ராஞ்சி அருகே காதல் தோல்வி அடைந்த இளைஞனொருவன் மின்கோபுரத்தில் ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த இளைஞன் ஒருவன் காதலியிடம் தன் காதலைச் சொல்லி உள்ளார். ஆனால் அந்த மாணவி காதலை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து விரக்தியடைந்த இளைஞன் உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் கீழே இறங்குவதற்கு காவல்துறையினர் முயற்சி செய்தனர். பின்னர் அவரின் காதலியை அழைத்து வந்து மின் கோபுரத்தில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளனர். பிறகுதான் தெரியவந்தது […]
Tag: இளைஞர்
நீர் பறவை போல் நீருக்கு மேலே பறக்கும் கடல் விமானத்தை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கண்டுபிடித்துள்ளார். பிரதமரின் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தினால் உத்வேகம் பெற்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த புஷ்பராஜ் அங்குள்ள இளைஞர்களுடன் சேர்ந்து மைக்ரோ கடல் விமானத்தை கண்டு பிடித்து அசத்தியுள்ளார். இந்தியாவின் முதல் முதலாக இறக்குமதி செய்யப்பட்ட கடல் விமானத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த வரிசையில் தற்போது புஷ்பராஜ் கண்டுபிடித்த விமானமும் இணைந்துள்ளது. மைக்ரோ லைட் கடல் விமானத்தை […]
மதுரையில் ஐ படம் போல இளைஞர் ஒருவருக்கு நடந்த விபரீத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நகை பட்டறையில் வேலை பார்த்து வரும் பிஸ்வஜித் என்ற இளைஞர் கடந்த மாதம் சுண்டுவிரலில் அடிபட்டு விட்டதாக மருத்துவரிடம் சென்றார். அவர் கொடுத்த எலும்பு முறிவு மருந்தை அந்த இளைஞர் தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார். அதனால் பக்க விளைவு ஏற்பட்டு அவரின் உடல் முழுவதும் அலர்ஜியால் தடித்து விட்டது. அதன் பிறகு தோல் சிகிச்சை மருத்துவரிடம் சென்றபோது அவர் தந்த […]
15 வயது சிறுமியிடம் இளைஞர் ஒருவர் தவறான முறையில் நடந்து கொண்ட சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தெரிய வந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Isaih Ramirez என்ற 20 வயது நபருடன் 15 வயது சிறுமி ஒருவர் நட்புடன் பழகி உள்ளார். அதற்குப் பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு Isaih Ramirez அந்த சிறுமியுடன் டேட்டிங் சென்றுள்ளார். டேட்டிங் சென்ற இடத்தில் அவர் 15 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்ததுடன் தவறான முறையில் நடந்துள்ளார் . இரண்டு […]
மேட்ரிமோனியில் அறிமுகமான பெண்ணால் இளைஞருக்கு நேர்ந்த சிக்கல் அவரை காவல் துறையில் புகார் அளிக்க வைத்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் அம்பித் குமார் மிஸ்ரா என்ற இளைஞர். இவர் தனது திருமணத்திற்காக பெண் தேடி பிரபல மேட்ரிமோனி ஒன்றில் பதிவு செய்திருந்தார். இதன் மூலம் ஸ்ரேயா என்ற ஒரு பெண் குமாருக்கு அறிமுகமானார். அதன்பின் இருவரும் திருமணம் செய்து ஒப்புக்கொண்டதால் தொலைபேசி வழியாக போன் செய்தும், வீடியோ கால் செய்தும் தங்கள் எதிர்கால வாழ்க்கை குறித்து பேசி […]
நாகப்பட்டினம் அருகே அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் அருகிலுள்ள நாகூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு திருமண வயதில் மகன் பொன்னியின்செல்வன் (27) உள்ளார். இவர் நாகப்பட்டினம் அடுத்துள்ள திருவாரூர் சாலையில், பெருமாள் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். அப்போது அவர் செல்லும் வழியில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதனை முந்தி செல்ல முயன்றதால் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக அங்கிருந்த பொதுமக்கள் கூறினர். இதனை […]
தெலுங்கானா மாநிலத்தில் செல்போனில் படம் பிடித்த இளைஞரை மாணவி செருப்பால் அடிக்கும் காட்சி வைரலாகி வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். சில காம கொடுரர்கள் செய்யும் செயல்களால் பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் காம ரெட்டி என்ற மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் […]
குன்றத்தூர் அருகே காதலித்த பெண் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர் சிவன் கோவில் தச்சர் தெருவில் சதீஷ்குமார் வசித்து வருகிறார். இவர் பல கடைகளுக்கு சிகரெட் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சதீஷ்குமாரை காதலித்து வந்துள்ளார். பின்பு அந்தப் பெண்ணின் நடவடிக்கை சரி இல்லாத காரணத்தினால் அப்பெண்ணை விட்டு சதீஷ்குமார் விலகிவிட்டார். இந்நிலையில் […]
அரசாங்க வலைத்தளம் வேலை செய்யாமல் போனதால் தன் சொந்த முயற்சியில் இலவச வலைத்தளத்தை உருவாக்கிய இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றுபவர் 31 வயதுடைய ஹூஜ்மா என்பவர். இவர் கடந்த மாதம் தன் அம்மாவிற்கு தடுப்பூசி செலுத்துவதற்காக அப்பாயிண்ட்மெண்ட் போட ஆன்லைனில் பதிவு செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் அப்போது அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்வதற்கான அரசு போர்ட்டல்கள் சரியாக வேலை செய்யவில்லை. மேலும் ஒவ்வொரு வலைத்தளங்களும் வெவ்வேறு வித்தியாசமான சைனப் […]
சசிகலா சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த வழியில் இளைஞரின் விருப்பத்தை ஏற்று காரை நிறுத்தி செல்ஃபி எடுத்துக்கொண்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து விடுதலையானார். ஆனால் அவரின் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார். […]
துறையூர் அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் ஒருவர் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசிறி அருகே ராக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் பிரசாந்த். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகராஜ்-சித்ரா தம்பதியரின் 16 வயது மகளை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக நாகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பிரசாத்தையும் […]
கனடாவில் இளைஞரிடம் முதியவர் ஒருவர் தவறாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் இருக்கும் Halifax என்ற பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்துக்கு அருகில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவரின் அருகில் வந்த 60 வயதுள்ள முதியவர் ஒருவர் திடீரென்று அந்த இளைஞரிடம் தவறாக நடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் உடனடியாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் கூறியுள்ளதாவது நீலநிற ஆடை மற்றும் கருப்பு நிற ஷூவும் அணிந்து கொண்டு […]
கனடாவில் வசித்த இளைஞர் ஒருவர் இலட்சத்திற்கு வாங்கிய வீட்டிற்குள் கோடிக்கணக்கில் அதிர்ஷ்டம் அடுத்துள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கனடாவில் உள்ள ஒட்டாவாவை சேர்ந்தவர் அலெக்ஸ் ஆர்ச்போல்ட் என்பவர். இவர் பழங்கால பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அலெஸ்க்கு அதே பகுதியை சேர்ந்த பியானோ இசை ஆசிரியரான பெட் ஜோன் ரேக் என்ற 76 வயது மூதாட்டிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெட் ஜோன் […]
அமெரிக்காவில் ஒரு ஆண் உட்பட ஐந்து குழந்தைகளை சுட்டுக் கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணம் மஸ்கோஜியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றுக்காலை தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குடியிருப்பு பகுதியை சோதனையிட்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு ஆண் உட்பட 5 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த இளைஞரை கடுமையாகத் தாக்கி வாயில் சிறுநீர் கழித்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெரும்பாலான மனிதர்கள் இன்னும் ஜாதி வெறியுடன் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து குலத்தினரும் ஒன்றுதான் என்ற கருத்தை யாரும் உணர்வதில்லை. தங்களை விட தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த மக்களை மிக இழிவாகவே கருதுகிறார்கள். அது சிறு குழந்தைகள் முதல் அவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. ஆனால் அது மிகவும் தவறானது. அதுமட்டுமன்றி தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த அவர்களை […]
பிரான்ஸில் நடு ரோட்டில் நிர்வாணமாக நடந்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். பிரான்சில் கடந்த 24 ஆம் தேதி பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் அருகில் ஒரு இளைஞர் நிர்வாணமாக ஓடியுள்ளார்.இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்த நபர் அங்கு இல்லை. இதுகுறித்து அந்த நபரை நேரில் கண்ட 22 வயதான கேத்தரின் என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அந்த நபர் ப்ளூம்ஸ்பரி ஸ்கொயர் […]
அமெரிக்காவிற்கு பெரும் தொகையை வழங்கிய பிரான்ஸ் நாட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 35 வயதுடைய லாரன்ட் என்பவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு 520,000 டாலர் தொகையை வழங்கியுள்ளார். அவர் தனது சொந்த குடியிருப்பை பயன்படுத்தாமல் ஹோட்டலில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அவர் கடந்த 8 ஆண்டுகளாக நரம்பு தொடர்பான வலிகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி தற்கொலை […]
கனடாவில் போதைக்கு அடிமையாகி சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் மரணமடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவரின் தாயார் கேள்வி எழுப்பியுள்ளார். கனடாவின் ஒன்ராரியோ என்ற பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் Jordan Sheard . இவர் அடிக்கடி போதைப்பொருள் உபயோகித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடலில் ஏதேனும் போதைப்பொருள் வைத்திருக்கிறாரா? என்பதை உறுதி செய்வதற்காக மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்பும் சிறைக்கு செல்லும் முன்பும் காவல்துறையினர் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்துள்ளனர். அதில் அவரிடம் […]
கனடாவில் ஸ்கேன் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் போதைப் பொருளால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் போதை பொருள் பயன்படுத்திய ஜோர்டான் ஷீர்ட் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் போதைப் பொருள் எதையாவது மறைத்து வைத்திருக்கிறார் என்பதை அறிவதற்காக அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. ஆனால் ஸ்கேனில் அவர் அப்படி எதையும் மறைத்து வைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின் சிறையில் அடைக்கப்பட்ட ஜோர்டான் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் வெளிவந்த […]
லண்டனில் உடலுறவு கொள்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லண்டனில் இளைஞருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது வழக்கை விசாரித்த நீதிபதி, “குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞர் எந்த ஒரு பெண்ணுடனும் உடலுறவு கொள்ள வேண்டும் என்றாலும், அதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் காவல்துறைக்கும் 24 மணிநேரத்திற்கு முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர், விராட்கோலி, தமன்னாவிற்கு நோட்டீஸ் அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. சூதாட்டம் எனும் மோகத்தில் எக்கச்சக்கமான பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கட்டி விளையாடுகின்றனர்.சமீப காலமாக ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி பணத்தை இழந்து மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதேபோல் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூபாய் 27 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து […]
சென்னையில் வீட்டிலேயே துப்பாக்கி பயிற்சி மேற்கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு கலைவாணர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் வளர்ப்பு நாய்களை விற்பனை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி இவர் துப்பாக்கி பயிற்சியையும் மேற்கொள்கிறார்.அதற்காக இவர் இரண்டு உயர்ரக ஏர்கன் உள்பட மூன்று ஏர்கன்களை வாங்கி வீட்டிலேயே பயிற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்செல்வன் வீட்டிலிருந்து நிஜ துப்பாக்கி வெடிக்கும் சத்தம் வந்துள்ளது. அச்சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து அம்பத்தூர் உதவி ஆணையரிடம் புகார் […]
பாரிஸில் சைக்கிளைக் கொண்டு இளைஞர் ஒருவர் இதுவரை இல்லாத புதிய சாதனையை படைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸில் இளைஞர் ஒருவர் சைக்கிளைக் கொண்டு 768 படிக்கட்டுகளைக் கொண்ட 33 மாடி கட்டிடத்தை தரைத் தளத்தில் இருந்து மேல்தள படிக்கட்டு வரை 30 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் வகையில் இதனை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சாதனையை இதுவரை யாரும் செய்ததில்லை. அவர் இந்த […]
தேனி மாவட்டத்தில் இளைஞரை 7 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார் என்பவர். இவர் நேற்று குள்ளப்புரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம்,பிரபு ஆகியவர்களுடன் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சண்டையிட்ட அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். நவீன் குமார் நேற்று […]
பறக்கும் ரயிலில் இருந்து இளைஞர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில் இரவு 9 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த சவுகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் தெருவை சேர்ந்த காந்திலால் மகன் ஜெகதீஷ்(18) என்பவர் ரயில் சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலை அரசு அலுவலர்கள் குடியிருப்பு அருகே சென்றபோது அவர் ரயிலில் இருந்து திடீரென கீழே குதித்தார். சாலையில் விழுந்த ஜெகதீஷின் […]
செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நல்ல பாம்பு கடித்து உயிர் பிழைத்து கொண்ட இளைஞர் உருக்கமான பதிவை தெரிவித்துள்ளார். செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நல்ல பாம்பு கடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த சொர்ண பூமியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் முக்குடாதி. அவர் இரு நாட்களுக்கு முன் தனது இருசக்கர வாகனத்தில் செங்கோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்திற்கு […]
சேலத்தில் பொலிரோ கார் ஒன்று நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர் மீது மோதி நிற்காமல் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பவானியில் இருந்து இன்று பிற்பகல் 2 மணி அளவில் பொலிரோ கார் ஒன்று சேலம் நோக்கி வந்தது இந்த காரை வெங்கடேசன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சேலம் அன்னதானப்பட்டி அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகில் வந்துகொண்டிருந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது இந்த […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்த இந்தியர் ஒருவர் தனது வேலையை இழக்கப் போகும் தருவாயில் ஒரு மில்லியன் டாலர் லாட்டரி அடித்த சம்பவம் நடந்துள்ளது. துபாயில் வேலை பார்த்து வந்த இந்தியரான நவ்னீத் சஞ்சீவன் வேலையை இழப்பதற்கு முன்பு ஒரு மில்லியன் டாலரை வென்றுள்ளார். கொரோனா காலகட்டம் காரணமாக தன்னுடைய வேலையை இழக்கும் தருவாயில் இருந்தார். டிசம்பர் 28-ஆம் தேதி தான் இவருக்கு அலுவலகத்தில் கடைசி நாள். அதற்கு முன்பு அவருக்கு ஒரு மில்லியன் […]
கோவை அருகே தங்கையின் திருமண செலவிற்காக பணத்தை ஈட்ட பகுதி நேர வேலைக்கு சென்ற இளைஞர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த மாணிக்கவாசகன் என்பவரின் மகன் 25 வயதான யுவராஜ். ஐடி ஊழியரான இவர் தனது தங்கைக்கு திருமணம் செய்து வைக்க கோவை காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் டிக்கெட் புக்கிங் செய்யும் பகுதி நேர வேலையை செய்து வந்தார். மாலையில் வேலைக்கு சென்று இரவு 10 […]
இளைஞர் ஒருவர் பத்திரிக்கை அலுவலகம் முன்பு தீவிரவாத தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரிசில் சார்லி ஹெப்டோ என்ற பத்திரிக்கை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முன் தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இத்தாக்குதலில் தொடர்புள்ளதாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய இளைஞர் சாஹீர் ஹஸன் முஹம்மது (25) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் மீது தீவிரவாத தாக்குதல் […]
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக பரபரப்பு கடிதம் ஒன்று வந்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க இருப்பதால் முழுவேகத்தில் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் ஒருவரையொருவர் சமூக வலைத்தளங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் பிரச்சாரத்திற்கு செல்ல இருக்கும் நிலையில் மனித வெடிகுண்டாக மாறி முதல்வர் பழனிசாமி மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவேன் என்று சென்னை கேகே நகர் […]
பாவூர்ச்சத்திரம் அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் அவரது நண்பரை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்தவர் 27 வயதுடைய சுடலைமணி. இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 14ஆம் தேதி காலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் நான்கு தனிப்படைகள் அமைத்து […]
நடிகர் வடிவேலு காமெடி காட்சியை போல வாகனத்தை ஓட்டி பார்த்து விட்டு வாங்குகிறேன் என்று கூறி இருவர் பைக்கை திருடிச் சென்ற சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தை விற்பனை செய்ய நினைத்துள்ளார். அதற்காக விளம்பரமும் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்த இருவர் இளைஞரை தொடர்பு கொண்டு அவரது இரு சக்கர வாகனத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதை […]
திருமணம் நின்றதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியை சேர்ந்தவர் தங்கராணி.இவருடைய மகன் விஜய் (25). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமணம் நடைபெறாமல் நின்றுவிட்டது . இதனால் அவர் கடந்த சில நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் மனக் குழப்பத்துடன் இருந்துள்ளார் . இந்நிலையில் தூங்குவதற்காக புதிதாக கட்டப்படும் வீட்டிற்கு சென்றுள்ளார் . மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் விஜய் வெளியே வராததால் அவரது தாயார் விஜயை […]
பட்டதாரி இளைஞர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கோவை மாவட்டத்தில் உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்(27). இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் . கார்த்திகேயன் கல்லூரியில் படிக்கும் பொழுது சக மாணவி ஒருவரை காதலித்துள்ளார். கடந்த மாதத்திற்கு முன்பு அந்த மாணவி கோவைக்கு சென்று கார்த்திகேயனை சந்தித்து பேசியுள்ளார். மேலும் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர் . இதனிடையே செல்போனில் பேசும் […]
கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய பெண்ணுக்கு இந்திய இளைஞர் புரபோஸ் செய்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. அப்போது மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண திரண்டு இருந்தனர். அச்சமயத்தில் ஆஸ்திரேலிய பெண்ணுக்கு இந்திய இளைஞர் ஒருவர் புரபோஸ் செய்தார். அதை கண்டு ஆச்சரியம் அடைந்த அந்த பெண் காதலுக்கு ஓகே சொன்ன உடன், மைதானத்திலேயே அந்த இளைஞர் பெண்ணுக்கு மோதிரம் மாட்டிவிட்டார். அந்த வீடியோ சமூக […]
காரைக்கால் மாவட்டத்தில் அத்துமீறி கோவிலுக்குள் நுழைந்து சாமி சிலைகளை வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் பகுதியில் மன்சூர் அழி கான் என்ற இளைஞர் வசித்து வருகிறார். அவர் அங்கு இருக்கும் கோயில்களில் அத்துமீறி நுழைந்து சாமி சிலைகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பார்வதீஸ்வரர் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து சாமி சிலைகளை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோக்களை அவர் முகநூலில் பகிர்ந்த […]
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிள் ஐ-போன் வாங்குவதற்காக கிட்னியை விற்ற நபர் தற்போது உயிருக்கு போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக செல் போன் சந்தையில் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படுவது மற்றும் செல்போன் நிறுவனங்களிலேயே அதிக விலைக்கு விற்பதுமான ஆப்பிள் ஐபோன்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான புதிய மாடலை போனை வாங்குவதற்கு சீனாவை சேர்ந்த வாங் என்ற இளைஞர் தனது கிட்னியில் ஒன்றை விற்று இரண்டரை லட்சம் ரூபாய்க்கு […]
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே 11 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணி ஆக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அலங்காநல்லூர் அருகே குலமங்கலம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார். இருபத்தொரு வயதான இவர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற 11 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின் குலமங்கலம் பகுதியில் அச்சு உரிமை மற்றும் தன் பெற்றோருடன் அருண்குமார் […]
சென்னையில் கொரோனாவின் தாக்கம் மேலும் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று விளையாட்டு மைதானங்களில் இளைஞர்கள் அதிக அளவில் குவிந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த 10 நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு 1,400 என்ற அளவில் இருந்து வருகிறது. கொரோனா தாக்கம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஏற்கனவே அறிவித்திருந்தார். கொரோனா ஊரடங்கு முக்கிய […]
திருப்பூரில் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாகக் கூறி அரசு மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் அருகே கே. செட்டி பாளையத்தை சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகன் மணிகண்டன் பனியன் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் ஏற்கனவே விவாகரத்து பெற்ற நிலையில் சரண்யா என்ற பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சரண்யா சுடுதண்ணி ஊற்றி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணைக்காக மணிகண்டனை […]
வீட்டு வேலைக்கு வராததால் இளைஞரை மொட்டை அடித்து மிரட்டிய பிக்பாஸ் புகழின் மனைவியை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசாவை சேர்ந்த தலித் இனத்தைச் சார்ந்த ஸ்ரீகாந்த் என்ற இளைஞர், குடும்ப வறுமை காரணமாக, தெலுங்கில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 2 புகழான நூதன் நாயுடு என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார். ஆனால் ஸ்ரீகாந்த் திடீரென்று வேலையிலிருந்து நின்றிருக்கிறார். ஒரு மாதம் மட்டும் வீட்டு வேலை செய்த ஸ்ரீகாந்த் சம்பளம் வாங்கிக்கொண்டு அடுத்த […]
பணத் தேவைக்காக குடும்பத்தையே விஷம் வைத்துக் கொல்ல முயற்சித்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கேரளா மாநிலத்தில் இருக்கும் காசரக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஆன்மேரி என்பவர் அவரது அண்ணனான ஆல்பின் பென்னி வாங்கிக் கொடுத்த ஐஸ்க்ரீமை சாப்பிட்டு உயிரிழந்துள்ளார், அதோடு ஆல்பின் பெண்ணின் தாய் தந்தையும் அதே ஐஸ்கிரீமை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆன்மேரி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். அதில் ஆன்மேரி சாப்பிட்ட ஐஸ்கிரீமில் விஷம் கலக்கப்பட்டு […]
திருமணமானதை மறைத்து இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சென்னை மதுரவாயல் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திடீரென வயிறு வலிப்பதாக கூறியுள்ளார் இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் அப்பெண்ணை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் சில மணி நேரங்களில் குழந்தை பிறந்து விடும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளிடம் விசாரிக்க காத்திருந்தனர். பின்னர் சில மணி நேரங்களில் […]
காதலித்த பெண்ணை திருமணம் செய்யப்போகும் மகிழ்ச்சியில் துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நேற்று முன்தினம் துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கி 18க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். விபத்துக்குள்ளான விமானத்தில் பயணிகள், விமான ஊழியர்கள், விமானி என 191 பேர் பயணம் செய்தனர். பயணிகளில் ஒருவரான முகமது ரியாஸ் என்ற 24 வயது இளைஞன் […]
கேரளாவில் இளைஞர் ஒருவர் ஆறாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொல்லம் என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் சுமேஷ். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்த அவருக்கு கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை கிடைத்தது.ஜார்ஜியாவில் பணியாற்றி வந்த நிலையில் அவர் தனது நண்பர்களுடன் தனியாக அறை எடுத்து தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் சென்ற வெள்ளிக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் வகையில் வீட்டில் பிரியாணி சமைத்து உள்ளனர். நண்பர்கள் அனைவருடனும் […]
தெலுங்கானாவில் பேய் ஓட்டுவதாக கூறி மருமகளை இளைஞர் ஒருவரை அழைத்து வந்து அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சிதாவும் மல்லேஷ் என்பவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மாதங்களே ஆன பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மருமகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை அழைத்து வந்து சரமாரியாக அடித்து துன்புறுத்தியதால் அந்த பெண் அலறித்துடித்தார். இளைஞரின் […]
மைசூர் அருகே பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞரை இளம்பெண் ஒருவர் செருப்பால் அடித்த காட்சிகள் வீடியோவில் வைரலாகிறது. கர்நாடக மாநிலம் மாண்டிகாவில் இருந்து பெண்மணி ஒருவர் பாம்பு புத்ரா நகருக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். பெண்ணின் இருக்கைக்கு பின்புறம் அமர்ந்திருந்த நபர் பெண்ணிடம் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த அந்த பெண் சில்மிஷம் செய்த இளைஞரின் சட்டையை பிடித்து கேள்வி எழுப்பினார். மன்னித்து விடுமாறு அந்த இளைஞன் கேட்க உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது என்று கூறி […]
கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறால் காவல் நிலையம் முன்பு இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் சமயபுரம் அருகே மாகாளிக்குடி பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் அருகே தேங்காய் மற்றும் பழக்கடை நடத்தி வருகின்றார். தற்போது கோயில்கள் மூடப் பட்டிருப்பதால் இவரது கடையும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கமணியிடம் மாகாளிக்குடி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தானும் அதே பகுதியில் கடை வைக்கப்போவதாக கூறி […]
காரில் சென்று கொண்டிருந்த சமயம் தன்னைக் கடித்த விஷப்பாம்புடன் இளைஞர் போராடி மீண்டுள்ளார் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து நகரில் நெடும்சாலையில் 27 வயதுள்ள ஒரு இளைஞர் காரில் சென்றபோது அந்தக் காரில் அதிக விஷம் நிறைந்த பாம்பு ஒன்று அந்த இளைஞரை கடித்துள்ளது. உடனே அந்த இளைஞர் சுதாரித்துக்கொண்டு வெளிவர முயற்சி செய்துள்ளார். ஆனால் பாம்பு அவரின் காலை சுற்றி வளைத்து அவர் உட்கார்ந்திருந்த சீட்டையும் தாக்கி உள்ளது. எனவே அவருக்கு வாகனத்தை நிறுத்தவும் வழியில்லை தப்பிக்கவும் […]