தேசத் துரோக வழக்குகளைப் பதிவு செய்யும் 124 ஏ சட்டப் பிரிவை பயன்படுத்தி சில அரசியல் காரணங்களுடன் தனிநபர்கள் அச்சுறுத்தபடுவதாகவும்,இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், தற்போது நிலுவையில் இருக்கக்கூடிய தேசத்துரோக வழக்குகளையும் இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விவரங்களை விரிவான தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. […]
Tag: உச்சநீதிமன்றம் உத்தரவு
பண்டிகை தினத்தில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 246 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை அன்று உச்ச நீதிமன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்த நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இதுவரை 246 பேரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி சென்ற 809 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதற்கிடையே கடந்த 30-ஆம் தேதி நடைபெற்ற முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜை தினத்தில் அரசின் விதிமுறைகளை […]
பேரியம் உப்பு கலந்த பட்டாசுகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யகூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீபாவளி மற்றும் பண்டிகை தினங்கள் வருவதால் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் பேரியம் உப்பு கலந்த பட்டாசுகளை விற்பனை தயாரிக்கவோ, கடைகளில் விற்பனை செய்யவோ, சேமித்து வைக்கவோ உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த பேரியம் உப்பு கலந்த பட்டாசுகள் பொதுமக்களின் உடல் நலத்திற்கும், சுற்றுசூழலுக்கும் கேடு விளைவிக்க கூடியதாகும். இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட […]
தமிழக அரசின் உத்தரவை மீறி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனின் பரோல் காலம் வரும் 30ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் தனக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் 90 நாட்கள் நீட்டிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். விசாரணையின் போது சிறுநீரக சிகிச்சைக்கு செல்ல வேண்டியிருப்பதால் தனது பரோலை நீட்டிக்க வேண்டும் என பேரறிவாளன் தரப்பில் கூறப்பட்டது. மேலும் சிகிச்சைக்கு செல்லும் போது பாதுகாப்பு அளிக்க வேண்டும் […]