் ஒரு பிரபலமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம் பெண் கடந்த வெள்ளிக்கிழமை கழிவறையில் தன்னுடைய செல்போனை சார்ஜ் போட்டுள்ளார். அப்போது 15 வயது சிறுவன் ஒருவன் திடீரென கழிவறைக்குள் நுழைந்து ஹாய் என்று கூறியுள்ளான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் பெண்கள் கழிவறைக்குள் எப்படி வரலாம் […]
பெண் மந்திரவாதி ஒருவர் பேய் ஓட்டுவதாக சொல்லி இளம்பெண் ஒருவரை கொடூரமாக தாக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா பட்டணந்திட்டா மாவட்டத்திற்குட்பட்ட மலையாலப்புழா பகுதியில் வசித்து வருபவர் மந்திரவாதி ஷோபனா. இவர் குறை நிவர்த்தி வேண்டி வரும் பெண்களை தாக்கும் காட்சிகள் ஏற்கனவே வெளியான நிலையில், இவருக்கு சொந்தமான மடம் ஒன்று மூடப்பட்டது. இந்த நிலையில் அவர் பேய் ஓட்டுவது எனும் பெயரில் சோபனா என்ற இளம்பெண் ஒருவரை குச்சியால் அடித்து, மிதிக்கும் காட்சிகள் […]
இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலன் குடும்பத்திற்கு உதவி செய்வதற்காக தன் அப்பாவின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னுடைய காதலன் குடும்பத்திற்கு உதவி செய்ய தந்தையினுடைய வங்கி கணக்கிலிருந்து கடந்த சில மாதங்களில் ரூபாய் 12 லட்சம் வரை திருடி வந்துள்ளது தெரிய வந்தது. இரண்டு வருடங்களாக ஆன்லைன் மூலமாக காதலனின் வங்கி கணக்கில் பணப்பரிவர்த்தனை செய்து வந்தது அம்பலம் ஆகியுள்ளதால் இளம்பெண் […]
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் எருமப்பட்டி-திப்பிலசேரி பகுதியில் ராஜி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் கொந்நங்குளம் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவருடைய ஆண் நண்பர் மூலம் சாவக்காடு பகுதியை சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவருடன் ராஜிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த முதியவர் 20 வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ராஜியும் அந்த முதிர்யவரும் நெருங்கி பழகிய நிலையில் ஒருநாள் பியூட்டி பார்லர் அறை ஒன்றில் தனிமையில் […]
ஒடிசா மாநிலத்தில் பல அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்களின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி பணம் பறித்து சொகுசுவாழ்க்கை வாழ்ந்த அர்ச்சனாநாக்(26) என்ற இளம் பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்திலுள்ள ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சனாநாக், தற்போது சொகுசுகார்கள், 4 உயர் இன நாய்கள் மற்றும் 1 வெள்ளை குதிரையுடன் ஆடம்பரமான அரண்மனை வீட்டை வைத்திருக்கிறார். இவர் 4 வருடங்களில் 30 கோடி குவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நடுத்தர குடும்பத்தினைச் […]
ராஜஸ்தான் அஜ்மீர் மாவட்டத்தில் சஞ்சய் சர்மா என்பவர் வசித்து வருகிறார். சாமியாராக வலம் வரக்கூடிய இவர், 25 வயது இளம்பெண் ஒருவரது குடும்ப சாமியாராகவும் ஆகியுள்ளார். இதை பயன்படுத்திக்கொண்டு அப்பெண் வசித்த வீட்டுக்கு அடிக்கடி சென்று, பூஜை, சடங்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத தருணத்தில் இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்ற சாமியார், அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அதனை வீடியோவாக பதிவு செய்துகொண்டார். அதன்பின் இதை வைத்து பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். […]
உத்தரபிரதேசம் மாநிலம் பஸ்தி பகுதியில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியையாக பணிபுரிந்துவரும் இளம்பெண் ஒருவருக்கு, சமூகவலைதளம் வாயிலாக அதே பகுதியை சேர்ந்த மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்களாயினர். அதன்பின் அப்பெண்ணை நேரில் சந்திக்க வேண்டும் என்று அந்த மருத்துவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த அப்பெண் தனியாக மருத்துவரை சந்திக்க சென்ற வாரம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அப்பெண்ணை தன்னுடன் ஹாஸ்டலுக்கு வரும்படி அந்த மருத்துவர் வற்புறுத்தி அழைத்துள்ளார். […]
அமெரிக்காவில், இளம்பெண் பிரபல நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான முறையை கையாண்டிருக்கிறார். அமெரிக்க நாட்டின் கரோலினா மாகாணத்தில் வசிக்கும் கார்லி பாவ்லினாக் பிளாக்பர்ன் என்ற இளம் பெண் நைக் நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக பல தடவை தன் சுயவிவரங்கள் அடங்கிய தொகுப்பை அந்நிறுவனத்திற்கு அனுப்பி இருக்கிறார். ஆனால் அவருக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரின் தோழி ஒரு யோசனை கூற, அதன்படி வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார். அதாவது ஒரு கேக்கை […]
வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கணவர் குடும்பத்தினர் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கணவர் குடும்பத்தினர் அடித்துக் கொன்றனர். ஹுசைனாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தருவா கிராமத்தைச் சேர்ந்த ரோமி தேவி (22) கொல்லப்பட்டார். இவர்களது திருமணம் கடந்த மே 14ம் தேதி நடந்தது. சம்பவத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ரோமியின் கணவர் சஞ்சித், தந்தை சங்கர் சிங், தாய் பர்பியா தேவி, உறவினர்கள் மணீஷ் சிங் […]
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் வசித்து வந்தவர் இசக்கிமுத்து மகள் இசக்கிலெட்சுமி (23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான வெங்கடேஷ்க்கும் (24) செப்டம்பர் 1ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 31ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமாருடன் இசக்கிலெட்சுமி தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக இசக்கிமுத்து கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில் செப்டம்பர் 1ஆம் தேதி வெங்கடேஷ்க்கு வேறுஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. அதேபோன்று ராம்குமார் மற்றும் […]
பிரேசிலில் 19 வயதுடைய இளம் பெண்ணிற்கு ஒரே நாளில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தைகள் இருக்கும் அதிசய நிகழ்வு நடந்திருக்கிறது. பிரேசில் வசிக்கும் 19 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. எனினும் குழந்தைகள் வெவ்வேறு தந்தைகளுக்கு பிறந்தவர்கள் என்ற அதிசயத்தை மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனை Heteropaternal Superfecundation என்று அழைக்கிறார்கள். அதாவது மாதவிடாய் சுழற்சியில் வெளியாகும் இரண்டாம் கரு முட்டை வெவ்வேறு நபர்களின் விந்தணுக்களால் தனித்தனியான உறவில் கருத்தரிக்கும் போது உண்டாகும் என்று […]
மலேசியாவை சேர்ந்த ஒரு இளம் பெண் தன் முதல் மாத ஊதிய பணத்தை தன் தாய் வங்கி கணக்கிற்கு அனுப்புவதற்கு பதிலாக வேறொருவருக்கு மாற்றி அனுப்பியிருக்கிறார். மலேசியாவை சேர்ந்த பஹதா பிஸ்தாரி என்னும் இளம் பெண், தன் முதல் மாத ஊதிய பணத்தை தன் தாயின் வங்கி கணக்கிற்கு இணையத்தில் அனுப்பியிருக்கிறார். அதன் பிறகு, தன் தாயிடம் பணம் அனுப்பப்பட்ட ரசீதை பார்க்குமாறு கூறியிருக்கிறார். அவரின் தாயார் பணம் வந்து சேரவில்லை என்று கூறியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, […]
மதுரை மாவட்டம் கோட்டப்பட்டியை சேர்ந்த அழகுராஜாவும் மணப்பட்டியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அழகுராஜா, இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்க அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 2019 ஆம் ஆண்டு காவல்துறையினர் அழகுராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளிவந்த அவர் சிங்கப்பூருக்கு தப்பி சென்றுவிட்டார். இவர் […]
காதலன் வீட்டில் தகராறு செய்து கொண்டிருந்த பெண்ணை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது போலீஸ்காரரின் கையை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த செல்வி என்ற பெண் திருவெற்றியூரை சேர்ந்த ரேவேந்திர குமார் என்பவரை காதலித்து வந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் செல்வி தேவேந்திரகுமாரிடம் தொடர்ந்து பணம், நகை கேட்டு தொந்தரவு செய்து வந்த காரணத்தினால் அவர்கள் திருமணத்தை நிறுத்திவிட்டனர். இதனால் கோபமடைந்த […]
உக்ரைன் போர், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு மக்களிடையே எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டில், ஒவ்வொரு நாளும் உக்ரைன் மக்கள் அநியாயமாக கொன்று குவிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஷ்யாவை சேர்ந்த இளம் பெண், நக்கலாக சிரித்திருக்கிறார். அவரைப் போன்றே பல ரஷ்யர்களின் மனநிலை இருக்கிறது. இதே கேள்வியை உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண்ணிடம் கேட்டபோது, தன் மக்களை போரில் இழந்து கொண்டிருப்பதை கண்ணீருடன் கூறியுள்ளார். The […]
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் புது தெருவில் வசித்து வருபவர் நடராஜன். இவருடைய மகன் தினேஷ் (27) கடந்த 2 வருடங்களுக்கு முன் கடலூர் மாவட்டம் எள்ளேரி கிராமத்திலுள்ள உறவினர் சச்சிதானந்தத்தின் மகள் வைஷ்ணவியை (24) திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 1 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இதில் தினேஷ் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தினேசுக்கும், வைஷ்ணவிக்கும் […]
சென்னை கீழப்பாக்கத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் கட்டி இருந்தது. பல வகையான ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரும் கட்டி குறையவில்லை மேலும் கதிர்வீச்சு சிகிச்சையும் பயனளிக்கவில்லை. இந்த சூழலில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு […]
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் பதன் பகுதியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண்ணை சென்ற 2020 ஆம் வருடம் அதே பகுதியை சேர்ந்த விவேக் பட்டேல் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து பெற்றோர் அளித்த புகாரின்படி கடந்த 2020ம் வருடம் விவேக்கை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையில் பாலியல் வன் கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேக் சென்ற வருடம் ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில் […]
பிரிட்டனில் 19 வயதுடைய இளம்பெண் 42 வயதுடைய நபரை காதலிக்கும் நிலையில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். பிரிட்டனில் வசிக்கும் கோர்ட்னி லூயிஸ் மெக்வே என்ற 19 வயதுடைய இளம் பெண், 42 வயதுடைய ஒரு நபரை காதலித்துக் கொண்டிருக்கிறார். இவர்களை பார்ப்பவர்கள் கடுமையாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு பதிலடி கொடுத்துள்ள கோர்ட்னி லூயிஸ் மெக்வே தெரிவித்ததாவது, நீங்கள் சட்டபூர்வமான வயது உடையவராக இருக்கும் பட்சத்தில் எந்த வயதை சேர்ந்தவரையும் காதலிக்கலாம். அதற்கு தடை […]
ராஜஸ்தானில் இளம் பெண்ணையும் இளைஞனையும் மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் அடித்த வீடியோ வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் இளம் பெண்ணும், இளைஞனும் உள்ளூர் மக்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர். பன்ஸ்வாராவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் திருமணமான பெண்ணும் அவரது இளம் நண்பரும் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களால் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டது. திருமணமான பெண், வேறு கிராமத்தைச் சேர்ந்த இளைஞனுடன் இருந்த காட்சி, கிராம மக்களிடையே கோபத்தை […]
மும்பையில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிட்டு இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பாஸ்கல் வாடி பகுதியை சேர்ந்த ரேகா நிஷாத் (27) திருமணமாகி கணவர் மற்றும் கணவரின் சகோதரருடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்ததால் கடந்த ஜூலை 21ம் தேதி எலிகளை கொல்ல தக்காளியின் மீது எலி விஷம் கலந்து வைத்துள்ளார். பின் அடுத்த நாள் டிவி பார்த்துக்கொண்டே இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சமைத்த போது தவறுதலாக […]
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண் ஒரே சமயத்தில் 30 சுவிங்கம்மை வாயில் போட்டு பெரிதாக முட்டை விட்டு மாதந்தோறும் 67 ஆயிரம் சம்பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் வசிக்கும் 30 வயதுடைய ஜூலியா ஃபார்ட் ஒரே சமயத்தில் சுமார் 30 சுவிங்கம்களை வாயில் போட்டு மெல்வாராம். அதன் பிறகு தன் தலையை காட்டிலும் மிகவும் பெரிதான bubble-ஐ விடுவாராம். அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தன் இணையதள பக்கங்களில் வெளியிட்டு வந்திருக்கிறார். இன்ஸ்டாகிராம் […]
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியில் உள்ள மெட்ரோ ரயிலில் இளம் பெண் ஒருவர் ஒரு பாடலுக்கு நடனமாடும் வீடியோவானது வைரலாகி வருகின்றது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் நடிகர் நானி, நஸ்ரியா நடிப்பில் அண்மையில் வெளியான தெலுங்கு படம் தான் ‘ஆண்டே சுந்தரநிகி” (Ante Sundaraniki) படத்தில் இடம்பெற்ற ‘தந்தானந்தா’ என்ற பாடலுக்கு ஒருவர் நடனம் கொண்டிருந்தார். மேலும் ரயிலுக்கு வெளியில் நின்று நடிகர் கிச்சா நடிப்பில் வெளியான இந்தி படமான ‘விக்ரந்த் […]
இப்போதெல்லாம் சுற்றுலாக்கு செல்வோர் ஆபத்தான பகுதிகளில் நின்று செல்பி எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் அதில் இருக்கும் ஆபத்துகளை யாரும் உணர்வதில்லை. அப்படி ஒரு சம்பவம் தான் உதகையில் நடந்துள்ளது. உதகைக்கு சுற்றுலா வந்த நெல்லூரை சேர்ந்த இளம் பெண் ஆற்றை கடக்க முயன்ற போது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். பெங்களூரில் வசித்து வந்த பெண் மென்பொறியாளர் கட்டா வினிதா சவுத்ரி, தனது நண்பர்கள் எட்டு பேருடன் கல்லட்டியில் உள்ள தனியார் விடுதியில் […]
உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது மருமகளுடன் சேர்ந்து ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு அந்த கடையில் வேலைக்கு சேர 21 வயது உடைய இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். இவர்களும் அந்தப் பெண்ணை வேலையில் சேர்த்துக் கொண்டனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல அந்த பெண் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அந்த பெண்ணை வீட்டில் விடுவதாக கூறி ஹோட்டல் உரிமையாளர் […]
ஆஸ்திரேலிய நாட்டில் தன் கண்களை நீல நிறமாக மாற்ற நினைத்த பெண்ணிற்கு பார்வை பறிபோன சம்பவம் நடந்திருக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டில் வசிக்கும் ஆம்பர் லூக் என்ற 27 வயதான என்ற பெண் டாட்டூ போட்டுக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருந்திருக்கிறார். எனவே தன் உடல் முழுக்க சுமார் 600 டாட்டுக்குள் போட்டிருக்கிறார். தன் 16 வயதிலிருந்து உடலில் டாட்டூக்களை போட்டு வரும் அந்த பெண் அதோடு இல்லாமல், தன் கண்களில் டாட்டூ போட்டிருக்கிறார். அதாவது நீல நிறமாக […]
சிறுமியும், அவரை காப்பாற்ற சென்ற இளம்பெண்ணும் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நாராயணபுரம் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்காக தம்பதியினர் தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ராஜசிங்கபேரி கண்மாய் அருகே இருக்கும் கரும்பு தோட்டத்தில் ஏழுமலையும், மலரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனை […]
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 5 ஸ்டார் ஹோட்டலில் இளம்பெண் ஒருவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை ஹோட்டலில் உள்ள பெண்கள் கழிவறையில் அவர் தனது போனுக்கு சார்ஜ் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கழுதையின் உள்ளே நுழைந்த 15 வயது சிறுவன் கதவை மூடிவிட்டு பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்ற சிறுவனை அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அந்த […]
சென்னையை சேர்ந்த தமிழ்வாணன் (32) பல ஆண்டுகளாக பெண் தேடி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு புரோக்கர் மூலம் பூஜா என்ற பெண்ணை சந்தித்து திருமணம் முடித்தார். ஆனால் முதலிரவில் பூஜா, குடிக்க மது கேட்க ,அதிர்ந்து போன தமிழ்வாணன் அறிவுரை கூறியுள்ளார். அதனால் தாம்பத்தியத்திற்கு பூஜா தடை போட்டுள்ளார். அதற்கு மறுநாளே பணம் மற்றும் நகைகள் உடன் தப்பித்து விட்டதாக தமிழ்வாணன் போலீசில் புகார் அளித்தார். மேலும் தமிழ்வானனுக்கு வயது அதிகம் என்று கூறி, அவரிடம் 1.35 […]
ஹத்ராஸில், வரதட்சணைக்காக இளம்பெண் ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சிந்தாகர்ஹி, ஹத்ராஸில், வரதட்சணைக்காக 20 வயது இளம்பெண் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரால் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ரா மாவட்டத்தின் பர்ஹாம் காவல் நிலையப் பகுதியில் உள்ள நாக்லா வீராவைச் சேர்ந்த பயல் என்பவர் கொல்லப்பட்டார். அந்த பெண்ணுக்கு ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த அனில் குமார் சிங் (25) என்பவருடன் கடந்த ஆண்டு மே மாதம் 24ம் […]
அமெரிக்காவில் 24 வயதுடைய இளம் பெண் ஒருவர் 68 வயது முதியவரை காதலிப்பதாக கூறியிருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த கொன்னி காட்டன் என்ற 24 வயதுடைய இளம் பெண் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் 68 வயதுடைய ஹெர்ப் டைகர்சன் என்ற முதியவரை சந்தித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து இருவரும் நண்பர்களாகினர். நாளடைவில் இருவரும் ஒன்றாக வெளியில் சுற்ற தொடங்கினார்கள். இந்நிலையில் கடந்த வருடம் இவர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்தி நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்கள். அந்த இளம்பெண் முதியவரை பணத்திற்காக தான் காதலிக்கிறார் […]
அமெரிக்காவில் ஒரு பெண் தன் செல்போனில் எச்சிலை துப்பி அன்லாக் செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் மியாமி மாகாணத்தை சேர்ந்த மிலா மோனட் என்ற பெண் தன் நண்பர்களோடு மதுபான விடுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது தன் திறமையை வெளிக்காட்டும் வகையில் தனது செல்போனை எடுத்து, கீ பேடில் இருக்கும் ஒரு எண்ணின் மீதும் எச்சிலை துப்பினார். A girl using her spit to unlock her phone. 🃏 pic.twitter.com/dhMfaj6dYV — Public Outsider […]
ஆந்திர மாநிலம் அனேக பள்ளிப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி புஷ்பா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் திருமணத்தை முன்னிட்டு சப்ரைஸ் கொடுப்பதாக கூறி ராமகிருஷ்ணரை மலைப்பகுதி ஒன்றிற்கு புஷ்பா வரவழைத்துள்ளார். அப்போதுகிப்ட் கொடுப்பதாக கூறி அவரது கண்களை தனது துப்பட்டாவால் கட்டியுள்ளார். பிறகு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்தில் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த […]
8 மாத குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி நேரு நகரில் குடியிருந்து வருபவர் வடிவேல். இவருக்கு பொற்கொடி என்ற மனைவியும், கோகிலப்பிரியா, திவ்யா (24) என்ற 2 மகள்களும் உள்ளார்கள். வடிவேலு புங்கம்பள்ளி மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக வேலை செய்து வருகின்றார். சென்னையில் கோகுல பிரியா கணவருடன் வசித்து வருகின்றார். திவ்யாவுக்கு ஈரோட்டில் கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் குடியிருந்து வரும் […]
ஹைதராபாத்தில் பெண் ஒருவர் மெட்ரோ ரயில் ஸ்டேஷனில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஏறி செல்லும் மாடி படிக்கட்டு கட்டிடத்தில் நின்றுகொண்டிருந்தார். இதைப் பார்த்த சிலர் குதிக்க வேண்டாம் வேண்டாம் என்று கத்தி கூச்சலிட்டனர். இருப்பினும் அந்தப் பெண் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் மனதை பதைபதைக்க […]
ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் சக்தி எஸ்டேட் பகுதியில் மனோகரன் வசித்து வருகிறார். இவருக்கு கிருத்திகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கிருத்திகா வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கிருத்திகாவின் குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் கிருத்திகா […]
நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளம்பெண்ணின் காதில் நண்டு புகுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கரீபியன் தீவுகளில் puerto Rico என்ற தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் இளம்பெண் ஒருவர் கடலில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது காதில் சிறிய அளவிலுள்ள நண்டு ஒன்று எதிர்பாராத நேரத்தில் புகுந்தது. இதனால் அந்த பெண் வலியில் அலறி துடித்துள்ளார். இதனை கண்டு அருகிலிருந்த ஒருவர் இடுக்கி போன்ற சிறிய கருவியின் மூலம் காதில் புகுந்த நண்டை சுலபமாக […]
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில், இளம்பெண் ஒருவரை ஸ்விக்கி ஊழியர் தாக்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இளம்பெண் ஒருவர் சாலையின் நடுவே தன் ஆண் நண்பருடன்,ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஸ்விக்கி ஊழியர் இதை பார்த்தவுடன், அப்பெண்ணை தட்டிக் கேட்க சென்றபோது பேச்சு மூற்றி, அவர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார். இந்நிலையில் காரணம் என்னவாக இருந்தாலும், பெண்ணை இப்படி தாக்குவது சரியா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆலங்காயம் அருகில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகில் கூவல்குட்டையை சேர்ந்தவர் 21 வயதான சங்கீதா. இவர் வாணியம்பாடி குரும்ப தெருவை சேர்ந்த 27 வயதான திருப்பதி என்பவரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சங்கீதா கூவல்குட்டை பகுதியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு […]
வாணியம்பாடி அருகே காதலித்து கர்ப்பமாக்கியவருக்கு கல்யாணம் செய்து வைக்கக் கோரி காவல் நிலையம் முன்பாக இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் சின்னமூக்கனூர் பகுதியில் வசித்து வந்தவர் ஜோதி(25). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் தனது தோழியின் மூலம் வாணியம்பாடி அடுத்த விஜிலாபுரத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும் ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கோயமுத்தூர் பகுதியில் ஒரு வருடம் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது முருகன் ஜோதியிடம் காதலிப்பதாகவும், […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]
கடந்த 13 ஆம் தேதி தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சபரிமலைக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்துள்ளார். அப்போது நடிகர் சிரஞ்சீவியுடன் அவரது மனைவி மற்றும் பீனிக்ஸ் குரூப் உரிமையாளர்களான சுக்கப்பள்ளி சுரேஷ், சுக்கப்பள்ளி கோபி அவர்களது மனைவிகளும் வந்திருந்தனர். இவர்களுடன் 50 வயதை எட்டாத மதுமதி என்ற பெண்ணும் சுவாமி தரிசனத்திற்கு வந்ததாக இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திருவிதாங்கூர் சமஸ்தானம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவஸ்தான தலைவர் […]
ஆவடி அருகே குழந்தை இல்லை என்ற காரணத்தால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பட்டாபிராம் அணைக்கட்டுசேரியை சேர்ந்த கார்த்திக் (26) என்பவருக்கு தேவி (24) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகின்றன. இவர்களுக்கு குழந்தை இல்லை என்ற காரணத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினமும் கணவன் -மனைவி இடையை சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் […]
ஆவடி அருகே கணவரை தன்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் திருமணமான பத்து மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி அருகே வசந்தம் நகர் கணபதி கோவில் தெருவில் வசித்து வருபவர் நாகராஜ். இவருக்கு வயது 27. இவரின் சொந்த ஊர் மதுரை ஆகும். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவருக்கு வயது 25. இவர் ஆவடியில் இருக்கும் ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து […]
கனடாவில் தேடப்பட்டு வந்த நபரொருவர் 3 நாட்களாக தனது காரின் பின்பகுதியில் மறைந்திருப்பதை கூட தெரியாமல் இளம் பெண்மணி ஒருவர் பயணம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கனடாவிலுள்ள கொலம்பியாவில் பெத்தானி என்ற இளம் பெண்மணி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய கார் சீட்டில் சேறு படிந்த கால்தடங்கள் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெத்தானி யாரோ இரவில் தனது காரில் வந்து தங்கியுள்ளார் என்று நினைத்து அந்த காலடி தடத்தை சுத்தம் செய்துள்ளார். அதேபோல் மறுநாளும் […]