தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் பாரதிராஜா அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதற்கு முன்னதாக விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்ற நிலையில் பின்பு ஓரிரு நாட்களிலேயே அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பரிசோதனை செய்தத்தில் அவருக்கு திடீரென நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று […]
Tag: உடல் நலம்
கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனிடம் தொலைபேசி மூலம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து விசாரித்தார் . மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சினிமா அரசியல் என்று இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளித்து வருகிறார். கட்சி சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வரும் அவர் விக்ரம் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இது தவிர தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையே கடந்த 16ஆம் தேதி […]
விபத்தில் சிக்கி உடல் நலம் தேறி வரும் நடிகை யாஷிகா ஆனந்த்தை பிரபல நடிகர் அசோக் நேரில் சென்று சந்தித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து விஜய் டிவியின் ஒருசில நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்த அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்குள்ளானது. இதனால் காரிலிருந்த அவரது தோழி வள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே […]
நடிகர் கார்த்திக் அந்தகன் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான ‘அந்தாதூன்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து இப்படத்தை தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். இப்படத்தில் நாயகனாக நடிகர் பிரசாந்த் நடித்து வருகிறார். மேலும் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், யோகி பாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் உடல்நிலை பிரச்சினை காரணமாக கடந்த சில […]
உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரிட்டன் இளவரசர் தற்போது வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். பிரிட்டனில் இளவரசரான 99 வயதுடைய பிலிப் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார். இதுகுறித்து பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், இளவரசர் பிலிப் பார்தலோமெவ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் நலமாக இருக்கிறார். அவருக்கு தொற்றுநோய்கான சிகிச்சை அளிக்கப்பட்டு […]
கமல்ஹாசன் அறுவை சிகிச்சை முடிந்து தற்போது நலமுடன் உள்ளார் என்று அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர். வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை செய்து வந்தார். அவர் ஏற்கனவே தனக்கு காலில் சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்காக சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். அதுபற்றி கமல்ஹாசனின் மகள்கள் […]
உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுவது நீர். அது தான் நமக்குத் தேவையான நீர்ச்சத்துக்களையும் ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கின்றது. 60 சதவீதத்துக்கும் மேல் நீர் நமது உடலில் நிரம்பியுள்ளது. எனவே தினமும் நாம் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிக மிக அவசியம். ஆனால் நாம் குடிக்கும் தண்ணீர் எத்தகையது என்பதில் அதிக கவனம் தேவை. ஏனெனில் சிலர் குளிர்ந்த நீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பர். அவர்களுக்கு அதில் இருக்கும் தீமைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீரின் வெப்ப நிலை […]
இன்று பலரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நோய் நீரழிவு, உடல்பருமன் போன்றவற்றிற்கு முக்கியக் காரணமாக இருப்பது நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகள் தான். சமைப்பதற்கு நேரமின்றி நவீன உலகில் துரித உணவுகளையும் ஹோட்டல் உணவுகளையும் அதிகமாக சாப்பிட்டு வருகின்றோம். இதனால் வரும் ஆபத்தை பலரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் உணவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள் பற்றி எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில் நமது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து மெல்லமெல்ல உயிரை எடுக்கும் உணவுகள் பற்றி சில தகவல்கள். […]
வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அமெரிக்கா புரளியை கிளப்பி விட்டிருக்கலாம் என சர்வதேச உளவு துறை நிபுணர்கள் கூறுகின்றனர் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானதாகவும் தகவல்கள் வெளியாகின. அமெரிக்க உளவு நிறுவனம் இத்தகவலை வெளியிட்டு தென் கொரிய ஊடகம் ஒன்று அதனை உறுதி செய்துள்ளது. ஆனால் தற்போது மோசமாக இருப்பதாக கிம் ஜாங் உடல்நிலை […]
சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் புளியில் இருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு நார்ச்சத்து நிறைந்த புளியை பச்சையாக சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு குணமாகும். புளியை உபயோகப்படுத்தி டீ போட்டு அதனுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் அலர்ஜி போன்றவை சரியாகும். உடலில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டிருந்தால் புளியை அரைத்து வீக்கத்தின் மீது தடவிவர வீக்கம் மறையும். புளியை உணவில் சேர்த்துக் கொள்வதனால் இதயத்தில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றும். கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கவும் பாதுகாக்கவும் புளியை தினமும் […]
வாழைப்பழங்கள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு பல நன்மைகளை கொடுக்கும் நிலையில் பச்சை வாழைப்பழத்தில் இருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு வைட்டமின் பி நிறைந்த பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி சீராக வைக்க உதவி புரிகிறது. பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் குடல் புண்களை விரைவில் ஆற்ற முடியும். பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் எளிதில் உடல் […]