பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கே வட மேற்கே இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
Tag: இஸ்லாமாபாத்
இஸ்லாமாபாத்தில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென தீ ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள சென்டாரஸ் மாலில் மூன்றாவது அடுக்கு மாடியில் இன்று ஒரு பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் மேல் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் உட்பட மற்ற தளங்களில் தீ பரவியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் உயிரிழப்புகள் பற்றி உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் 15 நீதிபதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் கொரோனாவின் ஐந்தாம் அலை பரவிக்கொண்டிருக்கிறது. இதனால் அங்கு கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. மேலும், ஒரே நாளில் 7, 678 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது, கடந்த 2020 ஆம் வருடத்திலிருந்து அதிகமான பாதிப்பு என்று சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. இந்நிலையில், இஸ்லாமாபாத் நகரில் 15 நீதிபதிகள் மற்றும் 58 பணியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. எனவே, தற்போது அவர்கள் […]
அமெரிக்காவில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகம் கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், அங்குள்ள பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில வருடங்களாகவே கடும் நிதி நெருக்கடி உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டின் தூதரகம் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்குள்ள பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அந்த தூதரகத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரியும் அமெரிக்க பணியாளர்கள் 5 பேருக்கு கடந்த ஆகஸ்ட் […]
இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய தூதரகத்தின் வளாகத்திற்குள் ட்ரோன் விடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் இருக்கும் இந்திய விமானப்படைத் தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நல்லவேளையாக உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் புதிதாக ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்த முயற்சித்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது போன்ற தீவிரவாத இயக்கங்கள் தான் இத்தாக்குதலை நடத்தியிருக்கும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய […]
பாகிஸ்தான் தலைநகரில் முதல் முறையாக இந்து கோயில் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்துள்ளது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்துக்கள் அதிகம் வசித்து வரும் நிலையில் அங்கு இந்துக்கோவில் இல்லாத காரணத்தினால் நாட்டின் வேறு பகுதிகளுக்கு அவர்கள் சென்று வழிபடும் சூழல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்து மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் தேசிய மனித உரிமை ஆணையம் கோயில் கட்டுவதற்கு நிலத்தை ஒதுக்க அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில் 2017 ஆம் ஆண்டு அந்நாட்டின் […]
பாகிஸ்தானின் வரலாற்றில் முதல்முறையாக, அந்நாட்டின் விமானப்படையில் ஒரு இந்து விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராகுல் தேவ் என்ற இளைஞர் பாகிஸ்தான் விமானப்படையில் பொது கடமை பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிந்து மாகாணத்தின் மிகப்பெரிய மாவட்டமான தார்பார்கரைச் சேர்ந்தவர் ராகுல் தேவ், அப்பகுதியில் இந்து சமூகத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் வசித்துவருகின்றனர். இது குறித்து அனைத்து பாகிஸ்தான் இந்து பஞ்சாயத்து செயலாளர் ரவி தவானி கூறுகையில்; தேவின் நியமனம் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. அதுபோல சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த […]