மாநிலங்களவையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின் போது விண்வெளித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் “கடந்த 5 வருடங்களில் 19 நாடுகளின் 177 செயற்கைக் கோள்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் (இஸ்ரோ) வா்த்தக ரீதியாக வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா். இதன் வாயிலாக 9.40 கோடி டாலரும் (சுமாா் ரூ.778 கோடி), 4.60 கோடி யூரோவும் (சுமாா் ரூ.407 கோடி) அந்நியச் செலாவணியாகக் கிடைத்திருக்கிறது. விண்வெளி குறித்த நடவடிக்கைகளில் தனியாா் நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு […]
Tag: இஸ்ரோ
இஸ்ரோ நடத்தும் ஜியோ கம்ப்யுடேஷன் மற்றும் ஜியோ வெப் சேவைகள் தொடர்பான ஐந்து நாள் இலவச பயிற்சி வகுப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் ஜியோ கம்ப்யூடேஷனின் அறிமுகம், ஆன்லைன் புவியியல் தகவல் முறைமை, ஜியோ வெப் சேவைகளின் ப்ரோகிராமிங் வகுப்புகள், பைத்தான் மற்றும் ஆர் மென்பொருளின் அறிமுகம், வெப் ஜிஐஎஸ் சார்ந்த அடுத்தக்கட்ட தகவல்கள், கிளவுட் அடிப்படையில் தரவுகளைப் பயன்படுத்தும் முறை ஆகியவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு இன்று […]
இஸ்ரோ நடத்தும் ஜியோ கம்ப்யுடேஷன் மற்றும் ஜியோ வெப் சேவைகள் தொடர்பான ஐந்து நாள் இலவச பயிற்சி வகுப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் ஜியோ கம்ப்யூடேஷனின் அறிமுகம், ஆன்லைன் புவியியல் தகவல் முறைமை, ஜியோ வெப் சேவைகளின் ப்ரோகிராமிங் வகுப்புகள், பைத்தான் மற்றும் ஆர் மென்பொருளின் அறிமுகம், வெப் ஜிஐஎஸ் சார்ந்த அடுத்தக்கட்ட தகவல்கள், கிளவுட் அடிப்படையில் தரவுகளைப் பயன்படுத்தும் முறை ஆகியவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு அக்டோபர் […]
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜி.எஸ்.எல். வி மார்க் 3 ராக்கெட் மூலம் 36 செயற்கை நாளை மறுநாள் இரவில் விண்ணில் ஏவ உள்ளது. ஆந்திர ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 வது தளத்தில் இருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இந்த வகை ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எயந்திரங்களால் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்ட ராக்கெட் […]
முன்பாக ஒரு கால் இல்லாதவர்கள் எடை அதிகமான செயற்கைக்கால் பொருத்தி நடக்கவேண்டி இருந்தது. அதன் அதீத எடை நடப்பவர்க்கு சிரமத்தை கொடுத்தது. அதற்கு நமது நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இஸ்ரோவில் பணிபுரிந்தபோது ராக்கெட் தயாரிக்கும் மெல்லிய வலுவான இலகுரக புரோஸ்டெடிக்ஸ் பயன்படுத்தி இலகுரக செயற்கைக் கால்களை உருவாக்கினார். இன்றுவரை அந்த கால்கள் தான் பல பேருக்கும் பெரிய துணைவனாக நின்று அந்த மக்களையும் நிற்கவைக்கிறது. தற்போது அதன் வளர்ச்சியாக நுண்செயலி பயன்படுத்தும் செயற்கை கால்களை […]
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனைகளை படைத்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இரு செயற்கைக்கோள்களுடன் எஸ்எஸ்எல்வி வகையின் முதல் சிறிய ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு இருக்கிறது. தகவல் தொடர்பு தொலை உணர்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. அதற்காக பிஎஸ்எல்வி ஜிஎஸ்எல்வி வகையாக ராக்கெட்டுகள் மூலமாக செயற்கை கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு வருகின்றது. இதில் […]
இந்திய விண்வெளியின் தந்தை என அறியப்படுகின்ற விக்ரம் சாராபாய் இஸ்ரோ தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் ஆராய்ச்சியும் மேற்கொண்டவர். அவர் திண்டுக்கல் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருமகன். இவ்வாறு பல தொழில் முறை மற்றும் குடும்ப தொடர்புகளை தமிழகத்துடன் கொண்டவர் விக்ரம் சாராபாய். துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனத்தின் மூலம் ஒரே சமயத்தில் 14 செயற்கைக்கோள்களை ஏவி 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் உலக சாதனை நிகழ்த்தியது இந்தியா. மேலும் இந்த செயற்கைக்கோள்களை அதன் சுற்றுவட்ட […]
சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்இஓ நியூசர் உள்ளிட்ட 3 செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி -C53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூன் 30-ஆம் தேதி மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த நிலையில் இதனை பொதுமக்கள் நேரில் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் இஸ்ரோ இணையதளத்தில் ஜூன் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களே இது ஒரு அரிய வாய்ப்பு மிஸ் பண்ணாம பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பிரதமர் நரேந்திர மோடி சென்ற 2018 ஆம் வருடம் சுதந்திரதின உரையில் “ககன்யான்” திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு இந்தியாவில் இருந்து மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என குறிப்பிட்டார். அந்த வகையில் ரூபாய் 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் “ககன்யான்” திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. அதற்குரிய பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இப்போது இத்திட்டத்திற்காக […]
SAR Data Processing-ல் ஆன்லைன் வகுப்புகளை இஸ்ரோ அறிமுகம் செய்துள்ளது. EOS செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட பின், அது தரும் தகவல்களை சேகரிப்பது, பயன்படுத்துவது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம் எனவும் இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் வகுப்புகள் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்புகளுக்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் எனவும், விருப்பமுள்ள மாணவர்கள் ஆராய்ச்சியாளர்கள் isat.iirs.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் […]
இஸ்ரோ நிறுவனம் இந்திய செயற்கை கோள்களைகளையும், பிற நாடுகள் தயாரிக்கும் செயற்கை கோள்களையும் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் (ஆந்திரா) உள்ள ஏவுதளங்களில் இருந்து விண்ணுக்கு செலுத்தி வருகிறது. அங்கு இரு ஏவுதளங்கள் உள்ளன.அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் மிக விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமையும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர் எதிர்கால தேவை, செலவீனம், பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இந்தியாவிற்கு மற்றொரு ஏவுதளம் […]
Indian Space Research Organization (ISRO) இஸ்ரோ நிறுவனத்தில் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் நடைபெறுகிறது. இந்த ISRO Young Scientist Program 2020 விண்ணப்பப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.இதில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி (YUVIKA-2022) திட்டத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 10,மாலை 4:00 PM . இத்திட்டத்தின் கீழ் 150 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களின் விவரம் ஏப்ரல் 20ஆம் தேதி வெளியிடப்படும். பயிற்சி […]
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் தளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் மூலம் EOS-04 என்ற செயற்கை கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது. புவியில் இருந்து சுமார் 530 கி.மீ உயரத்தில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் EOS-04 என்ற செயற்கை கோள்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. விவசாயம், வனம், வெள்ளம் போன்றவற்றை துல்லியமாக படம்பிடிக்கும் அதிநவீன கேமரா EOS-04-ல் உள்ளது. பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட EOS-04 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. […]
மாணவர்களுக்கு இஸ்ரோ நடத்தும் கோடைகால முகாமில் பங்கேற்க ஒரு வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. ஒன்பதாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் குழந்தைகள் அறிவியல் மற்றும் விண்வெளியில் ஆர்வமுள்ள குழந்தைகள் மே 11 முதல் 22 வரை இஸ்ரோ நடத்தும் யுவிகா எனப்படும் கோடைகால சிறப்பு முகாமில் பங்கேற்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் குழந்தைகள் பிப்ரவரி 13 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு w.w.w.isro.gov.in என்ற இணையதள முகவரியை சென்று […]
இஸ்ரோ இதுவரை 471 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது என மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தி உள்ள செயற்கை கோள்களின் எண்ணிக்கை குறித்து விண்வெளி துறை அமைச்சகம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரோ இதுவரை 467 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது எனவும் அதில் இந்தியா தவிர மற்ற 36 நாடுகளின் 342 செயற்கைக்கோள்களும் இதில் அடங்கும் எனவும் விண்வெளி துறை கூறியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.. இஸ்ரோ தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு சோமநாத் செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.. இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சிவனின் பதவிக்காலம் முடிந்த நிலையில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் சோமநாத்..
ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் இஸ்ரோவின் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் என தகவல் வெளியாகியுள்ளது. குன்னூர், ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வரும் இஸ்ரோவின் சுகன்யா திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு மூன்று வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் முதற்கட்ட பயிற்சியில் வருண் சிங் பங்கேற்றிருந்தார். குரூப் கேப்டன் வருண் சிங் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று நடந்த விபத்தில்வருண் சிங் மட்டுமே உயிர் […]
இந்திய-அமெரிக்க விண்கலங்கள் நிலவின் சுற்றுப்பாதையில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதை தவிர்த்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். நிலவின் சுற்றுப்பாதையில், இஸ்ரோவின் தயாரிப்பான சந்திராயன்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் மற்றும் நாசாவிற்குரிய லூனார் எல்ஆர்ஓ விண்கலத்தின் ஆர்பிட்டர் இரண்டும், ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் நிலையில் இருந்திருக்கிறது. இரண்டு விண்கலங்களுக்கும் இடையில் 100 மீட்டருக்கும் குறைந்த இடைவெளி தான் இருந்துள்ளது. ஆனால், இஸ்ரோ விஞ்ஞானிகளும், நாசா விஞ்ஞானிகளும் சேர்ந்து உடனடியாக அதனைக் கண்டறிந்து விரைவில் நடவடிக்கை மேற்கொண்டதால், மிகப்பெரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டிருப்பதாக […]
இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை, பனி மற்றும் பனிப்பாறைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.-03 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு வரும் 12-ம் தேதி காலை 5.43 மணிக்கு வானிலை நிலைகளுக்கு உட்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான […]
எலான் மஸ்க் இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இஸ்ரோ ரூ.10 ஆயிரம் கோடி செலவில் “ககன்யான்” என்று பெயரிடப்பட்ட விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது 2022-ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் 75-வது சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது ககன்யான் விண்கலத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மூன்று வீரர்களை அனுப்ப உள்ளது. இதற்கிடையே திருநெல்வேலியில் உள்ள மகேந்திரகிரி திரவ இயக்க உந்தும வளாகத்தில் ககன்யான் திட்டத்துக்காக வடிவமைக்கப்பட்ட […]
நாடு முழுவதும் அதி தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அரசுகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் குறைந்த விலையில் உயர்தர வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் செரிவூட்டிகளை இஸ்ரோ தயாரித்துள்ளது. இந்த வெண்டிலேட்டர்கள் எளிதாகக் கையாளும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. […]
நிலாவில் ஆய்வு செய்வதற்கு இந்தியாவின் மூன்றாவது விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கம் கடந்த ஆண்டு அதிகமாக இருந்ததால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான “இஸ்ரோ “வின் பல விண்வெளி திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டமும சந்திராயன் நிலவுக்கு விண்கலன் அனுப்பப்படுவதும் அடங்கியுள்ளது. விண்ணுக்கு ஏவப்பட இருந்த சந்திராயன்- 3 ராக்கெட் திட்டம் கடந்த ஆண்டின் இறுதியில் நிறுத்தப்பட்டது. இதனைப்பற்றி […]
இந்த ஆண்டு 20க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் வரை செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தும் பணியை இஸ்ரோ நிறுத்தி வைத்திருந்தது. இந்தாண்டு பல செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விண்வெளி ஆராய்ச்சியில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நமது விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இஸ்ரோ சார்பில் கடந்த நவம்பர் […]
சந்திராயன் 2 ஆர்பிட்டர் மூலம் திரட்டப்பட்ட விவரங்களை வெளியிட்டுள்ள இஸ்ரோ, அது இன்னும் 7 ஆண்டுகள் சிறப்பாக இயங்கும் என தெரிவித்துள்ளது. 16 மாதங்களாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சந்திராயன்-2 ஆர்பிட்டரில் 8 ஆய்வுக் கருவிகள் உள்ளன. இந்த ஆய்வுக் கருவிகள் மூலம் இதுவரை 8 வகையான ஆய்வுகளை செய்துள்ள சந்திராயன் 2, அது தொடர்பான விவரங்களை பெங்களூரு அருகே உள்ள தரைநிலையத்திற்கு அனுப்பியுள்ளது. நிலவைப் பற்றிய அறிவியல் ஆய்வுகளுக்கு இந்த விவரங்கள் பயன்படும் என […]
தகவல் தொழில்நுட்பத்திற்கான சிஎம்எஸ் one செயற்கைக்கோளை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி – c50 ராக்கெட் நாளை பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது, இதற்கான 25 மணிநேர கவுண்டவுன் தொடங்கியது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பூமி கண்காணிப்பு பணிக்காக EOS1 என்ற செயற்கைக் கோள்களையும், தகவல் தொடர்புக்காக சிஎம்எஸ் 1, EOS2 மற்றும் EOS3 என்ற செயற்கைக் கோள்களையும் வடிவமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் […]
10 செயற்கைகோள் உட்பட இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை தயாரித்து வருகிறது. அதில் நம் நாட்டிற்கு உரிமையான செயற்கை கோள்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் வணிகரீதியிலான செயற்கை கோள்களை விண்ணுக்கு செலுத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை நிறுவனம் தயாரித்து கொண்டிருக்கிறது. அதனை டிசம்பர் மாதத்தில் […]
நம் பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் உள்ளிட்ட 10 செயற்கைக்கோள்களை நாளை மறுநாள் விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை தயாரித்து வருகிறது. அதில் நம் நாட்டிற்கு உரிமையான செயற்கை கோள்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் வணிகரீதியிலான செயற்கை கோள்களை விண்ணுக்கு செலுத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை நிறுவனம் தயாரித்து கொண்டிருக்கிறது. அதனை […]
வெள்ளி கிரகத்துக்கு வருகின்ற 2025 ஆம் ஆண்டில் விண்கலம் அனுப்பும் திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பிரான்ஸ் செயல்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமாக திகழும் இஸ்ரோ, செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் மங்கள்யான் என்ற திட்டத்தை நிறைவேற்றி உள்ளது. மேலும் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் திட்டமான சந்திராயன்1 மற்றும் சந்திராயன் 2 ஆகிய திட்டங்களை மேற்கொண்டது. இவற்றைத் தொடர்ந்து வெள்ளி 2 கிரகத்தின் மீது பார்வையை செலுத்தியுள்ள இஸ்ரோ,வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்கு விண்கலம் அனுப்ப […]
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் ஒரு வருடத்தில் 4 ஆயிரத்து 400 முறை நிலவை வலம் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தினை ஜிஎஸ்எல்வி 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது. இது நிலவின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட நிலையில் நிலவில் தரையிறங்க முயற்சியில் அதன் […]
விண்வெளி துறையில் தனியாரை அனுமதித்ததற்கு இஸ்ரோ முழு ஆதரவு அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். காணொளி வாயிலாக பேசிய அவர், விண்வெளித் துறையில் தனியார் தொழிற்துறையினர் ஈடுபட இஸ்ரோ தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க மத்திய அமைச்சரை கூட்டத்தில் நேற்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் மோடி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். வரும் 30ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடியும் நிலையில் முக்கிய […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ 5 கோடிக்கும் மேல் நிதியுதவியளிக்க உள்ளதாக இஸ்ரோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி கொத்து கொத்தாக மக்களை கொன்று குவித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் […]
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாளை விண்ணில் செலுத்த இருந்த ஜி.எஸ்.எல்.வி எப்-10 ராக்கெட் ஒத்திவைப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதத்தில் 10 கண்காணிப்பு செய்றகைக்கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டது. பருவநிலை கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 2 அதிநவீன ஜியோ இமேஜிங் செயற்கை […]
புவி கண்காணிப்பு மற்றும் வானிலை ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள் வரும் மார்ச் 5ம் தேதி ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதத்தில் 10 கண்காணிப்பு செய்றகைக்கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பருவநிலை கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் […]