ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விட்டு கரையில் விற்பனை செய்யும் மீன்களை வாங்கி சாப்பிடுவர். கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொடிவேரி அணையில் குளிப்பதற்கு கடந்த 10 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு […]
Tag: ஈரோடு
கர்ப்பிணி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரில் ஆரோக்கியமேரி(38) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ஆரோக்கியமேரியின் கணவர் அற்புதராஜ் பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதியினருக்கு 22 வயதுடைய மகளும், 14 வயதுடைய மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஆரோக்கிய மேரியை அவரது மகன் ஈரோடு அரசு மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளித்த […]
தனியார் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அக்ரஹாரம் வீதியில் சீனிவாசன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விக்னேஷ்வரி(39) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரிதம் தன்வந்திரிக்கா(8) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சேலத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்று தீபாவளியை கொண்டாடலாம் என விக்னேஷ்வரி தனது கணவரை அழைத்துள்ளார். அதற்கு விடுமுறை இல்லாததால் அங்கு போக வேண்டாம் […]
ஈரோடு வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விவசாயிகளுக்கு எதிர்பாராமல் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாய் நிலைபடுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தின் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்கள் நடப்பு சம்பா […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள கே.புதூர் தொகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் சுற்றி திரிந்தார். இந்நிலையில் ஆடை இல்லாமல் சுற்றி திரிந்த அந்த வாலிபரை பார்த்த கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் பொதுமக்களின் உதவியுடன் அவரை குளிப்பாட்டி ஆடை அணிவித்துள்ளார். இது குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கோபி பச்சைமலை சுப்ரமணியசாமி கோவிலில் வருகின்ற 30ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பச்சைமலை சுப்பிரமணிய கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா ஆரம்பமானது. இதை அடுத்து இன்று காலை 07.30 மணிக்கு சத்துரு சம்கார திரிசதை அர்ச்சனையும் காலை 10.00 மணிக்கு சஷ்டி விரதம், காப்பு கட்டுதலும், யாகசாலை பூஜை தொடங்குதல் நிகழ்ச்சியும் மதியம் 12 மணிக்கு ஷண்முகர் அர்ச்சனையும் நடைபெற்றது. வருகின்ற 26 ஆம் தேதி முதல் 29ஆம் […]
ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றார்கள். தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வருகின்ற 24ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இதனால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகின்றது. தொலைதூர பயணத்திற்கு பயணிகள் அதிக அளவில் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள். இதனிடையே எளிதில் தீபற்ற கூடிய பட்டாசுகளை ரயிலில் எடுத்து செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளார்கள். […]
ஈரோடு மாவட்டத்தில் கேகே நகரில் மளிகை கடை ஒன்றாம் உள்ளது. இந்த மளிகை கடைக்குள் நேற்று முன்தினம் திடீரென பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனால் கடையின் உரிமையாளர் பாம்பு பிடி வீரரான ஹரிக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக ஹரி அந்த கடைக்கு விரைந்து வந்து பிரிட்ஜின் பின்பகுதியில் தண்ணீர் தேங்குவதற்காக வைத்திருக்கும் பெட்டியில் பாம்பு சுருண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாம்பு பிடி வீரரான ஹரி அந்த பாம்பை பாதுகாப்புடன் பிடித்துள்ளார். அந்தப் பாம்பின் மொத்த […]
மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி காந்தி நகரில் ரதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் நாகராஜ் என்பவரும் பந்தல் அமைப்பும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவில் பகுதியில் வசித்த பெண் இறந்து விட்டதால் அவரது வீட்டில் கண்ணீர் அஞ்சலி பேனர் கட்டுவதற்காக நாகராஜும், ரதிஷும் சென்றுள்ளனர். இதனை அடுத்து டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்கம்பியில் பேனரின் ஒரு பகுதி எதிர்பாராதவிதமாக பட்டதால் நாகராஜ், ரதீஷ் […]
ஈரோடு பெருந்துறை ரோட்டில் பர்னிச்சர் கடையை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ காலனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் சென்ற ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஈரோடு பெருந்துறை ரோடு பழைய பாளையத்தில் இருக்கும் மார்க் டிரண்ட்ஸ் என்ற பர்னிச்சர் கடைக்கு சென்று சோபா, கட்டில் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக 5 லட்சத்துக்கு 30 ஆயிரத்திற்கு வாங்கி இருக்கின்றார். இதை தொடர்ந்து கடை ஊழியர்கள் செந்தில்குமாரின் […]
ஈரோட்டில் மொபட் மீது கிரேன் மோதியதில் கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள மூலப்பாளையம் விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவர் ஓய்வு பெற்ற வன ஊழியர். இவர் தனது மனைவி பாப்பாத்தியுடன் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மொபட்டில் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். இவர்கள் செட்டிபாளையம் பிரிவு பூந்துறை ரோட்டில் சென்ற போது பின்னால் வந்த கிரேன் சுப்ரமணி ஒட்டிச்சென்ற மொபட் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் சுப்பிரமணி மற்றும் பாப்பாத்தி […]
தரை பாலத்தை கடக்க முயன்று வெள்ளத்தில் சிக்கிய நபரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அந்தியூர் பெரிய ஏரி உபரி நீர் வெளியேறி சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் அந்தியூர் நோக்கி வந்த நபர் தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தின் வேகம் அதிகரித்தது. இதனால் மேற்கொண்டு செல்ல முடியாமல் சிரமப்பட்ட அவர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். […]
கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பம்பாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு செல்லாமல்கே.ஜி வலசில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் இருக்கும் பாலத்தின் மீது படுத்து தூங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரோடையில் தவறி விழுந்த சேகர் நீந்த முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரின் உடலை மீட்டு […]
மூதாட்டியிடருந்து தங்க சங்கிலியைப் பறித்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மூப்பனூர் பகுதியில் சண்முகம்-சுப்பையாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த பத்தாம் தேதி மூதாட்டி 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள் கலிங்கியத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என மூதாட்டியிடம் கேட்டுள்ளனர். பின்னர் அவர்கள் முதட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலி பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். […]
மொபெட் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் மெக்கானிக் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆலாபாளையம் பகுதியில் மெக்கானிக்கான ராம்குமார்(40) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் மொபட்டில் புஞ்சைப் புளியம்பட்டி டானாபுதூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து மொபெட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகில் உள்ள பொம்மன்பட்டி பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்தார். நெசவுத்தொழில் செய்து வந்து இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அவரது மனைவி கோடீஸ்வரி அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகள் தேவ தர்ஷினி. இவர் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2021 ஆம் ஆண்டு 12-ம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால் 184 மதிப்பெண்கள் பெற்ற அவர் […]
சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகப்படும்படியாக பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள விளாங்கோம்பை கிராமப் பகுதியில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குமார் உட்பட 7 பேரை கடந்த மாதம் 16-ஆம் தேதி டி.என் பாளையம் வனத்துறையினர் யானை தந்தத்தை கடத்திய வழக்கில் கைது செய்தனர். இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குமார் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உடல் நலக்குறைவினால் அவதிப்பட்ட குமார் கோவையில் இருக்கும் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனை […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலைப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் சூறாவளி காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் மலைப்பாதையில் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்ததால் சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மண் சரிவும், மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொக்லைன் இயந்திரம் மூலம் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி பள்ளத்தை சரி செய்தனர். இதன் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த மலைப்பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பரம் ஏற்றுக்கொண்டு தாளவாடியில் இருந்து மினிலாரி சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில் மலைப்பாதையில் 25-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே ஓட்டுநர் வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 20 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள உக்கரம் பகுதியில் கூலி தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு செந்தில்குமார் வீட்டிற்கு வெளியே நின்று விளையாடிக் கொண்டிருந்த 2- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் […]
4 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சம்பத் நகர் பகுதியில் ரங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது மகன் மாணிக்கராஜ் டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்காக காத்திருந்தார். எனக்கு அறிமுகமான கரும்பறை புதூர் பகுதியை சேர்ந்த ஒருவர் மருத்துவத்துறையில் செல்வாக்கு உள்ளதாக கூறி எனது மகனுக்கு […]
பண மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சம்பத் நகரில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் குடியிருப்பதாவது, எனது அண்ணன் மகள் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கரும்பாறை புதூர் பகுதியில் வசிக்கும் ஒருவர் எங்களுக்கு அறிமுகமாகினார். அவர் ஈரோட்டிலேயே பெண்ணுக்கு பணியாற்ற பணி மாறுதல் வாங்கி தருவதாக […]
சரக்கு வேன் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள செங்கோடம்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிர்வேல்(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பால் எடுத்து வரும் சரக்கு வேனில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கமாக கதிர்வேல் கருமாண்டம்பாளையத்தில் இருந்து ஈரோட்டுக்கு சென்று தனியார் பால் பண்ணையில் இருந்து பால் பாக்கெட்டுகளை எடுத்து மொடக்குறிச்சி பகுதியில் வினியோகம் செய்து வந்துள்ளார். நேற்று அதிகாலை சரக்கு […]
2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த முகுல் காசி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பஜூலா காத்தூன் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 வயதுடைய காசி என்ற ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 8- ஆம் தேதி குடும்பத்தினர் 5 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு […]
கிணற்றுள் தவறி விழுந்த சிறுமியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னாளம்பாளையத்தில் விவசாயியான மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதுமிதா(15) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி பெருந்துறையில் இருக்கும் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மதுமிதா வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்தில் கிணற்றுக்கு சென்று மின் மோட்டாரை இயக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக கால் தவறி 120 அடி ஆழமுடைய கிணற்றுக்குள் தவறி விழுந்தார். 10 […]
தண்ணீரில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தவிட்டுப்பாளையம் பழனியப்பா வீதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதுடைய நந்த கிஷோர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நந்த கிஷோரும் அதே பகுதியில் வசிக்கும் சிபினேஷ்(10), ராகவன்(10) ஆகிய சிறுவர்களுடன் தாமரை குட்டை என்ற இடத்திற்கு சைக்கிளில் சென்று கல்குவாரி குட்டையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் மூன்று சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கினர். இந்நிலையில் […]
காணாமல் போன கல்லூரி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி ஏமாகவுண்டனூர் சேக்கன்துறை பகுதியில் தர்மேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வர்ஷினி(19) என்ற மகள் உள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் கல்லூரி கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக வர்ஷினிக்கு காரைக்குடியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த பெற்றோர் வர்ஷினியை கண்டித்துள்ளனர். இந்நிலையில் ஆதார் கார்டு எடுத்து வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு […]
பலவற்றின் உயர்வு காரணமாக மினி பேருந்து உரிமையாளர்கள் தொழிலை கைவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள். கிராம மக்களின் வாழ்வாதாரத்துக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏராளமான திட்டங்களை கொண்டு வருகின்றது. அதில் ஒன்று மினி பேருந்துகள் திட்டமாகும். இத்திட்டத்தை சென்ற 1997 ஆம் வருடம் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்டதாகும். பல அடிப்படை தேவைகளுக்கும் ஆணிவேராக இந்த மினி பேருந்து இருந்து வந்த நிலையில் தற்போது நஷ்டத்தை நோக்கி செல்வதால் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. […]
காவல்துறை சார்பாக சிறுவர்-சிறுமிகள் சிறப்பு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டார்கள். தமிழ்நாடு காவல்துறை சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் மன்றங்கள் இயங்கி வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் 11 மன்றங்களை சேர்ந்த 95 சிறுவர்-சிறுமிகளுக்கு காவல்துறை சார்பாக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகையால் பல்வேறு அன்றாட நிகழ்வுகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்திரவின் பேரில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் சென்ற எட்டாம் தேதி போலீசார் வாகனங்கள் மூலம் இரண்டு […]
தீபாவளி பண்டிகையொட்டி ஜவுளிகள் வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தார்கள். வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் ஆடைகளை வாங்கி வருகின்றார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் ஈரோடு கடைவீதிகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டார்கள். தற்பொழுது தீபாவளி பண்டிகையொட்டி கடைகள் களைகட்ட ஆரம்பமாகியுள்ளது. மேலும் ஈரோடு மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, ஆர்.கே.வி.ரோடு, நேதாஜி ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் பொது மக்களின் கூட்டம் அலைமோதியன. […]
கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்த விவசாயி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் குள்ளம்பாளையம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கௌதம். இவர் தனது நண்பரான செந்தில் என்பவருடன் பழனி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அதன் பின் மலையின் அடிவாரத்தில் இருந்து படி வழியாக இருவரும் கோவிலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கௌதமுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை உடனடியாக மலைக்கோவிலில் உள்ள சிகிச்சை […]
வட மாநில தொழிலாளி தண்ணீர் குழிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் இருக்கும் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த செந்துகுமார் ராவத்(32) என்பவர் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதியில் செந்துகுமார் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சம்பளத்தை வாங்கி கொண்டு விடுதியை விட்டு வெளியே சென்ற குமார் மது அருந்தியுள்ளார். இதனை அடுத்து குடிபோதையில் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுகொத்துக்காடு கிராமத்தில் புகழ்பெற்ற வீரமாத்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கோவிலில் பூசாரியை தேர்ந்தெடுக்கும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புதிய பூசாரியை தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். அதன்படி சில விதிமுறைகளை பொதுமக்கள் அறிவித்த நாள் முதல் அனைவரும் தவறாமல் கோவிலுக்கு வந்து விழாவில் கலந்து கொண்டனர். அப்போது பக்தர்கள் யாருக்காவது சாமி வந்தால் அவர் தீச்சட்டியை எடுத்து கோவிலை சுற்றி வர […]
ஈரோடு மாவட்டத்தில் கோபி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையொட்டி காலை சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதேபோல் மங்களகிரி பெருமாள் […]
தெப்ப திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் திகனார் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரங்கசாமி மல்லிகார்ஜுனா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான தெப்பத் திருவிழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பின் மதியம் 12 மணிக்கு சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தோப்புபாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி வெங்கடாசலம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, சிலர் எங்கள் பகுதியில் வசிக்கும் சோமசுந்தரம், பாலசுப்பிரமணி ஆகியோருக்கு சொந்தமான இடத்திற்கு போலியான பத்திரங்களை தயாரித்துள்ளனர். தற்போது பெருந்துறை தாலுக்கா அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட நிலத்திற்குரிய பட்டா கேட்டு அவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது அவர்கள் எங்களை தாக்கியுள்ளனர். மேலும் எங்களது கிராமத்தில் வசிப்பவர்கள் […]
பணம் மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 15-ஆம் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மின்கட்டணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என இருந்தது. ஏற்கனவே மின் கட்டணத்தை செலுத்தி இருந்த ஆசிரியை குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் மின் இணைப்பை துண்டிக்காமல் […]
புலி மாட்டை கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக விவசாய தோட்டத்திற்குள் நுழையும் சிறுத்தை மற்றும் புலிகள் கால்நடைகளை வேட்டையாடுகின்றன. இந்நிலையில் கணேசபுரம் பகுதியில் விவசாயியான சக்திவேல்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் மேச்சலுக்காக கட்டியிருந்த மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வருவதற்காக சென்றுள்ளார். அப்போது கழுத்து பகுதியில் ரத்த காயங்களுடன் ஒரு மாடு […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் தாமரைகரையில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் சுண்டப்பூர் பிரிவு அருகே இருக்கும் சாலையில் காட்டு யானை அங்கும் இங்கும் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை சிறிது தூரத்திலேயே நிறுத்திவிட்டனர். இதனை அடுத்து யானை 30 நிமிடங்கள் அங்கும் இங்கும் சுற்றி வந்து வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இதனால் மலைப்பகுதியில் சுமார் 1/2 மணி […]
ஈரோடு மாவட்டத்தில் கொடிமுடி பகுதியில் மும்மூர்த்திகளின் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நவராத்திரியின் ஒன்பது ஒன்பதாவது நாளான விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜை நடைபெறுவதற்கு முன்பாக பெருமாளும் சிவனும் சேர்ந்து வன்னிமா சுரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. இந்த வதம் செய்யும் நிகழ்ச்சியை ஸ்ரீதர் பட்டர் மற்றும் பிரபு குருக்கள் ஆகியோர் செய்துள்ளனர். இதனை அடுத்து மகுடேஸ்வரரும் வீரநாராயண பெருமாளும் குதிரை வாகனத்தில் வீதி உலா […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலூர் பகுதியில் கருக்கம் பாளையம் பகுதி அமைந்துள்ளது. இந்த கருக்கம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விஜயதசமியை ஒட்டி அம்பாளுக்கு சிறப்பாக அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றுள்ளது. மேலும் அம்பாளுக்கு முன்பு உற்சவம் மூர்த்தியை சிறப்பாக அலங்காரத்தில் வைத்திருந்தனர். இதனை அடுத்து மாலை வேளையில் பெண்கள் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு ஊஞ்சலூர் கனகதாரா ஆன்மீக நிலையத்தின் சார்பில் குத்துவிளக்கு […]
காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் ரயில்வேயில் எஞ்சின் கிளர்க்காக வேலை பார்க்கும் நவநீதகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020- ஆம் ஆண்டு திவ்யா என்ற பெண்ணை நவநீதகிருஷ்ணன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கிறிஸ்வந்த் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நவநீதகிருஷ்ணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை […]
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சார்ந்த திருவேங்கடசாமி வீதியில் உள்ள மகிமா ஈஸ்வரர் கோவிலும் கஸ்தூரி அரங்கநாதர் கோவிலும் அமைந்துள்ளது. இந்த மூன்று கோவில்களையும் சேர்த்து பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் சுமார் 18 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஈரோடு சரக ஆய்வாளர் தினேஷ் மற்றும் கோவிலின் செயல் அலுவலர் சாமிநாதன் ஆகியோரது முன்னிலையில் 18 உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் மூன்று கோவில்களின் மொத்த […]
தீ விபத்து ஏற்பட்டதால் வீட்டில் இருந்து அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கர்பாளையம் கொளுஞ்சிக்காடு பகுதியில் ஈஸ்வரன்(64) என்பவர் வசித்து வருகிறார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். […]
கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குப்பாண்டபாளையம் நாடார் காலணியில் கருப்புசாமி-அரசாயாள்(42) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 1-ஆம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்த போது உடல் நலம் பாதிக்கப்பட்ட கருப்புசாமியை குடும்பத்தினர் அந்தியூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்புசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்து அவரது மனைவி மன உளைச்சலில் அழுது கொண்டே […]
தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த மக்கள் வேலை செய்து வருகின்றார்கள். விடுமுறை தினங்கள், பண்டிகை நாட்களில் அவரவர்களின் சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கின்றார்கள். இந்த நிலையில் நாளை ஆயுதபூஜை மற்றும் நாளை மறுநாள் விஜயதசமி என இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கின்றது. முன்னதாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்களும் விடுமுறை. மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கின்றது. […]
22 ஆவது தொடக்க விழாவை முன்னிட்டு ஈரோடு தொலை தொடர்பு மாவட்ட வாடிக்கையாளர்களுக்கு 329 ரூபாய் கட்டணத்தில் அதிவேக இணையதள இணைப்பு வழங்கப்படுவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. ஈரோடு பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு மாவட்ட பொதுநிலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, பிஎஸ்என்எல் நிறுவனம் சென்ற 2000 வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது. தற்பொழுது பிஎஸ்என்எல் 22 வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனால் பல்வேறு சலுகைகளை பொதுமக்களுக்கு அறிவித்து இருக்கின்றது. மிகவும் குறிப்பாக ஈரோடு தொலை தொடர்பு […]
தடையை மீறி செயல்பட்ட இறைச்சி கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தடையை மீறி சிலர் இறைச்சியை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து 21-வது வார்டுக்கு உட்பட்ட பிரசாந்த் வீதியில் இருக்கும் கோழி கடையின் பின்புறமாக இறைச்சியை விற்பனை செய்துள்ளனர். இதனை பார்த்த அதிகாரிகள் தடையை மீறி இறைச்சி விற்பனை செய்த குற்றத்திற்காக உரிமையாளருக்கு […]
ஈரோடு மாவட்டத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்வதற்காக தரகர் பெண் பார்த்துள்ளனர். அப்போது தஞ்சாவூர் அய்யம்பேட்டை சேர்ந்த சரிதா என்ற பெண் இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் சரிதா ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் அவரது பெற்றோர் இறந்துவிட்டதாக தரகர் தெரிவித்தார். இந்த திருமணத்திற்கு தரகர் 1,20,000 கமிஷன் கேட்டுள்ளார். அதன் பிறகு கடந்த 20ஆம் தேதி இருவருக்கும் ஒரு கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஒரு நாள் மனைவி சரிதாவின் […]