Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இன்னும் நீங்க திருந்தலையா….? மனைவியை கள்ளகாதலனோடு சேர்த்து வெட்டிய கணவர்….. பெரும் கொடூரச் சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் நந்தகோபால். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி, இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் அவருடைய மனைவி ராஜேஸ்வரிக்கு அதே பகுதியை சேர்ந்த இளங்கோ என்ற இளைஞரோடு ஐந்து வருடங்களாக கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த கணவர் இது எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டுள்ளார். இந்த நிலையில் கணவர் வேலைக்கு சென்று விட்டதாக நினைத்து அந்த பெண் தனது கள்ளக்காதலனுக்கு போன் போட்டு வீட்டிற்கு அழைத்து […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில்…. இன்று ஒரு நாள் மட்டும் இதற்கு தடை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!

முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை முதல்வர் அவர்கள் வழங்க இருக்கிறார். முதல்வர் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று ஒரு நாள் மட்டும் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விதிகளை மீறி ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டால் சட்ட விதிகளின்படி காவல் துறையால் கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“100 யூனிட் மின்சாரம் கூட பயன்படுத்தாத குடும்பம்” ரூ.‌ 94,000 பில்லால் அதிர்ச்சியில் கூலி தொழிலாளி….!!!!

மின் கட்டண பில்லால் கூலி தொழிலாளி மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி அருகே மல்குத்திபுரம் தொட்டி என்ற கிராமத்தில் ரேவண்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி காளி மற்றும் குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ரேவண்ணா தன்னுடைய மனைவி பெயரில் மின் இணைப்பு பெற்று 100 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இதனையடுத்து 100 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தைக் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தீவிர சோதனை” காப்பீடு புதுப்பிக்காத வாகனங்கள் பறிமுதல்….. வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காப்பீடு புதுப்பிக்காத மற்றும் தகுதி சான்று இல்லாத வாகனங்கள் இயங்குவதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் படி நம்பியூர் மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது தகுதி சான்று மற்றும் காப்பீட்டு சான்று இல்லாத 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று தகுதி சான்று மற்றும் காப்பீட்டுச் சான்றை புதுப்பிக்காத 2 ஆட்டோக்களும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் பலத்த மழை…. தண்ணீரில் மூழ்கிய தரை பாலம்… . 100-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் அவதி….!!!!

தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக பணக்கள்ளி, குளியாடா, ஆசனூர், திம்பம், பெஜலெட்டி, கோடிபுரம், தலமலை, தாளவாடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வனப்பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசனூர் பகுதியில் இருந்து கர்நாடகாவிற்கு செல்வதற்கு  தரைப்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தரைபாலம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென தீக்குளிக்க முயன்ற மூதாட்டி…. என்ன காரணமாக இருக்கும்….? கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக மூதாட்டி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்தனர். அப்போது மனு கொடுப்பதற்காக வந்திருந்த ஒரு மூதாட்டி திடீரென மண்ணெணையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மூதாட்டியின் மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு…. வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி…. மீட்பு பணிகள் தீவிரம்….!!!!

கடுமையான வெள்ளப்பெருக்கின் காரணமாக வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடகா மற்றும் கேரள மாநில வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட பல்வேறு அணைகள் நிரம்பியதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இங்கிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சட்டென நின்ற லாரி…. எதிர்பார்க்காமல் மோதிய பைக்…. துடிதுடித்து இறந்த மெக்கானிக்…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து என்பது பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாகவே மாறிவிட்டது. தினசரி மக்கள் ஏதாவது ஒரு தேவைக்காக வெளியே சென்று வருகிறார்கள். போக்குவரத்து என்பது அத்தியாவசிய தேவையாக இருந்தாலும் கூட தினசரி ஏதாவது ஒரு இடத்தில் சாலை விபத்துக்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த சாலை விபத்துகளினால் பல்வேறு விதமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“படியில் பயணம், நொடியில் மரணம்” ஆபத்தை உணராத மாணவிகள்…. பொதுமக்கள் கடும் வேதனை….!!!!

மாணவிகள் பேருந்தில் படிக்கட்டில் என்று செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து பேருந்துகளிலும் படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். இந்த வாசகமானது பொதுமக்கள் படிக்கட்டுகளில் தொங்காமல் இருக்கையில் அமர்ந்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதற்காகவே ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் எந்த விதி முறையையும் பின்பற்றாமல் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே செல்கிறார்கள். அதன் பிறகு பேருந்து நிற்கும்போது ஏறாமல் கிளம்பிய போது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் சோதனை…. கெட்டுப்போன சிக்கன், காளான் விற்பனை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகம் முழுதும் உள்ள அனைத்து ஹோட்டல்கள், கடைகள் மற்றும் பேக்கரிகளில் சுகாதார மற்ற முறையில் உணவு தயார் செய்யப்படுகிறதா? காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை ஆணையாளர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். அந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகனை அழைப்பதற்காக சென்ற தந்தை….. திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!

திடீரென ஆம்னி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் மெய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஹரிஹரன் என்ற மகன் இருக்கிறார். இவருடைய மகன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மெய்யப்பன் தன்னுடைய மகனை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஆம்னியில் சென்றுள்ளார். இதனையடுத்து மெய்யப்பன் தன்னுடைய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. 2 பேர் படுகாயம்…. அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!

மொபட் மீது கார் மோதி விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகே சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் இருக்கிறார். இவர்கள் 2 பேரும் பனைமரம் ஏறும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஜம்பை பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் டீ குடித்துவிட்டு மொபட்டில் வீட்டிற்கு செல்வதற்காக ஏறினர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஊசி குத்தியது போல வலி…. பூச்சி கடித்ததாக நினைத்து…. உயிரே போன பரிதாபம்….!!!!

ஈரோடு மாவட்டம் பஞ்சலிங்கபுரத்தைச் சேர்ந்த ரகுநாதன் மனைவி திவ்யபாரதிக்கு வீட்டில் தண்ணீர் பிடிக்க குழாயை திறக்க சென்ற போது ஏதோ ஊசி குத்தியது போல் வலி ஏற்பட்டுள்ளது. ஏதேனும் பூச்சி கடித்திருக்கலாம் என நினைத்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஆனால் அறிகுறிகளை பார்த்த மருத்துவர் பாம்பு கடித்து இருக்கலாம் என கூறியதால் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையே வீட்டில் திவ்யபாரதியை கடித்த பாம்பு பதுங்கி இருந்தது தெரியவந்தது. பாம்பு பிடி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுத்தை தாக்கியதில் கன்று குட்டி பலி….. அச்சத்தில் கிராம மக்கள்….!!!!

திடீரென கன்றுக்குட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வனப்பகுதியில் மொத்தம் 10 வனச்சரகங்கள் இருக்கிறது. இந்த பகுதிகளில் காட்டெருமை, புலி, சிறுத்தை, யானை, கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகிறது. இங்குள்ள ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் வெளியேறுகிறது. இதில் குறிப்பாக சிறுத்தைகள் அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து நாய்கள், மாடுகள் மற்றும் ஆடுகள் போன்றவற்றை கடித்து கொன்று விடுகிறது. இந்நிலையில் தாளவாடி பகுதியைச் சேர்ந்த விவசாயியான சித்துராஜ் என்பவர் தன்னுடைய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நகராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி…. பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!!

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியில் நகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த இடத்தை மீட்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நகராட்சிக்கு சொந்தமான இடங்களை மீட்கலாம் என தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடங்களுக்கு சென்று அந்த மக்களிடம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களை காலி செய்யுமாறு கூறியுள்ளதோடு நோட்டீஸும் அனுப்பியுள்ளனர். ஆனால் ஒரு வார […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நெரிஞ்சிப்பேட்டை- பூலாம்பட்டி” படகுப் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்‌…!!!!

படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் காவிரிக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர மக்களின் வீடுகளை வெள்ளம் நீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக நெரிஞ்சிப்பேட்டை முதல் பூலாம்பட்டி வரையிலான படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த பகுதியில் தற்போது வெள்ளப் பெருக்கு குறைந்ததன் காரணமாக மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென தொழிலாளியை தாக்கிய கரடி…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. வனத்துறையினர் விசாரணை….!!!

தொழிலாளியை கரடி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் அருகே கோட்டமாளம் பகுதியில் திம்மையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவர் நேற்று மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி ஒன்று திடீரென திம்மையனை தாக்கியது. இதனால் திம்மையன் அலறினார். இவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து கரடியை விரட்டினர். அதன் பிறகு காயம் அடைந்த திம்மையனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

75-வது சுதந்திர தின விழா…. தேசியக்கொடியை ஏற்றிய மாவட்ட ஆட்சியர்….. சிறப்பாக நடைபெற்ற போலீஸ் அணிவகுப்பு….!!!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றினார். நாடு முழுவதும் நேற்று 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். இந்த சுதந்திர தின விழா ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன் பிறகு வஉசி மைதானத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிராம சபை கூட்டம்…. இருதரப்பினரிடையை ஏற்பட்ட திடீர் வாக்குவாதம்…. ஈரோட்டில் பரபரப்பு…!!!!

திடீரென இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கன் பாளையம் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவி ஜானகி தலைமை தாங்கினார். இதில் வினோபா நகர், கவுண்டன்பாளையம், கொங்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தங்களுடைய குறைகளை ஊராட்சி மன்ற தலைவியிடம் தெரிவித்தனர். அப்போது கவுண்டன் பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சில கல்குவாரிகள் சட்ட விரோதமான […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தேசியக்கொடியால் அலங்காரம் செய்யப்பட்ட சமயபுரம் மாரியம்மன்…. பரவசத்தோடு தரிசித்த பொதுமக்கள்….!!!!

தேசியக்கொடியால் அலங்காரம் செய்யப்பட்ட அம்மனை பக்தர்கள் ஆர்வத்தோடு பார்த்து தரிசனம் செய்தனர். இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா நேற்று பிரம்மாண்டமாக நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றினார். அதன் பிறகு சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் பழமை வாய்ந்த கட்டிடங்களில் மூவர்ண நிறங்களால் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டது. இந்நிலையில் ஈரோடு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இளம் பெண்ணின் புகைப்படம்…. தவறாக சித்தரித்து மிரட்டிய ஊழியர்…. ஈரோட்டில் பரபரப்பு….!!!

இளம்பெண்ணை மிரட்டிய ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே ஒலக்கடம் பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தர்மலிங்கம் தன்னுடைய நண்பர் சரண்குமாருடன் சேர்ந்து இளம் பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்துள்ளார். இந்த புகைப்படத்தை அந்த பெண்ணிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து இளம்பெண் தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து இளம் பெண்ணின் பெற்றோர் பவானி காவல்நிலையத்தில் புகார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டல்…. ரூ. 7 லட்சம் மதிப்பிலான தலைமுடி கொள்ளை…. போலீஸ் அதிரடி…!!!

தலை முடியை கொள்ளையடித்து சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் கார்டன் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமுடி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த ஜூன் மாதம் சுதாகர் ஆந்திராவிலிருந்து தலைமுடி வாங்கி வந்துள்ளார். இவற்றின் மதிப்பு 7 லட்ச ரூபாய் ஆகும். கடந்த மாதம் சுதாகரன் செல்போனுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு தலைமுடி வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன் பிறகு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“குடும்பத் தகராறு” தேசியக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்….. ஈரோட்டில் திடீர் பரபரப்பு….!!!!

திடீரென ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்ப்பு பிராணிகள் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவியுடன் சாந்தகுமாருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இவர் அரசு மருத்துவமனையில் உள்ள ரவுண்டானா பகுதிக்கு வந்தார். அதன்பிறகு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்ற பாதகையை கழுத்தில் தொங்க விட்டுவிட்டு கையில் தேசிய கொடியுடன் தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மர்ம விலங்குகளின் தொடர் அட்டகாசம்…. கவுன்சிலர் வீட்டு கோழிகள் உயிரிழப்பு…. வனத்துறையினருக்கு கோரிக்கை….!!!!

கண்காணிப்பு கேமரா அமைக்க வலியுறுத்தி வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊஞ்சலூர் அருகே வெங்கம்பூர் கம்மங்காட்டு களம் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரகதம் என்ற மனைவி இருக்கிறார். இவர் பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். இவர் வீட்டில் 15 ஆடுகள், கோழிகள், கறவை மாடுகள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென கால்நடைகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீட்டில் இருந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“75-வது சுதந்திர தினம்” மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும் அணை…. ஆர்வமுடன் பார்த்து செல்லும் மக்கள்….!!!!

மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும் அணையை மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். இந்தியாவில் நாளை 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதன்படி பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும். இந்நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகம், ரிப்பன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வியாபாரி…. விஷப்பூச்சி கடித்ததில் ஏற்பட்ட விபரீதம்‌….. பெரும் சோகம்….!!!!

விஷப்பூச்சி கடித்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் கிட்டுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கிட்டுச்சாமியின் இடது தொடையில் ஏதோ கடித்துள்ளது. இதுகுறித்து கிட்டுச்சாமி மனைவி ஈஸ்வரி மற்றும் மகன் பிரபுவிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திடீரென கிட்டுச்சாமிக்கு பூச்சி கடித்த இடத்தில் வலி அதிகமானதால் அவரை மருத்துவமனைக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈமு கோழியை நம்பி ரூ. 5 கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!!!

பண மோசடியில் ஈடுபட்ட நபருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே ரோஜா நகர் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஒரு ஈமு கோழி பண்ணையை தொடங்கி அதை நடத்தி வந்துள்ளார். இதில் சாந்தி, செல்வம், புவனேஸ்வரி மற்றும் லோகநாதன் ஆகியோர் வேலை பார்த்தனர். இந்த நிறுவனமானது 1.70 லட்ச ரூபாயை முதலீடு செய்தால், 6 கோழிகள் மற்றும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மர்ம விலங்கு கடித்து உயிரிழந்த கால்நடைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு கோரிக்கை….!!!!

கால்நடைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வெட்டு பாளையம் பகுதியில் விவசாயியான கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் ஆடுகள், கறவை மாடுகள் மற்றும் கோழிகள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் கால்நடைகளுக்கு தீவனம் வைத்துவிட்டு பட்டியை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு மறுநாள் காலை வழக்கம் போல் பட்டிக்கு சென்ற கந்தசாமிக்கு அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 3 கோழிகள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கரும்புகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி….. யானை கூட்டம் வழி மறித்ததால் பரபரப்பு….!!!!

யானைகள் லாரியை வழிமறித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு 10 வனச்சரகங்கள் அமைந்துள்ளது. இந்த பகுதியில் திண்டுக்கல்லில் இருந்து மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையை அவ்வப்போது யானைகள் கூட்டம் கூட்டமாக கடந்து செல்வது வழக்கம். இந்த வழியாக செல்லும் லாரி ஓட்டுனர்கள் கரும்புகளை சாலையோரம் போட்டுவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக கரும்புகளை சாப்பிடுவதற்காக யானைகள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக சாலையில் உலா […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எறிந்த வீடுகள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவன்-மனைவி…. ஈரோட்டில் பரபரப்பு…..!!!!

வீடுகள் திடீரென தீப்பிடித்து எறிந்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை அருகே மாரநாய்க்கனூர் பகுதியில் துரைசாமி-விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிசை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் துரைசாமியின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் அருகில் உள்ள சிமெண்ட் கூரையால் வேயப்பட்ட துரைசாமியின் மற்றொரு வீட்டிற்கும் தீ பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன்-மனைவி 2 பேரும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடடே! சூப்பர்….. மாமல்லபுரம் கடற்கரை கோவிலை சோப்பால் செதுக்கிய ஆசிரியர்….. குவியும் பாராட்டு….!!!!

மாமல்லபுரம் கடற்கரை கோவிலை வடிவமைத்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த செஸ் போட்டி பிரம்மாண்டமாக நடைபெற்று சிறப்பாக நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியை நினைவுபடுத்தும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி வைர விழா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் மன்சூர் அலிகான் தன்னுடைய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி….. வனப்பகுதியில் இறந்த நிலையில் கிடந்த யானை….. அதிர்ச்சியில் வனத்துறையினர்…..!!!!!

வனப்பகுதிக்குள் திடீரென ஒரு யானை இறந்து கிடந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டியில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு நேற்று வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆண் யானை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறை ஊழியர்கள் உடனடியாக மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி மாவட்ட வனத்துறை அதிகாரி மற்றும் கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து இறந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடித்து குதறிய தெரு நாய்கள்…. 7 ஆடுகள் பலி…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை….!!!!

தெருநாய்களை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வீட்டில் வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை இரவு நேரத்தில் பட்டியல் அடைத்து வைத்துவிட்டு பெருமாள் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டதால் பெருமாள் மற்றும் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி பட்டியில் சென்று பார்த்துள்ளனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கரும்புகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி…. குட்டியுடன் சென்ற யானை வழிமறித்ததால் பரபரப்பு….!!!

கரும்பு லாரியை யானைகள் வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி லாரி ஒன்று கரும்புகளை ஏற்றிக்கொண்டு கரும்பு ஆலையை நோக்கி சென்றது. இந்த லாரி காரப்பள்ளம் சோதனை சாவடிக்கு அருகே சென்றது. அப்போது குட்டியுடன் சென்ற யானை திடீரென லாரியை வழிமறித்தது. இந்த யானை தன்னுடைய குட்டியுடன் லாரியில் இருந்த கரும்புகளை பிடுங்கி தின்றது. இதன் காரணமாக சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. வீடுகளை சூழ்ந்த தண்ணீர்…. பொதுமக்கள் அவதி…. மீட்பு பணி தீவிரம்….!!!!

வெள்ளப்பெருக்கின் காரணமாக வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 270 வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகள் மீட்டு அரசு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் பணத்தை வீசி சென்ற வாலிபர்….. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!!

சாலையில் ரூபாய் நோட்டுகளை வாலிபர் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலை பகுதியான பெஜிலிட்டி அமைந்துள்ளது. இங்கு 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் சுற்றிக் கொண்டிருந்தார். அந்த வாலிபரின் கையில் ஏராளமான ரூபாய் நோட்டுகளும் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வாலிபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். இதனால் பயந்து போன வாலிபர் தான் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசிவிட்டு தப்பி ஓடினார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் தீவிரவாதிகள் பதுங்களா….? NIA அதிகாரிகள் திடீர் சோதனை…. ஈரோட்டில் பரபரப்பு…!!!

ஒரு வீட்டில் புகுந்து NIA அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக NIA அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் NIA அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரவு நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன், சிம் கார்டுகள், டைரிகள் போன்ற பல்வேறு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்பிறகு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மடிக்கணினி தருவதாக கூறி பணமோசடி…. பாதிக்கப்பட்டவர்கள் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு…!!!

மடிக்கணினி விற்பனையாளர் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே லேப்டாப்  மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் புதிதாக லேப்டாப் வாங்குவதற்காக ஒருவர் ஆன்லைனில் ரூ. 56,500-ஐ அனுப்பியுள்ளார். ஆனால் பணம் வாங்கியும் லேப்டாப் அனுப்பாமல் கடைக்காரர் தாமதம் செய்து வந்துள்ளார். இதேபோன்று சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபரிடமும் கம்ப்யூட்டர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரயில்வே நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரை வைக்க வேண்டும்…. மத்திய அமைச்சருக்கு கோரிக்கை…!!!

மத்திய ரயில்வே அமைச்சருக்கு தெற்கு ரயில்வே முன்னாள் ஆலோசகர் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவரும், தெற்கு ரயில்வே முன்னாள் ஆலோசனை குழு உறுப்பினருமான கே.என் பாஷா மத்திய ரயில்வே மந்திரி வைஷ்ணவ் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் ஈரோட்டின்  பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றவர் தந்தை பெரியார். இவரை  பெருமைப்படுத்தும் விதமாக ரயில்வே நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நிதி நிறுவனத்தில் காசோலை மோசடி…. ஜவுளி வியாபாரிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!!

நிதி நிறுவனத்தில் பண மோசடி செய்த நபருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் லட்சுமி கார்டன் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முனிசிபல் காலனி பகுதியில் 6 பேருடன் சேர்ந்து தனியார் நிதி நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு ஜவுளி வியாபாரியான பரணிதரன் என்பவர் ரூபாய் 5 லட்சம் பணத்தை நிதி நிறுவனத்தில் இருந்து 24% வட்டிக்கு வாங்கியுள்ளார். இதேபோன்று கடந்த 2017-ம் ஆண்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பவானி சாகர் அணை” 100 அடியை நெருங்கும் நீர்மட்டம்…. பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!

அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணை அமைந்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரியில் மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரால் கரூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள 2,50,000 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடித்துக் கொண்டிருந்த கலைஞர்…. நாடக மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாபம்…. பெரும் சோகம்….!!!

நாடக கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே குப்பன்துறை பகுதியில் ராஜய்யன் (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கனகா என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் இருக்கின்றனர். இந்த பகுதியில் மழை வேண்டி ஆண்டுதோறும் இரணியன் நாடகம் 5 நாட்கள் நடைபெறும். இந்த நாடகமானது ராஜய்யன் தலைமையில் நடைபெறும். இந்த நாடகத்தில் ராஜய்யன் உட்பட 25 கலைஞர்கள் நடிப்பார்கள். இந்நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர் கனமழையால் அணையின் நீர்மட்டம் 98 அடியாக உயர்வு…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!

தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்ததோடு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பல்வேறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 98 அடியாக இருக்கிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற நர்ஸ் வீட்டில் திருட்டு…. 1 வருடத்திற்கு பிறகு கொள்ளையன் கைது…. 8 1/2 பவுன் நகைகள் மீட்பு….!!!

ஓய்வு பெற்ற நர்ஸ் வீட்டில் திருடப்பட்ட தங்க நகைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொல்லம்பாளையம் பகுதியில் சாத்துன்பீ என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக சாத்துன்பீயின் கணவர் ஜாகிர் உசேன் இறந்து விட்டதால் அவர் தன்னுடைய மகளுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாத்துன்பீ மற்றும் அவருடைய மகள் ஆகியோர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் அக்டோபர் மாதம் […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு பறந்த முக்கிய எச்சரிக்கை…… அலெர்ட்!…… மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு….!!!!

பள்ளிகளில் சளி, இருமல், காய்ச்சல் உள்ள குழந்தைகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் தொடங்கி இயங்கி வருகின்றது. சமீப காலமாக கட்டுக்குள் இருந்த தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகின்றது. பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முக கவசம் […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் வடக்கன்ஸ் அராஜகம்… போலீசையே தாக்கும் சம்பவம்….பெரும் பரபரப்பு….!!!

சோதனைச்சாவடியில் கடும் குடிபோதையில் வந்த வடமாநில இளைஞர் ஒருவரால் பெரும் பரப்பரப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையின் சோதனைச் சாவடி  ஒன்று அமைந்துள்ளது. நேற்று  இந்த சோதனைச்சாவடியில் கடும் குடிபோதையில் வந்த வடமாநில இளைஞர் ஒருவர், சோதனைச்சாவடி வழியாக சென்று கொண்டிருந்த வாகனங்களை  எல்லாம் வழிமறித்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில்  சாலையில் படுத்துக் கொண்டு, தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இதைக்கண்ட சோதனைச் சாவடியில் உள்ள பணியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இதனால் பெரும் ஆபத்து” பல்வேறு கோரிக்கை மனுக்கள்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.   ஈரோடு மாவட்டம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி மீனாட்சி தலைமையில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி  ஏராளமானோர் மனு கொடுத்துள்ளனர். அவை, முள்ளம்பட்டி ஊராட்சி அரசு பள்ளியில் மாணவ -மாணவிகள்  கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இந்த சம்பவம் பற்றி கல்வித்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நேர்ந்த அவலம்…. ஆசிரியர்கள் அத்துமீறல்…!!!

ஒரு அரசு பள்ளியில் மாணவர்களை வைத்து, பள்ளி கழிவறையை சுத்தம் செய்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை என்ற ஊருக்கு அருகேயுள்ள முள்ளம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றன. மேலும் இப்பள்ளியில் ஒரு  தலைமையாசிரியை மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றன. இந்நிலையில் ஒரு மாணவனும் மற்றும் ஒரு குழந்தையும் இணைந்து பள்ளி கழிவறையை சுத்தம் […]

Categories
மாநில செய்திகள்

ஷாக் நியூஸ்…. தமிழக கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள்…. திடீர் சாலை மறியல்…!!!

கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி செய்ததில் ஏதோ குளறுபடி ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை நகைக்கு வழங்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த அறிவிப்பின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இறந்து கிடந்த மயில்கள்…. விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா….? வனத்துறையினர் விசாரணை….!!

தனியார் நிலத்தில்  இறந்து கிடந்த மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஈரோடு மாவட்டம் பெருந்துறை சீனாபுரம் அருகிலுள்ள தலையம்பாளையம் பகுதியில் மயில்கள்  சுற்றி திரிகின்றன. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் நேற்று காலையில்  7 மயில்கள் இறந்து கிடந்துள்ளன. அவ்வழியாக சென்ற நபர்கள், இச்சம்பவம் பற்றி ஈரோடு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, மயில்களை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories

Tech |