திருச்செந்தூா், உடன்குடி, ஆறுமுகனேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூா் கோட்டத்துக்குட்பட்ட திருச்செந்தூா், சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகனேரி மற்றும் நாசரேத் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 10) மின் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூா், சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகனேரி மற்றும் நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் காரணமாக வீரபாண்டியன்பட்டினம் , ராஜ்கண்ணா நகா், காயல்பட்டினம் ரோடு, தேரிக் […]
Tag: உடன்குடி
முருங்கை சாகுபடி செய்யும் பணி உடன்குடி வட்டாரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி வட்டார பகுதிகளில் அவ்வப்போது சாரல்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கை சாகுபடியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த முருங்கை செம்மண் தேரி பகுதியில் நன்றாக வளரும் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் இதை சாகுபடி செய்துள்ளனர். எனவே ஒரு கிலோ எடை உள்ள முருங்கைக்காய் 40 முதல் 50 ரூபாய் வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் […]
பொங்கல் பொருட்கள் வாங்க உடன்குடி சந்தையில் மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் திருநாளுக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடியில் நேற்று பொங்கல் சந்தை நடைபெற்றது. தெரு வீதிகளில் அதிகாலை முதல் மஞ்சள் குலை , கரும்பு, பனங்கிழங்கு போன்றவை குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதை போலவே குத்துவிளக்கு, பொங்கல் பானை உள்ளிட்ட பொங்கல் பாத்திர பொருட்களும் ஏராளமாக விற்பனைக்கு இருந்தது. உடன்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் பொங்கல் பொருட்களை வாங்க போட்டி போட்டுக்கொண்டு […]
சாலையோரங்களில் பூத்துக்குலுங்கும் பொங்கல் பூவை பொதுமக்கள் பலர் எடுத்துச்சென்று மகிழ்கின்றனர். பொங்கல் திருநாள் ஒரு மங்கலமான நாள் ஆகும். பொங்கல் பண்டிகைக்காக வீட்டில் கோலமிட்டு சூரிய பகவானுக்கு வாழைப்பழம், கரும்பு, இலை, மஞ்சள் குலை, வெற்றிலை-பாக்கு புதுப்பானையில் பச்சரிசி பொங்கல், பனங்கிழங்கு, பல வகையான காய்கறிகள், வாசனைப் பூக்கள் என இப்படி ஏராளமான மங்கலமான பொருட்கள் வைத்து பொங்கலின் போது வணங்குவார்கள். இதில் பொங்கல் பூவும் மிக முக்கியமானது. பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் […]