Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினை பொறுப்பில் இருந்து மாற்றுவது பற்றி தீவிர விவாதம்…? உக்ரைன் உளவு பாதுகாப்புத்துறை தலைவர் தகவல்…!!!!!

ரஷ்ய அதிபர் புதினை பொறுப்பில் இருந்து நீக்குவது பற்றி தீவிர விவாதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரஷ்ய மூத்த அதிகாரிகள் புதினை அதிபர் பொறுப்பில் இருந்து மாற்றுவது பற்றி தீவிரமாக விவாதம் மேற்கொண்டு வருவதாக உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தலைவர் தகவல் தெரிவித்திருக்கிறார். உக்ரைன் போர் முடிவதற்கு உள்ளாகவே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக உக்ரைன் மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் கூறியதாக பத்திரிகைகள் தெரிவித்துள்ளது. மேலும் புதினை ஆட்சியில் இருந்து நீக்குவது பற்றி ஏற்கனவே விவாதங்கள் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய தாக்குதலால்…. இருளில் மூழ்கிப்போன கீவ் நகர்… உக்ரைன் அரசின் முடிவு என்ன?..

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மின் நிலையங்களை நோக்கி தாக்குதல் மேற்கொள்வதால் அந்நாட்டின் தலைநகரில் இருக்கும் 80% பகுதிகள் இருளில் மூழ்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களில் செர்காசி, கெர்சன் மற்றும் கீவ் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் இருளில் மூழ்கியிருக்கிறார்கள். தங்கள் நாட்டின் கருங்கடல் பகுதியில் ஆளில்லா விமானங்கள் மூலமாக உக்ரைன், தாக்குதல் மேற்கொண்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியிருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் முக்கிய உள்கட்டமைப்புகள் பாதிப்படைந்துள்ளன. […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பிரபல நாட்டில் இருந்து ஆளில்லா விமானங்களை வாங்கிய போலந்து…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் போலந்து ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா 8 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ  நாடுகள் தங்களது பாதுகாப்பு தளவாடங்களை பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் துருக்கியில் இருந்து பைரக்டார்  டி.பி.2எனப்படும் ஆளில்லா விமானங்களை வாங்க கடந்த மே மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில் மொத்தம் 24 ஆளில்லா விமானங்களையும், அவற்றுக்கான தரைகட்டுப்பாட்டு யூனிட்டுகளையும் 4  தவணைகளில் வாங்குவது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துங்கள்…. உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரியின் வலியுறுத்தல்….!!!!

ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துங்கள் என உக்ரைன் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் ரஷ்யா போரானது தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றது. இந்த போரில் ரஷ்யா ஈரானிடம் இருந்து வாங்கப்பட்ட வெடிகுண்டு ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது. இதனை மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஹொஷைன் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா உடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அந்த சமயத்தில் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி கூறியதாவது […]

Categories
உலக செய்திகள்

சுட்டு வீழ்த்தப்பட்ட நூற்றுக்கணக்கான ட்ரோன்கள்… உக்ரைன் படையினர் அதிரடி…!!!

ஈரான் நாட்டில் தயார் செய்யப்பட்ட 300க்கும் அதிகமான ட்ரோன்கள் உக்ரைன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது சுமார் 8 மாதங்களாக ரஷ்யா போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதற்கு உக்ரைன் படையும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது வரை ஈரான் நாட்டில் தயார் செய்யப்பட்ட 300க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள் உக்ரைன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளார். அவர் ஈரான் தயாரித்த நூற்றுக்கும் அதிகமான ஷாஹெட்-136 காமிகேஸ் என்ற ட்ரோன்கள்  வீழ்த்தப்பட்டதாக […]

Categories
உலக செய்திகள்

“இதுவரை 400 ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல்”…? உக்ரைன் அதிபர் வெளியிட்ட தகவல்…!!!!!

உக்ரைனுக்கு எதிராக இதுவரை 400 ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்திருப்பதாக உக்ரைன் அதிபர் தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் எட்டு மாதங்களை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும்போது உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை உக்ரைன் மீது 400க்கும் மேற்பட்ட ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தி இருக்கிறது. அவற்றுள் 60 முதல் 70% ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. உக்ரைனிலிருந்து தானியங்களை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா […]

Categories
உலக செய்திகள்

மின்தடையால் இருளில் மூழ்கிய நகரம்… மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ரம்யமாக உக்ரைன் மக்கள்…!!!!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் மின்தடையால் இருளில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு மின்தடை காரணமாக பெரிய மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து உக்ரேனியர்களின் மனங்களை மகிழ்விக்கும் விதமாகவும் அதே நேரம் மின்தடையை சமாளிக்கும் விதமாகவும் உக்ரேனிய உணவகங்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் […]

Categories
உலக செய்திகள்

“மக்கள் மீது அமெரிக்க ஏவுகணை பயன்படுத்தி தாக்குதல்”…? 4 பேர் பலி… ரஷ்யா குற்றச்சாட்டு..!!!!!

ரஷ்ய பொதுமக்கள் மீது உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரானது எட்டு மாதங்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படையெடுப்பின்போது டொனட்ஸ்க், லூகான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜியா போன்ற நான்கு பகுதிகளை கைப்பற்றிய ரஷ்யா அவற்றை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இதனை ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது அந்த நாட்டு அதிபர் புதின் அறிவித்துள்ளார். தொடர்ந்து அந்தப் பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

“மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யாவின் தீவிர தாக்குதல்”… இருளில் மூழ்கிய உக்ரைன்.. கடும் அவதியில் மக்கள்..!!!!!

கிரீமியாவை ரஷ்யா உடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் காரணமாக கிவ் உள்ளிட்ட நகரங்கள் மின்தடையால் இருளில் மூழ்கியுள்ளது ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் இது பற்றி உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவ சட்டம்… புடினின் அதிரடி அறிவிப்பு…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் நாட்டுடன் சேர்க்கப்பட்ட உக்ரைன் நாட்டின் பிராந்தியங்களில் ராணுவ சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டிடம் கைப்பற்றிய ஜபோரிஜியா, லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க் மற்றும் கெர்சன் போன்ற நான்கு பிராந்தியங்களை தங்கள் நாட்டோடு சேர்த்துக் கொண்டனர். உலக நாடுகள், சர்வதேச சட்டத்தை மீறி ரஷ்யா செயல்படுவதாக கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து உக்ரைன் ராணுவம், சட்டவிரோதமான […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷியா…. திடீரென தனது காதலிகளை கரம் பிடித்த ராணுவ வீரர்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா தனது நாட்டு வாலிபர்களையும் ராணுவ படையில் சேர்த்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 8  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பெரும்பாலான உக்ரைன் பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் பல நாடுகளை நோக்கி அகதிகளாக படையெடுத்தனர். ஆனாலும் இரு தரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு  இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் ராணுவ உதவிகளையும் செய்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா போர்…”ரஷ்யாவின் ஆயுதங்கள் தீர்ந்து விட்டது”…? இங்கிலாந்து உலக அமைப்பு தலைவர் தகவல்…!!!!!

உக்ரைன் மிது ரஷ்யாவின் போரானது தொடர்ந்து எட்டு மாதங்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயிருக்கிறது மேலும் உக்ரைனுக்கு சொந்தமான பல நகரங்களை ரஷ்ய ஆக்கிரமித்து இருக்கிறது. இருப்பினும் ராணுவம் ரஷ்ய படைகளிடம் சரணடைய மறுத்து துணிச்சலுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கிரீமியாக ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கு  உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டி ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் தலைநகரில் ஏவுகணை தாக்குதல்…. தீப்பிடித்து எரிந்த மின் உற்பத்தி நிலையம்…!!!

உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவில் இருக்கும் மின் உற்பத்தி நிலையத்தை குறிவைத்து, ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் சுமார் எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் அந்நாட்டின் பல நகரங்கள் அழிந்து போனது. பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையத்தை குறி வைத்து ரஷ்யப்படையினர் நேற்று ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனர். இதனால், அங்கு அதிகளவில் தீ […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. அதிரடியில் இறங்கிய உக்ரைன்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

ரஷ்யா மீது உக்ரைன்  நடத்திய தாக்குதலில் வெடி மருந்து கிடங்கு சேதம் அடைந்துள்ளது. உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்து தொடங்கியது. தற்போது வரை தாக்குதல் முடிவுக்கு வர வில்லை. இந்நிலையில் நேற்று உக்ரைனில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு பதில் உக்ரைன்  விமானப்படை 25 ரஷிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கருங் கடலுக்கு அருகே கப்பல் கட்டும் மையம் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இந்த பிரச்சனையில் இந்தியா சமநிலையாக இருக்கிறது…. கஜகஸ்தான் துணை வெளியுறவு மந்திரி கருத்து…!!!

கஜகஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரி, உக்ரைன் விவகாரத்தில் இந்திய நாட்டின் நிலைப்பாடு மிக சமநிலையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் முடிவடைய போவதாக தெரியவில்லை. இதனிடையே கஜகஸ்தான் நாட்டின் துணை வெளியுறவு மந்திரியான ரோமன் வாசிலென்கோ தெரிவித்ததாவது, இந்த வருட ஆரம்பம் முதல், இந்தியா சர்வதேச மன்றங்களில் தங்களின் கருத்தை தெரிவிக்கும் சமயங்களில் உக்ரைன் நாட்டில் நடக்கும் ரஷ்ய போர் தொடர்பில் மிகவும் சமநிலையாக இருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போரில் இந்திய நாட்டின் நிலைப்பாடானது […]

Categories
உலக செய்திகள்

இது மட்டும் இருந்தால்… விரைவில் போருக்கு முடிவு கட்டிடுவோம்… உக்ரைன் அதிபரின் நம்பிக்கை…!!!

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அதிகமாக நிதி உதவி கிடைத்தால் ரஷ்யா மேற்கொள்ளும் போரை விரைவாக முடிவடைய செய்யலாம் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ரஷ்யா மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதல்களால் வீடுகளும், குடியிருப்புகளும் மொத்தமாக அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவற்றை மீண்டும் கட்ட கூடுதலாக பணம் தேவை என்று கோரிக்கை வைத்திருக்கிறார். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய வருடாந்திர கூட்டமானது, வாஷிங்டனில் நடந்தது. அமைச்சர்களோடு காணொளி காட்சி மூலமாக ஜெலன்ஸ்கி உரையாடினார். அப்போது, அவர் தங்கள் […]

Categories
உலகசெய்திகள்

ஐநா சபையில் ரஷ்யாவிற்கு எதிரான விவாதம்… பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா…!!!!

வாக்கெடுப்பின் போது உக்ரைன் போர் சூழலை காஷ்மீர் விவகாரத்திற்கு இணையாக ஒப்பிட்டு பாகிஸ்தானிய தூதர் பேசியுள்ளார். உக்ரைன் நாட்டின் டொனட்ஸ்க், ஜபோர்ஜியா போன்ற நான்கு பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐநா பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பற்றிய வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு 143 உறுப்புகள் ஆதரவு தெரிவித்தது ஐந்து நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை அடுத்து இந்தியா உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகி உள்ளது. இருப்பினும் உக்ரைனில் […]

Categories
உலக செய்திகள்

எங்களை கட்டுப்படுத்தாதீர்கள்…. பிரபல நாட்டில் “போராட்டத்தில் இறங்கிய மக்கள்”…. நிபுணர்கள் கோரிக்கை….!!!!

 பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பிரபல நாட்டில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன்  மீது ரஷியா கடந்த 8  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர். இதனால்  ரஷியா மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில்  பெட்ரோல்  பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது இங்கிலாந்தில் பெட்ரோல்  உள்ளிட்ட பல  பொருட்களின் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்க மாட்டோம்…. ரஷியாவிற்கு எதிராக திரும்பும் உலக நாடுகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

ரஷியாவிற்கு எதிராக 107 நாடுகள் வாக்களித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 8  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை  தொடர்ந்து ரஷியா தாக்குதல் நடத்தி உக்ரைனின்  4 முக்கிய பிராந்தியங்களை  கைப்பற்றியது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு நான்கு பிராந்தியங்களையும்  தங்களுடன்  இணைத்துக்கொள்ள போகிறோம் என ரஷிய அதிபர் புதிய அறிவித்தார். அதேபோல் இந்த பிராந்தியங்களை இனைப்பதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தாங்கள் வெற்றி பெற்றதாக கூறி 4  பிராந்தியங்களையும் ரஷியா தன்னுடன் நினைத்துக் கொண்டது. ரஷியாவின் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா-கிரீமியாவின் முக்கிய பாலத்தில் நடந்த தாக்குதல்…. 8 நபர்களை கைது செய்த ரஷ்யா…!!!

ரஷ்ய நாடுடன் கிரீமியா தீபகற்ப பகுதியை சேர்க்கும் பாலத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சந்தேகத்தின் அடிப்படையில் 8 நபர்கள் கைதாகியுள்ளனர். ரஷ்ய நாட்டுடன் கிரீமியா தீபகற்ப பகுதி சேர்க்கப்பட்ட பிறகு, அந்நாட்டு ஜனாதிபதியான விளாடிமிர் புடின் புதிதாக ஒரு பாலத்தை அமைத்தார். கடந்த 2018 ஆம் வருடத்தில் அவர் அந்த பாலத்தை திறந்து வைத்த நிலையில், 2020 ஆம் வருடத்தில் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தது. இதற்கிடையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போரின் ஒரு […]

Categories
உலக செய்திகள்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க… ஐரோப்பிய உறுப்பு நாடுகளுக்கு அறிவுறுத்தல்…!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை எதிர்த்து இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் ரஷ்யாவிற்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக இந்த தடைகள் விதிக்கப்பட்டது இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த வருடம் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் எரிசக்தி தேவைக்கு ரஷ்யாவின் இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை […]

Categories
உலக செய்திகள்

காபி குடித்ததால் உயிர் பிழைத்த நபர்…. லண்டனிலிருந்து வந்த காதலி… உக்ரைனில் நெகிழ்ச்சி காதல்…!!!

ரஷ்யப் போரால், உக்ரைனிலிருந்து லண்டன் வந்த பெண் மீண்டும் தன் நாட்டிற்கு சென்று காதலரின் உயிரை காப்பாற்றியுள்ளார். உக்ரைன் நாட்டை சேர்ந்த ஜூலியா என்ற பெண் வழக்கறிஞர் மற்றும் நடிகையாக இருக்கிறார். இவர், அங்கு போர் தொடங்கியதால் கடந்த ஜூன் மாதம் ஆறாம் தேதி அன்று தன் தாயுடன் ஜெர்மன் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு தன் தாயை குடியமர்த்திவிட்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி என்று லண்டனில் இருக்கும் என்ற Lewisham பகுதிக்கு சென்றுவிட்டார். ஜூலியா தன் காதலரை […]

Categories
உலக செய்திகள்

என்ன….? பிரபல நாட்டு முன்னாள் அதிபர் தேடப்படுகின்றாரா…. இந்த பட்டியலில் வைத்த உக்ரைன்….!!!!

ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் உக்ரைனால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.  ரஷ்யாவின் முன்னாள் அதிபராக கடந்த 2008 முதல் 2012-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் டிமிட்ரி மெத்வதேவ். தற்போது ரஷ்ய பாதுகாப்பு துறையின் துணை தலைவராக அவர் இருந்து வருகின்றார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில், உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் தொகுத்து அளித்துள்ள தேடப்படும் நபர்களின் பட்டியல் ஒன்று வெளிவந்துள்ளது. இதில் ஒருவராக, மெத்வதேவ் இருக்கின்றார். உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

“இது எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது…. உக்ரைன் -ரஷியா போர் குறித்து நாளை கூடுகிறது “ஜி 7 நாடுகள் ஆலோசனை கூட்டம்”…. வெளியான முக்கிய தகவல்….!!!!

உக்ரைன்-ரஷியா போரை நிறுத்துவதற்கான அனைத்து உதவிகளையும் செய்வோம் என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 8  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுத்தனர். மேலும் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி உக்ரைனின் முக்கிய பகுதிகளை கைப்பற்றியது. இது குறித்து இந்தியா வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி  கூறியதாவது. உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்பு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுக்கு…. இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவுரை…!!!

உக்ரைன் நாட்டில் வசிக்கும் இந்திய மக்கள் அங்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொள்ளும் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், தங்கள் குடி மக்களுக்கு இந்திய தூதரகம் அறிவுரை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இந்திய மக்கள் உக்ரைன் நாட்டிற்குள் தேவையின்றி பயணம்  மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் அளிக்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அங்கு வசிக்கும் இந்திய மக்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். அங்கிருக்கும் இந்திய மக்கள், […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் பதிலடி கடுமையாக இருக்கும்…. அதிபர் புதின் எச்சரிக்கை..!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அந்நாட்டின் நிரந்தர பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது, க்ரீமியாவுடன் ரஷ்யாவை இணைக்கும் பாலத்தின் மீது தாக்குதல் நடத்தி இருப்பது தீவிரவாதம் என புதின் பேசினார். மேலும் தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்யாவின் பதிலடி கடுமையாக இருக்கும், யாருக்கும் சந்தேகம் தேவையில்லை என்றும் புதின் எச்சரித்துள்ளார். ஒரே நாளில் 84 ஏவுகணைகளை வீசி உக்ரைனை நிலைகுலைய செய்த நிலையில், அதிபர் புதின் பேசியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

மக்களின் நிலை என்ன?…. உக்ரைனை நிலை குழைத்த ஏவுகணைகள் …. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 7 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைனின்  முக்கியமான 4  நகரங்களை ரஷியா கைப்பற்றி தங்களது நாட்டுடன் இணைத்துக் கொண்டது. இந்த பகுதிகள் ஒட்டுமொத்த உக்ரைனின்  15 சதவீதமாகும். இந்நிலையில் சர்வதேச நாடுகளால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என அறிவிக்கப்பட்டுள்ள இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன்-ரஷியா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.  தற்போது உக்ரைன் படைகளின்  ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகிறது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

எங்களை மொத்தமாக அழிக்க நினைக்கிறார்கள்…. உக்ரைன் அதிபர் வேதனை…!!!

உக்ரைன் நாட்டின் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி, ரஷ்யா தங்களை மொத்தமாக அழிக்க நினைப்பதாக கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர், எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் பல நகரங்களும் நாசமாகியுள்ளன. ரஷ்யா மற்றும் கிரீமியாவை சேர்க்கக்கூடிய முக்கிய பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த பாலம் கடும் சேதமடைந்து, மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ரஷ்யா, உக்ரைன் மீது தீவிரமாக தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது, […]

Categories
Uncategorized உலக செய்திகள்

நள்ளிரவில் பயங்கர தாக்குதல்…. ரஷ்யப்படையினரின் கொடூரம்…. 17 பேர் பலியான பரிதாபம்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் 17 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனில் ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி 8 மாதங்கள் ஆகிறது. இதில் உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் சீரழிந்துவிட்டன. கடந்த 2017 ஆம் வருடத்தில் கைப்பற்றப்பட்ட கிரீமியாவை ரஷ்ய நாட்டுடன் இணைக்கக்கூடிய முக்கிய பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில், அந்த பாலம் கடுமையாக பாதிப்படைந்தது. மேலும், மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் மீது […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “கடலுக்கு அடியில் வைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகள்”…. அமைச்சர்கள் எச்சரிக்கை….!!!!

பிரித்தானிய கடல் படுகையில் ரஷியா கன்னிவெடிகள் வைத்திருக்கிறதா என ஆய்வு செய்து வருகின்றனர். உக்ரைன் மீது ரஷியா கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் ரஷியா கடற்பரப்பு தாக்குதலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரித்தானிய சக்தி மையங்கள் மற்றும் இணைய சேவை கேபிள்கள் ஆகியவை கடல் நீருக்கடியில் உள்ளதால் அவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என பிரித்தானிய அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷியாவில் இருந்து ஜெர்மனிக்கு எரிவாயு  கொண்டு செல்லும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவாதம்… புதிய ராணுவ தளபதி நியமனம்…!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 277 வது நாளை தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் போரில் கை பற்றிய உக்ரேனின் லூகன்ஸ்க்,டோனெட்ஸ்க்,ஷபோரிஹியா,கெர்சன் ஆகிய நான்கு நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இதன் ஒரு பகுதி ஒட்டுமொத்த உக்ரைனின் 15 சதவிகிதமாகும் சர்வதேச நாடுகளால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என அறிவிக்கப்பட்டிருக்கின்ற இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் மீண்டும் அதிகரித்துக் […]

Categories
உலக செய்திகள்

கெத்து காட்டும் உக்ரைன் படையினர்…. பெரும் பகுதி ரஷ்யாவிடமிருந்து மீட்பு…!!!

ரஷ்ய நாட்டுடன் சேர்க்கப்பட்ட கெர்சன் நகரின் பெரிய பகுதிகளை உக்ரைன் படையினர் மீண்டும் மீட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உச்சகட்டமாக, ரஷ்யபடையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் நான்கு முக்கிய பகுதிகளை தங்கள் நாட்டுடன் சேர்த்துக் கொண்டனர். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் ரஷ்ய அதிபர் வெளியிட்டார். மேலும், ரஷ்ய படையினருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில், அணு ஆயுதங்களை தயக்கமின்றி பயன்படுத்துவோம் […]

Categories
உலக செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்த தீவிர முயற்சி… உக்ரைன் அரசின் ஆர்வத்திற்கு.. இது தான் காரணமா?…

உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த உக்ரைன் அதிக ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 7 மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அங்கு, ஒவ்வொரு நாளும் தீவிரமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், போரின் தீவிரத்தை முறியடிப்பதற்காகவும் அதன் தாக்கத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காகவும் மக்களின் கனவை நிறைவேற்ற உக்ரைன் அரசு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்த தீவிரமாக முயன்று வருகிறது. வரும் 2030-ஆம் வருடத்தில் நடக்க இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் இருக்கும் எனது சிறுத்தைகளை மீட்டுத் தாருங்கள்”… மத்திய அரசுக்கு டாக்டர் கோரிக்கை…!!!!

உக்ரைனில் இருக்கும் தன்னுடைய சிறுத்தைகளை மீட்டுத் தரக் கோரி மத்திய அரசுக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எம்பிஎல் மருத்துவர் கிரி குமார் என்பவர் உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள டான்பாஸ் மாகாணத்தில் செவரோடோனஸ்க்கி நகரில் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அங்குள்ள உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை வீட்டில் வாங்கி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்… “எந்த ஒரு அமைதி முயற்சிகளிலும் பங்களிக்க இந்தியா தயார்”… பிரதமர் மோடி பேச்சு…!!!!!

உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது எந்த ஒரு அமைதி முயற்சிகளிலும் பங்களிப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஷ்ய படைகளுடன் போராடி வரும் கிழக்கு ஐரோப்பிய நாட்டில் அனுமின் நிலையங்களின் பாதுகாப்பு பற்றி பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போருக்கு மத்தியில்… “என் பூனைகளை காப்பாற்றுங்கள்”..? இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடிய நபர்…!!!!!

இந்தியாவில் பிறந்த மருத்துவரான கிடிகுமார் பாட்டீல் என்பவர் கடந்த 2016ம் வருடம் உக்ரைன் குடியுரிமை பெற்றுள்ளார். ரஷ்யா உக்ரைன் போரில் அவர் பணிபுரிந்த மருத்துவமனை குண்டு வீசி தாக்கப்பட்டதை தொடர்ந்து தனது செல்லப் பிராணிகளை விட்டு அண்டை நாடான போலந்துக்கு சென்று வாழ வேண்டி இருந்தது. பாட்டீல் 2020 ஆம் வருடம் தலைநகர் கீவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு விலங்குகளை வாங்கியுள்ளார் அவற்றில் ஒன்று 24 மாதம் ஆண் லெப்ஜாக் அதாவது ஆண் […]

Categories
உலக செய்திகள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் பகுதியை கைப்பற்றிய உக்ரைன் படை…. மகிழ்ச்சியில் அதிபர் ஜெலென்ஸ்கி ….!!!!!

ரஷிய படைகள் கைப்பற்றிய உக்ரைன்  பகுதிகளை உக்ரைன்  ராணுவ படை மீட்டுள்ளது. உக்கரை நாட்டின் மீது ரஷியா கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உக்ரைன்  நாட்டின் பெரும்பாலான பகுதிகளை  ரஷிய படைகள் கைப்பற்றினர். இதற்கிடையே போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைன்  பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷிய அதிபர் புதின்  அறிவித்தார். இந் நிலையில் ரஷிய படையினரிடமிருந்து உக்ரைனின்  முக்கிய நகரங்களை உக்ரைன்  ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில்  […]

Categories
உலக செய்திகள்

“புதினின் அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் அணுசக்தி துறை தலைவர் மாயம்”… ரஷ்யா மீது குற்றச்சாட்டு…!!!!

புதினின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் அணுசக்தி துறை தலைவர் மாயமாகியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ஏழு மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதில் போரில் கைப்பற்றிய உக்ரைனின் பிராந்தியங்களான லூஹான்ஸ், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோர்ஜியா போன்ற நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர் அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதன் நேற்று வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த நான்கு பிராந்தியங்களையும் ரஷ்ய படைகளிடமிருந்து மீட்க உக்ரைன் ராணுவம் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய வீரர்களை சுற்றிவளைத்து… கெத்து காட்டிய உக்ரைன் படையினர்… லைமன் நகர் மீட்பு…!!!

ரஷ்ய படையினர் கைப்பற்றிய தங்களின் லைமன் நகரை மீட்டு உக்ரைன் படையினர் அசத்தியுள்ளனர். உக்ரைன் நாட்டில் நடக்கும் ரஷ்ய படையினரின் போரானது, எட்டாவது மாதமாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. போர் தொடங்கிய காலகட்டங்களில் ரஷ்ய படையினர் கைப்பற்றிய தங்களின் பகுதிகளை தற்போது உக்ரைன் படையினர் மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி நேற்று லைமன் என்னும் உக்ரைன் நாட்டின் கிழக்கு நகரத்தில் ரஷ்ய வீரர்கள் சுமார் 5500 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர். Ukrainian troops have entered Lyman pic.twitter.com/gmkcfULjp2 — […]

Categories
உலக செய்திகள்

விடக்கூடாது… அணு ஆயுதங்களால் உக்ரைனுக்கு பதிலடி கொடுக்கணும்… செச்சினியாவின் குடியரசு தலைவர்…!!!

செச்சினியா நாட்டின் குடியரசு தலைவர் அணு ஆயுதங்களை வைத்து ஒரே நாட்டிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே ரஷ்ய படையினர் தளவாட, போக்குவரத்து மையமாக பயன்படுத்திய லைமன் பகுதி, உக்ரைன் படையினரால் சுற்றி வளைத்து கைப்பற்றப்பட்டது. இது அந்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் ரஷ்ய நாட்டிற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய நாட்டிற்கு மிக நெருங்கிய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் பயங்கரம்…. தப்பி ஓடிய மக்கள் மீது ஏவுகணை தாக்குதல்… 24 பேர் பரிதாப பலி…!!!

ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டில் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட 24 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் சமீபத்தில் உத்தரவிட்டிருக்கிறார். இது மட்டுமல்லாமல் இந்த போரில் தாக்குதல் மேற்கொள்வதற்காக மூன்று லட்சம் ரஷ்ய மக்களை போரில் இணைக்கும் ஆணை ஒன்றிலும் கையொப்பமிட்டுள்ளார். எனவே, ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக தாக்குல் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படையினரின் கொடூரம்…. வாகனங்கள் மீது பயங்கர தாக்குதல்… சாலைகளில் கிடந்த உடல்கள்…!!!

உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா என்ற நகரத்தில் ரஷ்ய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா நகரத்தில் நேற்று தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 23 பேர் உயிரிழந்ததாகவும், 28 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்திருப்பதாகவும் 85க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தற்போது கூறியிருக்கிறார்கள். இந்த தகவலை அந்நகரத்தின் பிராந்திய ஆளுநராக இருக்கும் ஸ்டாருக் […]

Categories
உலக செய்திகள்

இனி ரஷியர்கள் எங்கள் நாட்டிற்கு வரக்கூடாது…. பின்லாந்து அரசு அதிரடி உத்தரவு….!!!!

ரஷியர்கள் பின்லாந்து நாட்டிற்கு  செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன்  மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் தங்களது ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக பொதுமக்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று அதிபர் புதின் அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் பலத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் சிலர் ரஷியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் மூலம் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் அண்டை நாடான போலந்து, பின்லாந்து ஆகிய நாடுகள் சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி […]

Categories
உலக செய்திகள்

OMG: ரஷியாவுடன் இணையும் உக்ரைன் மக்கள்…. நாளை வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

கைப்பற்றப்பட்ட பகுதிகளை  இணைப்பதற்கான அறிவிப்பை நாளை  ரஷியா வெளியிடுகிறது உக்ரைன்  மீது ரஷியா கடந்த 7 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றது . இந்த தாக்குதலின் மூலம் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை ரஷியப்படைகள் சண்டையிட்டு கைப்பற்றிய வருகின்றனர். இதனால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றனர். இந்நிலையில் ரஷியா தான் கைப்பற்றிய பகுதிகளை தன்னுடன்  இணைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கு உலக நாடுகள் ரஷியா ஆக்கிரமித்த பகுதிகளை தன்னுடன் இணைப்பதற்காக நடத்தும் வாக்கெடுப்பில் […]

Categories
உலக செய்திகள்

இவர்களுக்கு புகலிடம் அளிக்கக்கூடாது…. ஜேர்மன் நோக்கி படையெடுக்கும் ரஷியர்கள்…. எதிர்ப்பு தெரிவிக்கும் உக்ரைன் அகதிகள்….!!!!!

ரஷியாவில் இருந்து வெளியேறி வருபவர்களுக்கு ஜேர்மனியில் புகலிடம் அளிக்கக்கூடாது என உக்ரைன்  அகதிகள் கூறி வருகின்றனர். உக்ரைன் மீது ரஷியா 6  மாதங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றனர். அதில் ஏராளமானோர் ஜேர்மனி நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில் ரஷிய  அதிபர் புதின்  இளைஞர்கள் அனைவரும்  போரில் இணைய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதனால் அச்சமடைந்துள்ள ஏராளமானோர்  அகதிகளாக ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுடன் இணையும் உக்ரைன் பகுதிகள்… “செப்டம்பர் 30 புதின் அறிவிப்பு”…? பிரிட்டன் உளவுத்துறையினர் அச்சம்…!!!!!

உக்ரைனில் தங்கள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை தங்களுடன் இணைத்துக் கொள்வதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதின் வெள்ளிக்கிழமை வெளியிடுவார் என பிரிட்டன் உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இது பற்றி பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ரஷ்யாவுடன் தங்கள் பகுதிகளை இணைப்பது தொடர்பாக ஆக்கிரமிப்பு உக்ரைன் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய சர்ச்சைக்குரிய பொது வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்துள்ளது. இந்த சூழலில் ரஷ்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிபர் புதின் வரும் வெள்ளிக்கிழமை […]

Categories
உலக செய்திகள்

சவாலான நிலைக்கு தள்ளப்பட்டால்… அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்… எச்சரிக்கும் முன்னாள் ரஷ்ய அதிபர்…!!!

ரஷ்ய நாட்டின் முன்னாள் அதிபர், சவாலான நிலைக்கு தள்ளப்படும் பட்சத்தில் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களை தாண்டி நீடித்து கொண்டிருக்கிறது. இதனிடையே உக்ரைன் நாட்டை எதிர்த்து அணு ஆயுதங்களை பயன்படுத்தி விடுவோம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய நாட்டின் முன்னாள் அதிபரான டிமிட்ரி மெத்வதேவ், எங்களை கடும் சவால்களை எதிர்கொள்ள வைக்கும் பட்சத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்தி தற்காக்க […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருந்து அகதிகளாக …. “வருபவர்களுக்கு இங்கு இடம் இல்லை”…. ஜெர்மனி அறிவிப்பு…..!!!!!

உக்ரைனில் இருந்து அகதிகளாக வருபவர்களை தங்க வைக்க முடியாது என ஜெர்மனி தெரிவித்துள்ளது. உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றனர். அதில் ஏராளமானோர் ஜெர்மனி நோக்கி சென்றனர். அங்கு அவர்களுக்கு தங்கு இடம், உணவு வழங்கப்பட்டது. ஆனால் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அகதிகளை தங்க வைப்பதற்கு இடம் இல்லை என ஜெர்மனி தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

2 மாதங்களில்… 4.8 மில்லியன் டன் தானியங்களை ஏற்றுமதி செய்த உக்ரைன்….!!!

உக்ரைன் நாட்டில் தானியங்களை எடுத்துக்கொண்டு, மேலும் ஏழு சரக்கு கப்பல்கள் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் தொடங்கிய போருக்கு பின், அந்நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ரஷ்யா தடுத்தது. எனவே உணவு தானிய பற்றாக்குறை உண்டாகி, மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டார்கள். எனவே, ரஷ்யா, துருக்கி, உக்ரைன் மற்றும் ஐ.நா சபை சேர்ந்து இந்த பிரச்சனையை தீர்க்க புதிய ஒப்பந்தத்தை செய்தனர். அதன்படி மற்ற நாடுகளுக்கு உக்ரைனிலிருந்து செல்லும் தானியங்கள் சரக்கு கப்பல்களின் வழியே […]

Categories
உலக செய்திகள்

இது உண்மைதானா?…. மக்களுக்கு ரஷிய குடியுரிமையை வழங்கிய வீரர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

உக்ரைன் மக்களுக்கு ரஷியா தங்கள் நாட்டு குடியுரிமைகளை வழங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து தலைநகர் கீவ்வை  கைப்பற்றும் முயற்சியில் ரஷியப்படைகள் பின் வாங்கினர். ஆனால் வடகிழக்கு பகுதிகளில் ரஷியப்படை  கவனம் செலுத்தி ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனர். மேலும் தாங்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கு ரஷிய படைகள் ரஷிய குடியுரிமைகளை வழங்கி அவர்களை ரஷியாவுடன் இணைக்க முயற்சி மேற்கொண்டு […]

Categories

Tech |