Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இணையவழியில் நடைபெற்ற…. ரத்ததான தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி….!!

இளையான்குடியில் ரத்ததான தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி மருத்துவர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் உலக ரத்ததான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இணையவழியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர் முகமது உறுதிமொழியை வாசிக்க மாணவ, மாணவிகள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் அஸ்மத் பாத்திமா, செய்யது யூசுப் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Categories

Tech |