ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாண்டாம் பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஜான்சி ராணிக்கு கடந்த 4-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பிறந்தது முதல் சளி தொந்தரவு இருந்ததால் குழந்தைக்கு பெற்றோர் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜான்சி ராணி குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளார். சிறிது […]
Tag: ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் வனப்பகுதியை ஒட்டி புதுப்பீர்கடவு கிராமம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் யானை கிராமத்திற்குள் நுழைந்து தெருவில் நடந்து வந்தது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே சென்று கதவை பூட்டி கொண்டனர். அந்த யானை கிராமத்தில் ஒவ்வொரு வீதியாக நடந்து சென்றதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூத்தம்பட்டி பகுதியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வந்துள்ளார். இதற்காக அய்யாவு அப்பகுதிகளில் இருக்கும் வீடுகளில் பழைய கஞ்சி தண்ணீரை சேகரித்து வருவது வழக்கம். கடந்த 2020-ஆம் ஆண்டு ஒரு வீட்டில் பழைய கஞ்சி தண்ணீரை சேகரிக்க சென்ற போது குளியல் அறையில் குளித்து கொண்டிருந்த 8 வயது சிறுமியை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அச்சத்தில் சிறுமி கூச்சலிட்டதும் அய்யாவு அங்கிருந்து தப்பி […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள புதூர்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி பழனிசாமி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் உறவினருடன் குன்றியிலிருந்து கடம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் அஞ்சனை பிரிவு என்ற இடத்தில் சென்ற போது திடீரென வந்த காட்டு யானை பழனிச்சாமியை தூக்கி வீசி காலால் மிதித்து கொன்றது. அவருடன் சென்றவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் அஞ்சனைப் பிரிவு அருகே யானைகளின் நடமாட்டம் இருக்கிறது. அந்த வழியாக செல்பவர்கள் ஆபத்தை உணராமல் செல்போனில் செல்பி எடுக்கின்றனர். […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மேற்கு மலை மணியாச்சி பகுதியில் காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் கார், லாரி, இருசக்கர வாகனங்கள் சாலையின் இரு புறமும் அணிவகுத்து நின்றது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 1 1/2 மணி நேரம் கழித்து காட்டு யானை தானாகவே காட்டுக்குள் சென்றது. அதன் பிறகு வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரி நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திம்பம் மலைப்பாதையின் 19-ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் இரண்டு கார்களும் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 8 பேர் உயிர் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள செண்பகபுதூரில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கோமதி தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் கோமதி தனது இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீடு எடுத்து தனியாக குடியேறினார். நேற்று முன்தினம் கிருஷ்ணகுமாரின் வீட்டு […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் குத்தியாலத்தூர் பகுதியில் ஜடேபந்தப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவர் ஹலோ ஆப் மூலம் ஈரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி அவரது செல்போன் எண்ணை வாங்கி கொண்டார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கார்த்திக் சிறுமியின் ஆபாச பட புகைப்படங்களை பெற்று கொண்டார். ஒரு கட்டத்தில் சிறுமி கார்த்திக்கிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் கார்த்திக் என்னிடம் பேசவில்லை […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள பாரியூர் பகுதியில் ஸ்ரீ ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கூலி தொழிலாளியான ஹரிஹரன் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று விட்டு தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்ரீ ஹரிஹரன் காவிரி ஆற்றில் தவறி விழுந்து காப்பாற்றுங்கள் என அபய குரல் எழுப்பியுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பேரிடர் மீட்பு குழு […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரளயம் ஏலஞ்சிபுதூர்காரர் தோட்டத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். மேலும் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழிலும் செய்து வந்துள்ளார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் பழனிச்சாமி குன்றி பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்தில் மக்காச்சோள அறுவடை பணிக்கு எந்திரத்துடன் சென்றுள்ளார். இதனையடுத்து வேலை முடிந்து பழனிச்சாமியும் அறுவடை இயந்திர ஓட்டுநர் நாகேஷ் […]
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைந்திருக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் தாழ்குனி பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவர் 2 பெண்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ராஜாமணியை மனு கொடுக்க வைத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது கணவர் இறந்துவிட்டார். எங்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து […]
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் முருங்கைக்காடு பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 50 ஆண்டாக சின்னவீரசங்கலியில் இருக்கும் எனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தேன். கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு என்னை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டதால் தோட்டத்து வீட்டில் வசிக்கிறேன். எனது மகன் எனக்கு […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாணிகவுண்டன்பாளையம் பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டிற்கு எதிரே இருக்கும் 80 அடி ஆழ கிணற்றுக்குள் சரஸ்வதி திடீரென குதித்துவிட்டார். தண்ணீர் இல்லாமல் 1 அடிக்கு சேரும், சகதியுமாக இருந்த கிணற்றில் விடிய விடிய சரஸ்வதி உட்கார்ந்திருந்தார். நேற்று காலை கிணற்றுக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டதால் அந்த வழியாக சென்ற பச்சையப்பன் என்பவர் […]
ஈரோடு மாநகர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பாம்புகள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு கடந்த இரண்டு நாட்களாக ஏராளமான இடங்களில் இருந்து பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து விட்டதாக தகவல்கள் வந்தது. இதனால் பழையபாளையம், மாணிக்கம் பாளையம், வில்லரசன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களில் மட்டும் 17 பாம்புகள் பிடிபட்டன. அதில் 3 நாகப்பாம்பு, 14 சாரைப்பாம்பு. இதனையடுத்து […]
ஈரோடு மாவட்டத்தில் சோலார் அருகே உள்ள சின்னியம்பாளையம் ஊராட்சி பாரதி நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் 96 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து பயனாளிகளுக்கு நேற்று வீடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணணுண்ணி, மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் குணசேகரன், மாநில நெசவாளர் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள சோலார் லக்காபுரம் பகுதியில் சிவபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொற்கொடி என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்த பொற்கொடி தனக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பமில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். அவருக்கு உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இன்னும் 4 மாதங்கள் மட்டுமே கல்லூரி […]
கர்நாடக மாநிலத்திலிருந்து தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தை மாசிலாமணி என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 3-வது வளைவில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் கவிந்தது. இந்த விபத்தில் மாசிலாமணி அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் வாகனம் சாலையோரம் கவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த 19-ஆம் தேதி பண்ணாரி சோதனை சாவடி அருகே சிறுத்தை சாலையை கடந்து சென்ற வீடியோ கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இதனால் வனத்துறை சோதனை சாவடி மற்றும் பண்ணாரி சோதனை சாவடியில் வேலை பார்க்கும் அதிகாரிகள் ஒருவித பயத்துடன் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு 10:30 மணி அளவில் பண்ணாரி போலீஸ் சோதனை சாவடி பின்புறம் இருக்கும் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. அவ்வபோது அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் நின்று விடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து பெங்களூரு நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திம்பம் மலைப்பாதையின் 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் பழுதாகி […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரம்பட்டிவலசு அணைக்கட்டு ரோடு பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மல்லிகா(48). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது மகன் சதீஷ்குமார் பி.எஸ்.சி பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தான். கடந்த 2017-ஆம் ஆண்டு ஈரோட்டை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் மின்சார வாரிய அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்தார். அதனை நம்பி அவர் கேட்ட 13 லட்ச ரூபாய் […]
வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள போலநாயக்கன் பாளையம் பகுதியில் வேன் டிரைவரான பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னக்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பழனிசாமிக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் அன்னக்கொடி தனது 2 மகள்களுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பழனிச்சாமி […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நசியனூர் கதிரம்பட்டி நெசவாளர் காலனியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் ஸ்ரீநிதி தனியார் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் உடல் நல குறைவு காரணமாக ஸ்ரீநிதி பள்ளிக்கு செல்லவில்லை. இந்நிலையில் ஸ்ரீநிதியின் தாய் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது தனது மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து ஸ்ரீநிதியின் தாய் கதறி அழுதார். இது பற்றி அறிந்த சித்தோடு […]
கேரள மாநிலத்தில் உள்ள பனங்காடு பகுதியில் ஜவுளி வியாபாரியான அன்சார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஜவுளிகளை கொள்முதல் செய்வதற்காக 29 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு நண்பர்களான பஷீர், அபிலாஷ் ஆகியோருடன் காரில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார். ஏற்கனவே புரோக்கர் ஒருவர் பெருந்துறையில் ஜவுளி கொள்முதல் செய்து தருவதாக அன்சாரிடம் தெரிவித்தார். அந்த புரோக்கர் கூறியபடி அன்சார் தனது நண்பர்களுடன் சரளை ஏறி கருப்பன் கோவில் அருகே வந்து நின்றார். அவர்கள் […]
பாய்லர் வெடித்து சிதறியதால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வெண்டிபாளையம் கட்டளை கதவணை பகுதியில் பன்னீர், பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு கருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமன்(70) உட்பட 4 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று தண்ணீரை சூடாக்கும் பாய்லரை ராமன் இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிக அழுத்தம் காரணமாக பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் உடல் சிதறி […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளோட்டில் இருந்து பெருந்துறை ஆர்.எஸ் செல்லும் வழியில் பல ஏக்கர் பரப்பளவிலான சின்னகுளம் அமைந்துள்ளது. இதன் கரையில் இருக்கும் வேப்பமரத்தில் கடந்த ஒரு வாரமாக பால் வடிந்ததை அறிந்த நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு சென்று வேப்ப மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர். இதனையடுத்து வேப்ப மரத்திற்கு மஞ்சள் துணி கட்டி மஞ்சள், குங்குமம் வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, வெள்ளோட்டில் இருக்கும் புகழ்பெற்ற மாரியம்மனின் கோவிலில் கடந்த வாரம் பொங்கல் விழா […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள கள்ளிப்பட்டி சின்னாரி தோட்டம் பகுதியில் விவசாயியான கே.பி கிருஷ்ணமூர்த்தி(86) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சாவித்திரி(60). இந்த தம்பதியினருக்கு கன்னியப்பன் என்ற மகனும், பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளுப்பேத்தியும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மதியம் வயது முதிர்வு காரணமாக கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். அவரது தோட்டத்திலேயே உடல் எரியூட்டப்பட்டது. இந்நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் இருந்த சாவித்திரி நேற்று மதியம் உயிரிழந்தார். கணவரின் உடல் எரியூட்டப்பட்ட இடத்திற்கு அருகிலேயே சாவித்திரியின் உடலும் எரியூட்டப்பட்டது. […]
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சத்தியமங்கலம்-ஈரோடு ரோட்டில் ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவில் எதிரே மாது என்பவர் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டு சுவர் தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்தது. அப்போது மாது மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் […]
கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரியசேமூரில் பாலதண்டாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்(22), கிருஷ்ணன்(19) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் உறவினர்களான சதீஷ்(35) மணிகண்டன்(32), ஐயப்பன்(27) ஆகியோருடன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றனர். அந்த காரை கிருஷ்ணன் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் பகுதியில் நான்கு வழி சாலையில் இருக்கும் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி மைசூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து செல்வது வழக்கம். தற்போது அந்த பகுதி பசுமையாக இருப்பதால் சாலையோரம் முகாமிட்டு யானைகள் தீவனம் உண்ணுகின்றன. நேற்று மதியம் ஒரு யானை திம்பம் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற 2 பேர் யானையுடன் செல்பி எடுக்க முயன்ற போது கோபமடைந்த […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள காலிங்கராயன் பாளையம் மனக்காட்டூர் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எம்.பி.ஏ முதலாமாண்டு படிக்கும் ராமகிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக செல்போன் பார்த்து கொண்டே ராமகிருஷ்ணன் வீட்டில் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 7-ஆம் தேதி நள்ளிரவு நேரமாகியும் ஏன் செல்போன் பார்த்து கொண்டிருக்கிறாய்? போய் தூங்கு என சுமித்ரா தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் தூங்க […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள கே.மேட்டுப்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான வள்ளிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் குழுவினர் வள்ளியை கோபி அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து சென்றனர். இந்நிலையில் கடுக்காம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சக்திவேல் வாகனத்தை ஓரமாக […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளிரவெளி பகுதியில் மதிவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோகுல ஸ்ரீ என்ற 3 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. தற்போது முத்துலட்சுமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பெரியகுறவன் பாளையத்தில் இருக்கும் தாய் வீட்டில் தங்கி இருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமி தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தொட்டிலில் தூங்க வைத்துள்ளார். சிறிது […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் யானைகள் அடிக்கடி கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்கிறது. நேற்று அருள்வாடி கிராமத்தில் இருந்து மீன்கரை செல்லும் சாலையில் ஓடை அருகே யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினரும், கால்நடை துறை மருத்துவர் சதாசிவமும் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதனையடுத்து யானையின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. இதுகுறித்து […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாலிகாடு பகுதியில் கணேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கணேஷ் குமார் கோபி குப்பைமேடு பகுதியில் இருக்கும் பணிமனைக்கு அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. அவரது மோட்டார் சைக்கிளில் ஜி.பி எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளின் […]
ஈரோடு மாவட்டத்தில் காலியாக இருக்கும் 107 கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நேற்று பல்வேறு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றுள்ளது. அந்தியூரில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் 1100 பேர் தேர்வு எழுதியுள்ளனர் . இந்நிலையில் வரதநல்லூரை சேர்ந்த பட்டதாரியான ஹரிணி(24) என்பவருக்கும் வினோத் என்பவருக்கும் உறவினர்கள் முன்னிலையில் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கிராம உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த ஹரிணி தான் தேர்வு எழுத விரும்புவதாக கணவரிடம் தெரிவித்துள்ளார். […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை எதிர்பார்த்து யானைகள் நிற்கும். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை யானைகள் துரத்துவதால் கரும்பு கட்டுகளை சாலையில் வீச வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள மைலாடி வெள்ளியங்காடு பகுதியில் விவசாயியான சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்து வருகிறார் மேலும் வீட்டு உபயோகித்திருக்கும் அந்த தண்ணீரை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் மழை பெய்ததால் சீனிவாசன் கிணற்று தண்ணீரை பயன்படுத்தாமல் இருந்துள்ளார். நேற்று மோட்டாரை இயக்கி கிணற்றுத் தண்ணீரை எடுத்த போது கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் தண்ணீர் வந்ததை பார்த்து சீனிவாசன் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள குருவரெட்டியூர் காந்திநகர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதுடன், 32 செம்மறி ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார் கடந்த 17-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் அலறி சத்தம் போட்டதால் சக்திவேல் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது 16 ஆடுகள் கழுத்து, முதுகு பகுதிகளில் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை பார்த்த அதிர்ச்சியடைந்த சக்திவேல் வருவாய்த்துறை மற்றும் வனத்துறை […]
ஈரோடு பாலக்கரையில் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக கீதாராணி என்பவர் உள்ளார். இந்நிலையில் தலைமை ஆசிரியை மாணவர்களிடம் சாதிபாகுபாடு பார்த்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதாவது அப்பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவ- மாணவிகள் 6 பேரை கழிவறையை சுத்தம் செய்ய கூறியிருக்கிறார். இதனால் அவர்களும் வேறு வழியின்றி அதனை செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து வெளியில் சொல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் அஞ்சி தங்களுக்குள்ளேயே வைத்து இருக்கின்றனர். […]
லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்திற்கு பழைய பேப்பர் லோடு ஏற்றி கொண்டு லாரி ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை குண்டூர் பகுதியை சேர்ந்த ராமராஜ் என்பவரை ஒட்டி வந்துள்ளார். அவருடன் கிளீனரான ஆனந்த் என்பவர் உடன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் 2-வது வளைவில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாலக்கரையில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் 35 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 21-ஆம் தேதி பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் மாணவனை பெற்றோர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் பள்ளியில் கழிப்பறையை சுத்தம் செய்த போது கொசு கடித்ததாக மாணவன் டாக்டரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் தாய் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்த கல்வி […]
கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் வயலுக்குள் பாய்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் எருமைகுட்டை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறிகளை வேனில் ஏற்றிக்கொண்டு கரட்டடிபாளையம் பகுதியில் செயல்படும் வார சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் எதிரே வந்த காருக்கு வழி விடுவதற்காக மணிகண்டன் வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையோரம் 10 அடி ஆழத்திலிருந்த வயலுக்குள் பாய்ந்தது. இதனை பார்த்த […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள காமையன்புரம் கிராமத்தில் விவசாயியான மல்லிகார்ஜுனா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 7 ஆடுகள் மற்றும் 3 மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று மல்லிகார்ஜுனா தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தார். அந்த தண்ணீரை 5 ஆடுகள் மட்டும் குடித்தது. சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்த 5 ஆடுகளும் பரிதாபமாக இறந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மல்லிகார்ஜுனா கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை […]
போக்சோ சட்டத்தில் கைதான தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளியான அசோகன்(58) என்பவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி தனது தாயிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் சிறுமியின் தாய் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தனது மகளை அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு தனது மகளிடம் விசாரித்த தாய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருக்கும் […]
பராமரிப்பு இல்லாத வாகனங்களில் தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் பள்ளி வாகனங்கள் தொடர்ச்சியாக விபத்தில் சிக்கியதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் படி தாளவாடி, சத்தியமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட வாகனங்களை கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து அலுவலர் முனுசாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது வாகனங்களில் அவசரகால கதவுகள் சரியாக இயங்குகிறதா? முறையான […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை அரேபாளையம் கிராமத்திற்குள் நுழைந்து தெருக்களில் உலா வந்தது. இதனை பார்த்த மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள்ளையே முடங்கினர். சுமார் 1 மணி நேரம் அங்கும் இங்கும் சுற்றி வந்த […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் பாலதேவகுரு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை கல்லூரி முடிந்து பாலதேவகுரு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு பேருந்து நிலையத்தை கடந்து சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற 2 மோட்டார் சைக்கிள்கள், சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதிவிட்டு, மின்கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் பாலதேவகுரு லேசான காயத்துடன் […]
கிணற்றுகள் விழுந்த நாய்க்குட்டிகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி காந்திநகர் புது காலணியில் ஒரு கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக இரண்டு நாய்க்குட்டிகள் தவறி விழுந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி 2 நாய்க்குட்டிகளையும் பத்திரமாக மீட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராட்டை சுற்றுப்பாளையத்தில் உலகின் மிகப்பெரிய பைரவர் கோவில் கட்டும் பணிகள் சுமார் 7 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலின் கட்டுமான பணிகள் எப்போது முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்பதுதான் எதிர்பார்ப்பாகவும இருந்தது. இந்த எதிர்பார்ப்புக்கு தற்போது பலன் கிடைக்கும் விதமாக மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து ஸ்வர்ண பைரவ பீடம் அறக்கட்டளை நிர்வாகி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, சுமார் 7 வருடங்களாக கோவில் கட்டுமான […]