உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு உலை மூடப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் சபோரிஸ்ஷியா என்ற அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்குள்ள பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து உக்ரைனில் உள்ள சபோரிஸ்ஷியா அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட தீவிர சேதத்தினால் ஒரு உலை மூடப்பட்டுள்ளது. உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்ய இராணுவ படைகள் சபோரிஸ்ஷியா ஆலையை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று சபோரிஸ்ஷியா அணுமின் நிலையத்தின் மீதான கொடிய தாக்குதல் […]
Tag: உக்ரைன் நாட்டில்
உணவு பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உலக நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் நாட்டில் ஒடேசா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் முக்கிய துறைமுகங்களை ரஷ்ய ராணுவ படைகள் கைப்பற்றி உள்ளதால் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவு நெருக்கடியை தவிர்க்க உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது ” இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதல்முறையாக […]
உக்ரைனில் கிவ் நகரத்திற்குள் தென் கொரியா தூதரகம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. உக்ரைன் நாட்டில் போர் காரணமாக மூடப்பட்ட தென் கொரிய தூதரகம் உக்ரைனின் கீவ் நகரத்தில் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து உக்ரைனுக்கான தென் கொரிய தூதர் மற்றும் தூதரக ஊழியர்களில் ஒரு பகுதியினர் மீண்டும் கீவ் நகரத்திற்கு திரும்பியுள்ளனர் என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் காரணமாக தென் கொரியா கடந்த பிப்ரவரி […]
உக்ரைனில் கை கால்கள் கட்டப்பட்டு பின்னந்தலையில் சுட்டுக்கொல்லப்பட்ட பொதுமக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் புச்சா, ஹாஸ்டோமல், இர்பின் போன்ற நகரங்கள் அமைந்துள்ளது. இந்த நகரங்கள் ரஷ்ய ராணுவ படைகளால் கைப்பற்றப்பட்டு பின்னர் உக்ரைனிய ராணுவ படைகளால் மீட்கப்பட்டது. இதனை அடுத்து ரஷ்ய ராணுவ படைகள் இந்த நகரங்களில் இருந்து வெளியேறிய பிறகு அங்குள்ள பொது மக்களின் சடலங்கள் கை கால்கள் கட்டப்பட்டு பின்னந்தலையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் புதைகுழிகளில் இருந்ததாக அந்நாட்டு அதிபரின் உதவியாளர் நிக்கிஃபோரோவ் தெரிவித்துள்ளார்.