வேலூர் சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தந்தை மகள் பலியாகியுள்ளனர். இரவு பேட்டரிக்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது பேட்டரி வெடித்து அறைக்குள் புகை மூட்டம் ஏற்பட்டு உள்ளது. புகையில் இருந்து தப்பிக்க கழிவறையில் புகுந்த அவர்கள் மூச்சு திணறி இறந்து உள்ளனர். தற்போது மக்கள் பெட்ரோல் வாகனங்களில் இருந்து மெல்ல மெல்ல பேட்டரி வாகனங்களை நோக்கி நகர்ந்து வரும் வேளையில் இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tag: இ பைக்
சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ-பைக் சேவைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய இ-பைக் மற்றும் அடுத்த தலைமுறை சைக்கிள்கள் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இந்த இ-பைக்கின் வாடகை முதல் 10 நிமிடங்களுக்கு 10 ரூபாயும், அதன் பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கும் 1 ரூபாயும் வசூலிக்கப்படுகின்றது. சைக்கிளின் வாடகை முதல் ஒரு மணி நேரத்திற்கு 5.50, அடுத்த அரை மணி நேரத்துக்கு ரூபாய் 9.90 ஆகும். இதற்கு ஜிஎஸ்டி வரியும் உண்டு. […]
கோவையில் பிராணக் என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றிய மோகன்ராஜ் ராமசாமி என்பவர் எலக்ட்ரிக் பைக் தயாரிக்க மூளையாக இருந்துள்ளார். எலக்ட்ரிக் கார் உற்பத்திக்குப் பெயர் போன நிறுவனம் எலன் மஸ்கின் டெஸ்லா. இந்த நிறுவனத்தில் பொறியாளராக கோவையைச் சேர்ந்த மோகன்ராஜ் ராமசாமி பணியாற்றி வந்தார். பின்னர் அங்கிருந்து விலகி கோவை வந்த மோகன்ராஜ் கடந்த 2012ஆம் ஆண்டு ஸ்ரீவாரி மோட்டார் நிறுவனம் என்ற பெயரில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினார். […]