ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தலைநகர் கம்பாலா அருகே முகோனோ எனும் இடத்தில் கண்பார்வை அற்றவர்களுக்காக ஸலாமா என்னும் பெயரில் பள்ளிக்கூடம் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் அங்கு அதிகாலையில் திடீரென தீப்பிடித்துள்ளது மின்னல் வேகத்தில் அந்த தீ பள்ளிக்கூடம் முழுவதும் பரவியுள்ளது. இது பற்றி தகவல் தெரிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை போராடி அனைத்து உள்ளனர் இருந்த போதிலும் இந்த தீ விபத்தில் 11 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் […]
Tag: உகாண்டா
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மீண்டும் எபோலோ வைரஸ் பரவத் தொடங்கியதை தொடர்ந்து அரசு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் உகாண்டாவில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டு அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் உகாண்டாவில் எபோலோ நோய் தொற்று பரவல் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு 2 முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தடுப்பூசிகளையும் காங்கோ அரசு செலுத்தி […]
கடந்த 1996-ம் ஆண்டு உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஜோர்தன் கின்யாரா என்ற 6 வயது சிறுவன் தன்னுடைய தந்தை ஒருவருடன் சண்டை போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அந்த நபர் ஜோர்தன் கின்யாராவின் தந்தைக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை தனக்கு சொந்தமானது என கூறி போலியான பத்திரங்களை தயார் செய்துள்ளார். இந்த போலி பத்திரங்களை நீதிமன்றத்தில் காண்பித்து அந்த நிலத்தை அவருக்கே சொந்தம் ஆக்கிக் கொள்கிறார். அந்த சமயத்தில் ஜோர்தன் கின்யாராவின் தந்தை வேலையிலிருந்து ஓய்வு பெற்றதால் அவரால் […]
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை கட்டுபடுத்த அந்நாட்டில் கொண்டுவரப்பட்ட விதிமுறைகளின்படி பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் பலவித கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவிலும் கொரோனா பரவலைத் தடுக்க சில முக்கிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. […]
உகண்டாவில் கொரோனா பரவலை முன்னிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உகண்டாவில் சீனாவில் முதன்முதலாகத் தோன்றிய கொரோனா தொற்று 10 சதவீதம் பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அந்நாட்டு அரசாங்கம் நெருங்கி வரும் புத்தாண்டில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க 2 ஆவது வருடமாக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதோடு மட்டுமின்றி புத்தாண்டின் போது கிறிஸ்தவ ஆலயங்களில் இரவு நேரத்தில் வழிபடுவதற்கும் பொதுமக்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உகண்டாவில் வசிக்கும் 40 வயது பெண் தற்போதுவரை 44 குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார். உகாண்டாவில் வசிக்கும் மாமா உகண்டா என்ற 40 வயதுடைய பெண் மற்றும் அவரின் கணவருக்கு, 44 குழந்தைகள் இருக்கிறார்கள். சிறப்பான மருத்துவ சிகிச்சை எதுவும் செய்யாமல் அவருக்கு குழந்தைகள் பிறந்திருக்கிறது. இவருக்கு 12 வயதில் திருமணம் நடந்திருக்கிறது. அந்த பெண்ணின் கணவர், இப்போது வீட்டில் இருந்த பணம் முழுவதையும், எடுத்துக் கொண்டு அந்த பெண்ணை தனியாக விட்டுவிட்டு, போய்விட்டார். தற்போது, 44 குழந்தைகளையும் அவர் […]
உகாண்டா நாட்டில் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் 5 பேரை சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உகாண்டா என்ற கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் கடந்த 16ஆம் தேதியன்று தலைநகர் கம்பாலாவில் இருக்கும் பாராளுமன்ற கட்டிடத்திலும், தலைமை காவல் நிலையத்திற்கு அருகிலும் தீவிரவாதிகள், தொடந்து மூன்று தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தினர். இதில், நான்கு நபர்கள் உயிரிழந்தனர். மேலும், 33 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த தற்கொலைப் படைதாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றனர். […]
தொடர்ச்சியாக நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் தலைநகரம் கம்பாலா. இங்கு உள்ள பாராளுமன்ற கட்டிடம் மற்றும் மத்திய காவல் நிலைய கட்டிடம் என இரு இடங்களிலும் தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு தாக்குதலானது நடைபெற்றுள்ளது. மேலும் இதனால் அருகில் நின்றுக்கொண்டிருந்த கார்கள் பற்றி எரியும் காட்சியானது புகைப்படமாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த தாக்குதலில் இரண்டு பேர் பலியானதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக உகாண்டாவில் செயல்பட்டு […]
கோண்டாவில், ராணுவத்தளபதி Katumba Wamala, சென்ற வாகனத்தில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவரின் மகள் உயிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோண்டாவில் ராணுவ தளபதி மற்றும் நாட்டின் பணிகள், போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும், Katumba Wamala என்பவர் Kisaas-ல் இருக்கும் Kisota என்ற சாலையில், வாகனத்தில் தன் மகள், ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் ஆகியோருடன் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள், அவரின் வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். […]
உகண்டாவில் 16 வயது மாணவியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உகண்டாவில் உள்ள புடலஜா மாவட்டத்தில் வசிக்கும் ஜான் ஒமாண்டி(31) என்ற தனியார் பள்ளி ஆசிரியர், தன்னிடம் பயிலும் 16 வயது மாணவியுடன் நெருக்கமாக பழகியிருக்கிறார். இதில் அந்த மாணவி கர்ப்பமடைந்ததால் இருவரும் கடந்த ஜனவரி மாதத்தில் ஊரை விட்டு ஓடியுள்ளனர். இந்நிலையில் அந்த மாணவியின் பெற்றோர் காவல் துறையினரிடம், தங்கள் மகளை காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் இருவரையும் […]
உகாண்டா நாட்டில் ஷேக் முதும்பா இமாம் என்ற இளைஞருக்கும் சுவாபுல்லா நிபுரா என்ற பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த பிறகு சுவாபுல்லா நிபுரா கணவருடன் நெருக்கமாக இருக்க மறுத்து வந்தார். மனைவிக்கு மாதவிடாய் என்று எண்ணிய ஷேக் முதும்பா இமாம் பொறுமை காத்தார். அந்த பகுதியில் இருக்கும் குடியிருப்புவாசிகள் வீட்டிலிருந்து பொருட்கள் திருடு போக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் பார்வை சுவாபுல்லா நிபுரா மீது விழுந்ததையடுத்து அவர்கள் சோதனையிட்டதில் போலீசுக்கு மட்டுமல்லாமல் […]